Skip to main content

ஹரியின் நேபாள பூபாளம் நூல் வெளியீட்டில் ...அது



அது








 

அது

செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை மூச்சினை உனக்களித்தேனே

நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே

நண்பர்களே

பயணங்கள் இருவகை உண்டு. ஒன்று உல்லாசப்பயணம் இன்னொன்று சாகசப் பயணம். உல்லாசப்பயணத்தைத்தான் பெரும்பாலானோர் மேற்கொள்வார்கள். சாகசப் பயணங்களை சிலரே மேற்கொள்வர். ஏன் பலர் சராசரிப் பயணத்தை விருபுகிறார்கள்? ஏனெனில் அதில் சவால்கள் இல்லை. ஜாலியா போய்ட்டு ஜாலியா வந்திடலாம். ஒரு பிரச்னை இல்லை. ஆனால் சாகசப் பயணம் சவால்கள் நிறைந்த து. மர்மங்கள் நிறைந்த து. வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள பிடிச்சு போட்டுக்கிட்ட மாதிரி. அல்லது எலிகப்டற்ல போற சனியன ஏணி வச்சி எறக்கின மாதிரி. ஆனால் இந்த சவால்கள்தான் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அனுபவங்களைக் கொடுப்பது. ஒரு ஒரு நேர்காணலைக் கேட்டேன். ஒரு திரைத்துரை இயக்குனர். படம் எடுத்து மேலே வர முடியல. சாதிக்க முடியல. நான் தோல்வி கண்ட இயக்குனர்தான். ஆனால் என மடி நிறைய பழுத்த அனுபவங்கள் உள்ளன. நான் நோய்வாய்ப்பட்டு இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வீர்கள் என்று டாக்டர்கள் நேரம் குறித்துவிட்டால். அந்தக் கடைசி காலத்தை இனபமான நினைவுகளோடு கழிக்க என என் அனுபவங்கள் என் நெஞ்சில் உள்ளன என்றார் . அது போதும் எனக்கு என்றார். ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட திருப்தியோடு போய்ச் சேருவேன்.

நெப்போலியனைப் பற்றிப் படிக்காதவர் இருக்கமுடியாது. ஏன் தெரியுமா? அவன் வாழ்க்கையே சாகசத்தால் நிறைந்தது. ஒரு முறை அவர் வயது ஒத்த நண்பர்களெல்லாம் ஆற்று நீரில் நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஏன் நீ நீந்தலையான்னு ஒரு பெரியவர் நெப்போலியனைக் கேட்டார். அவன் சொன்னான் சுறாமீன்கள் இல்லாத நீரில் நான் நீந்தமாட்டேன். எனக்குச் சவால்கள்வேண்டும் என்றான். ஏன் தெரியுமா சுறாமீன்கள் அவனை ஒவ்வொரு கணமும் விழிப்பாய் வைத்திருக்கும். சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தை சந்திப்பவர்கள் இவர்கள்.

 

இப்படி சவால்களை எதிர்கொண்டு ஜெயித்தவர்களையே சரித்திரம் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது. அவற்றை மனிதர்களுக்கு பகிர்ந்த அவர்களையும் சாகச மனிதர்களாக்க  பாடம் எடுக்கிறது .

டாக்டர் ஹரி சாகசத்தை விரும்புபவர்.

ஜோர்ஜ் மலோரி ஒரு பிரசித்திபெற்ற எவ்ரஸ்ட் மலை ஏறி. அடிக்கடி ஏறிவிட்டு இறங்குவார்.

ஏன் வேற வேல இல்லியா உனக்கு. அடிக்கடி மலை ஏறிட்டு இருக்க. அப்படி என்னதாம் இருக்கு அங்க? ன்னு கேட்டார் ஒரு சராசரி மனிதர்.

ஜார்ஜெ மலோரி சொன்னார். அங்கதான் அது இருக்கு என்றார்.

அதுன்னா என்ன?

