குழப்பம் 3
முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது. அவரிடம் மலேசிய தொலைபேசி எண் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கைக்குக் கிடைத்தது மின்னஞ்சல் மட்டுமே. அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு அன்று மணி 4 வாக்கில் அனுப்பியிருந்தார் யுவா. நான் அவர் மின்னஞ்சல் அனுப்பிய நேரத்தைப் பார்க்கவில்லையாதலால்., சற்று முன் அனுப்பிய மின்னஞ்சலாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நான் அவரோடு உடனடியாகத் தொடர்பு கொண்டேன். இந்த நள்ளிரவில் என்ன அலைக்கழியப் போகிறார்களோ என்ற கவலை எனக்கு.
"ஜெ என்ன எங்கே இருக்கிறீகள்.. மின்னஞ்சலைப் பார்த்தேன்," என்றேன் படபடப்போடு.
"அதை இன்று காலையில் அனுப்பினேன். என்னையும் கிருஷ்ணனையும் ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பி விட்டு. பின்னால் தயாஜியும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். டெக்சி எங்களை வேறு விடுதியில் இறக்கி விட்டு கிளம்பிவிட்டான். தயாஜி அலைந்து கண்டுபிடித்து, சரியான இடத்துக்கு கொண்டுவந்து விட்டு விட்டார் என்றார். எனக்கு மட்டுமல்ல நவீனுக்கு, தயாஜிக்கு, யுவாவுக்கு என் மின்னஞ்சல் பறந்திருக்கிறது. யுவா மின்னஞ்சல் பார்த்தது அன்று இரவு 1.ஓ மணிக்கு. அவரும் அலறி அடித்துக்கொண்டு ஜெவுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
இரண்டாவது நாள் மலேசிய எழுத்தாளர் சங்கக் கலந்துரையாடல்.
ரெ.கா ஒருங்கிணைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு பத்து பதினோரு பேர்தான் வந்தார்கள் என்று தெரிய வந்தது. இரண்டும் மாதங்கள் கடுமையான வெப்ப நாட்களுக்குப் பிறகு கொட்டிய பெரும் மழை நிகழ்ச்சியைக் குலைக்கக் காரணமாக இருந்திருக்கிறது. நெடுநாட்களாக காத்திருந்த மழையைப் கோலாலம்பூர் மக்கள் ஆரத்தழுவிக்கொண்டார்கள் என்று கருதும்போது , நல்லார் ஒருவர் மலேசியாவுக்கு வந்தமைக்கான நல் அறிகுறியாகவே அவரின் சிறுபாண்மை வாசகரும் வரவேற்கவேண்டியதாயிற்று. சிறு கூட்டம் ஒரு பொருட்டே அல்ல!
ஆனால் கூட்டத்தில் ஜெ உற்சாகமாவே பேசினார் என்றார்கள். வந்திருந்த அனைவரும் ஜெவின் எழுத்துகளைப் படித்தவர்கள் . குறிப்பாக அறம் (சிறுகதை நூல்) வாசித்தவர்கள். அதனைத் தொட்டே அதிகமான கேள்விகளும் உரையாடல்களுமாக அமைந்தன என்றார். எப்போதுமே தீவிர இலக்கிய ஈடுபாட்டையே ஜெ விரும்புவார். பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதகமில்லை. ஆனால் பங்கெடுப்பு அக எழுச்சியை உண்டுபண்ன வேண்டும் அவருக்கு. எல்லா கேள்விகளுக்கும் சலைக்காமல், தக்க சான்றோடு பதிலுரைப்பார். அவரின் பல் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டவருக்கு மட்டுமே அவரைப்பற்றி தெரியும். எனவே மலேசிய எழுத்தாளர் சங்க கலந்துரையாடல் உற்சாகமான ஒன்றாகவே அமைந்ததில் மகிழ்ச்சி- இரு சாரருக்கும்.
கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்குதான். அன்று முழுதும் கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா தளங்களை பார்த்திருக்கிறார்கள். தயாஜி அவர்களை அழைத்துக்கொண்டு இடங்களைக் காட்டியிருக்கிறார்.
மறுநாள் காலையில் கோலாலம்பூரிலிருந்து கூலிம் தியான ஆஸ்ரமத்துக்கு மூவரையும் அழைத்துக்கொண்டு வர்வேண்டிய பொறுப்பு யுவராஜனுடையது. யுவா ஜெவின் தீவிர வாசகர். மும்முறை ஜெவின் ஊட்டி முகாமில் கலந்துகொண்டவர். ஊட்டி முகாம் இரண்டாவது முறை சுவாமி, யுவா, நான் மலேசியாவிலிருந்து கலந்துகொள்வதாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். ஆனால் மறுநாள் காலை நேரம் தாமத்தித்து விமான நிலையத்துக்குப் போனதால் விமானம் பறந்துவிட்டது. நானும் சுவாமியும் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமானோம். ஆனால் யுவா "சார் நீங்களாவது வாங்க சார், நாம ரெண்டு பேரும் போலாம் என்றார்." டிக்கட்டின் விலை ரி.ம 700 சொச்சம். அன்று மாலையே சென்னைக்குப் பற்ந்தோம். பின்னர் அந்தம் பயணம் ஒரு பெரிய வரலாற்று அத்தியாமாக ஆகிவிட்டிருந்தது !!
