Skip to main content

12. பனிப்பொழிவில் 10 நாட்கள்


        
                                           ஜெய்ப்பூர் அரண்மனை


 




                                                    பிங்க் சிட்டி


            அடுத்து நாம் காணவிருக்கும் வானவியல் சார்ந்த அரசரின் கருவிகள்

வேல்ஸ் இளவரசரை நையாண்டி செய்த ஜெய்ப்பூர் மன்னர்
புதிய கோட்டையில் முதலில் பிங்க் சிட்டியைப் பார்க்கலாமென்றார் மனோஜ். வண்ணத்தை  சிவப்பு வண்ணத்தில் மஞ்சல் வண்ணத்தைக் கலந்தால் உண்டாகும் வண்ணம் பிங்க் என்று சொன்னால் சரியாக இருக்கும்.     அரண்மனை வளாகத்துக்குள் நுழைவதற்கு முன் உள்ள கட்டடம் முழுவதும் மேற்சொன்ன வண்ணத்தைப் பூசி இருக்கிறார்கள். அந்த இடம் முழுதும் பிங் வண்ணமயமாக இருக்கிறது. இப்போது கொஞ்சம் மங்கி இருக்கிறது. ஆனால் அதன் வனப்பும் வரலாறும்  குறையாமல் இருக்க அந்த வண்ணத்தை பூசி வருவதாகச் சொன்னார்.    எதற்கு இந்த வண்ணம் என்று கேட்டேன். மகிழ்ச்சியின் குறியீடு என்றார். அது மட்டுமின்றி 1876 ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வருகை புரிந்த வேல்ஸ் இளவரசரை மகிழ்ச்சியோடு வரவேற்க இந்த தடபுடல் நடந்தது என்று சொன்னார். வேல்ஸ் இளவரசர் வந்த புகைப்படங்களை அரண்மனையில் பார்க்க முடிந்தது.    பிங்க் சிட்டியை விட்டு அரன்மனைக்குள் நுழைகிறோம். அரண் மனை மஞ்சல் நிறத்தில் ஜொலிக்கிறது. அது அரச நிறமல்லவா! அரண்மனை வாசலிலேயே நம்மை இளவசமாக படம் எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் இங்கே வந்ததன் நினைவாக என்கிறார்கள். தேவைப்பட்டால் வெளியேறும்போது படத்தை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்கள்.    மற்ற மாநிலங்களைப்போல மன்னர் வம்சம் ஒரு முடிவுக்கு வந்தது போல இங்கே நடக்க வில்லை. இன்றைக்கும் 75 வயதான ரஜஸ்தானின் கடைசி மன்னர் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். என்னதான் மக்களாட்சி மலர்ந்துவிட்டாலும் மன்னருக்குத் தர வேண்டிய எல்லா மரியாதையும் இங்கே தரப்படுவதாகச் சொன்னார். மன்னர் பவானி சிங் அவருடைய மனைவி  பேரப்பிள்ளை தவிர வேறு யாரும் இப்போது அரண்மனியில் இல்லை . அந்த மூவருக்கும் எழுபது வேலையாட்கள் பணியில் இருப்பதாகத் தெரிகிறது. முடியாட்சி முடிந்த நிலையிலும் ஒரு ஆளுனருக்குத் தர வேண்டிய கௌரவம் அவருக்குத் தரப்படுகிறதாம். அதற்குக் காரணம் உண்டு.    மன்னரோடு தேநீர் அருந்தலாமா என்று கேட்டேன்.    அதற்கு நீங்கள் ஒரு நாட்டின் தலவராக இருக்கவேண்டுமென்றார். நமக்குத்தான் நாடே இல்லையே. இந்த ஜன்மத்தில் நடக்கக்கூடிய காரியமா அது?    ஜெய்ப்பூர் பட்டணம் முறையாகத் திட்டமிட்டு கட்டப் பட்டது. ரஜஸ்தானைச் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சீனப் பெருஞ்சுவர் போல இல்லையென்றாலும் எதிர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த ஏற்பாடு. இது ஜெய் சிங் என்ற தொடக்க கால மன்னரின்  எண்ணத்தில் மலர்ந்த திட்டம்.     ஜெய்ப்பூர் அரண்மனைக்குள் நுழைய ஏழு நுழைவாயிகள் கட்டப் பட்டுள்ளன. சூரிய நுழை வாயில் , சந்திர நுழை வாயில், புதிய நுழைவாயில், பழைய நுழை வாயில் என அவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறர்கள்.     அரண்மனையின் மந்திரிப் பிரதானிகளோடு கூட்டம் நடத்தும் அறை பொதுமக்களுக்குத் திறந்து வைத்திருக்கிறார்கள்.அங்கே மன்னர் பரம்பரையின் சரித்திர ஆவனங்கள் காணக்கிடைக்கின்றன.    400 வருடகாலமாக விரிக்கப்பட்டிருந்த கம்பலம் அரியாசனத்துக்கு முன்னால் கபோடப்பட்டிருந்தது. ஒட்டக உரோமத்தால் ஆனது. அரியாசனத்துக்கென்றே பிரத்தியேகமாக நெய்யப்பட்டது. சுமார் 40 X 30 அடி சதுர அளவு கொண்டது. கொஞ்சம் வர்ணம் இழந்திருக்கிறதே தவிர கிழியாமல் அப்படியே இருக்கிறது. இன்னொரு அதிசயம் என்னவென்றால் தீயிட்டு அதை கொழுத்தமுடியாது என்பதுதான். இப்போதெல்லாம் மன்னராட்சி இல்லாத்தால் அரியாசனம் மட்டுமே ‘அமர்ந்திருகிறது’.                    ஏழாவது மன்னரான் சாவாய்ராம் காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன் படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். புகைப்படக் கருவி அறிமுகமாகி முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது சாவாய்ராம் காலத்தில்தான் . கண்கண்ணாடி அறிமுகமாகி முகத்தில் போட்டுப்பார்த்தவர்கள் அரச வம்சத்தினர். அந்தக் காலத்து அரசர்கள் சிலர் போலோ விளையாட்டில் பெற்ற கிண்ணங்கள் பரிசுகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சமீபத்திய மன்னர் காலத்தில் எடுக்கப்பட்ட காணொலி (வீடியோ) காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. . குதிரைப் போலோ விளையாட்டில் வெற்றி வாகை சூடியவர் 10வதாக முடிசூடிய மன்னர்.        அவர்கள் சாதாரண நாட்களில் அணிந்த ஆடைகளிலிருந்து , அதிகார நாட்களில் அணிந்த ஆடை வரை காணமுடிந்தது. அடுத்த மன்னராக ஆட்சி பீடத்தில் அமர அவர்களுக்குள்ளே நடந்த உள்ளரசியல் பிணக்கு பற்றியெல்லாம் ஏராளமான கதைகள் காணக்கிடக்கின்றன .      இந்த மன்னராட்சி மந்திரிப் பிரதானிகளோடு நடத்திய ஆகக் கடைசி கூட்டம் 1959 ஆண்டில்தான். அதாவது 11வது மன்னரான இன்றைக்கிருக்கும் பவானி சிங்தான் ஜெப்பூரின் கடைசி மன்னர். அதற்குப்பிறகு மக்களாட்சி மலர்ந்திருக்கிறது.       ஜெ சிங் என்ற மன்னர் ஓவியத்தில் சிறந்து விளங்கி இருக்கிறார். அவரே வரைந்த நக ஓவியம்  அவரின் திறமைக்குச் சான்றாக சுவரில் மாட்டப்பட்டிருந்தது.   அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு மன்னர் ரொம்பவும் குண்டாக இருந்தார்.   ஏழு அடி உயரமும் 260 கிலோ எடையும் கொண்ட அஜானுபாகுவான் உடல் அமைப்பு. ஒரு நாளைக்கு  5 கிலோ இட்லி ( எண்ணிக்கையற்ற) . சட்னி எவ்வளவு என்று தெரியவில்லை! 5 கிலோ ஜிலேபி , 2 லிட்டர் பால் பசியாறி இருக்கிறார். பகல் உணவு , மதிய உணவு, இரவு உணவு எவ்வளவு என்று தெரியவில்லை. இந்தியாவில் வறுமை தாண்டவமாடுவதற்கான் காரணங்கள் எனக்குப் புலப்பட ஆரம்பித்தது. அவர் அணிந்திருந்த உடை அகன்ற சன்னல் துணிமாதிரி விரிந்து கிடந்தது.    மன்னராகச் சில காலமே ஆட்சி செய்து தன் 34 வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார்.   மன்னர் வம்சத்தில் வந்த ஒரு ஜெய்ப்பூர்  மகராஜா எப்படி பிரிட்டிஷ் மன்னரைப் ‘பழி வாங்கினார்’ என்ற சம்பவம் சுவாரஸ்யமானது.    பிரிட்டிஷ் மன்னர் ஜெய்ப்பூருக்கு வரும்போது கூடவே கேலன் கணக்கான,  தண்ணீரையும் தன் உபயோகத்துக்குத் கொண்டு வந்து பயன் படுத்தி இருக்கிறார். இது  மன்னரை சிறுமைப்படுத்தும் செயலாகப் பட்டிருக்கிறது.    மன்னர் பிரிட்டனுக்கு அழைக்கப்பட்டபோது அவர் 900 கேலன் கங்கை நீரையும் அதைக் கொண்டு செல்ல ஒரு யானையையும் , கூடவே பணியாட்களையும் கொண்டு சென்றிருக்கிறார். பிரிட்டன் மன்னருக்கு நிகராக அங்குள்ள நீரை பயன் படுத்தாமல் தான் கொண்டு சென்ற கங்கை நீரையே பயன் படுத்தி இருக்கிறார். பழிக்குப் பழி!

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின