Skip to main content

தீனா முரளீதரன் நம் சமூக எழுச்சியின் பிம்பம்

 தீனா முரளீதரன் நம் சமூக எழுச்சியின் பிம்பம் 


நம் சமூகத்தில் ஒரு விளையாட்டு வீரரைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.10 /15 ஆண்டுகளுக்கு முன்னால் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் மலேசியாவைச் பிரநிதித்து இந்தியர்களே ஆக்ரமித்து வென்று வந்தார்கள்.இன்று அந்தப் பெருமை மங்கி வருகிறது. பல்வேறு சமூகவியல், பொருளாதார ,இனப் பாகுபாடு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த புறக் காரணிகளையெல்லாம் மீறி புயலென எழுந்து வந்திருக்கிறார் பூப்பந்து வீராங்கனை தீனா முரளீதரன். அண்மையில் நடந்து முடிந்த காமன் வெல்த் போட்டியில் இரண்டு தங்கங்களை கழுத்தில் சூடி தன் மகிழ்ச்சியை மலேசிய மக்களிடம் பகிர்ந்திருக்கிறார்.                                      ஒரு சராசரி வாழ்க்கையை வாழ்வதிலே பரம திருப்தி கொண்டிருக்கும்‌ ஒரு சமூகத்திலிருந்து போராடிப் போராடி விளையாட்டில் முன்னணி நிலையை எட்டிப்பிடித்திருக்கும் தீனாவின் உழைப்பை உரக்கச் சொல்லி மகிழ வேண்டும். ஒரு சராசரி மனிதனாக வாழ வாழவைத் தேர்வு‌செய்துகொள்வது சௌகர்யமானது. ஒரு comfort zone ல் இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.ஏனெனில் அவ்வாறான வாழ்வு இடையூறுகளையோ ஆபத்துகளையோ அதிகம் ஏதிர் கொள்ள வாய்ப்பில்லை. அவ்வாறான சூழலை சராசரி மனிதர்கள் விரும்புவதும்‌ இலலை.வாழ்வு ஆற்றில் மிதந்து போகும் தக்கை போல போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். அவ்வாறான சூழலில் சவால்கள் முகத்தில் வந்து மோதும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.                                            ஆனால் தீனா தேர்ந்தெடுத்துக் கொண்ட துறை எதிர் கொண்டு வந்து மோதும் பேரலைகளுக்கு நிகரானது. இடர் வந்து துவண்டு போகச் செய்யும் நிலைக்கு ஈடானது. ஆயிரக்கணக்கானவர்கள் தான் முந்தவேண்டும் என்பதற்காகக் களத்தில் குதித்திருப்பார்கள்.அதிலும் என் இனமே உசத்தி என்ற எண்ணத்தை இயல்பாக்கொண்டு முந்தும் போக்குடைய சீனப்பெண்களையும் வீழ்த்தி முன்னணியில் வந்து நிலைகொண்டிருக்கிறார் தீனா.நான்‌ இந்தத்துறையில் நெடுங்காலமாக இருக்கிறேன். போட்டியாளர்கள் மிகக்கடுமையான  உடல் உழைப்பை கொடுக்கவேண்டும். அதிகாலையிலும் அந்தி மாலையிலும் மூச்செரிய மூச்செரிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முதன்மை நிலையை எட்ட சக போட்டியாளனை வெல்ல வேண்டும். உயர் கல்வி வாய்ப்பைக் கைவிடக் கூட நேரும். களத்தில் இடையிலேயே தோல்வி கண்டால் இருண்ட எதிர்காலம் கைநீட்டி அழைக்கும்‌. தான் விரும்பும் நல்ல சுவையான உணவுத் தட்டைத் தள்ளி  வைத்துப் பழகவேண்டும். இப்படி எண்ணற்ற சுய விருப்பங்களைக் கைவிடவேண்டும்.  