காதல் போயின், காதல் போயின் சாதல்                                                                 ஓ ஹென்ரி

        அவள் எனக்கு முகநூலில் அறிமுகமான பெண் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் என்னிடம் படித்த மாணவி என்பதை அப்பெண் தன்னை அறிமுகப் படுத்திய பின்னர்தான் தான் தெரியும். மொட்டுக்களாகவே இருந்துவிடுவதில்லை பெண்கள், சீக்கிரம் மலர்ந்துவிடுகிறார்கள். பின்னர் முற்றிலும் வேறான தனி அடையாளம் வந்துவிடுகிறது  அவர்களுக்கு. ஆண்களைவிட பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வந்துவிடுவதால் அவர்களின் அறிவு வளர்ச்சியும் ஆண்களை மிஞ்சியதாகவே இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்க்கவேண்டும். அவர்களின் அகம் சார்ந்த முதிர்ச்சியும் புலனாகும்.  அறிவு வளர்ச்சியின் உண்மை நிலை மனதில் ஏறும். இப்பெண்ணின் கதை இதற்கு நல்ல சான்றாக அமைகிறது.
என்னிடம் அவள் முகநூலின் இன்பொக்சில் உரையாடத் தொடங்கியது தன்னை எனக்கு நினைவு படுத்தத்தான். அப்போது அவள் ஒரு பையனை காதலித்துக் கொண்டிருந்திருக்காலாம். ஏனெனில் அவள் ஒரு ஆண்டுக்குப் பிறகு உரையாட வந்தபோது அவளிடம் காதல் புயலடித்துச் சிதலமான வார்த்தைகள் எஞ்சி இருந்தன.

ஒரு நாள் “ உங்களிடம் ஒன்னு கேக்கணும்” என்றே துவங்கினாள்.
என்னிடம் மேற்கல்வி பயில என்ன துறையைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஆலோசனை கேட்டு வந்தவர்களே அதிகம். இவளும் அப்படித்தான் துவங்கினாள் ஒரு வருடத்துக்கு முன்னர். ஆனால் இம்முறை அவள் கேட்க வந்தது வேறு விஷயமாக!

“ சொல்லும்மா என்றேன்”

“என்னக் காதலிச்சிவன் ஏமாத்திட்டான்” என்றாள். அவள் வார்த்தைகளில் ஏமாற்றமும், சிறுமைப் படுத்தலும் நிறைந்திருந்தது.

காதலிப்பது புதிதல்ல. ஏமாறுவது புதிதல்ல. ஆனால் காதல் எப்போதுமே புதிது. மாநுடக் காதல் முடிவற்று நீடிக்கும் . வகை வகையாய் வண்ண வண்ணமாய் பரிமளிக்கும். வெற்றியிலும் தோல்வியிலும் அதன் கதைகள் கலவையான சுவாரஸ்யம் மிகுந்தவை. ஆனால் அந்த சுவாரஸ்யம், சோகம், தெய்வீகமெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டம் வரை மட்டுமே  உயிர்ப்போடு இயங்கும்.  ஒரு பத்திருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அதே தெய்வீகக்காதல் பெரிய நகைச்சுவையாய் வேறொரு பரிமாணம் எடுத்து நிற்கும்..... காதலித்தவருக்கே. அதே உயிர்க்காதலை காலமும், வாழ்வனுபவமும், காதலைப்பற்றிய நம்முடைய அவதானிப்பும்  முன்பிருந்த தெய்வீகத் தன்மையைக் குப்புறப் புரட்டிப் போட்டிருக்கும்.

“நான் அவனை உயிருக்குயிராய் நேசித்தேன். அவன் இப்போ என்ன வேண்டான்னு சொல்லிட்டான்.”

“அவன் உன்னைக் காதலித்தானா? என்று கேட்டேன். ஒருதலைக் காதலாக இருந்துவிடக் கூடதல்லவா?

“ சார் வீடு வரைக்கும் வந்த அப்பா அம்மாக்கிட்ட பொண்ணு கேட்டான் சார்” என்றாள். “அவங்களும் ஒத்துக்கிட்டாங்க கொடுக்க”

“ இப்போ ஏன் வேணாங்கிறான்?”

“ அவங்க அம்மா ஒத்துக்கிலன்னு காரணம் சொல்றான்,” என்றாள்.

“ அவங்கம்மாவ கேட்டுட்டுத்தான் ஒன்ன காதலிச்சானா? கண்டிப்பா இருக்காது இல்லையா? உம்மேல உள்ள அவன் காதல் உண்மையில்லேனு புரியுது.” என்றேன். “அம்மா சொல்றாங்கங்கிறதுக்காக அவன் வேண்டானு சொல்ல மாட்டான்! வேற காரணம் ஏதாவது இருக்கும்!” என்றேன்.

“ எனக்கும் அவன் மேல சந்தேகம் இருக்கு!” என்றாள். அவன் வேலை செய்ற எடத்துல வேற பொண்ணோட பழகிறதா சேதி வந்துச்சி.” இது இவளை வெறுத்தற்கான சரியான காரணமாகவே இருந்தது.

“எனக்கு அவன் வேணும். அவனும் உங்க மாணவந்தானே?” என்றாள். “நீனக் பேசுங்க அவனிடம்” என்றாள்.

“தோ பாரும்மா..நான் சொல்றது நல்லா கேளு. அவன் உன்னை வேண்டானு சொல்லிட்டான். ஒரு பெண் புதிதாய் அவன் வாழ்க்கைக்குள்ள புகுந்துட்டானா அவன அங்கிருந்து வெளியாக்கிறது முடியாத காரியம்..அவன நீ மறக்கணும்” என்றேன் தடாலடியாக.

“ என்னையுந்தான காதலிச்சான்...என்ன மட்டும் எப்படி மறக்க முடிஞ்சது அவனால? இப்பல்லாம் வன் என்ன பாக்கறதோ பேசறதோ இல்ல ” என்றாள்.

“ ஆண்களுக்குப் பெண்கள் சீக்கிரம் சலித்துவிடுவார்கள். நீ அவனுக்குச் சலித்துவிட்டிருக்கிறாய்” என்றேன்.

“அவன என்னால மறக்க முடியல...வேல செய்ய முடியல.. சதா அவன நெனப்பாவே இருக்கு..”என்றாள்.

“ வேற ஒரு பெண்ணுக்கிட்ட மனச கொடுத்தவன்கிட்டே நீ போய் கெஞ்சி நிக்க போறியா? அது உன் சுய மரியாதைக்கு இழுக்கில்லையா?” என்றேன்.

“இல்ல சார்.....அவன மறந்துட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது..”

“அவன் ஒன்ன மறந்துட்டான் றியே!” அவள் மௌனித்தாள்.

“உன்ன கல்யாணம் பண்ணிட்டு இத செஞ்சிருந்தானா நீ என்ன கதியாயிருப்ப.. கொஞ்சப் நெனச்சிப் பாரு..” என்றேன்.

அவளிடமிருந்து பதில் இல்லை.

“நீ அவன மீண்டும் உன் வசமாக்க பெரிய போராட்டம் நடத்தியாவனும்! அவங்கம்மாவுக்கு எதிரா ஒரு போராட்டம்! அந்தப் பொண்ணுக்கு எதிரா ஒரு போராட்டம்! அவன மீட்க ஒரு பெரிய போராட்டமே நடத்தனும்! அதுல உன் தன்மானம் விலைபோகும். அப்படியும் நீ ஜெயிக்கிறது நிச்சயமில்ல. அவ்ளோ அவமானத்தையும் தாங்கணுமா நீ?” என்று நேரடியாகவே சாடினேன். அவள் விதிர் விதிர்த்திப் போனாள்.

“நீ தோக்கறதவிட, விலகி வந்துர்றது கௌரவமானது இல்லையா?

“நான் மன்னிச்சி ஏத்துக்குவேன்,” என்றாள்.

“நீ இவன காதலிச்சிக்கிட்டே , வேற ஒரு பையங்கிட்டேயும் மனச பறி கொடுதீருந்தேன்னா, அவன் ஒன்ன ஏத்துக்குவானா?”

கொஞ்ச நேரம் உரையாடல் திரை வெளறி எழுத்தற்றுக் கிடந்தது." நீ அவன புறக்கணிக்கணும். அவன இனிமே கண்டுக்காத.....இதுதான் நீ அவனுக்கு நடத்துற மொத பாடம். நீ தொங்கிக் கிட்டு போன, ஒன்ன மேலும் அவமதிப்பான். அவன் மனசு அவகிட்ட பொதைஞ்சிடுச்சி.. விட்டுடு.. விடுதலையாகிடு, இப்படி அவமானத்திலேர்ந்து விலகறததுகூட ஒருவகை வெற்றிதான்” என்றேன்.

சற்று நேரம் திரையில் எழுத்துகள் தோன்றவில்லை.


"உனக்கு இப்போது அவன் மேலிருப்பது காதல் இல்லை, காதலித்த உன்னையே  வெறுக்கிறானே என்ற ஆத்திரத்தில் உண்டான அகந்தை மட்டுமே, அந்த அகந்தை காதலாகிவிடாதே ," என்றேன் . அவள் உணரத் தொடங்கி இருக்கலாம்.

