Skip to main content

சண்டைக்காரனிடமே சரணடைந்த ஹிண்ட்ராப் 
 
 
                                                     
                                          எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்

இன்று ‘வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டிருக்கிறது. 2007 ஆண்டு லட்சகனக்கான இந்தியர்கள அணி திரட்டி, ஓரங்கட்டப்பட்ட தென்னிந்தியருக்காக நீதி கேட்டுப் வீதிப் போராட்டம் நடத்திய ஹிண்ட் ராப், ஆறு ஆண்டுகளாகப்  போராடிய பிறகு தன் கோரிக்கைகளை ஆளுங்கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. எதிர்கட்சி நாளுக்கு நாள் வலுபெற்று ஆளுங்கட்சியை வீழ்த்தும் நம்பிக்கையில் முனைப்போடு இருக்கும் இத்தருணத்தில் பிரதமர் நஜிப் ‘உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாருங்கள் ஒன்றிணைவோம்’ என்று ‘கரிசனக் கரம்’ நீட்டியிருப்பதானது தன் ஆட்சி நிலை குலைந்திருப்பதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது. இதில் என்ன பெரிய முரண்நகை என்றால் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகாலம் இனவாத அரசாக கோலோச்சி வந்து, இந்தியர்கள் நலனைப் புறக்கணித்த அதே ஆளுங் கட்சி , இன்றைக்கு திடீரெனத் தடம் புரண்டு ‘உங்கள் நலனை நாங்கள் பாதுகாப்போம்’ என்று இன்முகம் காட்டி அரவணைத்திருக்கிறது. இதன் உண்மை நிலை என்ன என்ற புதிரான கேள்விக்கான பதில் கிடைப்பது சிரமம். மீண்டும் தேசிய முன்னணி ஆட்சியை அமைத்த பின்னரே கோரிக்கைகளின் கதி பற்றிச் சிந்திக்க முடியும். இந்த அரசியல் சாணாக்கியத்தின் உள்நோக்கம் பற்றியும் மர்மமும் வெளிப்படும். இந்த ஒப்பந்தக் கையொப்பாம் பலவாறான சந்தேகங்களை எழுப்பியடி இருக்கிறது.
இக்கட்டுரையை தொடர்ந்து எழுதவதற்கு முன்னர் ஹிண்ட்றாப்பின் போராட்டம் வளர்ந்து வெடித்துக் கொண்டு வீதிக்கு வந்த வரலாற்றைப் பார்க்கவேண்டும். ஆளுங்கட்சியில் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்து இணைக்கட்சியாக இருந்த மலேசிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.க)கட்சியால் இந்தியர் நலனைப் புறக்கணித்து வந்த அம்னோ என்ற பெருங்கட்சியின் சுவரை ஊடுறுத்துப் போக முடியாது திணறிக்கொண்டிருந்தது. மலாய்க்காரர்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய ரொட்டித்துண்டுகளையே தென்னிந்தியர்களுக்கு போட்டு வந்தது. போட்டது போதாதென்று குரல் கொடுத்தும் பெருங்கட்சி செவிசாய்க்கவில்லை. ம.இ.காவும் சிவனே என்று இருந்து விட்டது என்றுதான் சொல்ல நேருகிறது. ஏனெனில் தான் குடியிருக்கும் வீட்டுக் கதவைத் தானே தட்டி உணவு கேட்பது தன்னையே அவமதிப்பதாகும் என்றே அது கருதியிருக்கக்கூடும்.
இனவாதத்தை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு இனக்குழுக்கள் குரல் எழுப்பினாலும் அது செவிடன் காதில ஊதிய சங்காகவே கேட்பாரற்றுக் கரைந்து போனது. 2008 தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ‘மயிலே மயிலே என்றால் இறகு போடாது’ என்று புரிந்துகொண்ட சில இளைஞர்கள் தெருவுக்கு வந்து கூச்சல் போட்டுக் கூட்டம் சேர்த்தனர். இந்தக்கூட்டத்தின் கூச்சலையும் பொருடபடுத்தாது எப்போதும் போலவே மெத்தனத்தோடு இருந்துவிட்டது ஆளும் தேசிய முன்னணி(BN Baraisan Nasional) சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்றே தப்புக்கணக்கு போட்டுவிட்டது அது. ஆனால் அச்சிறு இனக்குழு ஒரே ஆண்டில் தனக்குப் பின்னால் பெரும் படையைக் கூட்டி அணி திரளவைத்த பலத்தைப் பெற்றிருந்தது. தாங்கள் ஓரங்கட்டப் பட்ட வலியை மௌனாமாகவே அனுபவித்த வந்த இந்தச் சமூகம், மக்கள் கூட்டம் சேரச் சேர , கூச்சல் கூடக் கூட அவர்கள் பின்னால் பக்க பலமாய் இணைந்து கொண்டனர். ம.