Skip to main content

மலேசிய அரசியலில் ஒரு அதிரடி மாற்றம்




Mahathir
 
                                                          Abthullaa Badawi


                                                       Anwar Ibrahim ( அடுத்த பிரதமராகும் முகம்)



                                              

                                                            வேதமூர்த்தி(ஹிண்ட்ராப்)


2008ல் மலேசியத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றத்தைக்

கொண்டு வந்து அசத்தியது. இந்த  மே மாதம் 5ஆம் தேதி

நடைபெறப்போகும்       தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி கூட்டணியை வீட்டுக்கு

அனுப்பிவைத்துவிடும் கிலியை கிளப்பிவிட்டிருக்கிறது. தேசிய

முன்னணியின் அரை நூற்றாண்டு ஆட்சியை அசைத்துவிட்டு இன்னும் ஐந்து

ஆண்டில் நீ மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பவேண்டியிருக்கும் என்ற

சமிக்ஞையைக் கோடிகாட்டிவிட்டுச் சென்றது. 2008 தேர்தல் எதிர்க் கட்சிகளின்

வலுவை கொஞ்சம் ஆழமாகவே பதியவைத்திருந்தது. அரை நூற்றாண்டாக

அசைக்கமுடியாத மூன்றில் இரண்டு இடங்களைப்     பெரும்பான்மையில்

வென்று வாகை    சூடி அதிகாரத்துவ ஆளுங்கட்சி தேசிய முன்னணி'

அத்தேர்தலில் மூன்றில் இரண்டு  பெரும்பான்மையை இழந்ததோடு நான்கு

மாநிலங்களை எதிர்கட்சியின்

ஆட்சிக்கு கை நழுவ விட்டதன் பலவீனத்தைக் காட்டியது ஆளுங்கட்சி.


அப்போதைய பிரதமாராக இருந்த                               

அப்துல்லா படாவி பதவி இழக்கச் செய்த அதிரடி தேர்தல் முடிவு அது.

மலேசியாவில் எந்தப் பிரதமரும் வந்ததும் தெரியாமல்  போனதும்

தெரியாமல் பிரதமர் பதவியை கைவிட நேர்ந்ததில்லை படாவியைப் போல.

இது அப்துல்லாவின்

ஆட்சிப் பிழையால் நடந்த ஒன்றல்ல. ஆளும் தேசிய முன்னணியின் இந்தப்

பின்னடைவுக்கு மூல காரணமாய் இருந்தவர் மேம்பாட்டுத் தந்தை என்று

அழைக்கப் பட்ட நான்காவது பிரதமராக இருந்த மாஹாதிர் முகம்மதுதான்.

அன்னாரின் கைங்கார்யம்தான் அப்துல்லாவின் ஆட்சி வரை நீட்சி கண்டு

காலை வாரி விட்டிருந்தது. அவர் போட்ட விதை பழுதான ஒன்றே என்று மின்

ஊடகங்கள் கருத்துரைக்கின்றன! அதற்கு பலி கடாவானவர்தான்

நாற்காலியைக் காலி செய்த அப்துல்லா  படாவி.


மஹாதிர் ஆட்சியில்தான், இனவாதமும், ஊழலும், தன்னைச்

சார்ந்தவர்களுக்கே

எல்லாச் சலுகையும் வழங்கியமையும்,மத அடைப்படைவாதமும்

மேலோங்கி இருந்தது. அவர் ஆட்சியில் ஊழல் மிக அதிகமாக நடந்தேறியது

என்பதை இங்கே     குறிப்பிட்டாக வேண்டும். அவரின் இரண்டு புதல்வர்களும்

நாட்டின்   கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதன்

ரிஷி  மூலத்தை ஆராய வேண்டிய அவசிமே இல்லாது, அதிகாரத்தின் கை

எந்த   அளவுக்கு நீண்டிருந்தால் இவரின் தவப் புதல்வர்கள் தங்க நாற்காலியில்

அமர வைத்திருக்க முடியும்  என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டிருந்தது.



