6.பிராமி
எழுத்தில் என் பெயர்
கீழடி ஆய்வில்
மிக முக்கியமான ஒரு விடயம் அங்கே கடவுள் நம்பிக்கை இருந்ததற்கான எந்த ஆய்வுப் பொருளும்
கிடைக்கவில்லை என்கிறார்கள் ஒரு சாரர். எனவே மத நம்பிக்கை இருந்திருக்க
வாய்ப்பில்லை என்றும் நிறுவுகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது
அப்போது வாழ்ந்தவர்கள் பகுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்தார்கள் என்று ஒரு கருதுகோல்
உண்டு.
ஆனால் சங்ககால
இலக்கியங்கள் ஐந்தினைகள் பற்றிக் கூறுகின்றன. ஐந்தினைகளில் கடவுள் வணக்கம் இருந்திருக்கிறது என்பதால் அப்போது வாழ்ந்த மக்கள் இறை வழிபாட்டு முறைகள் இருந்திருக்கக் கூடும். குறிஞ்சித் திணை முருக வழிபாடு பற்றிப் பேசுகிறது. முல்லை நில மக்கள் திருமாலை வழிபாடு செய்தனர்.மருத நில மக்கள் இந்திரனை வழிபாடு செய்தனர்.நெய்தல் நில மக்கள் வருணனை வழிபட்டனர். இயற்கை வழிபாடும்
திணைக்கேற்ற கடவுள் வழிபாடும் இருந்திருக்க வாய்ப்புண்டு என்று இந்த அகழ்வாய்வில்
முக்கிய ஆளுமையான அமர்னாத் ராமகிருஷ்ணன் சொல்கிறார். இரண்டு வாதங்களிலுமே உண்மை
இருப்பதாகத் தெரிகிறது. இரண்டுமே ஆய்வுக்கண்டுபிடிப்பின் அடிப்படையில் சொல்வதால் இரண்டையுமே
ஏற்றுக்கொள்ளலாம்தான்.
மண்குடங்களில்
உள்ள தமிழி(பிராமி) எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது இங்கு வாழ்ந்தவர்கள்
எழுத்தறிவு உள்ள மக்களாக இருந்திருக்கிறார்கள்.
வேளாண்மை, கால்நடை வளர்ப்பும் வைகை நதிக்கரையில்
இருந்திருக்கிறது. விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
தாயக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இது நிரூபனமானது. எண்ணத்தெரிந்த மக்களே தாய விளையாட்டில் ஈடுபட முடியும்.
வைகை
நதிக்கரையில் வணிகமும் நடைபெற்றிருக்கிறது. அதன் பொருட்டு இங்கே மேல்தட்டு, கீழ்த்தட்டு, அடித்தட்டு மக்கள் பிரிவு என் வர்த்தக
ரீதியாகப் பிரிந்திருக்கலாம்.அவர்களுக்குள் உண்டான வணிகப் பிரச்னைகளுக்கு நீதி
உபதேசங்களும் இருந்திருக்கிற வாய்ப்பும் உண்டு.
கீழடியில் நகர
நாகரிகம் இருந்திருக்கிறது என்பதற்கு மேலும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.நகர
நாகரிகம் இருந்திருக்கிறது என்பதற்கான் ஆதாரமாகச் செங்கல் சுவர்கள்
கிடைத்திருக்கவேண்டும். கீழடியில் தோண்டப்பட்ட எத்தனையோ குழிகளில் கட்டுமானச்
சுவர்கள் கிடைத்திருக்கின்றன. நகர நாகரிகம் என்று சொல்லும்போது அங்கே சாலை வசதி, நீீீர்மேலாண்மை, போன்றவை முறையாக
நடந்திருக்கிறது .
நகரக் கட்டட அமைப்பும் கால ஓட்டத்தில் சில மாற்றங்கள் நடந்திருக்கிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். அதற்கான் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. நகர நாகரிகம் என்று சொல்லும்போது தொழில் பகுதிகளும் கண்டிப்பாய் இருந்திருக்கிற வாய்ப்புண்டும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். விவசாயம் நடந்திருப்பதால் தொழில் பெருக்கம் வளர்ந்திருக்கிறது. கால்வாய் அமைப்பும் இருந்திருக்கிறது. பிரதான உணவாக அரிசியும் இருந்திருக்கிறது. பானைகளில் நெல்லின் உருவம் பொதியப்பட்டிருக்கின்ற காரணத்தால் அரிசியை உணவாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதி.