இன்னும் தெளிவாகச் சொன்னால் தன்னையே தியாகம் செய்யவேண்டும். தீனா இவற்றை எதிர்கொண்டு வென்று மளமளவென முன்னேறி வருபவள். பெண்களுக்கென்றே திணிக்கப்பட்ட மரபுகளை மீற அனுமதிக்காத தமிழ்ச்சமூகத்திலிருந்து, தன்னை மூடி இறுகியிருக்கும் ஓட்டை உடைத்துக்கொண்டு மேலெழுந்து வந்தவர்தான் தீனா.     2013 ஆம் ஆண்டு தேசிய பூப்பந்து குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தீனா. 2018ஆம் தேசிய நிலையிலான ஒற்றையர்  ஆட்டத்தில் முதலிடத்தை வென்றார். அது ஒரு வரலற்று   வெற்றி.ஏனெனில் அந்த முதலிடம் இந்தியப் பெண்களுக்கு அதுவரை‌ ஒரு‌ கனவாகவே  இருந்து வந்தது. பலத்த போட்டிகள் காரணமாக  தீனாவால் ஒற்றையரில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே இரட்டையர் ஆட்டங்களத்தில் தன்னை முன்னெடுத்தார்.        அந்த‌ மடைமாற்றம்   பலனளிக்கத் துவங்கியது.  2021ஆம் ஆண்டு சுவிஸ் அனைத்துலக ப்போட்டியில் முதலிடத்தை வென்றெடுத்தார்.விளையாட்டுச் சாதனைகளால் உலகத் தர வரிசையில் 100க்கீழ் இருந்த‌ தீனா‌ பெர்லி        இணையினர் மூன்றாண்டுகளில் மளமளவென முன்னேறி 11 வது‌ இடத்தைத் தாவிப்‌பிடித்தனர்.    உலகத் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோடியான இந்தோனேசிய இணையினரை வீழ்த்தியது அவர்கள் வரலாற்றில்  பெரும் சாதனை.இந்த வெற்றி சமீபத்தில் நடந்த மலேசியப் போட்டியில்   சாதித்தது. அடுத்து சில முக்கிய இணையினரை வீழ்த்தியதும் அவர்கள் சாதனையில் அடங்கும். தொடக்க காலத்தில்  அனைத்துலகப் போட்டிகளில் பலவற்றை  வென்றிருந்தாலும் சமீபத்திய‌ காமன் வெல்த் (2022) போட்டியில் வென்றது பலரை வியப்பில் ஆழ்த்தியது. குழு விளையாட்டிலும் தனி விளையாட்டிலும் தங்கத்தால் நாட்டை ஜொலிக்க   வைத்தாள். அந்த ஆட்டத்தின் போது நேரடி ஒலிபரப்பு வர்ணனையாளர் தீனா விளையாட்டு நுட்பத்தைப் பற்றி சொன்னதைப் பலர் கேட்டிருக்கலாம். தீனா‌ ஆண்களைப் போல் கவட்டை வழியாகவும் , கையைப் பின்னுக்குத் தள்ளி பந்தைத் திருப்பி அனுப்பியதையும் குறிப்பிட்டத் சொன்னார். ஆட்டத்தை உணர்ச்சிப் படபடப்பில்லாமல் ஆடினால் மட்டுமே இந்த நுணுக்க விளையாட்டு சாத்தியப்படும்‌.                                  ‌‌தீனாவுக்கு வெற்றிகள் குவியும் போவதற்கான பூர்வாங்கப் படி இது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தரப்போகும் முதல் மலேசியராக தீனா திகழப் போகிறாள்   என்பதற்கு இந்தச் சாதனை ஒரு அறிகுறியாக மின்னிக் காட்டுகிறது என்றே நான் கருதுகிறேன். தீனா இந்தியப் பெண் எழுச்சி முகங்களில் முதன்மை பிம்பம்.  தீனாவாக்கு என் நெஞ்சு நிறைந்த அன்பும் பாராட்டும்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...