முதலாளித்துவத்தின் முதலீடு -
வளைந்துபோய்விட்ட முதுகு
எத்தனை நூற்றாண்டுகள்
இன்னும்
வினாக்குறி வாழ்வுதான்
எத்தனை பல்லாண்டுகள்
இன்னும்
நாய்வால் அதிகாரம்தான்
அந்தி வெயிலின்போது மட்டும்தான்
இவன்
நிழல் நீண்டு வளர்கிறது
நிஜ வாழ்வில்
உச்சிவெயில்
நிலைதான்
நாய்வால்கள்
வெளிச்சத்தை விழுங்கிகொள்ள
வினாக்குறிகள்
இருட்டில் தடம் தேடுகின்றன
தன்
வியர்வை முத்துக்களை
மாலையாக்கிக்கொள்பவனிடம்
விலைபோவதே
இவன் விதி
கோ.புண்ணியவான்
வளைந்துபோய்விட்ட முதுகு
எத்தனை நூற்றாண்டுகள்
இன்னும்
வினாக்குறி வாழ்வுதான்
எத்தனை பல்லாண்டுகள்
இன்னும்
நாய்வால் அதிகாரம்தான்
அந்தி வெயிலின்போது மட்டும்தான்
இவன்
நிழல் நீண்டு வளர்கிறது
நிஜ வாழ்வில்
உச்சிவெயில்
நிலைதான்
நாய்வால்கள்
வெளிச்சத்தை விழுங்கிகொள்ள
வினாக்குறிகள்
இருட்டில் தடம் தேடுகின்றன
தன்
வியர்வை முத்துக்களை
மாலையாக்கிக்கொள்பவனிடம்
விலைபோவதே
இவன் விதி
கோ.புண்ணியவான்
Comments