பாபின்கள், நூல் சுற்றக்கூடிய ஸ்பிண்டல்கள் கிடைத்திருக்கின்றன இங்கே. அதனால் நெசவுத் தொழிலும் நடந்திருக்கலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
நகரக் கட்டட அமைப்பும் கால ஓட்டத்தில் சில மாற்றங்கள் நடந்திருக்கிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். அதற்கான் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. நகர நாகரிகம் என்று சொல்லும்போது தொழில் பகுதிகளும் கண்டிப்பாய் இருந்திருக்கிற வாய்ப்புண்டும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். விவசாயம் நடந்திருப்பதால் தொழில் பெருக்கம் வளர்ந்திருக்கிறது. கால்வாய் அமைப்பும் இருந்திருக்கிறது. பிரதான உணவாக அரிசியும் இருந்திருக்கிறது. பானைகளில் நெல்லின் உருவம் பொதியப்பட்டிருக்கின்ற காரணத்தால் அரிசியை உணவாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதி.
பாபின்கள், நூல் சுற்றக்கூடிய ஸ்பிண்டல்கள் கிடைத்திருக்கின்றன இங்கே. அதனால் நெசவுத் தொழிலும் நடந்திருக்கலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மதிப்புமிக்க
கற்கள் கிடைத்துள்ளபடியால் கண்டிப்பாக குஜராத் போன்ற இடங்களிலிருந்து வந்து இங்கே
அவற்றை வணிகம் செய்திருக்கலாம்,வணிகத் துறை வைகை நதிக்கரையில் செழிப்பாக நடந்திருக்கிறது என்பதற்கான்
ஆதாரமாக இந்த விலைமதிப்புள்ள கற்கள் கட்டியம் கூறுகின்றன.
இரும்புப்
பொருட்கள் கிடைத்திருப்பதால் அவை வீடு கட்டவும் விவசாயத்துக்கும்
பயன்படுத்தவும் உபயோகப்பட்டிருக்கிறது.
கங்கை
சமவெளியில் கிடைக்காத பிராமி எழுத்துகள் கீழடியில் கிடைத்திருப்பது தமிழர்
நாகரிகம் பண்பாடு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான முக்கிய ஆதாரம் இது.
பிராமி எழுத்துகள்தான் படிப்படியாக தமிழ் எழுத்துகளாக உருவாகி வருவதாற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது. பிராமி எழுத்தின் அன்றைய வடிவம் கால ஓட்டத்தில் மருவி மருவி இன்றைக்கு நாம் கற்கின்ற தமிழ் எழுத்துகளாக உரு மாறிிவந்திருக்கின்றன.
பிராமி எழுத்துகள்தான் படிப்படியாக தமிழ் எழுத்துகளாக உருவாகி வருவதாற்கான ஆதாரம் என்று சொல்லப்படுகிறது. பிராமி எழுத்தின் அன்றைய வடிவம் கால ஓட்டத்தில் மருவி மருவி இன்றைக்கு நாம் கற்கின்ற தமிழ் எழுத்துகளாக உரு மாறிிவந்திருக்கின்றன.
பிராமி
எழுத்துகள் எண்ணிக்கையில் மொத்தம் 10தான். அந்தப் பத்தே நாளடைவில் 30 எழுத்துக்களாக
கூடியிருக்கின்றன. உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 என மொத்தம் 30 எழுத்துகள் மட்டுமே.
உயிர்மெய்யெழுத்துகள் அப்போது இல்லை. காலம் உயிர்மெய்யெழுத்துகளையும் ஆயுதத்தை
சேர்த்து 247 எழுத்துக்களாக ஆக்கியிருக்கிறது. நாம் வாழுங்காலத்திலேயே பெரியார் எழுத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதனைத் தொடர்ந்து கணினிப் பயன்பாட்டுக்கு ஏதுவாய் எம் ஜி ஆர் மேலும் சில எழுத்துரு மாற்றங்களை அறிவத்தார்.