வள்ளுவர்தான் சரியான ஆள் இதற்கு பதிலுரைக்க.  அவர் சொல்கிறார் ஒரு பெண் கர்ப்பமுறுகிறாள். கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் வாந்தி வரும். பல வகையான உணவு ஒவ்வாமை வரும். படுக்கையை விட்டு எழுந்திலிருந்து அப்படி உண்டாகும். எதைப்பார்த்தாலும் கசக்கும் குமட்டும். சரியா உறக்கம் வராது. உடல் நிலை சீரா இருக்காது. அப்புறம் கொஞ்ச நாளில் பலவகையான உணவுக்கு ஆசைப்படும். புலிப்பு அதிகம் பிடிக்கும், உடம்பு அதிகம் உணவைக் கேட்கும். அதனாலேயே உடல் பெருகும். நீரிழிவு நோய் வரும். ரத்த அழுத்தம் கூடும். இத்தனைக்கும் சின்ன வயசுலியே வரும். பெரிய வயதாகி வந்தால் அது சகஜம் ஆனால் சின்ன வயசுத் தொல்லைகள் இந்த கர்ப்ப காலத்தின் விதி. வயிறு பெரிதான புரண்டு கூட படுக்க முடியாது. இவ்வளவு உடல் உபாதை தொல்லை போக கூடுதல் ஒரு தொல்லை உணடு. அது என்னவென்றால் பிரசவ வேதனை. ஒன்பது மாத கர்ப்ப காலத்தில் உண்டான வேதனையெல்லாம் ஜுஜுபி. நோய் வலிக்கெல்லாம் பெரிய வலி. பிரசவ வலி. குழந்தை வெளியே வரும் நேரம் இடுப்பெலும்பெல்லாம் விரிந்து கொடுக்கும். தசைநார்கள் எல்லாம் கிழியும்.  அந்த வலிய நெனச்சிகூட பாக்க முடியல அவ்வளவு வலி. ஆனால் இந்த ஒன்பது மாத வலியும் வேதனையும், பிரசவ வலியெல்லாம் எப்போது பனி போல நீங்கும் தெரியமா அந்த தாய் பிரசவிச்சிட்டும்தன் பெற்றெடுத்த குழந்தையை தன் கண்ணால் பார்க்கும்போதுதான். அந்தக் கணத்தில் விலகிவிடும். அந்தத் தருணத்தை வள்ளுவர் அழகாகச் சொல்வார். ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்  என்று. பெரிதுவக்கும் னா  பெரிய மகிழ்ச்சி / பரவசம். அந்த அது என்று ஜோர்ஜ் மலோரி சொன்னரே அந்த அது இந்தத் தருணம்தான். பெரிதுவக்கும் தருணம். ஹரி போய்த் அந்த உச்சத்தைதொட்ட அந்த பரவசத்தை சொல்கிறார். அதற்கு ஈடான இன்னொரு பரவச உணர்வு இல்லை என்கிறார்.

எவ்ரஸ்ட் மலையை ஏறுவது அவ்வளவு சிரம ம். ஆனால் அதையெல்லாவற்றையும் தாண்டி அந்த உச்சியைப் போய்த் தொட்டவுடன்தான் அந்தஅதுகிடைக்கும்.

