கடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில் கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.
காலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள் காரை ஓட்டுவதிப் பார்த்தால் கும்பகர்ணனுக்கே தூக்கம் வராது. இரண்டு காரிலும் ஐந்து பேரப்பிள்ளைகள் இருந்தார்கள் என்பது பயணத்தை மேலும் அச்சமாக்கியது.
ஓங்கிய பெருங்காட்டைக் கடந்துதான் இந்த ஏழு மணி நேரப்பயணம். யானைகள் நள்ளிரவில்தான் சாலையைக் கடக்கும்போலும். இரண்டு கிலோ மீட்டருக்கு இடையே யானைகள் நடமாட்டம் இருப்பதைக் குறிக்கும் சாலைப் பலகைகள். ஆனால் இந்த முறை நாங்கள் பலகையில்தான் யானைகளைப் பார்த்தோம். காரில் யானைகளையே அச்சமூட்டும் உயிரினங்கள் இருந்தன என்பதே எனக்குத் தைரியம் மூட்டுவதாக இருந்தது.
உல்லாசத் தீவுக்குச்செல்லும் இயந்திரப் படகில் ஏறும்போது மணி எட்டரை. எங்களோடு சில பிரஞ்சுக்காரர்களும் இருந்தனர். படகு அரை மணி நேரத்தில் தீவை அடைந்துவிடும் என்று சொன்னார்கள். எல்லாரும் உட்கார்ந்ததும் படகு வேகம் பிடிக்க ஆரம்பித்தது. நான் நினைக்கிறேன் மணிக்கு 150 கிலோ மீட்டருக்குக் குறையாத வேகம். பெருத்துச் சுருண்டு வரும் அலைகளைக் கிழித்தெறிந்துகொண்டே சீறிப் பாய்ந்து செல்கிறது. மோதிச்செல்லும் அலைகளை அநாயசமாக கிழித்தவாறே விரைந்து ஊர்கிறது படகு. படகின் முன்பக்கம் சீன நாகம்போல தலையைத் தூக்கித் தூக்கி ஏறி இறங்கும்போது அலைகளை அறைந்து அறைந்து செல்லும்போது. பேய் பிடித்த பெண் முடியை விரித்து மேலும் கீழும் ஆட்டி அச்சுறுத்தும் காட்சிக்கு ஈடானது அது. சிறு குடலும் பெருங்குடலும் இடம் மாறிவிடுமோ என்ற பயம் ஆட்கொள்கிறது. சீரிச்செல்லும் தருணத்தில் கடல் நீரை வாறி இறைக்கிறது. அந்த அரை மணி நேரமும் அகால நேரமென்றே அறிக.
மணி ஒன்பதுக்கெல்லாம் தீவை அடைந்திருந்தோம். நான் மறுபிறவி எடுத்திருந்தேன். விடுதி மணி பத்துக்குத்தான் தயாரானது. ரூம் கிடைத்தவுடன். குளித்துவிடலாம் என்று குளியலறைக்குள் சென்று குனிந்து எதையொ எடுத்தேன். தீவு சுற்றுவது போன்ற பிரம்மை உண்டானது, தூக்கமின்மை காரணமாக வந்த அலர்ஜிதான் அது. குளித்துவிட்டு வெளியே வந்தவுடன் காலை உணவுக்குச் சென்றோம். ஒரு ஆள் பசியாற முப்பது வெள்ளிக்கு மேல் தரவேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் ஆர்டர் கொடுத்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்ததால் இந்த விலை. முன்பொருமுறை அறை வாடகையோடு பேக்கேஜ் கணக்கில் உணவுக்கும் பேசிவிட்டதால் சாப்பிட்டு வயிறெறிந்து போனோம். திரும்பத் திரும்ப ஒரே வகை உணவைப் பரிமாறிக் கொன்றார்கள். மறுமுறை உணவைப் பார்க்கவே பிடிக்கவில்லை!
இந்த முறை கவனமாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில் இந்த ஏற்பாடு. ஆனால் விலையோ படு பயங்கரம். ’ஹோலிடேன்னா இப்படித்தாம்பா,” என்றான் பெரியவன். ஆனால் அதே விலையில் சாப்பிட்டால் வயிறு ஏற்காது. ஏற்றாலும் சீரணிக்காது. இரண்டு நாளுக்கு இந்த செலவு செய்தால் என் ஒரே வீட்டை விற்கும்படியாகிவிடும். அப்புறம் தின்னு கெட்ட குடும்பப்பட்டியலில் எங்களோடுதும் சேர்ந்ததுவிடும்.
