2. விரட்டுகின்ற மிருகங்கள்
கோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் .
தவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்.
என் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன்.
மணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன்.
அப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம் வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய்மையாக இருப்பதற்கு கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன் . அப்போது அவர்கள் , அதப்பத்தி கவலப் படாதீங்க நாங்க வேலையாளுங்கக்கிட்ட சொல்லி சுத்தம் பண்ணிற சொல்லிடுரோம்” என்று பதில் வந்தது.
திருமணத்துக்கு முதல் நாள் மாலை இறுதிக்கட்ட வேலை நிமித்தமாக மீண்டும் கோயிலுக்குச்செல்ல வேண்டியிருந்தது. கழிப்பறையில் வேலை ஏதும் நடந்திருக்கிறதா என்று எட்டிப்பார்க்கும் முன்பே பலமான அதே துர்வாடை மிருகம் மீண்டும் என்னை விரட்டியது.
மீண்டும் அதே நபரிடம் போய் “ என்னங்க கக்கூஸ் சுத்தமாவே இல்லியே. அன்னிக்கி சொல்லிட்டு போனனே. நாளக்கு காலையில ஆளெல்லாம் வந்திருவாங்க. இப்படி இருந்தா அவசரத்துக்குகூட போக முடியாதே ‘” என்றேன்.
இல்லிங்க நான் சொல்லிட்டேன் ..... அவரு இன்னும் செய்யில போலிருக்கே” என்று இழுத்தார். ‘‘செய்யில போலருக்கே,’’ என்ற வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் பொறுப்பின்மையால் எனக்குள் மூர்க்கமாய் கோபத்தை மூட்டியது.
“ என்னங்க நான் சொல்லி மூனு நாளாச்சி எதாவது செய்றுதில்லியா? இந்த அசிங்கத்துல எப்படி பொழங்கிறது” என்றேன்.
“இப்ப சொல்லிர்றேன்,” கைப்பேசி எடுத்து யாருக்கோ போன் செய்தார். பல சமயங்களில் கைப்பேசி நாம் நடத்தும் நாடகத்துக்குப் பயன்படும் கருவியாகவும் அமைந்துவிடுகிறது என்பதை சற்று நேரத்தில் உறுதியாயிற்று.
காத்திருந்து காத்திருந்து பார்த்தும் ஆள்வரவில்லை. அதற்கு மேல் அவரிடம் போய் சொல்வதும் எனக்குப்படிக்கவில்லை. அப்படிப்போனாலும் எங்கள் உரையாடலும் கழிப்பறை நாற்றத்துக்குச் சமமானதாகவே முடிந்துவிடும்.
நானே ஒரு துடைப்பத்தை எடுத்து கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.
கழிப்பறைச் சுவர் சிமிண்டால் மட்டுமே பூசப்பட்டிருந்தது. அதுவும் பூஷணம் மேய்ந்து கிடந்தது. சிறுநீரால் நனைந்த இடம் பழுப்பு மஞ்சள் நிறமேறி இருந்தது. கழிவறை கூரை தகரத்தால் வேயப்பட்டு , ஒட்டடை தூக்கு மாட்டிக்கொண்டவனைப்போல தொங்கிக்கொண்டிருந்தது. சிமிண்டாலான ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. அதிலும் தண்ணீர் தரை தட்டிக்கிடந்தது. பழைய மைலோ டின் தண்ணீர் அள்ளுவதற்கு வைக்கப்பட்டிந்தது. அதுவும் துருவேறிக்கிடந்தது. அதனைப் பயன் படுத்துகிறவர்கள் கழிப்பறையென்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மனோபாவத்தில் ஊறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்-இன்றைக்கும். கழிப்பறையின் இழி நிலைப்பற்றி என்னைப்போல் பலர் முறையிட்டிருந்தால் அது மேம்பட்டிருக்கும். ஆனால் நமக்கென்ன என்றிருப்பவர்தான் நம்மில் அதிகம். சற்று நேரச் சிரமப் பரிகாரம்தானே ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.
அதே வேளையில் கோயிலைப்பாருங்கள். மிகுந்த அக்கறையோடு தூய்மைப்படுத்தப்படதாகவே எந்நேரமும் காட்சி தரும். தரையில் மொசைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும். சுவர்களில் தமிழ் நாட்டு ஓவியர்களின் தெய்வப்படங்கள் வரையப்பட்டிருக்கும். விட்டச் சுவரில் அழகிய வண்ணக்கோலங்கள் . போடப்பட்டிருக்கும். தரையைச் சுத்தப்படுத்த தனியாக ஒரு ஆள் இருப்பார் அல்லது யாராவது இலவசமாக சுத்தப்படுத்திக்கொண்டிருப்பார். அக்கடா என்று தரையில் அமர்ந்தால் தியானம் இருக்கவேண்டும் போலிருக்கும்.
இதே அக்கறை கோயில் கழிப்பறைத்தூய்மையில் காட்டவேண்டும் என்ற முயற்சி பல கோயில் நிர்வாகத்துக்கு இல்லை. ஏன் இந்த இரட்டை நிலை? இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பான் என்ற மரபார்ந்த போதனை நீர்த்துப்போனதா? அங்கெங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் ,என்ற வேதகால புனிதச்சொற்களைத் தொலைத்துவிட்டோமா? இறைவன் கழிப்பறை பக்கம் போகமாட்டார் என்ற நினைப்பா? அப்படியென்றால் மேலே நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தைகள் பொருளற்றதா ? பொருட்படுத்தக்கூடாததா? சில பொறுப்புள்ளவர்களைக்கூட சுமையை இறக்கிவிட்டு இந்த நாற்றத்திலிருந்து விடுபட்டால் போதும் என்று கழுவாமல் கழிவறையைவிட்டு ஓடுவதற்குக்குக் காரணம் தாங்க முடியாத அதன் துர்நாற்றம். நம் வீட்டில் இருக்கும் கழிவரையைத் தூய்மையைப் பாதுகாப்பதில் நாம் எவ்வளவு கவனமாய் இருக்கிறோம். நமக்குக் உரிமையானது என்றால் அதற்கு பிரத்தியேக கவனம் செலுத்தும் நாம் பொதுச்சொத்து என்றால் பொறுப்பற்ற எண்ணம் வந்துவிடுகிறதே ஏன்?
கோயில் வளாகத்தில்தானே கழிப்பறை அமைந்திருக்கிறது? அப்படியென்றால் கோயிலில் ஒரு பகுதிதானே அது? அகத்தூய்மையிலும் புறத்தூய்மையிலும் கடவுள் உறைகின்றான் என்பதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் நாம்? அந்தக்காலத்தில் கோயிலகள் நோய் தீர்க்கும் புனிதத்தலமாக இருந்ததை இன்றைக்கு முரண் இயக்கமாக மறிப்போனது ஏன்? பராமறிக்கப்படாத கழிப்பறைகள் நோயின் காரணிகள்தானே!
என்னைப்போலவே ஒரு கவிஞன் தன்னைக்கழிப்பறை விரட்டியடித்த அனுபவத்தை தன் கவிதையில் இப்படி இறக்கிவைக்கிறான்.
பாபர்களுக்கு மசூதி வேண்டும்
இந்துக்களுக்குக் கோயில் வேண்டும்
எங்களுக்கு நல்ல
கழிப்பறை வேண்டும் (மனுஷ்ய புத்திரன்)

Comments
உங்களுடைய busy scheduleஐயும் கருத்து எழுத நேரம் ஒதுக்குறீங்களே அதற்கே hats off.