இ.காவைச் சார்ந்தவர்களைத் தவிர மற்றெல்லா இந்தியர்களும் அச்சிறு குழுவின் கோரிக்கை நியாயமே என்றே ஒருமித்த குரல் கொடுத்தது. இப்போது பலம் அசுர பலமாய் வடிவெடுத்து நின்றது. இந்தக் கூட்டத்தைக் கூட்டி 2007ல் தெருவுக்கு வந்து போராட்டம் வெடித்த பிறகுதான் ‘எல்லாம் சீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது’ என்ற பொய்யான பிம்பம் உடைபடத் தொடங்கியது. பின்னர் 2008ல் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துவிட்டிருந்தது. இவ்வெற்றி முழுக்க முழுக்க இந்திய சமூகத்தின் போராட்டத்தினால் விளைந்தது என்றே எல்லாத் தரப்பினரின் கருத்தாகும்.
இபோராட்டத்தை முன்னெடுத்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார் சகோதரர்களோடு இணைந்துகொண்ட கணபதி ராவ், மனோகரன்,கங்காதரன், போன்ற வழக்கறிஞர்களும் வசந்தகுமார் என்ற இளைஞரும் தான். இவர்கள் பின்னால்தான் படை திரண்டு உரிமை கேட்டு உரத்த குரல் எழுந்தது..
இவர்கள் அறுவரில் ஐவர் போராட்டம் நடத்த காரணமானவர்கள் என்ற ரீதியில் கேள்வி முறையற்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி கிடடதட்ட இரண்டாண்டுகள் சிறையிலிடப்பட்டனர். இது நடக்கும் என்று துணிச்சலோடு எதிர்நோக்கியே சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து போராடினர் அறுவரும். மாற்றம் வரவேண்டுமானால் கைதாவதே சரியான முடிவு என்றே  துணிந்து மேற்கொண்டு மேடைகளில் முழங்கி வந்தனர். மக்கள் விழிப்படைய , ஆளும் கட்சிக்கே மரபாக அளித்துவரும் இலவச வாக்கை அளிப்பதைத் தடுத்து நிறுத்த இந்த நிகரற்ற அர்ப்பணிப்பைச் செய்யத் துணிந்தனர்.
ஆனால் வேதமூர்த்தி, ஒருவராவது கைதாவதிலிருந்து தப்பித்தால்தான் தொடர்ந்து குரலெழுப்ப முடியும் என்று முடிவெடுத்து இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்தே அனைத்துலக கவனத்தை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கினார். அது பெருமளவு வெற்றியும் கிடைத்தது.
இதற்கிடையே வேதமூர்த்தியின் கடப்பிதழை ரத்து செய்தது மலேசிய அரசு. அவர் நாடு திரும்பக்கூடாது என்றே அது தயவு தாட்சண்யமின்றி தடை விதித்திருந்தது. ஐவரும் சிறையில் இருக்க ஒருவர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து அல்லாடிக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் 2008 தேர்தல் முடிவு சறுக்கல், அரசை சுதாரிக்க வைத்தது. அதே வேளையில் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி , விழிப்படைந்த எதிர்க்கட்சி சிறையிலிருந்த கணபதி ராவையும்,  மனோகரனையும் நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட வைத்து  வெற்றி வாகை சூட வைத்தது.
ஆளும் அதிகாரமிக்க தேசிய முன்னணியை இவ்வெற்றிகள் ஆட்டங்கண்டது.  பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து போராட்டக் காரர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. அதே வேளையில் சமூகத்தின் கோரிக்கைகளை அதுவே வலிய செய்தும் வந்தது. அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே நாங்கள் செய்து வருகிறோம் பாருங்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கி விட்டிருந்தது ஆளுங்கட்சி.
அச்சமயத்தில்தான் மீண்டும் நாடு திரும்பினார் வேத மூர்த்தி. வேதமூர்த்தி நாடு திரும்பினால் நிச்சயமாய் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் படாலாம் என்று கருத்து நிலவி வந்தது அப்போது. ஆனால் அப்படி நடக்கவில்லை. என்ன ‘மாயம்’ நடந்தது என்றும் புலனாகவில்லை. ஒரு கால் தேர்தல் நேரமாக இருப்பதால் மக்கள் சினத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அரசின் முன்கவனமாகவும் இருக்கலாம்.