சாப்பிட்டு விட்டு அக்கடா என்று தூங்கலாம் என்று நினைத்தேன். வெளியே வந்ததும் மீண்டும், ”படகில் ஏறுங்கப்பா,” என்றான்..
”எங்கே?” என்றேன் நான். “சும்மா ஏறுங்கப்பா!” என்றான் மகன்.
”தாத்தா நம்பெல்லாம் சுனோக்கிலிங் போறோம்.” என்றாள் பேத்தி.
”நேத்து பூரா தூகமில்ல, படகுப் பயணம் வேற ’புலியாட்டம்’ பயணமானது, இவ்ளோ பணம் கொடுத்து சாப்பிட்டது வேற செரிக்கல! அதுக்குள்ள என்னடா சுனோக்கிலிங்?” என்றேன்.
”ஹோலிடான்னா அபடித்தாம்பா!” என்றான் மீண்டும்.
கரு நீலக் கடல் விரிந்து குளிர்கிறது. தண்ணீருக்கு அடியில் மீன்களும் கடற்பாறைகளும், பிற கடல் வாழ் உயிரினங்களும் கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல தெளிவாகத் தெரிகிறது. அள்ளி அள்ளிக் குடிக்கலாம் போலத் தோன்றுகிறது.
மிதவையும் கண்ணாடியும் அணிந்துகொண்டு கடலில் குதிக்க ஆரம்பித்தார்கள் எல்லாரும்.
”தாத்தா நீங்களும் வாங்க தாத்தா,” என்று வியந்து என்னை அழைத்தனர். தூக்கம் கண்ணுக்குள்ளேயே இருந்த்து. கடலில் குதித்தால் தூங்கியவாறே மிதக்கப்போகிறேன் என்று தெரிந்துவிட்டது எனக்கு.
கடலுக்குள் குதித்து கண்ணாடி அணிந்து பார்த்தபோதுதான் ரம்மியமான ஒரு புது உலகம் வசப்பட்டது. வண்ண வண்ண மீன்கள் குறுக்கும் நெடுக்கும் நீந்தித் திரியும் அழகை நாளெல்லாம் பார்க்கலாம், கடற்பாறைகள் வெள்ளைப் பூக்கள் கணக்காய பூத்துச் சிரிக்கிறது. வெறும் மேல் பாகமே இவ்வளவு வனப்பென்றால், கடலுக்கடையில் இன்னும் என்னவேல்லாம் இருக்கும்? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கடலையும் சேர்த்துதான் பாடி இருக்கிறான் பாரதி. புதுச் சேரியிலும் வாழ்ந்தவனில்லையா?
பேரப் பிள்ளைகள் மீன்களோடு மீன்களாகவே இரண்டு நாளையும் கழித்தார்கள்.
அருகருகே உள்ள பல தீவுக்கூட்டங்களுக்குச் சென்று பார்த்தோம். ஒரு தீவில் 1500 பேர் குடியிருகிறார்கள். அங்கே தொடக்கப்பள்ளிக்கூடம், காவல் நிலையம், தபால் நிலையம் என்று எல்லா வசதியும் உண்டு. ஒரு நாள் பகலுணவை அங்கேயே முடித்துக் கொண்டோம். விலை எவ்வளவோ சகாயம்!
பெர்ஹெந்த்தியான் தீவின் ஒரு அறையின் விலை நானூறு மலேசிய ரிங்கிட். பகல் உணவின் விலை தலைக்கு 40 ரிங்கிட். ”தாங்காதுடா சாமி’ என்றேன்.
”ஹோலிடான்னா அப்படித்தாம்பா,” என்றான் மகன்.
அங்கே இரண்டு நாளைக் கழித்துவிட்டு, இக்கரைக்கு வந்து, திரங்கானு கோலா பெசுட்டில் இருக்கும் ஒரே இலை சாப்பாட்டுக்கடை மீனா ரெஸ்டாரெண்டில் பகல் உணவை முடித்தோம்.
மலாய்க்காரர்களே அதிகம் வாழும் பெசுட்டில் ஒரே தமிழ் உணவுக்கடை அது.
மீண்டும் ஏழு மணி நேர கார் பயணம் தொடங்கியது.
”ஏம்பா இவ்ளோ செலவு செஞ்சி லீவுக்கு வரணுமா?” என்று கேட்டேன் எல்லாரிடமும்.
”ஹோலிடேன்னா இப்படித்தாம்பா,” என்று கோரஸில் பதிலளித்தனர் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும்.

Comments