நான் “நாளைக்குப் பேசுவோம். நீ பொறுமையா சிந்திச்சிப் பாக்கணும்,” என்றேன்.

ஒரு புன்னகை பொம்மை முகம் தோன்றியது திரையில்.

மறுநாள் வந்தாள். “சார் நான் நேத்து பூரா நெனச்சிப் பாத்தேன். நீங்க சொல்றதுதான் சரி. நான் அவன மறந்துட்டேன் என்றாள்.”

“நெஜமாவா? இவ்ளோ சீக்கிரமா?”

“ஆமாம் நெஜமாவே மறந்துட்டேன். என்ன வெறுத்தவன் மேல ஆசைய வளக்கிறது முட்டாள்தனம்னு புரிஞ்சிக்கிட்டேன்,” என்றாள். நான் இங்க வேலைய விட்டுட்டு கே. எல். போறேன் சார். அங்க வேல கெடச்சிருக்கு,” என்றாள்.

வேரூன்றிப்போன காதலைப் பிடுங்கி எடுப்பது இளங்காதல் மனதால் எளிதில் நடக்காது. அதிலும் பெண்களால் ஆகாத காரியம். மரபு ரீதியாக அவர்கள் ஆண்வர்க்கத்தை நம்பியே வாழ்பவர்கள். அவர்களின் முழு பாதுகாப்புக்கு ஆண்களை நம்பும் போக்கு இன்று நேற்று தோன்றியதல்ல. அது மரபணுக்குள் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. சரி, இந்தப் பெண்மட்டும் என்ன விதிவிலாக்கா? தன் பிரச்னையைப் பேச பேற்றோரை அணுக மாட்டார்கள் பெண்கள். காதல் உணர்வுகள் தனிமனித ரகசியம். அதனைப் பெற்றோரிடம் பேசுவது நாகரிகமற்றது என்ற கற்பிதம் நம்மிடம் வேரூன்றி கிடக்கிறது. அவள் வயதை ஒத்தவர்களால் அவளுக்கு அறிவுரை சொல்ல முடியாது. அனுபவம் போதாது. அவள் மனக் கிலேசத்தை உடைத்தெறிய அவர்களிடம் வார்த்தைகள் போதாது.

சரி, தெய்வீகக் காதலைப் பற்றிய கதையொன்றைச் சொல்கிறார் ஓ ஹென்றி. ஓ ஹென்ரி யதார்த்த வாழ்க்கையைக் கதையாக்கியவர். பாவனையற்ற மனிதர்கள்தான் அவரின் பாத்திரங்கள். கதைகளில் சுவாரஸ்யமான திருப்பங்கள் தருவதில் சமர்த்தர். இக்கதையும் அதற்கொரு சான்று.
‘பரிசு’ என்ற தலைப்பிட்ட கதை. ஸ்டெல்லா ஜிம் இருவரும் கணவன் மனைவி. ஸ்டெல்லா அழகான பெண். அவள் அழகுக்குக் கூடுதல் மெருகேற்றுவது அவளின் நீண்ட நேர்த்தியான கேசம். அவளின் கூந்தலின்மேல் அவன் தீரா மையல் கொள்பவன்.
அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள். இருவருடையே நித்தியமான காதல் நீடிக்கிறது. ஆனால் இருவரும் குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள். வரும் கிரிஸ்மஸ¤க்கு பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது வெள்ளையர்கள் வழக்கம். (அந்தப் பண்பாடுதான் இப்போது நம்மிடையேயும் பரவி இருக்கிறது.) கணவனுக்கு  என்ன பரிசு வாங்குவதென்று குழப்பத்தில் அலைமோதுகிறாள் மனைவி. கண்ணைப்பறிக்கும் எல்லா பரிசுமே விலையேறிக்கிடக்கிறது. கடைசியில் ஒரு கைக்கடிகாரம் வாங்கித்தரலாம் என்று முடிவெடுக்கிறாள். கணவன் கட்டி இருக்கும் கடிகாரம் பழையதாக இருக்கிறதே என்ற கரிசனத்தில்.

மனைவிக்கும் பரிசு தரவேண்டுமென்பது கணவவனின் ஆசை. கடைகளில் அழகழயாய் மின்னும் பரிசுகளைப் பார்க்கிறான். பையில் இருக்கிற பணத்துக்கும் மேலான விலைகளிலேயே பரிசுகள் கிடக்கின்றன. அவளுக்குத் திருப்தியாகவும் இருக்கவேண்டும் விலையும் மலிவாக இருக்க வேண்டுமென்றால் எப்படி? ஒரு பரிசை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான்.

