Wednesday, March 2, 2016

ரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்

                         கதை இரண்டு

ரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்-  ஆணாதிக்க                                வன்மம்

சமீபத்தில் வேலை தேடி அலையும் ஒரு வயதுப் பெண்ணை  எதேச்சையாக சந்திக்க வேண்டியிருந்தது. என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கீழிறங்கி வந்தாள். அவளின் தோற்றம் கரிசனத்தை உருவாக்கிய வண்ணம் இருந்தது. அவளைச் சந்திக்கும் யாருக்கும் கழிவிரக்கம் பிறக்காமல் இருக்காது. அவளை மேற்கொண்டு விசாரித்த்தில் ஒரு மூன்று வயது குழந்தை இருப்பதாகச் சொன்னாள். வயதான அம்மாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் கணவனோ பாதைமாறி குற்றச்செயலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். எனவே வயிற்றுப் பிழைப்புக்காவது அவளுக்கு வேலை அவசியத் தேவையாகிறது. பெரும் பெரும் பட்டணங்களில் இவ்வாறான அபலைப் பெண்களை அதிகமாகவே எதிர்கொள்ள முடியும். இவர்கள் ஒரு வகையில் ஏமாற்றப்பட்டவர்கள். கனவுப் பருவத்திl காதலுக்கு ஒரு துணை கிடைத்தால் போதும் என்ற அவசரத்தில் சிக்கித் தொலைந்து கொண்டிருப்பவர்கள். அந்தப் பட்டியல் நீண்டது.கொடியது. இவள் போன்ற அபலைகளை  அலைய விடுவதில் பொறுப்பற்ற ஆண்களே காரணம். ஆணாதிக்கம் அடித்தட்டு வாழ்க்கைத் தளத்திலும் கோலோச்சுவதைத் தவிரிக்க முடியாது. பெண்கள் அதிகமாகவும் மோசமாகவும் பாதிக்கப்படுவது சமூகத்தின் அடித்தட்டு வர்க்கத்தில்தான்.
அபலைகளின் குழந்தைக்கும் தனக்கும் அன்றாடம் உணவும்  உறைவிடமும் அவசியம்இந்த அத்தியாசவசியப் தேவை கிடைக்கப்பெறாத போது அவர்கள் மேலும் மோசமான ஆடவர்களிடம் சிக்கி உடலை விற்கும் நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்தத் தொப்புழ் கொடி உறவு தன் உதிரத்தின் மிச்சம். அது பசியோடு கையேந்துவதை எந்தத்  தாயாலும்  பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே இறுதி ஆயுதமாக உடல்தான் அவர்களுக்குப்  பணம் சம்பாதிக்க மூலதானமாகிவிடுகிறது.
ரெ.காவின்இன்னொரு தடவைகதைத் தொகுப்பில் இடம் பெற்ற கதையான வெள்ளைப் பூனைகளும் கருப்புக் குட்டிகளும்அபலைப் பெண்களின் வாழ்வை மையம் கொண்டது.. ஆணாதிக்கம் கோலோச்சும் அடித்தட்டு குடும்பத்தின் கதையும் கூட இது. சில நாட்கள் விட்டு விட்டு வீடு திரும்பும் கணவன் பொன்னுசாமியின் வரவை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறாள். அந்த ஆவல் முழுக்க தன் உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஏங்கும் பாத்திரமாகப் பார்வதியைப் படைக்கிறார் கதை சொல்லிஒரு பெண்ணைக் உடல் இச்சைக்காக ஏங்க வைக்கும் கணவன் பொன்னுசாமியின் மீது வாசகனுக்கு கோபம் பொங்குகிறது. காம ஆசை எல்லாப் தரப்பினருக்கும் பொதுவானதுதான். ஆனால்  ஆண்களைப் போல அதற்காக வெளிப்படையாக முயற்சிக்கும் பெண்களை வேறு மாதிரி அடையாளப் படுத்திவிடுவார்கள். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி வாசிக்க வேண்கடியர்வளாகவே பெண்கள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளைப் பூனைகளும் கருப்புக் குட்டிகளும்கதையில் வரும்  அவள் கணவன் அவ்வப்போது தான் வீடு திரும்பும் லாரி ஓட்டுனர். அவன் ஆண் என்ற ஒரே காரணத்தால் தன் உடல் ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வாய்ப்பும் வசதியும் திறந்தே கிடக்கிறது. ஆனால் பார்வதிக்கு வேறு வழியில்லை பொன்னுசாமியை மட்டுமே நம்பியிருக்கவேண்டும்பெண்ணுக்கான தேவையை எல்லா விதத்திலும் கணவன் தான் நிறைவு செய்யவேண்டும் என்ற பண்பாட்டுப் பின்புலம் கொண்டது நமது சமூக நடைமுறை. இது ஆண் வர்க்கம் கட்டமைத்த பண்பாடு. அதற்கு அவள் அடிபணிந்தே ஆக வேண்டும்அதுதான் இந்தியப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கதையை வாசிக்கும்போது பார்வதியின் மேல் நமக்கு பச்சாதாபம் ஏற்படுகிறது. அவள் அற்றைக் கூலிக்காரி  என்பதால் மட்டுமல்ல தனக்கும் பொன்னுசாமிக்கும் பிறந்த அங்கவீனான ஆறுமுகத்தையும் வாழ்நாள் முழுதும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு கிட்டதட்ட கணவனால் கைவிடப்பட்டவள்.. இந்த இக்கட்டுக்கெல்லாம் எது வடிகால் என்றால் அவள் ஏக்கமுறும் அவன் தரப்போகும் உடல் சுகத்துக்கு மட்டுமே. அவளை ஏங்கவைக்கும் பொன்னுசாமியின்  பொறுப்பற்ற தன்மை நம்மைச் சினமுறச் செய்கிறது. மனிதனின் பிற உணர்ச்சிக்கு முகாந்திரமான காரணியே காமம்தான் அடிப்படை என்று உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் சொல்வார்.
 தன் பசியைத் தானே வேலை செய்து தீர்த்துக்கொண்டு கால்கள் சூம்பிய ஆறுமுகத்தையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிய பொன்னுசாமியின் பொறுப்பற்ற தன்மை கதையில் சொல்லிக் கொண்டு போகும் போது பொன்னுசாமி நமக்கு ஒரு பொறுக்கியாகவே தெரிகிறான்.
கதை பாதி முடிவுற்ற பிறகே கணவன் கதைக்குள் நுழைகிறான். ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்ற பிம்பத்தை  அவன் கதைக்குள் வருவதற்கு முன்னரே கதைப் போக்கு லாவகமாகச் சொல்லி விடுகிறது. பார்வதியின் மேல் பச்சாதாபம் ஏற்படும் அதே வேளையில் பொன்னுசாமியின் மேல் வாசகனுக்கு தீராத சினம் உண்டாகிறது. கதையின் சிறிய பாத்திரமாக வரும்   தாயம்மாள் அவசரபவசரகாக  வீட்டுக்குக் கிளம்பும் பார்வதியை நோக்கிய உரையாடல் பொன்னுசாமியின் பாத்திர சித்திரத்தை வரைந்து காட்டிவிடுகிறது.
இன்னிக்கி ராத்திரி இன்னொரு டிரிப் இருக்காம். பத்து பதினோரு மணிக்கெல்லாம் திரும்பக் கிளம்பிடுவாரு. போய் ஏதாவது சமச்சி வைக்கணுங்கா,” என்று பார்வதி சொல்கிறாள். அதற்குத் தாயம்மாள், “ஆமாம் உன் சமயலத் திங்கத்தான் வர்ரான் போ ! ஒன்னத் திங்கவே அவனுக்கு நேரம் பத்தாதுஎன்கிறாள்.
ஆறுமுகத்துக்குப் பொன்னுசாமியை வருகையைப் பற்றி நினைக்கும் போது பயமாகவும் இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று கதாசிரியர் சொல்லும்போதே பொன்னுசாமி நல்ல தகப்பன் இல்லை என்று வாசகனுக்குத் தெள்ளத் தெளிவாக்குகிறார். அவன் நல்ல அப்பனும்  இல்லை, நல்ல கணவனும் இல்லை. அப்படியானால் பொன்னுசாமிக்கும் பார்வதிக்குமான உறவிலும்  சிக்கல் இருக்கிறது என்ற முன் அபிப்பிராயத்தை வாசகன் மனதில் ஏற்றி விடுகிறார்.