ரவிச்சந்திரம் பலமுறை எவ்ரஸ்ட் மலை ஏறி இருக்கார். பல முறை ஏறிட்டு வந்தவர். இப்போது அதவிட ஆபத்தான் பெரிய மலைய ஏறப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் பேட்டியைப் படித்தேன். எவ்ரஸ்ட் ஏறி ஏறி அவருடைய கையின் முன் விரல்கள் சில செயலிழந்து வெட்டி நீக்கப்பட வேண்டியதாயிற்று. குளிர் தான் காரணம். பிரிட்ஜ்ல ஒரு வாரத்துக்கு எறைச்சிய வச்சிட்டு எடுத்துப் பாருங்க எல்லாமே ஐஸ்சாகி இருக்கும். அவங்க ஏறிய மலை மைனஸ் டிகிரிக்கும் கீழே. மேலே போகப் போக இன்னும் குளிர். பல நாட்கள் ஐஸ் கட்டியாகவே இருந்தா அது ரத்தஓட்டமில்லாமல் போயிடும் . அப்படியே உயிர் திசுக்கள் எல்லாம் செத்துப் போயிடும். அப்படித்தான் ஆயிடுச்சு அவருக்கு. அப்போ டாக்டர் சொன்னாங்க இனி இந்த விரல்கள் இருந்து புண்ணியமில்ல. சர்ஜரி பண்ணி நீக்கிடனும்னு சொல்லி நீக்கிட்டாங்க. அவர் எப்படி சப்பிடுவார்? பொருள்களைப் பிடிப்பார்? அந்த உடல் சௌகர்ய்ம அவருக்கு இனி இல்லை.யோசிச்சி பாக்க முடியல. அப்படி இருந்தும் மலை உச்சிக்கு போறதுலதான் கண்ணா இருக்கார். ஏன்? ஏன்னா அங்கஅதுஇருக்கு அவரும் சொல்கிறார்.

அந்த அதுவை நான் தன்னிறைவு ன்று சொல்வேன். அந்த தன்னிறைவைத் தேடித்தான் ஹரியின் பயணமும் அந்தப் பயணத்தின் விளைவாக இந்த அனுபவப் பகிர்வையும் நம் கையில் கொடுத்திருக்கிறார்.

எல்லாருக்கும் வாழ்வில் தன்னிறைவு வேண்டும் என்றுதான் முயற்சியெடுப்பார்கள் ஆனால் அது பெரும்பாலும் நடக்காது. மிஷல் பூக்கொ என்ற தத்துவ  அறிஞர் சொல்வார். நாம் எதிர்காலத்தை வேறு எவர் எவரோ நிர்ணயிக்கிறார்கள். எப்படி. இப்போ நான் ஒரு ஆசிரியாரா இருக்கேன்னா.அது என் விருப்பமல்ல. சிறிய வயதில நான் டாக்டாரக்னும்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போ அப்பா சொன்னார் டீச்சருக்கு படிடா. அம்மாவும் அதான் சொன்னாங்க. உறவினரும் அதான் சொன்னாங்க. ஆசிரியர் வேலையில் நிறைய விடுமுறை இருக்கு.ஜாலியா சுத்தி வரலாம்னும் ஆசிரியர்களான என் நண்பர்கள் சொன்னார்கள். வாழ்க்கைப் புராவும் பிள்ளைங்களுக்கு புத்திமதி சொல்லிக்கிட்டே இருக்கலாம். மாணவர்கள் மட்டும்தான் ஆசிரியர்கள் புத்திமதியை பொறுமையோடு கேட்டுக்கொள்வார்கள். எனவே வாத்தியார ஆயிடுன்னு சொல்லிச் சொல்லியே என்னைக் கல்லூரிக்கு அனுப்பிட்டாங்க. அந்த வாய்ப்புதான் கிடைத்தது.

ஆனா உங்கள் விருப்பம் எப்படி இருக்கணும்னா அது உங்களை தன்னிச்சையா உந்தித் தள்ளிக்கிட்டே இருக்கணும். பின்னால் இருந்து உத்தித்துக்கொண்டே இருக்கணும். அப்போதான் தன்னிறைவு கிடைக்கும். பிறரால் திணிக்கப்பட்ட ஒன்று நம்மை உந்தாது. நம்மை நின்ன இடத்தலேயே உட்காரவச்சிடும். அதில் தன்னிறைவு கிடைக்காது. அந்த தன்னிறைவை வேண்டுபவர்கள்தான் சாகசங்களை நோக்கிப் போவார்கள். ஹரி அதைத்தான் விருபினார். இப்போ கூட அடிக்கடி சொல்வார். இந்த மருந்து மாத்திர நோயாளி மருத்துவ மனையெல்லாம் விட்டுட்டு எங்காவது போய்ட்டுவர்ணும் சார். என்பார். தன்னிறைவுக்காக.

