3. ஆயுதங்கள் தின்று விட்ட ஆல்பங்கள்
போர்கள் விவரிக்க முடியாத சோதனைகள் நிறைந்தது. சங்கப்பாடலொன்றில் போர் நியாய முறைகளை எடுத்துச்சொல்கிறது. போரில் சம்பந்தபடாதவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதைக் கறாரான கொள்கையாகவே முன்வைக்கிறது. பெண்டிர் , குழந்தைகள், வாழ்வு தரும் மாடுகள், கோயில்கள் இவற்றுக்குப் போரால் சேதம் நேர்ந்துவிடக்கூடாது என்ற கரிசனத்தை முன்வைக்கிறது. அன்று அவர்கள் அதனைக்கடைபிடித்தார்கள். போரானலும் மனிதாபிமானப் பண்புகளைக் காட்டினார்கள். இன்று என்ன நடக்கிறது. எம் 16 ரக தானியங்கி (ஆட்டோமேட்டிக்) துப்பாக்கிகள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை சுட்டுத் தள்ளுகிறது. பள்ளிகள் கோயில்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. ஏவுகனைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது. கையெறிகுண்டுகள் கைக்குழந்தைகளையும் விடுவதில்லை. கன்னிவெடிகள் கால்களைபறித்து வாழ்நாளை முடமாக்கிவிடுகிறது. போர் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள் விவசாய நிலத்தை ஊணமாக்குகிறது. ஹிரோசிமா நாகசாக்கி மீது வீசப்பட்ட ரசாயண குண்டு செய்த வரலாறு பதிவு செய்துவைத்த பிழையை இன்று படிப்பவர்களிடமும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது. சமீபத்தில் ஈழமண்ணில் முடிவடைந்த போர் என்னென்ன அநீகளைச்செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தது. விடுதலைப்புலிகளை முறியடிக்க பொதுமக்களையே குறிவைத்து அடித்தது. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கவேண்டுமென்ற முன்யோசனையோடு சேதங்களை உண்டுபண்ணியது. பள்ளி சென்று திருப்பிய குழந்தைகளின் மேல் விமானத்திலிருந்து குண்டு வீசிக்கொன்றது. பள்ளிச்சிறுமிகள் பாதுகாப்புக்குழிகளுக்குள் பட்டினி கிடந்து செத்து மடிந்தன. குழந்தைகளைத்தேடிவந்த தாய்மார்கள் பாதிவழியிலேயே ரத்தக்க்களரிக்கு ஆளானார்கள். பிழைத்தவர்கள் வாழ்நாள் ஊனமானார்கள். அங்கே தனக்கு இனி வாழ்வில்லை என பாதுகாப்பற்ற படகுகளில் இரவோடிரவாக அக்கறையை நோக்கி ஓடினார்கள். தன் கொள்ளளவை மீறி ஏற்றிவந்த படகுகள் போரில் எஞ்சியவர்களை புரண்டுவரும் அலைகளுக்குப்பறிகொடுத்தது. மறுகறையை அடைந்தவர்களுக்கு அடைக்களம் கொடுக்க அவ்வூர்ச்சட்டம் இடம் கொடுக்கமறுக்கும்போது, அவர்கள் சட்டத்தைமீறயதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள். போரின் விளைவுகள் ஒரு தலைமுறையோடு முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்த தலமுறையையும் பாதிக்கிறது- அவர்களின் குழந்தைகளை!
இந்தக்கவிதையை படியுங்கள். ஈழமண்ணிலிருந்து வரும் ஈரக்குரல். காலையில் எழும்போது இன்று யார் யார் இறந்திருப்பார்களோ என்ற பீதியோடு எழவேண்டிய நிர்ப்பந்தம். அதிகாலைக்காற்று அழகுரல்களை ஏந்திவரும். சிறுகுழந்தைகள் ரத்தம் கசிந்து அவர்களின் கதறல் யார் காதிலும் விழுந்திருக்காது. அநெகமாக செத்திருப்பார்கள். சவப்பெட்டிகள் விற்பவனுக்கு நல்ல ஆதாயம் கிடைக்க ஆரம்பத்திருக்கும். தனக்கு கொல்லி வைக்க வேண்டிய பிள்ளைக்கு தான் கொள்ளி வைக்கும் முறை முந்திக்கொண்டிருக்கும். இன்னும் என்ன நடக்கவேண்டும் இதை விட. படித்துப்போட்ட தினசரிபோல போர் எப்படியெல்லாம் மனிதனின் இயல்பு வாழ்க்கையை கலைத்துப்போட்டு விடுகிறது. இக்கவிதையில் கசியும் போர் சிதலங்களைப்பாருங்கள்.
இந்நேரம் என் தேசம்
ஒப்பனைக்கு விடிந்திருக்கும்
தன் அக்கினிக் கரங்களைச்சூடேற்றி
சுட்டுத்தள்ளலாமென எண்ணியபடி
கதிரவன் எழுந்து வருமுன்னரே
பல பேர் சுடப்பட்டிருப்பார்கள்
ஒப்பாரிச் சத்தத்தை
கைவிசேடமாகப் பெற்று
வீசத்தொடங்கியிருக்கும்
அதிகாலைக்காற்று
பூவாகு முன்னமே மொட்டுக்களும்
கனியாகு முன்பே காய்களும்
பறிக்கப்பட்டிருக்கும்
இறந்தவர்களின்
ஈமச் சடங்கினைக் காட்டி
சவப்பெட்டிகள் விற்பவன் வீட்டில்
உலையேற்றுவதற்குப் பணம்
கிடைத்திருக்கும்
பூமாலை கட்டுபவனும்
புண்ணியம் செய்தவன்
தனக்குக் கொள்ளியிட பெற்ற பிள்ளைக்கு
தானே கொள் ளியிடும் பாக்கியம் பெற்ற
யோரோ ஒரு புண்ணியவான்
தயாராகிக்கொண்டிருப்பான்
ஊர் கூடி ஒப்பாரி வைக்கும்
தினமும் இப்படியொரு நிகழ்வு போதும்
தமிழ் இனி மெல்லச்சாகும்
மு.யாழவன்

Comments