குழப்பம் 2
ஜெயமோகனிடம் மலேசிய தொடர்பு எண் இருக்காது. பாலமுருகனுடன் தொடர்பு கொண்டு அவரிடம் தொலைபேசியைத் தரச்சொன்னேன். அவர் ஜெயமோகனோடு வந்த ராஜமாணிக்கத்திடம் கொடுத்துவிட்டார். ஜெயமோகனிடம்தான் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு முகமன் விசாரிக்கத் தொடங்கினேன். குரல் வேறமாதிரி இருக்கிறதே என்ற் பிரக்ஞைகூட எழவில்லை. என்ன பதில் சொல்வது என்ற பதற்றத்தில் குரலை அடையாளம் காண மறுத்தது. சற்று சுதாரித்த பின்னரே இது ஜெமோ குரலில்லையே என்றே அடையாளங்கண்டு ,
" நீங்கள்..." என்றேன்.
"சார் நான் ராஜமாணிக்கம் ... ஒரு நிமிஷம்," என்றுவிட்டு ஜெமோவிடம் கொடுத்தார்.
"புண்ணியவான் பேசுறேன், நலமா வந்து சேந்தீங்களா ஜெ?" என்றேன்.
" எல்லாம் நல்லாருந்தது.." என்றே துவங்கைனார். வார்த்தைகளில் கோபம் ஏதும் தென்படவில்லை. எப்போதும்போலவே மென்மையாகவே பேசினார். தொலைபேசியில் அவரோடு உரையாடும் போது நமக்கு உற்சாகம் வராது. நேரில் பேச ஆரம்பித்தால் நமக்குள் ஒரு துடிப்பையும் ஆர்வத்தையும் கிளர்த்திவிடுவார். நான் இருமுறை அவருடைய ஊட்டி இலக்கிய முகாமில் பேசி மகிழ்ந்திருக்கிறேன். என் பதற்றம் நொடியில் சரிந்தது.
" ஏன் சார் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி போட்டிருக்கீங்க..ஓய்வில்லாம இருக்கும்போலிருக்கே...எனக்கு மேடையில பேச விருப்பமில்லியே," என்றார்.
"ஜெ...உங்களுக்கு நிகழ்ச்சி நிரல் அனுப்பி இருந்தேனே....."
"ஆமா கல்லூரி நிகழ்ச்சிய எடுக்கச் சொன்னேனே...."
"இல்லிங்க ஜெ.. நீங்க ... குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கீங்க..உங்க வாசகர் உங்கள பாக்க விரும்புறாங்க அதான் .." என்றேன்.
"ஒரு நிகழ்ச்சிய ரத்து செய்திடுங்க," என்றார்.
"சரிங்க ஜெ செய்திடலாம்," என்று வாக்கு கொடுத்தேன்.
பின்னர் சுவாமியைக் கூப்பிட்டு, நான் பேசிவிட்டதாகச் சொன்னேன்.
"ஓ பேசிட்டீங்களா.." என்ற எப்போதும் போலவே இன்ப அதிர்ச்சியோடே கேட்டார்.
"அவர் கோபத்தோடெல்லாம் இல்ல சாமி... நிகழ்ச்சி நெடுக்க இருக்குன்னு கொற பட்டுக்கிட்டாரு ...அவளவுதான்" என்றேன். "அப்பாடா," என்றார். "நான் இப்போ பேசுறேன்," என்றார். அப்போது அவரிடம் உற்சாகம் துள்ளியது.
ஒரு நிகழ்ச்சியை ரத்து செய்தாக வேண்டும். உடனடியாகத் தகவல் சொன்னால்தான் ஏது செய்ய முடியும். கல்லூரி தவனை விடுமுறை துவங்குவதற்கு கடைசி வாரம். அதற்குள் ஒன்றை ரத்து செய்தே ஆகவேண்டும்.
எந்தக் கல்லூரியை நீக்குவது. சரி முதல்ல தகவலை விரிவிரைஞர் தமிழ் மாறனிடம் தகவல் சொல்வோம். என்ன சொல்கிறார் பார்ப்போம் என்று போன் செய்தேன். அவர் கனிவோடு பேசக்கூடியவர். நல்ல அபிப்பிராயம் சொல்லாலாம்.
" சார்.. நான் ஏற்பாடு செஞ்சிட்டேன் ஒன்னும் செய்ய முடியாது போல இருக்கே சார்."
"இல்லிங்க மாறன் உங்கள ஐடியாதான் கேட்டேன்," என்றேன்.
அடுத்து துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் மணியரசனிடம் தொடர்புகொண்டு, ரத்து செய்ய முடியுமா.. முயற்சி செய்து பாருங்கள்.." என்றேன்.
"அப்படியா..... எங்க கல்லூரி இயக்குனர்ல்லாம் வராங்கா ...அதுதான் இடிக்குது.." என்றார்.
"முயன்று பாருங்க...இல்லனா பரவால்ல" என்றேன். அந்தக் கல்லூரி இலக்கிய நிகழ்ச்சியைக்கூட ஒரு அதிகாரப் பூர்வ விழாவாகவே எடுப்பார்கள். இலக்கிய விழா எளிமையாக இருந்தால் போதும் என்றே தீவிர இலக்கியவாதிகளின் இயல்பான எண்ணமாகும்.