அன்வர் இப்ராஹிம் அவருக்குத் துணைப் பிரதமாராய் இருந்த தருணத்தில்

தனக்குப் போட்டியாய் நெருங்கி வந்ததன் நிழலைப் பார்த்தே  அவரின்

பதவிக்கு ஆப்பு வைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. அவர் அமைச்சு

பைல்களைத் துருவித் துருவிப் பார்த்தும் ஒரு துரும்பு குற்றச்செயலும்

கிட்டாத போது, அவரை எப்படி நீக்குவது என்று மாஹாதிர் தலை சொரிந்த

தருணத்தில்தான் நாரத தந்திரமாய் ஓரினப் புணர்ச்சிக் குற்றம் கொண்டுவரப்

பட்டு, பதவியையும் பிடுங்கினார். என்ன செய்வது எல்லாம் ஆண்டவன்

கையில் இருக்கிறது என்ற மரபான சொல்லை, எல்லாம்' மாஹாதீரின்

கையில்'

இருந்திருக்கிறது   என்று அன்வரின் ஆதரவாளர்கள் நம்பினார்கள். தன்

அதிகாரத்தில் எல்லாரையும் தனக்கு இசைவாக்கி    நியாயத்தின் வாயை 

இரும்புப் பூட்டு போட்டு மூடிவிட்டிருந்தார்.  அன்வர் இப்ராஹிம் ஆறாண்டு

காலம் சிறையில் இருந்து

அப்துல்லா படாவி  ஆட்சிக்கு வந்த பிறகே விடுதலையானார். அவர்

சிறையில் இருக்கும்போதே ஹீரோ பிம்பம் கட்டமைத்து

விட்டிருந்தது.இப்போது மிகப்

பலம் வாய்ந்த எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவராக இருக்கின்றார அன்வர்

இபராஹிம். இப்படியெல்லாம் நடக்கும் என்ற தீர்க்க தரிசனம் கிட்டியிருந்தால்

இந்த விளையாட்டுக்கே வந்திருக்கமாட்டார் மேம்பாட்டுத் தந்தை மாஹாதீர்.

இந்த மே ஐந்தாம் தேதி நடக்க விருக்கும் தேர்தலில் ஆட்சியைப்

பிடித்து விடக்கூடும் என்ற எல்லா சாத்தியங்களையும் கொண்டு இயங்குகிறது

அந்த பலம் வாய்ந்த கூட்டணி. ஊர் வாயிலெல்லாம் இதுதான்

அவல்  இன்றைக்கு. பணம் கொடுத்து  ஆள் சேர்த்து கூட்டம் நடத்தும் ஆளும்

தேசிய   முன்னணி, அன்வர் கூட்டங்களுக்கு வரும் ஆயிரக்கணக்கானவர்

அவர்

ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக தேர்தல் பணிக்கு  பணம் கொடுக்கும்

மக்கள் எண்ணத்தைக் கூடப் படிக்க முடியவில்லையென்றால் எப்படி?


பாவம் மாஹாதிர், அதுவரை

உயிரோடிருந்து தன் பரம் வைரி பிரதமராவதைப் பார்க்க வேண்டி வருமோ

என்ற அச்சத்தில் என்னென்னவோ உளறிக்கொண்டு இருக்கிறார். அவர்

உளறலின் உச்சம் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் குடியுரிமையை மறு

பரிசீலனச் செய்ய வேண்டும் என்று கர கரத்த குரலில் சொல்லியிருப்பதுதான்.

(ஐயா மஹாதிர் அவர்களே நீங்கள் சொல்வது போல் பார்த்தால் உங்கள்

குடியுரிமையையும் பரிசீலனைச் செய்ய வேண்டியிருக்குமே! ஏனென்றால்

உங்கள் தந்தையார் கேரளாவிலிருந்து மலையகத்துக்குக்

குடிபெயர்ந்தவர்தானே!  என்னையா நீவீர் கொஞ்சம் சிந்தித்துப் பேசக்

கூடாதா?)

கேரளாவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்திலிருந்து வந்த நீங்களே பிரதமரான

போது, ஒன்றரை   நூற்றாண்டுக்கும் மேல் இங்கு வாழும் இந்தியரின்

குடியுரிமையின் நிலை      குறித்த உங்கள் கோரிக்கை எந்த விதத்தில்

நியாயமாகும்?