அப்படித்தான் அவர் எவ்ரஸ்ட் மலையின் அன்னபூர்ணா அடிவாரத்துக்குப் போய்ட்டு வந்தார்.


இந்த நூலில் ஆரம்பக் கட்டமெல்லாம் கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தது. ஆனால் மலை ஏற ஏற மர்மமும் சுவாரஸ்யமும் கூடிக்கொண்டே இருந்தது. பயணத்தின்போது உண்டாகும் மகிழ்ச்சிகள் தொல்லைகள் வாசிக்க ஈர்த்தாலும் எங்கே சாகசம் நேர்கிறதோ. அங்க படு வேகமாக வாசிக்க வைத்தது.

போகப் போக குளிர் எலும்பு வரை போய்த்தாக்குது. தண்ணீர் போதலை. சரிவில் விழுந்து எழுந்து காயம்பட்டு போறார். அப்படி போய்க்கொண்டே இருக்கும்போது ஒரித்தில் வேண்டாம் எறங்கிடலாமா என்று யோசிக்கிறார். குளிர் ஒத்துக்கொள்ளவில்லை. ஏண்டா வந்தம் வீட்லியே இருந்திருக்கலாமே என்று ஒரு கணம் யோசிக்கிறார். மறுகணம் அந்த யோசனையை தூக்கிப் போட்டுட்டு முன்னேறுகிறார். ஏன் மலை ஏறணும் ங்கிற  உய்ர்ந்த எண்ணத்தை  ஆழமாக பதிவு செய்துவிட்டார். வள்ளுவர் சொல்வார் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. எண்ணத்தில் குறிக்கோலை வலிமையாகப் பதிவு செய்துவிட்டொமென்றார்மற்றது தள்ளினும்என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். அதாவது அந்த ஆசையை ஆழமாகப் பதிவு செய்துவிட்ட பின்னர், அதனை உடைக்க எவ்வளவு தடைகள் வந்தாலும் அது நீர்த்துப் போய்விடும் என்கிறார். எது வலிமையாக நிற்கிறதோ அது ஜெயிக்கும். வேர் நன்றாக பாய்ந்திடுச்சின்னா, அதில் சில வேர்கள் ஏதோ காரணத்தால் உயிர் சக்தியை இழந்துவிட்டாலும், மற்ற வேர்கள் பலமாக ஊன்றியிருந்தால் அது மீண்டும் உயிர் பிழைத்துவிடுகிறதல்லவா! அதுபோல!

ரவிச்சந்திரன் மாதிரி விரல்களை இழந்துவிட்டாலும் ஊக்கத்தை இழக்கவில்லை. அப்போ அந்த ஊக்கம் அவருக்கு மட்டுமானதல்ல. வாசிக்கின்ற நமக்கும்தான் ஊக்க உணர்ச்சி உண்டாகிறது.

மலையேறும்போது  2800 மீட்டருக்கு மேல போய்ட்டா மருந்துக்கு கட்டுப்படாத நோய் தாக்கும். High altitude cerebral edema , high altitude pulmonary edema . ஒன்னு  மூளை வீக்க நோய், இன்னொன்று நுரையீரல் வீக்க நோய். எல்லாரையும் அந்த உச்சியை தொடும் முன்னரே டயாமோக்ஸ் எசட்டாமோலமைட் மருந்தை எடுத்துக்கணும் எச்சரிக்கிறார்கள். ஹரியோடு பார்த்திபன் டாக்டரும் அந்தக் குழ்வில் இருக்கிறார்கள். மலையேறிகள் அதனை உட்கொள்கிறார்கள். 12 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டாகனும்.அப்படி உட்கொள்ளவில்லையென்றால் . ஒவ்வாமைகள் உண்டாகும். சிறுநீர் அதிகமாக க் கழிதல், குறிப்பாக புலனுணர்ச்சி அதிவேகமாக தூண்டுதல் இருக்கும்.