மறுநாள் எனக்கு மணியரசன் மீண்டும் தொடர்பு கொண்டு.. ஒரு நல்ல தகவலைச் சொன்னார்." சார்.. நீஙக எதிர்பார்த்த மாதிரியே நான் நிகழ்ச்சியை ரத்து பண்ணிட்டேன்," என்றார். நான் எதிர்பார்க்காத முடிவு இது. மனசு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஜெமோவை அலைக்கழிக்கக் கூடாது என்ற எண்ணம் தவிர வேறொன்றறியேன் பராபரமே. மணியரசனுக்கும் நன்றி சொன்னபோதூ 'அப்பாடா' என்றிருந்தது.
ஜெமோவுக்கு மறுநாள் மலேசிய எழுத்தாளர் சங்கப் பணிமனையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. முனைவர் கார்த்திகேசு நிகழ்ச்சி வேண்டுமென்றே கேட்டுக்கொண்டபடியால் நடந்தது. அந்நிகழ்ச்சி தொடக்கக் கட்டத்திலேயே கிட்டதட்ட நடக்காது இருந்தது. ஆனால் முனைவர் கார்த்திகேசு முன்னெடெடுத்து அதனை நடத்துவதில் முனைப்பாக இருந்தார். மலேசியாவில் ரெ.கா அவரின் தொடக்ககாலத்திலிருந்தே வாசித்து வருபவர். இதனை எழுத்தாளர் யுவராஜன் சொன்னார். "
"நான் அவரை வாசிப்பதற்கு காரணம் ரெ.காதான். அவரின் ரப்பர் நாவலைப் படித்துவிட்டு ரெ.கா எழுதிய குறிப்புதான் என்ன அவர் பக்கம் இழுத்தது என்றார். அதற்காக அவரை நான் பெரிதும் மதிக்கிறேன் சார்." உணமைதான் நானும் மாடன் மோட்சம் படித்துவிட்டு ரப்பரைத் தேடி, கன்யாகுமரியைத் தேடி... அவரின் தடித்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து... இப்போது காலையில் பசியாறுவதே வெண்முரசுதானென்றாகிவிட்டது. அவருடைய வாசகர்கள் எத்தனை பேர் வெண்முரசால் காலைஉணவை skip செய்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
என் வீட்டுக்கு அவர் வந்தவுடன் வெண்முரசை பத்து ஆணுகளில் எழுதி முடிக்கப் போவதாக சங்கல்பம் செய்திருக்கிறீர்களே. அதனைப் படித்து முடிக்கும் வரை என் ஆயுள் நீடிக்குமா என்று கேட்டேன்.
அதற்கு அவரோடு வந்த கிருஷ்ணன் சொன்னார். சார் பத்து ஆண்டுகள் என்ற காலக்கெடுவுக்கு முன்னாலேயே பத்து வெண்முரசு நாவல்களை எழுதி முடித்துவிடுவார் பாருங்கள் என்றார். ஆம் அந்தக் காலவரைறையரை பத்து ஆண்டுகள் நீளாது. அதற்கு சில ஆண்டுகள் முன்னாலேயே முடித்து விடுவார். ஏனெனில் வெண்முரசு எழுதத் துவங்கிய முன்று மாதத்துக்குள்ளாகவே முதல் நூல் 'முதல் கனல்' வந்துவிட்டது. இதோ இந்த மே மாதத்துக்குள் இரண்டாவது நூலான 'மழைப் பாடல்' வரப் போகிறது என்றார்.
சரிதான் ஜெயமோகனை ராட்சச எழுத்தாளர் என்று சொன்னது மெத்தச் சரி. இதனை யார் சொன்னது என்று யுவராஜனைக் கேட்டேன் அவர் கார்த்திகேசுதான் சொல்லியிருக்கிறார் என்றார் . இல்லை அதற்கு முன்னாலேயே தமிழ் நாட்டில் அந்தப் பெயரைச் சூட்டிவிட்டார்கள் எனபதற்கு ஆதாரமாகவே பத்திரிகைச் செய்தியில் ரெ.கா ஜொமோவை ' ஜெயமோகனை ராட்ச்ச எழுத்தாளர்' என்றே குறிப்பிடப் படுகிறார் என்றே எழுதியிருந்தார். அதுபற்றி யாராவது ஆய்வை மேற்கொள்ளவேண்டும்.
நான் ஜெமோவைக் கேட்டேன்..."எப்படி ஜே நாங்க படிக்கிற வேகத்த விட நீங்க எழுதிற வேகம் அதிகமா இருக்கு," என்றேன்.
அவர் சொன்னார்," டைப் அடித்து அடித்து என் விரல்களை ஒரு சில கணம் நீட்டி மடக்கக் கூட முடியாது அவை செயலற்றுப் போயிருக்கும் "என்றார். என்னைப்போல எழுத்துச் சோம்பேறிகளுக்கு எதற்கு விரல்கள் என்று தோன்றியது.
ஜெ உங்கள் விரல்களின் நடனம் எங்களுக்கு அக வேள்வியைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எழுதுங்கள் ஜெ.
மறுநாள் ரெ.கார்த்திகேசு ஒருங்கிணைத்த சங்கப் பணிமனையில் பேச்சு. ஜொமோவை ரெ.காதான் விடுதியிலிருந்து நிகழ்ச்சி இடத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொன்னார். நான் அவரின் தொடர்பு எண்ணையும், விடுதி முகவரியையும் கொடுத்திருந்தேன்.
தொடரும்...

விரிவுரைஞர் குமாரசாமி, தமிழ் மாறன், நண்பர் |

விரிவுரைஞர் தமிழ்மாறன், யுவராஜன், ஜெயமோகன் |

முனைவர் ரெ.கார்த்திகேசு |

Comments