மலேசிய அடையாளம் இரட்டைக் கோபுரம்.
யுவா அவர்களை அழைத்துவரும் வழியில் செண்டோலும், ரோஜாவும் வாங்கித் தந்திருக்கிறார்.சில இடங்களைக் காட்டியுமிருக்கிறார். ஜேவும் சரி அவரோடு வந்தவர்களும் சரி ஊர் சுற்றிப்பார்ப்பதை ஒரு வேள்வியாகவே கருதுபவர்கள். எனவே மலேசியாவின் வரலாற்றுப்புகழ் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். கிருஷ்ணனிடம் நான் ஏற்கனவே மலேசியாவில் இந்தியாவைப் போல புராதன இடங்களை எதிர்பார்க்காதீர்கள் என்று முன்னாலேயே எச்சரித்திருந்தேன்.
அன்று மணி இரண்டுக்கெல்லாம் கூலிம் தியான ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.பகல் உணவு அங்கேதான்.
நான் மாலை 5.00 மணிக்கு ஆஸ்ரமத்தைப் போய்ச் சேர்ந்தேன். யுவா, கிருஷ்ணன்,ராஜமாணிக்கம் மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏற்கன்வே அவர்களை ஊட்டி முகாமின் பெருங்கூட்டத்தில் பார்த்திருந்ததால் யார் கிருஷ்ணன், யார் ராஜமாணிக்கம் என்று தெரியவில்லை. அறிமுகப் படுத்திக்கொண்ட அடுத்த கணமே ஒரு குபீர் சிரிப்பு வெடித்தது.
கிருஷ்ணன் மின்னஞ்சலில் மலேசியத் தொடர்பு எண் கேட்டிருந்தார். நான் சிலவற்றைக் கொடுத்துவிட்டு கீழே கோட் போட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தேன்.(இதனைக் குழப்பம் 3.1 என்று உப தலைப்பிட்டுக்கொள்ளலாம்)
சார் என்னிடம் வழக்கறிஞர் கோட்தான் உண்டு அது போட்டுக்கொள்ளவா என்று பதில் போட்டுவிட்டு என் மின்னஞ்சலை ஜெவுக்கும் ராஜாவுக்கும் அனுப்பி அவர்களை கோட் போட்டுக்கொண்டுவர கவனப்படுத்தியிருக்கிறார்.
நான் உடனே மீண்டும் ஒரு பதிலை எழுத வேண்டியதாயிற்று.
நான் குறிப்பிட்டது telephone code, coat அல்ல, இங்கே வெயில் கொலுத்துகிறது, கோட் எதற்கு என்று பதில் போட்டிருந்தேன்.
அந்த குபீர் சிரிப்பு வெடித்த காரணம் அதுதான். ஜெ களைப்பை நீக்கத் தூங்கி எழுந்தவர் " என்ன பயங்கர சிரிப்புச் சத்தம் கேட்டதே என்றார். சொன்னேன்.
கிருஷ்ணன் பயணம் போகும்போதெல்லாம் பயணத்துத் தேவையான பொருட்களை எல்லாரையும் கொண்டுவரும்படி பட்டியல் அனுப்புவார். ஆனால் அவர் கொண்டுவர மறந்துவிடுவார் என்றார். அதற்கு ஒருமுறை சிரித்துத் தீர்த்தோம்.
குமாரசாமி,(வாசிப்பவர்) தமிழ்மாறன்
அன்று மாலை பினாங்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஒரு இலக்கிய உரையும் உரையாடலும் நிகழ்ச்சியை விரிவுரைஞர் குமாரசாமி ஏற்பாடு செய்திருந்தார். குமார் ஜெவின் இன்னொரு தீவிர வாசகர். வெண்முரசை படித்துவிட்டு "அப்பாடா" என்பார். அவர் முகத்தில் வியப்பு வெடித்திருக்கும். அதன் நீட்சியாகவே தன் மாணவர்களை பீஷ்மர், அம்பை சந்திக்கும் ஒரு ஆவேசக் காட்சிய நாடகமாக்கியிருந்தார். மலேசியாவில் நாடகக்கலை கிட்டதட்ட இறந்துவிட்ட நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஒரங்க நாடகத்தைப் பார்க்க மிகுந்த ஆவலாய் இருந்தது.
பினாங்கு கல்லூரிக்கு எங்கள் நவீன இலக்கியக் குழும நண்பர்கள் அனைவரும் நான்கு கார்களில் உற்சாகத்தோடு பயணமானோம். அங்கே பீஷ்மரும், அம்பையும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
தொடரும்.....
தயாஜி |

பத்துமலை முருகன் |

Comments