ஆமாம் ஏன் இந்தியரின் குடியுரிமைப் பற்றிய பேச்சு வரவேண்டும்? அதற்கு

ஒரு முக்கியக் காரணம் இந்த ஐம்பது ஆண்டுகளாய் இந்தியர்கள்

ஆளுங்கட்சிக்கு காட்டி வந்த விசுவாசம் திடீரென எதிர்க் கட்சிப் பக்கம் புரண்டு

படுத்ததுதான். 2008ல் இந்தியர்களில் ஒரு லட்சத்துக்கு மேலானோர்

ஹிண்டாராப் இயக்கத்தின் கீழ் அணி திரண்டு தங்கள் ஓரங்கட்டப்பட்ட

கோபத்தைக் காட்டினர். கடந்த  ஐம்பது ஆண்டுகாளாய் , இந்த நாட்டில்

கல்வியில், பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் 

பின்தள்ளப்பட்ட சமூகமாகவே  தாங்கள்

இருப்பதைத் தட்டிக் கேட்கவே கோலாலம்பூரில் பேரலையாக

அனல் பறக்கத் திரண்டிருந்தனர். அந்தச் சுனாமியின் தாக்கம்தான் 2008

தேர்தலில் இந்தியர்கள் எதிர்க் கட்சிக்கு வாக்களித்து தங்களின் வாக்கு

பலத்தை நிறுவினர். தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு

பெரும்பான்மையை இழந்ததும், நான்கு மாநிலங்களை எதிர்கட்சியின்

ஆட்சிக்குப் பறி கொடுத்ததும்  ஒரு துவக்கம்தான் என்று கோடி காட்டிவிட்டுச்

சென்றது. இந்தத் தேர்தலில்தான் எதிர்க் கட்சியின் முழு வீச்சு வெளிப்படும்.



ஹிண்ட்ராப் இயக்கம் இன்றைக்கும் செயல் பட்டாலும் அதன் வலிமை முன்பு

போல் இல்லை. ஐந்து தலைவர்களும்  தரையில் விழுந்த குலை தேங்காய்கள்

மாதிரி ஆளுக்கொரு கட்சிக்குத் தாவிச் சென்று விட்டனர். அவர்கள்

இந்தியர்கள் மேம்பாட்டுக்காக அன்றைய போரட்டத்தில் அணி திரண்டு

முன் வைத்த கோரிக்கை பிசு பிசுத்துப் போனது.

ஆனால் இங்கிலாந்தில் அடைக்கலம் தேடிப்புகுந்து அங்கிருந்துகொண்டே

குரல் கொடுத்து வந்த  வேதமூர்த்தி தேர்தல் நேரத்தில் நாடு திரும்பி ,

கோரிக்கையை உயிர்ப்பித்து இரண்டு சாரரிடமும் போய் நின்று பார்த்தார்.

யாரும் மசியவில்லை. எதிர்க் கட்சி இது இனவாதமிக்கது , எங்கள்

இனவாதமற்ற ஆட்சி நடத்தலுக்கு ஒவ்வாதது என்று கைவிரிக்க,

ஆளுங்கட்சியிடமும் போய் முட்டி இருக்கிறார். அவர்களும் கைவிரிக்க

'இந்தியர்களே ' நம் பலம் என்னவென்று 2008ல் நிரூபித்தோம். இம்முறை

யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று அடாதுடியாய்

அறிவித்திருக்கிறார். ஆனால் அவர் பின்னால் 2008ல் கூடிய கூட்டம் இப்போது

இல்லை. யார் கேட்கப் போகிறார்கள் அவர் கட்டளையை?

அவர் காட்டிய பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சி வலிமையாகிக் கொண்டிருக்க

அவரின் கை அதாவது ஹிண்ட்ராப்பின் கை வலிமை இழந்து கிடக்கிறது. 

யார்  போட்ட விதை? யார் உரமிட்டு , நீர் வார்த்து அறுவடை செய்வது?

( இப்படிச் சிதறு தேங்காய் போல ஒற்றுமை குலைந்திருக்கவேண்டாம்!)

வேதமூர்த்தி , இந்தத் தேர்தலில் இந்தியர்கள யாரும் ஓட்டுப் போட

வேண்டாமே!) என்று சொல்வது ஆளுங்கட்சிக்கு,

அதாவது அதிகாரம் மிகுந்த கூட்டணியின் 'வெட்டோ பவர்' அம்னோவின்

கையை மீண்டும்     உயர்த்துவதாகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்

இந்தியர்கள். அம்னோவுக்குப்  பலத்தைத் தாரைவார்ப்பது என்பது, பாம்புக்கு
(
பால் வார்ப்பது போலாகிவிடுமே! ( ஐம்பது ஆண்டு கால ஆட்சியில்

மலாய்க்காரர்களையே அக்கட்சி      முதன்மைப் படுத்தியது.)


வேதமூர்த்தி இந்தியர் நலனுக்காக விடுத்த கோரிக்கை பலனற்றுப்போகவே 2

வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். அவருடைய

கோரிக்கைகள் இனவாதமிக்கது என்பதை நிராகரிக்கவே இரு பெரும்

கட்சிகளும் கை விரித்து விட்டன. அவர் உண்ணா விரதத்தைக் கைவிட்டு

புதிய கட்சியை(ஹிண்ட்ராப்) ஆரம்பித்து தேர்தலில் தனித்துப் போட்டியிட

ஆயத்தமாகி வருகிறார். வெறும் எட்டு விகிதமே இருக்கும் இந்தியரை  நம்பி

பாழும் கிணற்றில் குதிக்கலாமா?