அந்தப் பயணத்தில்

ஓரிடத்தை அடைந்த உடனே  அதிகமாக அரிப்பு, உடம்பு பூரா எறும்பு ஊறுவது போன்ற உணர்வு சில பெண்களுக்கு உண்டாகுது. இது லிஸ்டிலியே இல்லை. ஹரியும் பார்த்திபன டாக்டரும் தலைய சொரிய ஆரம்பிக்கிறாங்க. அதைப்போக்க என்ன செய்வதென்று குழம்புகிறார்கள். அது பெரும் வனம். வனத்தில் விஷப் பூச்சிகள் இருக்கலாம். எனவே அவை கடித்த பாதிப்பாக க் கூட இருக்கலாம். பின்னர் அது தானாகவே சரியாகிவிடுகிறது.


இவர்கள் மலையேறும்போது இரண்டு நாய்கள் கூடயே போகிறது. பாபு நாணி  . இவற்றுள் பாபு ஓரித்தில் ஒரு பாறையை ஏற முடியாமால் திணறுகிறது. நாய்கள் எடுத்துக்கொண்ட பாதை அது. அது வந்திடும்னு மலைஏறிகள் போய்க்கிட்டெ இருக்காஙக. ஒரு கட்டத்துல அது வந்து சேரல. எல்லாருக்கும் பதட்டம். நாய் உடனிருப்பது ஒரு பாதுகாப்பு உணர்வுதானே. காட்டு மிருகங்களைக் குரைத்தாவது விரட்டி விடும். அல்லது குறைந்தபட்சம் ஜாக்கிரதை உணர்வை உண்டாக்கி மலையேறிகளை கவனமாக இருக்கச் செய்துவிடும். ஆனால் பாபு வந்து சேரவில்லை. எல்லாருக்கும் பதட்டம். நம்மைப் பாதுகாப்பாக்கொண்டு வந்த இந்த ஜீவனுக்கு என்ன ஆடிடுச்சு?ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டதா என்று அஞ்சுகிறார்கள்.  அது கடைசியாக தேடி வந்துவிடுகிறது. பின்னர் எஜமானர் அன்புக்காக அது ஏங்குகிறது. ஹரியைஅத் தேடிவந்து உடன் படுத்துக்கொள்கிறது.

அந்த மலை ஏறும் குழுவில் ஜெர்மெய்ன் சீனப் பெண்ணும் இருக்கிறார். ஒரு முறை அவள் காணாமற்போய்விடுகிறாள். குறித்த நேரத்தில் வந்து குழுவோடு இணையவில்லை. எல்லாருக்கும் பீதி அண்டுகிறது. புலியின் நடமாட்டம் வேறு அந்த இத்தில். எங்காவது புதரின் பதுங்கியிருந்து,பாய்ந்து லபாக்கிணு அடிச்சி காட்டுக்கு உள்ளெ இழுத்துக்கொண்டு போனால்கூட யாருக்கும் தெரியாது. மலையேறி வழிகாட்டி தேடிவிட்டு வந்து கையை விரிக்கிறார். அனைவரும் ஏதோ நடந்துவிட் டது என்று பதறுகிறார்கள். நெடு நேரம் காத்திருந்து பின்னர் இடம் தேடி வந்து சேருகிறார். அத்தனை மணி நேரப் பத்தட்டம் என்னென்ன அசம்பாவிதங்களையெல்லாம் பாழாய்ப்போன மனம் நினைத்துக்கொள்கிறது,

 

