சினிமா தாக்கம் சினிமாவைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளும் அறிவு இதனை தாண்டி தமிழ் இலக்கிய படைப்புகளைப் படிக்க முன்வந்தோர் இன்றில்லையோ என்றெண்ணும் அளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது. ஜனரஞ்சகமான காட்சிகள்இ கருத்தைஇ கவனத்தைக் கவருவதில் அதிசயமில்லைதான். எழுத்தையும்இ படைப்பையும் அப்படி மாற்றுவதற்கான வாய்ப்புகள் வருமா? எப்படிப் படைத்தாலும் படிப்பவரின் எண்ணிக்கையில் ஏற்றமில்லை. ஊடகங்களின் ஆகிரமிப்பில் உணர்வுகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற எண்ண அச்சுறுத்துகிறது. கடிதம் எழுதச் சொல்லிக்கொடுத்தால் ஒரு மாணவன் கேட்கிறான் எதற்கு இதைப் படிக்க வேண்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி விடலாமே என்று. துரு துரு பையனின் கேள்விக்குத் திரு திரு என்று விழித்து விட்டு சொன்னேன் சோதனைக்கு வரும் படி என்று. அவனுக்கு என்ன சொல்லி உணர்த்த வேண்டும். எப்படி சொன்னால் புரிந்து கொள்வான் என்று தெரியவில்லை. இப்படி தான் சினிமாவும் என்று ஒரு இயல்பான பதிலைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமோ? தெரியவில்லை. சினிமாவும் ஓர் இலக்கியமாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால்இ அது பழங்கதையோ. நம்மவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கென்று ஒன்றிருக்கிறதென்றால் அது சினிமாவைத் தவிர வேறெதுவுமாக இருக்கவியலாது. படித்தவர் முதல் படிக்காதவர் வரை நாடும் மிக மலிவான புத்தகம் சினிமா. திரையரங்குகளில் செலவிட 50 வெள்ளி முதல் அறுபது வரை இருந்தால் போதும். குறுந்தட்டு 10 முதல் 15 வரை போதுமானது. ஒரு குடும்பமே உல்லாசமாய் பொழுதாய் கழித்து விடலாம். இது இப்படியிருக்க ஆசிரியர்கள் ஒரு படி மேல்இ நான் இந்தப் புத்தகம் படித்தேன் என்று சொன்னால்இ அதற்கு கூட உங்களுக்கு நேரமிருக்கிறதா என்று கேட்டு கேட்டு சாகடித்து விடுகிறார்கள். என் கவிதை பத்திரிக்கையில் வந்தது என்றால் நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதியவள் தான் என்று கூறி கூறி சொல் அம்புகளால் குத்திப் பார்கிறார்கள். நான் படிக்கிறேன் என்றா ஆற்றாமையா? நான் எழுதுகிறேன் என்று பொறாமையா தெரியவில்லை. எதுவாக இருந்தாலும்இ அதைப் பற்றி எண்ணி ஆகாப்போவது ஒன்றுமில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் சினிமா பார்க்க நேரமிருக்கிறது. தமிழ்ப்பள்ளி நூலகங்களில் நாளேடுகள் வாங்குவதில்லை. ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் படித்து விடுவார்களாம். எத்தகைய எண்ணம். இப்படி இருக்கையில் வாசிக்கும் சமுதாயம் எப்படி உருவாகும். ஆப்ரகான் லிங்கனைத் தெரியாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்று மிகவும் அவமானத்தோடு இவ்வேளையில் சொல்லத்தான் வேண்டும். மு.வா தெரியாதுஇ நபா. வை அறிந்திருக்க மாட்டார்கள். இவர்கள் அனைவரும் கூட கற்றுக்கொடுப்பவர்கள் தான் என்று எண்ணும் போது மனதில் நிரந்தரமாய் வலி ஒன்று குடிகொள்கிறது.ஆனால் இவர்களுகெல்லாம் விஜயைத் தெரியும்இ அசினைப் பிடிக்கும். வாசிக்க மட்டும் பிடிக்காது. இந்த தலைமுறை எப்படி இருக்கும்? ரெ.கார்த்திகேசுவை அறிந்துவைத்திருக்காதா சமுதாயமாகத் தானே வளரும். சினிமாவைப் பற்றிய உங்கள் பார்வை ஏற்படுத்திய அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளேன் சரியா ஐயா? நன்றி.
மஞ்சுளா.
மஞ்சுளா.
Comments