Sunday, November 16, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 19

விடுதி நிர்வாகியோடு பொருதினோம்.


வெனிஸ் கடல் நகரின் அழகு கண்களிலேயே மிதந்தது. அங்கிருந்து மனம் வெளியேற மறுத்தது. ஆனாலும் 15 நாடகளில் சுற்றுலாவை முடித்துவிடவேண்டும். அடுத்து வெனிசிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கிளம்பவேண்டும்.

சுவிட்சர்லாந்தில் 2 நாட்கள் கழிப்பதாகத் திட்டம். அழகிய நிலப்பகுதிகளால் நிறைந்த ஊர்.

வெனிஸை முடித்துக்கொண்டு விடுதியை வந்து சேரும்போது இரவாகிவிட்டிருந்தது. லாபியிருந்து அறைக்குப் போகலாமென்றால் இருளில் பாதை புலப்படவில்லை. எங்கள் அறை அதே விடுதியின் வேறு இடத்தில் இருந்தது. எனக்குக் கோபம் மெல்ல உருவாகிக்கொண்டிருந்தது. ஒரு வட இந்தியர் விடுதியின் நிர்வாகி போல இருந்து நிர்வகித்துக்கொண்டிருந்தார். எனவே முதலாளிலிக்கு லாபம் தேடித்தந்து நல்ல பெயர் எடுக்க அவன் மின்சாரக் கட்டணம் உயராமல் பார்த்துக்கொள்கிறானாம். இந்தியர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்திலும் நேர்மையின்மையை கற்றுக்கொடுத்துவிடுவார்கள். நான் நிர்வாகியிடம் ஏன் வெளிச்சமில்லை, எப்படித்தான் அறையைத் தேடிப்போவது என்று கேட்டேன். ஏன் போக முடியாது நான் விளக்கு வெளிச்சம் இல்லாமல்தானே புழங்குகிறேன் என்றான். விளக்கு இல்லாமல் இருக்காது அதனை ஏன் சுவிட்ச் ஆன் செய்யவில்லை என்றேன். என்னை நீ கேள்வி கேட்காதே. எனக்கு என்ன செய்வதென்று தெரியும் என்றான். பேச்சு கறாராய் போய்கொண்டிருந்தது. எல்லாவற்றையும் என் மகள் லாபியில் இணையம் பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தவள் எழுந்துவந்து என்னோடு சேர்ந்துகொண்டாள்.
இவனிடம் அதிகம் பேசவேண்டாம். இணையத்தில் இத்தாலியின் சுற்றுலா துறை சார்ந்து புகாரை எப்படி பதிவு செய்யலாம் என்று தேடு, என்றேன். மகள் உட்கார்ந்து தேடிக்கொண்டிருந்தாள்.
நான் சொல்லும் புகார்கள எல்லா வற்றையும் பட்டியலிடு என்றேன். சொல்லுங்க என்றாள். நாங்கள் தமிழில்தான் பேசினோம் என்றாலும் புகார் சார்ந்த சொற்களை ஆங்கிலத்திலேயே சொன்னேன்.
1.அறைக்குப் போகும் வழியில் போதிய வெளிச்சம் இல்லை. விளக்கைத் தட்டிவிடவில்லை.
2. அறையின் சன்னலை மூடமுடியாமல் சிக்கிக்கொண்டது.
3. அறையின் குளிர்சாதனம் தட்டிவிடப்படவில்லை.
4 . கதவின் பூட்டு சரியாக இயங்கவில்லை என்று சொல்லச் சொல்ல அவற்றைப்பதிவு செய்வது  போல பாவனை செய்தாள்.
நாங்கள் பேசி முடிக்கவில்லை எல்லாக் குறைபாடுகளும் சரி செய்யப்பட்டுவிட்டன. வெளியே வெளிச்சம் வந்தது. அறையில் குளிர்சாதனம் வேலை செய்கிறது என்று மருமகன் சொன்னார். மற்ற திருத்த வேலைகள் நடக்க ஆரம்பித்தன. நிர்வாகியின் கையில்தான் எல்லாம் இருந்தது. மேய்ன் சுவிட்ச் அவன் அருகில்தான் இருந்திருக்கிறது. நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று சொன்னவுடன் ஆள் ஆடிப்போய்விட்டான். வட இந்தியர்களோடு வனிகத் தொடர்பு  வைத்துக்கொள்வதைப்போல வதை வேறு ஒன்றும் இருக்காது. பணம் வாங்கும் வரை அவர்களும் தரும் தொல்லை அளவுக்கு மீறி இருக்கும். பணம் கொடுத்தும் வேலைகள் சரிவர நடந்திருக்காது எளிதில் யாரையும் நம்பவே மாட்டார்கள்.பயங்கர ஏமாற்றுப் பேர்விழிகள் இவர்கள். வேலையிலும் சுத்தம் இருக்காது.சொன்ன நேரத்தில் வேலை முடித்துத் தரமாட்டார்கள்.எனக்கு இதில் அனுபவம் உண்டு. ஆதாரமும் உண்டு.


மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கே மிளானோ கிளம்பினோம். புல்லட் ரயிலில் கிளம்பினால் மிலானோவை மணி11.25க்கு அடைகிறது. அங்கிருந்து சியாகோவுக்குப் பயணம். அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து சியாசோ போகவேண்டும். சியாகோவிலிருந்து சியாசோ போக ரயில் பிடிக்க  இடையில் 4கே நிமிடங்கள்தான் இருந்தது. ஆனால் அந்த பேசஞ்சர் ரயிலுக்கான பிலேட்பார்ம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. மருமகன் அங்கும் இங்கும் அலைந்து கண்டுபிடித்து பைகளை இழுத்துக்கொண்டு ஓடினார். அவர் பின்னால் நாங்கள் ஓடினோம். ரயிலை தவறவிட்டால இன்னொருமுறை டிக்கெட் எடுத்தாகவேண்டும்.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இலக்கை அடையவும் ரயில் வந்து சேரவும் சரியாக இருந்தது.

சுவிட்சரலாந்தின் சியாசோ வந்து சேர்ந்தபோது மதியம் ஆகிவிட்டது. வயிற்றில் பசி. மூத்திரப்பை நிறைந்து தொல்லை வேறு. ரயிலில் கழிப்பறை இயங்கவில்லை.

ரயில் நிலையக் கழிப்பறைகள் யூரோவை வாங்க மறுத்தன. பிராங்க் என்ற செலவாணிதான் அங்கே செல்லுபடி. நான் தத்தளித்துக்கொண்டிருந்தேன்.நான் அலைமோதுவதைப் பார்த்த ஒருவெள்ளையன் என்ன இரண்டு பிராங்கு கொடுத்து உதவினான். ஒரு பிராங்கு மலேசிய ரிங்கிட்டுக்கு கிட்டதட்ட 3 ரிங்கிட்டுக்குச் சமம். சிறுநீருக்கே 3 ரிங்கிட்டா? 3 ரிங்கிடுக்காக ஒரு நாள் முழுதுமான சிறுநீரை கழிக்க முடியுமென்றால் பரவாயில்லை. ஆனால் அது முடியாத செயலாயிற்றே.


ரயில் நிலையத்துக்கு அருகிலேயே வட இந்தியர்  பிரியாணி கடை ஒன்று இருந்தது. கடையின் பெயர் சிவா என்றிருந்தது. சிவனின் ருத்ர தாண்டவப் படம் முகப்பிலேயே இருந்தது. அங்கே போய் பகல் உணவை முடித்துக்கொண்டோம். வட இந்தியாவிலிருந்து வேலைக்கு வந்தவன் மெல்ல சுதாரித்து கடை முதலாளியாகி

இருந்தான்.

இங்கிருந்து சுவிட்சர்லாந்து முழுதும் காரில் சுற்றப்போகிறோம் என்று மருமகன் கார் வாடகை எடுக்க வெளியே போனார். நாங்கள் ஸ்டடேசனில் காத்திருந்தோம்.
வெளியே பயணிகளுக்கு வழிகாட்ட, உதவ அரசு ஒரு பணிப்படையை நிறுவி இருந்தது. பயணிகள் அலைமோதுவதைப் பார்க்கும் பணிப்படை உடனே அவர்களை விசாரித்து உதவ அவர்களே முன்வருகிறார்கள். எங்கே போகவேண்டுமென்றாலும் அதற்கான விழிமுறையை பணிவோடு செய்து தருகிறார்கள்.
மருமகன் காரோடு வந்தார். காரின் பூத்தில் பைகளை நிரப்ப இடம் போதவில்லை. சமாளித்து உள்ளே சேர்த்தோம். ஐரோபிய நாட்டுக் கார்களில் வலது கைப்பக்கம் காரைச் செலுத்தவேண்டும். எனவே இடது கைப் பக்கம்தான் ஸ்ட்டெரிங் இருக்கும். பரவாயில்லை அதற்கென்ன என்றே நினைத்தேன். ஆனால் என் மருமகன் காரைச் செலுத்தும்போதுதான் எனக்குத் தலையே சுற்ற ஆரம்பித்தது. எல்லாம் தலைகீழ். எனக்குப் பதட்டம் கூடிக்கொண்டிருந்தது.

தொடரும்........

1 comment:

KAVIN said...

அருமை..இன்னும் எதிர்பார்க்கிறேன்