ஓரிடத்தில் காட்டைக் கடந்து வருகிறார்கள். 30 நிமிடங்கள் தொடர்ந்து மணி சப்தம்/ கோயில் மணி சத்தம் போல. வழிகாட்டியைக் கேட்டால் மாட்டின் கழுத்து மணி என்கிறான். மாடுகள் காட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. காட்டும் மாடுகளும் மணி கட்டிக்கொள்வதில்லை. மணி சத்தம். எல்லாருக்கும் கேட்கிறது. முகாமுக்கு வந்து சேர்ந்த காலில் காரணமே இல்லாமல் ரத்தம் வடிகிறது ஒரு பெண் பயணிக்கு. ஏன் அந்த மர்மம் யாருக்கும் புரியவில்லை. இதனை தத்துவம்  மெட்டா பிசிக்ஸ்  அதாவது மீமெய்யியல் கோட்பாட்டில் சேர்க்கிறது. நம் அறிவுக்குப் புலப்ப்டாத சில விடயங்கள் நடக்குமல்லவா! அதனைத்தான் மீமெய்யியல் என்கிறோம்.

இந்த நூலில், அத்தியாங்கள் அடுக்கிய முறை அற்புதமாக இருக்கிறது. ஒரு அத்தியாயம் சுவாரஸ்யமாகத் துவங்கி அடுத்துவரும் அத்தியாயத்துக்கு காத்திருக்க வைக்கிறார்.

நான் என் பொண்டாட்டியபத்தி அடுத்த அத்தியாத்தில் சொல்கிறேன் என்கிறார். தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதவது வாசிப்பவனுக்கு ஆரவமாக இருக்குமல்லவா? அடுத்த அத்தியாயத்தை வாசித்தவிடந்தான் அது பண்டாட்டி என்ற ஓரித்திக் குறிக்கும் சொல் என்கிறார்.

ஒரு இரவு தொண தொண வென்று இரண்டு அக்காள்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த புதிரை உடனே அடுத்துவரும் அத்தியாத்துக்காக ஆவலோடு காத்திருக்க வைக்கிறார்ளது என்னவென்று நூலில் வாசித்துக்கொள்ளுங்கள்.

நாயா பொஸ்கு  சுப காமானா”. நெப்பாள மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறேன் என்று பொருள். அன்றைக்கு மலியேறி வழிகாட்டிகளுக்கு புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவரும் தன் வழிகாட்டிகளுக்கு சொல்கிறார். ஹரிக்குநஜிப் போஸ் குஎன்றே சொல்ல வருகிறது.

 

டைலகிரி மலையின் அழகுபற்றி சொல்வது வசீகரமாக இருக்கிறது. வெளிப்பனி மலையின் மீதுலாவுவோம் அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று பாரதி பாடுவாரல்லவா அதுபோன்ற ஒரு காட்சிப்படுத்தலை நிகழ்த்திக் காட்டுகிறார் ஹரி, தன் எளிமையான மொழியால்.

நான் கையிலெடுக்கும் ஒரு நூல் எனக்கு முதலில் புதிய தகவலைத் தரவேண்டும். இரண்டாவது சிறிய சிறிய எளிமையான மொழியில் எழுதபட்டிருக்கவேண்டும். சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் மொழி பயன்பாட்டை நான் விரும்புவதில்லை. மூன்றாவது அது தேய்வழக்கில்   எழுதப்பட்டிருக்கக்கூடாது. சோ வென்று மழை பெய்தது. நாய்கள் லொள் லொள் என்று குரைத்தன. என்பதெல்லாம் தேய் வழக்கு. கடைசியாக முதல் அத்தியாயம் என்னை உள்ளிழுத்துக் கொள்ளவேண்டும். அப்புறம் நானே நூலைத் தேடிப்போகவேண்டும். ஒருநூலில் இதெல்லாம் இருந்தால் அது சிறந்த நூல் என்பேன். டாக்டர் ஹரி நமக்குக் கொடுத்திருக்கின்ற நேபாள பூபாளம் என் தேவையை நேர்த்தியாகப் பூர்த்தி செய்திருக்கிறது. வாழ்த்துகள்.

நூலை வாசித்தால் இன்னும் இனிக்கும். நூல் கிடைக்க 011 36257049 என்ற எண்ணோடு தொடர்பு கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...