நீ ஆழ்கடலுக்குள் மூழ்கி
மூச்சடக்கி முத்து கொண்டு வா
நான் கப்பலில் மதுக்கோப்பையை
கையிலேந்தியபடியே
அதை வாங்கிக்கொள்கிறேன்
நீ பாதாள சுரங்கத்திலிறங்கி
வைரம் கொண்டு வா
நான்
நான் பாதுகாப்பு வளையத்துக்குள்
பத்திரமாய்க் காத்திருக்கிறேன்
நீ மரத்தில் தாவி
மது இறக்கி வா
நான் மாதுவோடு
என்னை மறந்திருப்பேன்
நீ அட்டைக்கும் கொசுவுக்கும்
ரத்த தானம் செய்து
ரப்பர் கொண்டு வா
நானென் பாதங்களில்
முள் பாயாதபடி
பார்த்துக்கொள்கிறேன்
நான் என் பிள்ளைகளை
செல்வச் சீமானாக்குகிறேன்
உன் பிள்ளையை
உனக்கான அடுத்த
வாரிசாக்க
உறுதி தருகிறேன்
நீ பழம்கொண்டுவா
கண்டிப்பாய்
உனக்கு நான்
கொட்டை தருகிறேன்
“ந்தா
மேதின பூ
வைத்துக்கொள்
வாழ்த்துகள்.......”
கோ.புண்ணியவான்
மூச்சடக்கி முத்து கொண்டு வா
நான் கப்பலில் மதுக்கோப்பையை
கையிலேந்தியபடியே
அதை வாங்கிக்கொள்கிறேன்
நீ பாதாள சுரங்கத்திலிறங்கி
வைரம் கொண்டு வா
நான்
நான் பாதுகாப்பு வளையத்துக்குள்
பத்திரமாய்க் காத்திருக்கிறேன்
நீ மரத்தில் தாவி
மது இறக்கி வா
நான் மாதுவோடு
என்னை மறந்திருப்பேன்
நீ அட்டைக்கும் கொசுவுக்கும்
ரத்த தானம் செய்து
ரப்பர் கொண்டு வா
நானென் பாதங்களில்
முள் பாயாதபடி
பார்த்துக்கொள்கிறேன்
நான் என் பிள்ளைகளை
செல்வச் சீமானாக்குகிறேன்
உன் பிள்ளையை
உனக்கான அடுத்த
வாரிசாக்க
உறுதி தருகிறேன்
நீ பழம்கொண்டுவா
கண்டிப்பாய்
உனக்கு நான்
கொட்டை தருகிறேன்
“ந்தா
மேதின பூ
வைத்துக்கொள்
வாழ்த்துகள்.......”
கோ.புண்ணியவான்
Comments