ஏற்கனவே ம.இ.காவிலும், (ஆளும் கட்சி கூட்டணி), எதிர்க் கட்சியிலும் ,

இன்னபிற கட்சிகளிலும் நாடு முழுது சிதறிக்கிடக்கும்

இந்திய ஓட்டுகளை நம்பி, அதாவது மண் குதிரையை நம்பி,  ஓர்

இடத்தைக் கூட ஜெயிக்க முடியாத நிலைய எதிர் நோக்கி இருக்கின்றனர்

இந்திய வேட்பாளர்கள்.


இதில் ம.இ.கா வேட்பாளர் 2008 ஐ விட மோசமான நிலைக்கே தள்ளப் படுவர்.

எதிர்க் கட்சியில் வேட்பாளராக நிற்கப் போகும் இந்தியர்கள் , இந்திய

வாக்காளர்கள் பிளவு பட்டுக் கிடப்பதால் ஜெயிக்கும் வாய்ப்பும் கம்மிதான்.

ஆனால் மாலாய் சீன வாக்காளர்கள் தயவு எதிர்க் கட்சி இந்திய

வேட்பாளர்களை வெற்றிபெறவைக்கக் கூடும் என அரசியல் ஆரூடம்

நம்பிக்கையை விதைத்திருக்கிறது!

                                                                                            (தொடர்ந்து பார்ப்போம்)



 

Comments

நல்ல பதிவு, உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் நம் அரசியலை படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள் சார். எனக்குத்தான் அரசியலைப் பற்றி ஒன்றுமே தோன்றவில்லை..
பத்திரிகை,மின் ஊடகங்கள் எல்லாம் அவர்களின் புரணமாகவே உள்ளன. இன்று பெயர் பட்டியல் வெளியாகுமே.. அதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றார்கள் என்கிற மாயத்தோற்றம் வேறு..!! ம.இ.கா தான் பரிதாபம். ஒன்று கூட தேறுமா தெரியவில்லை.
சீனர்கள் ஒருவர்கூட அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கவில்லை என்பதனை சீன சிறுவர்களிடம் பேசினால் கூட தெரிந்துவிடுகிறது.
நம்மவர்கள்..பார்ப்போம் என்கிறார்கள். பார்ப்போமே..
ko.punniavan said…
நன்றி விஜி,

இந்தியர்கள் நிலை குறித்து கவலையாக இருக்கிறது. அவர்களை அரசியல் கட்சிகள் பிளவுபடுத்திவிட்டன. பார்ப்போம்.
anandhakumar said…
Hi sir,Indians are everywhere like that..politics divided us easily and we are sentimental idiots..how you feel the about opposition..is there any chance to win?
anandhakumar said…
Hu sir,how do you feel about opposition alliance?is there any possibility to get a majority?
ko.punniavan said…
Dear Anand,
Thanks for visiting my blog and leaving comments.Thats encouraging.Hopefully Opposition will form the next goventment.But the chances of getting two third majority is slim.This time the deciders are not Indians but Chinese. 60 percent of Indian votes might swing to BN.
Please visit again.
Thank You
anandhakumar said…
Sir,thanks for the reply..is PKR shall keep the current 4 states..now everybody is concentrating Johor..how BN hold the Johor longtime?now the lim can win Gelang batah?...
anandhakumar said…
Sir,everybody is concentrating on Johor..how the BN keep long time Johor in it's control?is the Mr.Lim can able to win in Gelang Batah?
ko.punniavan said…
Dear Anand,
the track record of Mr.Lim is
so far so good. the Chinese will definitely vote for him.AT least 50percent of Malay votes will go to Mr.Lim for he has allied with Anwar.Umnos racism, chronism,and corruption has failed the entire Malaysia. We will wait and see.
Thank You.
ko.punniavan said…
dear Anand,
PKR will retain 3 states which it won on 2008,hopefully, but not Kedah.Kedah MB is not a capable leader it seems.Kedah is always compared with Penang which has shown tremendous improvements since it took over from Gerakan(BN).PAS should have replaced him ealier.But I too eagerly waiting to see the results.
Whereas Johor became a stronghold of Bn may be because of being the birth State of UMNO(sentiments).I think Johore is lucky for being the neighbour of Singapore too. It has been a money spending place for Singaporeans. Johor may be rich and safe so far.
Let see what is going to happen.
Thank You.
anandhakumar said…
Sir,your view of correct. I spoke to some malaysian Chinese here.they said they will vote PR and they are angry about BN govt.
ko.punniavan said…
Mr. Anand thanks for agreeing with me.The Chinese have already decided not to support MCA.They have tasted good governance through DAP in Penang.They are waiting to vote DAP.
Lets hope this will bring the CHANGE that we are dreaming about.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...