இதற்கிடையே 13 வது பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. தேர்தல் நடப்பதற்கு முன்னால் கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் வேதமூர்த்தி. அதற்கான கவனத்தை ஈர்க்க 2 வாரங்களுக்கு மேல் உண்ணா விரதம் மேற்கொண்டார். தன் பலத்தை மெல்ல இழந்துகொண்டிருக்கும் ஆளுங்கட்சியோ, தன் இருப்பை மென்மேலும் வலிமையாக்கிக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சியோ வேதமூர்த்தியின் கோரிக்கைக்கு சம்மதிக்கவில்லை. ஏனெனில் இனவாதமற்ற தேர்தல் அறிக்கைக்கு முரணாக இருக்கும் ஹிண்ட் ராப்பின் கோரிக்கையை தள்ளுபடி செயவதற்குக் காரணமாக அமைந்தது.  ஆனால் கோரிக்கை சார்ந்த ஆளுங்கட்சியின் மௌனம் ஏதோ சாதகமாக நடக்கப் போகிறது என்பதை அரசியல் சாணாக்கியர்களால் யூகிக்க முடியாமல் இல்லை!   ஹிண்ட் ராப்பின் அறுவரில் வேதமூர்த்தி மட்டுமே தனித்து நின்று போராடிக்கொண்டிருக்கும் வேளையில் உதயமூர்த்தி மனித உரிமைக் கட்சியைத் தொடங்கி அதன் சின்னத்தின் கீழ் தானும் தன் சகாக்கள் நான்கைந்து பேரை சிலாங்கூரில் போட்டியிடவிருக்கிறார்கள். எதிர்க்கட்சி வசமிருக்கும் பொருளாதார பலமிக்க சிலாங்கூரிலும் இந்தியர் ஓட்டு சிதற வாய்ப்பிருக்கிறது. கணபதி ராவும், எதிர்க் கட்சி கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியான டி.ஏ.பியின் கீழ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். ஏனெனில் முன்பிருந்த பலம் அறுவரும் உடைந்து சிதறிப் போனதால் குலைந்து போயிருக்கிறது. மனோகரன் ம.இ.காவின் நடப்புத் தலைவர் பழனிவேலுவை எதிர்த்து கேமரன் மலையில் களமிறங்க விருக்கிறார். கங்காதரன் விலகி தன் சொந்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார். வேத மூர்த்தி மட்டுமே விடாகண்டனாக போராடி வந்த வேளையில்தான் , தேர்தலில் இந்திய ஆதரவை மீட்க வேதமூர்த்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட முன் வந்திருக்கிறார் நடப்பு அரசின் பிரதமர். வேத மூர்த்தி நாடு திரும்பியதும், அரசியல் கட்சிகளைச் சந்தித்ததும், பிரதமரை அணுகியதும், கடைசி ஆயுதமாக உண்ணா விரதம் இருந்ததும் அவர் ‘நோக்கம்’ வெற்றி அடைவதற்கான அறிகுறிகள் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தார்கள். பிரதமர் வேதமூர்த்தியின் கோரிக்கைக்கு இணங்கிவிடுவார் என்ற கணிப்பும் பிசாகாமல் நடந்தேறியிருப்பதானது சண்டையிட்டவனிடமே சரண்டைந்த மர்மம்தான் என்ன என்ற வினா விண்ணை நோக்கி கிளம்பி இருக்கிறது.
இதில் இன்னொரு முரண் நகையைச் சொல்லியாக வேண்டும். நஜிப் ஆட்சிக்கு வந்த பிறகு, ஹிண்ட்றாப் போராட்டத்தால் விளைந்த வீழ்ச்சியின் காரணமாக இந்தியர்களின் கோரிக்கைகளை அவசர அவசரமாக நிறைவேற்றியபடி இருந்தார். மௌனச் சாமியாக இருந்த ம. இ.காவுக்குத் தெம்பான சலுகைகள் இது என்றாலும், இப்போது அரசு காட்டிவரும் காரூண்யம் தங்கள் கட்சியின் சாதனைகளால் அல்ல என்றே தெரிந்து வைத்துக் கொண்டு, மக்களிடம் ம.இ.கா உழைப்பின் வெற்றியே பிரதமரின் இந்தக் கரிசனம் என்று சொல்லிவருகிறது. இவ்வளவு நடந்து முடிந்த பிறகும் இந்தப் பொய்யை யார்தான் நம்புவார்கள்? இந்த ஒப்பந்தமானது ம.இ.காவின் பலவீனத்தைத் தெள்ளத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருக்கிறது.
சரி வேதமூர்த்தியின் கோரிக்கைகள்தான் என்ன?
பின்தங்கிய வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் தென்னிந்திய தோட்டப்புற மக்களின் நல்வாழ்வு ச்ப்பனிடப் படவேண்டும்.