நீங்கள் கீழே பார்ப்பது பிராமி எழுத்தில் எழுதப்பட்ட என் பெயர். உங்கள் பெயரையும் அவ்வாறு பிராமியில் எழுத எண்ணமெனில், jinavani என்ற செயலியின் வழி சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் கீழே பார்ப்பது பிராமி எழுத்தில் எழுதப்பட்ட என் பெயர். உங்கள் பெயரையும் அவ்வாறு பிராமியில் எழுத எண்ணமெனில், jinavani என்ற செயலியின் வழி சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.
கீழடி பற்றிய செய்திகளை வாசிக்க வாசிக்க நம் இனத்தின் வாழ்வியல் மீது பெருமிதம் உண்டாகிறது.
மதுரைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்திலிருந்து வெளியேறும்போது பேராசிரியர் வல்லபாய் வாசலில் காத்திருந்தார். அவர் அப்போது எங்களோடு இணையவில்லை.
அடுத்து எங்களின் முக்கியத் திட்டம் நூல்கள் வாங்குவது. அதனால் பேராசிரியர் வல்லபாய் வீடு திரும்பும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்றிக்கொள்ளும்படி சொல்லிவிட்டு எங்கோ கிளம்பிவிட்டார்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தைச் சுற்றிலும் தமிழ் இலக்கிய நூல் விற்பனை செய்யும் கடைகள் சில உள்ளன.நான் என் தேர்வு புத்தகப் பட்டியலை வைத்துக்கொண்டு சில கடைகளில் தேடினேன். ஒன்று கூட கிடைக்கவில்லை.ஆனாலும் நியூ சென்ச்சுவரி புத்தகக் கடையின் சில நூல்களை வாங்கினேன்.தேவன் புத்தகக் கடையிலும் சிலவற்றை வாங்கிக்கொண்டேன்.டாக்டர் மிமியும் ஹரியும் மீனாட்சியம்மன் தரிசனத்துக்குக் போய்விட்டார்கள். எனக்குக் கடவுள் தரிசனமெல்லாம் நூல்கள்தான் தருகின்றன. கடவுள் வணக்கத்தின் கடைசி அத்தியாயம் மெய்மையை நோக்கித்தான் உள்ளது. நூல்களும் அதையேதான் நமக்குக் தருகின்றன. அவர்கள் திரும்ப வரும் வரை எனக்குவப்பான நூல்களை தேடிக்கொண்டிருந்தேன்..
ஹரியும் டாக்டர் மிமியும் நூல்களை வாங்கினர். ஹரி என்னைவிட அதிகப் புத்தகங்களை வாங்கிக் கட்டிக்கொண்டார். வீட்டிலும் வாங்கிக் கட்டிக்கொள்வார். எனக்கே அந்த அனுபவம் இருக்கிறதே. இவ்ளோ குப்பைய ஏன் கட்டிக்கிட்டு வறீங்க என்பதே ஒவ்வொரு முறையும் எனக்குக் கிடைக்கும் பூசை.நான் கடவுள்களைக் கட்டிக்கொண்டு போகிறவன். பூசைக்கான பொருள்தானே புத்தகங்கள்!
நூல் கட்டை அங்கே வைத்துவிட்டு தேவன் புத்தகக் கடைக்குப் போய் அங்கேயும் தேடினோம். தேடும் நூல்கள் கிடைக்காததால் ஒரே ஒரு நூலை மட்டும் வாங்கிக் கொண்டு மீண்டும் நியூ பு செண்ச்சுவரிக்கு வந்தோம். அங்கே திறனாய்வுக் கலையில் பல நூல்கள் எழுதிய தி. சு நடராஜன் அவர்களோடு சில நிமிடங்கள் பேசிவிட்டுப் படம் எடுத்துக் கொண்டோம்.
நாளை மறுநாள் திருவண்ணாமலை பயணம்.தஞ்சையிலிருந்து ரயிலில் செல்ல உத்தேசித்துக்கொண்டிருந்தோம். ஹரி ரயில் அல்லது பேருந்து டிக்கட்டுக்கு முன்பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். கிருஸ்த்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டதால் அது சாத்தியப்படவில்லை. எனவே திட்டம் பலனளிக்கவில்லை. நாளைமறுநாள் காலை திருவண்ணாமலை போகமுடியுமா என்ற சந்தேகத்தில கைபிசைந்துகொண்டிருந்தோம்.
(கீழடி அகழ்வாராய்ச்சி சார்ந்த விளக்கங்களை விக்கிப்பிடியாவிலிரிந்தும், சில அகப்பக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை)
நிகழும்...
Comments