Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 8

நியூசிலாந்தில் எனக்குத் தெரிந்து மூன்று இடங்களில் இந்த பங்கி ஜம்ப் அதாவது 80 திலிருந்து 140 மீட்டர் வரை பாலத்திலிருந்து கீழ் நோக்கிக் குதித்து சாகசம்   செய்யும்  இடங்கள் இருக்கின்றன . மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு அம்சங்களோடுதான் கிழே குதிக்க ஏற்பாடு செய்கிறார்கள்.. ஆனால் கீழே பார்த்தால் நம்முடைய ஆவி கடைசியாக   நம்மை    நலம் விசாரிக்கும். மணமக்களைப் பார்த்து கடைசியாக ஒருமுறை சிரிங்க என்று கேமரா மேன் சொல்வதன் குறியீடுபோல உணர்த்தும். முதுகுத்     தண்டில் கம்பளி ஊரும்.உச்சி மண்டையில் சிறு சில்லிடல் உணர்வோம். நரம்புகள் உதறும். குருதிச் சூட்டை உணர்வோம். பூமி எதிர்த்திசையில் சுழலும். ஆனால் ஐரோப்பிய பெண் பிள்ளைகளுக்கு அது கொண்டாட்டம். கொண்டாட்டமா உள் அச்சத்தைப் போக்க வலிந்து கொண்டாட்டத்தையும் அச்சம் நீக்கலையும் வரவழைக்கும் சுய தைரிய மூட்டலா என்று தெரியவில்லை. ஒரு பெருங்கூய்ச்சலோடுதான் குதிக்கிறார்கள்.  அதற்கு முன் முன்னேற்பாடுகளை மூன்று முறை சரி பார்க்கிறார்கள். உடல் நிலை சீராக இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். எண்பதாக இருந்தாலும் உடல் நிலை சீராக இருந்தால் பாயலாம்.


என் மருமகன் குதிக்க வேண்டுமென்றே இவ்வளவு தூரம் வந்தார். சேது கொஞ்சம் பின் வாங்கினார். அவர் மனைவி தீமிதிக்கப்  போகும் பக்தரின் நெஞ்சைத் தடவி திருநீறு இடும் தலைமைப் பூசாரியைப் போல அச்சத்தை நீக்கும் முயற்சியில் இருந்தார்.
நீ குதிக்கவில்லையா என்று கேட்டார் ஒரு பணியாள் என்னை . நான் சொன்னேன் எனக்கு 'தண்ணியில் கண்டம் இருக்கிறது' என்று. என்னைப் பார்த்து what a hell is that?  என்றான்.

கொஞ்சம் தயக்கத்துக்கும் தீராத அச்சத்துக்குப் பிறகு இருவரும்    கட்டணம் கட்டி உள்ளே நுழைந்தனர். முதலில் கால்கள் இரண்டையும் இறுக்கக் கட்டுகிறார்கள். இடுப்பில் கயிறு முனையை உடல் கட்டுக் கோப்போடு இருக்க இணைக்கிறார்கள். என் மருமகனும் சேது அடுத்தடுத்து குதிப்பதைப் படம் எடுக்க மனைவிமார்கள் கேமராக்கள் தயாராக இருந்தனர். நமக்குப் படம் எடுத்தும் கொடுக்கிறார்கள்.

குதிக்கும் முன்னர் அதலபா தாளத்தைப் பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். பின்னாலிருந்து நீ தள்ளுவாயா என்று கேட்டதற்கு அவன் இல்லை நீயேதான் குதிக்க வேண்டும் என்று சொன்னானாம் மருமகனிடம். அப்போதுதான் அச்சம் கூடியது என்று  சொன்னார் மருமகன்,   ஆனால்  கீழே குதித்தபோது பயம் நீங்கி  அக எழுச்சி உண்டானது என்றார்.   கீழே உஞ்சல் போல சற்று நேரம்  ஆடி அலைபாய்ந்த பின்னர் அவர்களை ஒரு பணியாள் படகு கரையில் கொண்டு வந்து சேர்க்கிறது. கண நேர மகிழ்ச்சி, அச்சம், மன அதிர்வுதான். ஆனால்    வாழ்நாள்   மனப்பதிவு அது.



அங்கிருந்து மில்பர்ட் என்னும் உ ல்லாசப் படகில்  மலையருவி ( நீர் வீழ்ச்சி water fall என்ற சொல்லின் மொழியாக்கம். அருவி அருமைத் தமிழ்ச் சொல்.  ஆனால் நீர் வீழ்ச்சி என்ற சொல்லை மொழிக்கான சொற்கொடையாக எடுத்துக் கொள்ளலாம், அதுவும் தூயத் தமிழ்ச்சொல்தானே)  அழகையும் மலைகள், இயற்கை காட்சி அழகினையும்  ரசிக்கலாம். .