இந்திய மாணவர்களுக் உயர் கல்விக்கூடங்களில் போதுமான இடம் ஒதுக்கியாக வேண்டும்.
அரசாங்க வேலை வாய்ப்பும், பதவி உயர்வும் கிடைத்தாக வேண்டும்.
வனிகக் கடனுதவி கொடுத்து ஈடுபடவைக்கவேண்டும்.
சிறுபான்மை (இந்திய) இன நலனைப் பாதுகாக்கச் சிறப்பு அமைச்சு ஒதுக்கவேண்டும்.
இவையே மிக முக்கிய கோரிக்கைகளில் சில. இதில் சிறுபான்மை இனத்துக்கான் சிறப்பு அமைச்சு மட்டுமே புதியது. மற்றெல்லாவற்றையும் பிரதமர் மனம் திருந்தி வருந்தி இந்தியர்கள் ‘நல்வாழ்வுக்கு’ செய்ய ஆரம்பித்துவிட்டார்.(இங்கே தேர்தலில் இந்திய வாக்கை வெல்லும் திடீர்த் தந்திரமே இது என்ற கருத்தை புறக்கணிப்பது சிரமமே). இந்தியர் மேம்பாட்டுக்கு ஆதரவுக் கரம் நீட்டிவிட்ட இவ்வேளையில் அதே போன்ற கோரிக்கைக்குப் பிரதமர் ஒத்துக்கொண்டது ஏன் என்றும் இப்போது புரிந்திருக்கும்.
நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு இப்போதுள்ளது பராமரிப்பு அரசாங்கம்தான்.  பராமரிப்பு அரசு பிரதமரிடம் ஒப்பந்தம் செய்து கொள்வது எந்த வகையில் சட்டத்துக்கு உட்பட்டதாகும்?
ஒருகால் நடப்புக் கட்சியே ஆட்சியைப் பிடித்தாலும் இக்கோரிக்கைகள் அங்க்கீகரிப்பதில் சிக்கல் உண்டாகாதா? அதே மலாய்க்காரப் பெரும்பான்மை (அம்னோ)இதற்கு ஒத்திசைக்குமா? அம்னோ கட்சியின் இனவாதப் போக்குக்கு இது உடன்பாடானதா? இதுவரையிலான வரலாறு கசப்பானதாகவே இருந்திருக்கிறதே . அம்னோவின் அதிகாரத்துவப் போக்கு மக்கள் அறிந்த ஒன்று; இப்போக்கு ஆட்சியைப் பிடித்ததும் நீட்சி காண வாய்ப்பிருக்கிறதே. இக்கோரிக்கைகள் , ஆட்சி அமைக்கப் போகும் கட்சி நாடாளுமன்றத்திலல்லாவா ஒப்புதல் பெறவேண்டும்? அங்கே நடக்கப் போகும் எதிர்ப்பையும் சிக்கலையும் இக்கோரிக்கைகள் தாக்குப் பிடிக்குமா?
இறுதியாக ஒரு கேள்வி. எதிர்க் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இக்கோரிக்கைகளுக்கு நேரப் போவதுதான் என்ன?
ஹிண்ட்றாப்பின் கோரிக்கைகளைப் பராமரிப்பு அரசாங்கம் ஏற்றுக் கொண்டதானது இந்தியர்களின் வாக்கை மேலும் சிதறடிக்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.  எதிர்க் கட்சி ஆட்சி அமைப்பதையே வரவேற்ற இந்திய வாக்காளர்களைக் குழப்பி விட்டிருக்கிறது இந்த திடீர் ஒப்பந்தம்!
ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் எதிர்க் கட்சியில் நிற்கப் போகும் இந்திய வேட்பாளர்களுக்கு கிடைக்கவிருந்த வாக்குகளுக்கு  ஆப்பு வைத்திருக்கிறது இந்த ஒப்பந்தம்.
2008ல் ஆளும் தேசிய முன்னணி அடைந்த சரிவுக்குக் காரணமாக இருந்த அதே போராட்டக் குழு தோல்வியின் விளிம்பில் இருக்கும் தேசிய முன்னணியை மீண்டும் அரியனை ஏற்றி அதிகாரத்தைக் கையில் கொடுக்க முடிவு செய்திருக்கிறதா?
உங்கள் அறுவருக்குள்ளேயே அரசியல் சித்தாந்த வேறுபாடுகளால் வெவ்வேறு கட்சிகளை ஆதரிக்கும் கொள்கைகளாலுமே சிதறி இருக்கிறது இந்தியர் ஓட்டு. இந்த ஒப்பந்தமானது இந்த வாக்குச் சிதறலை மேலும் குழப்பமாக்கியிருக்கிறதே!
சரி கடைசி கடைசி என்று ஒரு கேள்வி, தேர்தல் நடக்கவிருக்கும் இந்தத் தருணத்தில்தான் ஐமப்து ஆண்டுகளாய் நம்மினத்தை ஓரங்கட்டியே அரசியல் நடத்திய அம்னோவோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமா? என்று உங்கள் சகோதரர் உதயகுமாரே கேட்கிறார்! இந்தத் தேர்தலோடு இனவாத அரசியல் நடத்தி வந்த அம்னோவின் சகாப்தத்தை முடித்துவிடவேண்டும் என்ற உங்களின் முக்கிய நோக்கத்துக்கு இவ்வொப்பந்தம் முற்றிலும் முரணாக இருக்கிறாதே வேதா?
இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ, கடவுளே?
                                           பிரதமர்    நஜிப்                  வேதமூர்த்திComments

This comment has been removed by a blog administrator.
ko.punniavan said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
விஜி,
2007 ஹிண்ட்ராப் பின்னால் திரண்ட பெருங்கூட்டம் இப்போது இல்லை. எனவே ஓட்டுச் சிதறலில் பெரும்பாதிப்பு இருக்காது.
ko.punniavan said…
anbulla ko.puஉங்களுடைய கட்டுரைகள் நன்று. ஆனால் மிகுந்த சிரமப்பட்டு படிக்கவேண்டி உள்ளது. காரணம், இங்கு உள்ளதுபோல்
கோடுகள் அதிகமாக வரிக்கு வரி உள்ளது. ஏன் அப்படி?
நன்றாக ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள். சோல்லாடல் மிக த் தெளிவு! உணர்வுப்பூர்வமான கட்டுரை!
ஆனால் அம்பிகாவை மறந்து விட்டீர்களே! ஹின்றாப்பிற்குப் பின் பெர்சே

பேரியக்கமான காரணம்தான் இன்று இந்தியர்கள் மட்டும் அல்லாது மற்ற இனத்தவரும் பாரிசானை எதிர்பதற்குக் காரணம்.

உங்களுடைய கட்டுரையின் மையம் அதுவாக இல்லாவிட்டாலும் அதை சொல்லியிருக்கலாம். காரணம் உலகம் முழுதிலுமிருந்து உங்கள் கட்டுரையைப் படிப்பார்கள்.
why is the box appearing all over today, I don't know? very difficult to write. cannot correct mistakes even.
thank you for telling me about article.
regards,

mullai
ko.punniavan said…
வணக்கம் டாக்டர்,

உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி,
கட்டுரையை நன்றாக உள்வாங்கியிருக்கிறீர்கள். அம்பிகா பற்றி எழுதியிருக்க வேண்டும்தான், அவருக்குச் சிறப்பானப் பக்கம் ஒதுக்கப் படவேண்டும்.
நன்றி
Anonymous said…
ӏ do nοt κnow іf it's just me or if everyone else experiencing issues with your site. It appears as though some of the text in your posts are running off the screen. Can someone else please comment and let me know if this is happening to them as well? This might be a issue with my web browser because I've haԁ thiѕ happеn pгeviously.
Thanκ you

My site; community.Golftitan.com

Popular posts from this blog

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

எம்ஜியார் -சிறுகதை

எம்ஜியார்
திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்செவிமடல்களைச் சிலிர்க்கச்செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத்துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள். இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பேருந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும். தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து, மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்லத்தனம் செய்யும்சிகப்புச் சட்டை. சமீப காலமாய் இனிப்பு நீர் தொல்லையால் இளைத்துப் போன மார்பகத்துக்கும், கை முஷ்டிக்கும் இறுக்கம் தருவதில்லைதான். ஆனால் சட்டைக் …