பொன்னுசாமி கதைக்குள் வந்தவுடன் வாசகன் கட்டமைத்து வைத்திருந்த அவன்  பிம்பத்தைவிட பல மடங்கும் மோசமானவனாக இருக்கிறான். அவளின் உடலாசையை நிறைவாகத் தீர்த்தானா என்பதில் சந்தேகம் வருகிறது. அவன் வந்த நோக்கம் வேறு. தாயம்மாள் கோடி காட்டியது போல பொன்னுசாமிக்கு வேறு எங்கோ தொக்கு தொடர்பு இருக்கிறது. அவனுக்குப் பார்வதி ஒரு பொருட்டே அல்ல. எனவே அவன் இம்முறை வந்த நோக்கம் பார்வதி எதிர்பார்த்தஅதற்காகஅல்ல. அவள் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலிக்காக அவன் வந்திருக்கிறான். வீட்டில் வறுமை தாண்டவமாடுவது அவனுக்குத் தெரிந்தும், அவளிடம் எஞ்சியிருக்கின்ற ஒரேசொத்தானசங்கிலியை அபகரிப்பதே அவன் நோக்கம். அதனை பொத்திப் பொத்தி காப்பது ஆறுமுகத்தின் எதிர்காலத்துக்காக. பாவம் பார்வதி அந்த அல்ப சங்கிலி ஆறுமுகத்தை எவ்வளவு தூரம் காப்பாற்றும்? ஆனாலும் அது ஒன்றூதான் பாக்கி. அது காப்பாற்றும் என்று அவளின் நம்பிக்கையின் மீது நமக்கு பரிதாபம் உண்டாகிறது. அவள் சங்கியைக் கொடுக்க மறுக்க அவன் வன்முறையில் அதனைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளை அப்படியே நிர்க்கதியாய் விட்டு விட்டுக் கிளம்பிவிடுகிறான். ஆறுமுகத்துக்கு அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடக்கும் சண்டை பிடிக்காமல் அவன் தான் வளர்த்து வந்த பூனைக் குட்டிகளை எடுத்து பொன்னுசாமியின் மீது வீசுகிறான். அப்பாவின் வருகையை நினைக்கும்போது  தனக்குப் பயமாகவும் இருக்கிறது என்று கதை சொல்லி சொன்னதன் பொருள் இப்போது புரிந்து விடுகிறது. அவள் பாதுகாத்து வந்த ஒரே சொத்தையும் கருணையில்லாமல் பிடுங்கிச் சென்ற பொன்னுசாமி மீண்டும் வருவானா என்பதில் சந்தேகம் வலுக்கிறது. அவன் வரமாட்டான் என்றால் பார்வதியின் கதியும், ஆறுமுகத்தில் நிலையும் கேள்விக்குள்ளாகிறது. இத்தனை நாள் ஆறுமுகத்தையும் தன்னையும் அவள் உழைப்புதானே காப்பாற்றியது. இனியும் அப்படித்தான் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடுகிறோம். அவளின் இருண்ட எதிர்காலம் நம் கண்முன் விரியத் துவங்குகிறது. அலைகழிக்க வைக்கும் ஒரு முடிவை வாசகனுக்குக் கொடுத்து விட்டு கதை சொல்லி போய்விடுகிறார்கதையின் முடிவே ஒரு புதியதொடக்கத்தைவாசகன் மனதில் ஏற்றிவிடுகிறது. வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும் கதையை நினைக்கும் போதும் அபலைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பற்ற ஆண் சமூகத்தின் மேல கோபம் பீறிடுகிறது. பார்வதி போன்றவர்களை நிர்க்கதியாக்கி சீரழிவுக்குக்கொண்டு செல்லும் ஆண்களை எப்படிச் சொல்வது? பொறுக்கிகள் என்று சொல்லாமா?
இத்தருணத்தில் ஒன்றைச் சொல்லவேண்டும். என் நண்பர், ஒரு விலைமாதை பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவள் கற்பினியாக இருக்கிறாள்.” எப்படிங்க இந்த எட்த்துக்கு வந்தீங்க?” என்று கேட்கிறார் அவர். அதற்கு அவள் சொன்ன பதிலில் நாம் அதிர்ச்சி யடைகிறோம். “வெளியே என் புருஷன் காத்திருக்கிறான். அவனப் போய்க் கேளு அவன் சொல்லுவான்,” என்றாளாம். பாவம் பார்வதிக்கு இந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தை வளர்த்துவிட்டுச்  செல்கிறது ரெ.கா மேற்சொன்ன கதை.
(20.3.2016 ல் மலாயா பல்களையில் நடக்கும் ரெ.கார்த்திகேசு கருத்தரங்கை முன்னிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை.)


  
No comments: