கோ.புண்ணியவான்
நகராத நாற்காலி
நகர்த்திகொண்டே இருக்கிறது
பிட்டங்களை
பிட்டங்களை
நீண்ட நாளைக்கு
இருத்துவதில் உடன்பாடற்று
பல சமயங்களில்
அமளி செய்கிறது
சில நேரம்
சிலுவைக்கு அனுப்பிவிடுகிறது
நாற்காலி உயர்திணையாகி
அமர்ந்தவனை
அக்றிணையாக்கிவிடுகிறது
அடிக்கடி ஆளைமாற்றும்
ஆசை நாயகி
விபச்சாரி
என்ன விலைக்கும்
தன்னை விற்கும்
விலைமதிப்பற்ற
விலைமாது
நான்கு கால்கள் ஏன்?
இரண்டு கால்களைச்
சமாளிக்க வேண்டுமே !
ஒருகால்..... அவருக்கா?
அல்லது இவருக்கா?
அவரோ இவரோ
தோற்றவன் ஒரு காலை
பிடுங்கிக்கொள்ள
வென்றவன்
மூன்று கால்களோடுதான்
அமர்கிறான் !
இனம் இனத்தோடுதானே சேரும்
அதனால்தான்
இவனும் மரமாகிறான்.
‘ஒரு இடைவேளைக்குப்பிறகு
மீண்டும் சந்திப்போம்’
நாற்காலியிருந்துதான்
தொடங்கியதோ!
காலி செய்வதற்குத்தானே
நாற்...காலி !
Ko.punniavan@gmail.com
Comments