Skip to main content

தீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்

அஞ்சலி                              
                  தீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாய் பாலகோபாலனைப் பத்திரிகையில் பார்க்கமுடியவில்லையே என்று நான் அவ்வப்போது சந்திக்கும் சக எழுத்தாளர் பி. கோவிந்தசாமியைக் கேட்டபோது, அவர் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் சிகிட்சைப்பெற்று வருகிறார் என்றார். வெளிநாட்டில் சிகிழ்ச்சி பெறும் அளவுக்கு நோயின் சீற்றம்  எனக்குள் படிமமாக வளர்ந்துகொண்டே இருந்தது.

முகநூலில் அடிக்கடி எழுதுபவர் பாலா. நேரடி உரயாடலுக்கு வந்து விலாவாரியாக பேசுவது உண்டு. ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை என்று கேட்டேன். உடல் நிலை உடன்படவில்லை அண்ணா என்று சொல்லிவிட்டு உரையாடலை நீட்டிக்காமல் துண்டித்துக்கொண்டார், அல்லது உரையாடல் தொக்கி நின்றது. “உடம்புக்கு என்ன?” என்ற என் தொடர் கேள்வி உரையாடல் பெட்டியில் பதில் சொல்லப்படாமலேயே இருக்கிறது இன்றைக்கும். அதற்குப் பதில் சொல்ல அவர் தயங்கியது போன்ற பின்வாங்கல்.
அதன் பின்னர்தான் அவர் கடுமையான நோய்மை அவரை தாக்கியிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அப்போது மனம் கனத்தது.
கடைசியாக என்னைத் தொலைபேசியில் அழைத்த விடுபட்ட அழைப்பு ஒன்று தங்கிக்கிடந்தது திரையில். அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால்.நான் மீண்டும் அழைத்தேன். “அண்ணே உங்களிடமிருந்து எனக்கொரு உதவி வேண்டும்,” என்றார். குரல் தேய்ந்து தொய்வடைந்திருந்தது. அவர் கேட்ட உதவி என்னவாக இருக்கும் என்ற என் கற்பனை அலசலிலேயே, அவரின் தேய்ந்த குரல் என் பொருட்படுத்தலிலிருந்து காணாமற்போனது. பின்னர் பலமுறை அதுபற்றி விசாரிக்காத என் வன்ம மனம் என்னை எனக்கே அடையாளம் காட்டிச் சிறுமைபடுத்தியது.
சொல்லுங்க பாலா?” என்ன உதவி வேண்டும் என்றேன்.
ஒன்னுமில்ல அண்ணேயு.எஸ்.எம்மிலிருந்து , எண்(Ann) என்ற பேராசிரியர் உங்களை அழைப்பார்,” என்றார்.
என்ன விஷயமா பாலா?” என்றேன். எனக்குள் புதிரான ஆர்வம் மூண்டுவிட்டிருந்தது.
இல்லண்ணே அனைத்துலக கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு தமிழில் கதை சொல்ல கதைசொல்லி வேண்டுமென்றார்கள். என்னைத்தான் அழைத்தார்கள். நான் அவ்வளவு தூரம் பயணப்பட்டு போக முடியாது. அதனால்தான் உங்களின் பெயரை முன்மொழிந்தேன்,” என்றார்.
நான் ஆசிரியராக எழுத்தாளராக இருந்ததால் என் நினைவு அவருக்கு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு எண்ணற்ற கதைகள் சொல்லியிருப்பவன் என்று அவர் ஊகித்திருக்கலாம்.
சரி நான் போகிறேன்,” என்றேன்.
அப்போ பேராசிரியர் கூப்பிடுவாங்கவிலாவாரியா கேட்டு விபரம் தெரிஞ்சிக்கிக்கீங்க அண்ணேஎன்றார்.
நான் சரிஎன்றேன். அவர் உதவி என்றதும் வேறு ஏதோவென்று நினைத்த எனக்கு அவர்தான் உதவி செய்திருக்கிறார் என்று பின்னர் சிந்தித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அக்கதை சொல்லும் நிகழ்வு சாதாரண நிகழ்வல்ல என்று கலந்துகொள்ளும்போதுதான் தெரிந்தது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசிய, ஹங்காங், சீனாவிலிருந்தெல்லாம் புகழ்பெற்ற கதை சொல்லிகள் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதை அவர்கள் பெருங்கலையாக கொண்டாடுவதைப் பார்க்கமுடிந்தது அங்கே. அவர்கள் கதை சொல்லிகள் மட்டுமல்ல பிரபல எழுத்தாளர்களும் இருந்தார்கள். குறிப்பாக பிராண்ஸ் கதைசொல்லி ஒருவர் ஒரு நாவலாசிரியர். இரண்டு மில்லயன் பிரதிகள் வரை அவரின் ஒரு நாவல் இரண்டாண்டு காலத்தில் விற்பனையாகியிருக்கிறது என்ற தகவலைச் சொன்னபோது நான் அதிர்ந்தேன். இங்கே தமிழ் நூல்களுக்கான சொற்ப வாசகர்கள் ஒப்பீடு என்னைக் கவலையுற வைத்த அதே வேளை அவரி மீது போறாமையும் கொள்ளவும் செய்தது. இன்றைக்கும் அவர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறதென்றால் பாலாதான் அதனை முன்னெடுத்தவர்.
மலேசிய எழுத்தாளர் சங்கச் சிறுகதைப் போட்டிக்கு நான் 2013ஆம் ஆண்டு நான், பேராசிரியர் முல்லையோடு நடுவராக இருந்த சமயத்தில் . தினக்குரலில் வந்த தேங்காய் மட்டை கிழவன்என்ற பாலாவின் கதையை வாசித்த பிறகு என்னைத் துணுக்குற வைத்தது. அது நம் மலேசிய நிலப்பகுதியிலிருந்து மெல்ல காணாமற் போய்க்கொண்டிருக்கும்  ரப்பர்த் தோட்டப் பின்புலத்தை மையமிட்ட கதை. அந்தத் தோட்ட்த்தின் குறும்பான சிறார்களின் சேட்டைகளைச் சொல்லிக்கொண்டு போகும் கதை ஓட்டத்தில் இந்த்த் தேங்காய் மட்டைக் கிழவன் ஒரு பாத்திரமாக வருகிறார். முக்கிய கதாப் பாத்திரமாக வருவது அத்தோட்ட நிலப் பகுதிதான்.அங்குள்ள லயன்கள், ஆறு, ரப்பர்க் காடு என நிலச்சூழலை மிக நேர்த்தியான சித்திரமாக கதையில் வரைந்திருந்தார். இந்த தேங்காய் மட்டைக் கிழவன் பொருட்படுத்தக்க மாந்தராக இல்லாமலும், தேவையற்ற புழுவாகவும் கதைக்குள் கொண்டு வந்திருந்தார். ஆனால் அக்கிழவனை கதைக்குள் அவர் கொண்டுவந்த விதம் கிழவனை கவனப்படுத்திக்கொண்டே வந்தது. கதைக்குள் முகாமை காதாப்பாத்திரமாக இல்லாமலும்அதே வேளையில் ஒருவரை நுணுக்கமாக கவனப்படுத்தலும் ஒரு பெருங்கலை. அக்கதையில் அவருக்கு அது கைவந்திருந்தது. பையன்களைப் பொருத்த அளவில் கிழவன் மீதான சேட்டைகள் விளையாட்டாக இருந்தாலும், கிழவனுக்கு அது வன்முறையானதாகவே, வாசகன் உணரும்படி வடித்திருந்தார். அதனை வாசித்தவருக்கு கிழவன்மேல் கழிவிரக்கம் உண்டாக்கமல் இருந்திருக்கது. அக்கதை பின்னர் தேர்வுபெற்ற 20 கதைகளில் ஒன்றாக நூலில் பதிவானது.
முடிவு வந்த பிறகு, பரிசளிப்பு நாளில் என்னைச் சந்தித்த அவர் மனம் நெகிழ்ந்து நன்றி சொன்னார். “எனக்கு நன்றி சொல்லாதீர்கள், அது நல்ல கதை அதனால் தேர்வானது,” என்றேன். மகிழ்ந்தார்.
என் இரண்டாவது சிறுகதை நூலானசிறையைநான் சுங்கைப்பட்டாணியில் வெளியீடு செய்யும் செய்தியை பத்திரிகைகளில் வாசித்தவர், தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் சொன்னார். நான் சொன்னேன், “வாழ்த்து நேரடியாக நிகழ்ச்சியன்று சொன்னால் இன்னும் மகிழ்வேன்,” என்றேன் விளையாட்டாக. வெளியீட்டு நிகழ்ச்சியன்று  அவர் வாசலில் நின்றிருந்த என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. கிள்ளானிலிருந்து சுங்கைப் பட்டாணிக்குக் காரில் வந்து சேர ஐந்தாறு மணி நேரமாகும். அதை பெரிதாகக் கருதாமல், அங்கே அவர் எதிர்பாராவண்ணம் பிர்சன்னமானது என் வெளியீட்டு நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றியிருந்தது.
என்ன பாலா விளையாட்டுக்கு சொன்னா இவ்ளோ தூரம் மெனக்கட்டு வருவீங்களா,” என்றேன்.
நீங்கதான் நேரடியா வந்து வாழ்த்து சொல்ல சொன்னீங்களே அண்ணா,”என்று சிரித்துக்கொண்டே கைகுலுக்கினார்.
எல்லாம் சரியாகிவிடும் என்ற மனித நம்பிக்கை பல தருணங்களில் சரியற்றுப் போகிறது. குறிப்பாக கடும் நோய்க்கு ஆளான உடல் இறப்புக்கும் வாழ்வுக்கும் இடையே  ஆடும் தள்ளாட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஆமாம் இங்கு எதுதான் நிரந்தரம்?

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...