மில்பர்ட்     ஒரு  குளிர்ப் பிரதேசம். மழையின் காரணமாக குளிர் அதிகமாக இருந்தது. கடற்கரை அருகே உள்ள சுற்றுலாத்தளம். கப்பலில் பயணம் செய்து உல்லாசமாய் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு வரலாம். கப்பல் மாலுமி அருகே போய் அமர்ந்து கொண்டேன். அவனே  பயண    வழிகாட்டியாகவும்  இருந்தான். இது கோடைகால     மாதலால் அருவியை பார்க்க முடியாது, ஆனால் உங்கள் நல்லூழ் இன்று மழை அருவிகள் பால் நுரையாய்க்  கொட்டுவதைப் பார்க்கலாம் என்றான்.மலைகள் தாய்மை நிறைந்து பொங்கி ஊற்றியது. பனிப்படலம் மழை நீரில் நனைந்து நனைந்து சிலிர்ப்பை அதிகரித்தது.  ஆழி பொங்கிக் குதித்து நீரை பீய்ச்சியது. மேல் தளத்துக்குப் போய் ரசிக்க முடியவில்லை. மழை. கண்ணாடித் திரை மங்கலாய்த்தான் காட்டியது. இவ்வுலகில் பார்க்க எவ்வளவு இருக்கிறது! ஓராயுள் போதாது.

மில்பர்ட் பல   அழகிய இடங்களைக் கொண்டது. அதிலொன்று கெட்டிதட்டிப் போன பனிக்கட்டி மலை.  ஆங்கிலத்தில்    gilacier என்கிறோம். அதனை நோக்கிப் பயணமான போதுதான் puzzling world என்ற   பொறியியல்    தொழில்நுட்ப விநோத கட்டடக் கலைகளைப் பார்த்தோம். வெனிஸில் சாய்ந்த கோபுரத்தை நிகராகக் கொண்டு இங்கேயும்  அந்நுட்பத்தை    கையாண்டிருக்கிறார்கள்.

அந்தை முடித்துக் கொண்டு Fox Glacier ஊருக்குப் புறப்பட்டோம்.

அங்கே என் பேரன் சற்று நேரம் காணாமற்போய்விட்டான். அவனத்தேடி போனபோதுதான் பிற இனச்   சிறுவர்களோடு கூடிச் சைக்கில் ஓட்டிக்             கொ ண்டிருந்தான். அவன் உடன் இருக்க வேண்டுமென்றே அழை த்து வந்தோம் ஆனால் அவனுக்கான உலகை அல்லது  சூழலை மறந்தே பயணித்துக் கொண்டிருந்தோம். அவன் எங்களுக்கான் மகிழ்ச்சியாக இருந்தானே ஒழிய அவனுக்கான ( குழந்தைமைக்கான)    தேவைகளை நாங்கள் பொருட் படுத்தாமல் இருந்திருக்கிறோம். நவீன உலகம் என்பது சிறார்க்கும்தான் சொந்தம். எப்போதுமே விளையாட்டுக் கருவிக  ளோடு ஒன்றித்துப் போனவன் அங்கே போரடிக்கிறது என்று சொல்லக்    கேட்டோம்.
அவர்களுடைய உலகத்தை நாம் உண்டாக்கிக் கொடுத்துவிட வேண்டும். பெரும்பாலும் நாம் என்ன செய்கிறோம். நம்மைப் பற்றியே நம் உலக்த்தைப் பற்றிய முனைப்பிலேயே இருக்கிறோம். அது பெருந்  தவறு. அதனால்தான் அவன் உலகத்தைத் தேடி அவன் சற்று நேரம் காணாமற்போனான். அவனை அங்கே இருள் சூழும் வரை விளையாட விட்டோம். குழந்தைகளிடம் இன மத மொழி வேறுபாடு இல்லை. அவர்கள் ஒருதாய் மக்கள். அதனால்   தான், ஒரு நிமிடம் கூட ஆகவில்லை அவர்கள் நண்பர்களானார்கள். மகிழ்ந்தார்கள், சண்டை கூட போட்டார்கள். பின்னர் சிரித்து உலகை மறந்தார்கள்.



மறுநாள் காலையிலேயே   என்னுடன் வந்தவர்கள்  வெள்ளிப் பனி மலை மீதுலாவ புறப்பட்டு விட்டார்கள். உலங்கு வானூர்தி அவர்கள் மலையுச்சியில்   பல்லாயிரம் ஆண்டுகளாய் ஐஸ் கெட்டிதட்டிப் போயிருக்கும் இடத்தைப் பார்க்கக்   கொண்டு போகும். அதற்குக் காலைச் சவாரி போனார்கள். நான் போகவில்லை....



தொடரும்......




Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...