வீட்டில் நுழைந்த ஸ்டெல்லாவைப் பார்த்தவுடன் அவன் துணுக்குறுகிறான். அவளையே கண்கொட்டாமல் பார்க்கிறான். அவளின் தோற்றத்தில் ஏதோ வேறுபாடு தெரிகிறது. அவன் மேலும் உற்று நோக்குகிறான்.

“என்னை அப்படிப் பார்க்காதே...” என்று கூறுகிறாள். அவள் தலைமுடி குட்டையாக சுருண்டு ஒரு பாள்ளி மாணவனின் தோற்றத்தில் இருக்கிறது.

“என்ன கோலம் இது?” என்று ஜிம் ஆச்சரியப் படுகிறான்.

“ஒன்று மில்லை என் தலை முடியை வெட்டி விற்றுவிட்டேன்”.


“என்ன? என்னா ஆச்சு?” வியப்பும் ஏமாற்றமுமான கேள்வி ஜிம்மிடமிருந்து.

“இந்த கிரிஸ்மசுக்கு உனக்கொரு கைக்கடிகாரம் வாங்கவே என் முடியை விற்றேன்,” அப்பொழுத்தான் கவனிக்கிறான் ஜிம். அவளின் அழகைக் கூட்டிக் காட்டிய நீண்ட முடி காணாமற்போனதை!

என்ன நடந்தது என்றால்...... ஸ்டெல்லாவின் நீண்ட அழகிய கேசத்தின் மேல் ஒரு பணக்காரிக்கு கண். தனக்கு அப்படி இல்லையே என்று குறைபடுகிறவள். ஸ்டெல்லாவின் முடியைச் ஸ்பரிசித்து ஆதங்கப் படுகிறாள். ஸ்டெல்லாவிடம் கனவனுக்குப் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறதேயன்றி அதனை நிறைவேற்றும் பணபலமில்லை. எனவே இருபது டாலருக்கு தன் முடியைப் பணையம் வைத்துவிடுகிறாள். அதைச் சௌரியாக்கிக் தனக்குச் சௌகர்யமாக்கிக் கொள்வாள் அந்த பணக்காரி.
ஜிம்முக்கு அவள் மேல் மெல்லியதாய் கோபம் வருகிறது. ஆனால் அது அவள் செய்த தியாகத்துக்கு ஈடாகாது என்று தன் சினத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவள் மீதான அன்பு மேலும் பன்மடங்காகிறது. அவளை கட்டி அணைத்துக் கொள்கிறான். கண்களில் நீர்த் திரையிடுகிறது.

“இதோ பார் உன் கூந்தலை பராமறிக்க ஒரு செட் சீப்பு வாங்கி வந்திருக்கிறேன்,” என்று என்று அவளிடம் அதனை நீட்டுகிறான். அப்போதுதான் கவனிக்கிறாள் அவன் கையில் கட்டியிருந்த அவன் கடிகாரத்தைக் காணவில்லை. அது அவன் தாத்தாவின் கடிகாரம். அது பரம்பரை நினைவுப் பொருள். பழையதாக இருந்தாலும் பழையதை நினைவுபடுத்தும் பொக்கிஷம். எப்போதுமே அதைதொட்டுப்பார்த்து பெருமையில் திளைத்துக் கொள்வான் ஜிம். இதெல்லாம் ஸ்டெல்லாவுக்குத் தெரியும். அந்தப் பெருமையில் அவளும் பங்குகொள்வாள். ஆனால் அவர்களின் காதலுக்கு முன்னால் அது எம்மாத்திரம்? கோடி கொடுத்தாலும் அன்புக்கு ஈடாகுமா? ஒரு சொட்டு ஆனந்தக் கண்ணிருக்கு சமமாகுமா? என்ன பெரிய ‘மசிரு’? (ஐயா காதலர்களே  ரொம்ப வேண்டாம்! உங்கள் காதலியின் தலைமுடிய லேசாக கலைத்துவிடுங்கள் பார்க்கலாம்.) கைவைக்க தைரியமுண்டா உங்களுக்கு? ஒரு ரத்தக் களறியே அரங்கேறும்!
ஆத்மார்த்தமான காதலின் அடையாளம் ஓ ஹென்ரியின் இக்கதை.  இப்போதெல்லாம் இப்ப்டியா? இன்னொரு காதலரைச் ‘ஸ்பேராக’ வைத்துக்கொண்டல்லாவா ‘ஆத்மார்த்தக் காதல் நடத்துகிறார்கள்!
Comments