Skip to main content

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் , கரிகாற்சோழன் விருதும்






1.  ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் , கரிகாற்சோழன் விருதும் .

 

தமிழ் படைப்புலகம் தமிழ் வாசகர்களுகுள்ளேயே தேங்கிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் கருத்தாகவே இருக்கிறது.அது மறுக்க முடியாத உண்மையுங்கூட.ஐரோப்பிய ருஷ்ய ஆப்ரிக்க இலக்கியங்கள் பரந்த எல்லையைத் தொட்டு உலக விருதுகளை வென்று விடுகின்றன. பொதுவாகவே விருதுகள் பெற்ற இலக்கியங்கள் பேசப்படுகின்றன. அதனைவிடவும் சிறந்த படைப்பிலக்கியங்கள் மொழிபெய்ர்ப்பு செய்யப்படாத காரணத்தால் தமிழின் தரமான படைப்புகள்கூட அனைத்துல வாசகப் பரப்பை எட்டாமல் அது அடையவேண்டிய அந்தஸ்தை  அடையாமல் தேங்கிவிடுகின்றன.  ஜெயமோகன் போன்ற ஆளுமைகளுக்கு நியாயமாகத்  கிடைக்கவேண்டிய அந்தஸ்து கிடைக்காமல் போவதற்கு இதுதான் முக்கிய காரணம். அறம், யானை டாக்டர் போன்ற சிறுகதைகள் சமீபமாகத்தான் அனைத்துல இலக்கிய அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன காரணம் அவை தகுதியுள்ளவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்துபட்ட வாசிப்புக்குப் போயிருக்கிறது.


 சமீபத்தில் நடந்த GTLF அனைத்துல ஜோர்ஜ் டௌன் விழாவில் ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் ஜெயமோகனிடம் பிற மொழி வாசகர்களால் தொடுக்கப்பட்ட வினாக்கள் இதற்குச் சாட்சியமாக விளங்குக்கின்றன. 


GTLF (George Town Literature Festival) என்ற அனைத்துலக இலக்கிய விழா கடந்த 24,25,26,27 பினாங்கில் நடந்து முடிந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு இலக்கிய வகைமைக்கும் இந்த விழா முக்கிய இடத்தை அளித்திருக்கிறது. தமிழில் தவிர்க்கமுடியாத ஆளுமையான ஜெயமோகன் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டதன் வழி  தமிழ்மொழி இலக்கியம் அனைத்துல அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பைப் பெற பூர்வாங்க படிகளில் கால் எடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஜெயமோகனின் வருகை தமிழின் தரமான எழுத்தை பிற மொழிகளுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் அமையப்பெற்றது. ஒரு பெருவனத்துக்குள் சிங்கத்தின் இருப்புக்குச் ஈடானது. ஜெவின் வருகை.. 

நவீன் முதன்மையாகக் கொண்டு வழிநடத்தும் வல்லினம் ஜிடெஎல்எப் குழுவின் ஒரு முக்கிய இணையராக இணைக்கப்பட்டதன் வழி தழிழ் இலக்கியம் அனைத்துல அடையாளத்தைப் பெற மெல்ல மெல்ல நகர்ந்து முன்செல்வதை மகிழ்ச்சியான தருணமாக அவதானிக்க முடிகிறது.  இந்த நகர்ச்சி தமிழுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சிக்காக ஜெயமோகன் 22ம் தேதியே பினாங்கு வந்தடைந்தார், அவரோடு அவர் மனைவி அருண்மொழி நங்கையும் வந்திருந்தார். குடும்பத்தோடு சுவீடன் பின்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எழுத்தாளர் தம்பதியர் நவம்பர் 22ல் மலேசிய வந்தடைந்தனர். 

வல்லினம் பினாங்கிலும் வித்யாரண்யத்திலும் ஜோர்ஜ்டௌம் இலக்கிய விழாவை ஒருங்கு செய்துகொண்டிருந்தது. ம. நவீன் அந்தப் பரபரப்பிலும் என்னை அழைத்து சார் ஜெயமோகன் 24ம் தேதி ஜோர்ஜ்டௌன் தொடக்க இலக்கிய விழாவில இருக்கவேண்டும். அவருக்குத் துணையாக இருங்கள். என்று மீண்டும் அழைத்து நினைவுறுத்தினார். நான் அதற்காக மனதளவில் தயாராகிக்கொண்டிருந்தேன். நவம்பர் 23ம் தேதி தொடங்கி டிசம்பர் ஒன்று வரைக்குமான, பாஸ்போர்ட் விசா ஒரு வாரத்துக்கான உடைகள் யாவற்றையும் தயார் செய்துகொண்டிருந்தேன்.அவற்றை இரண்டு பயணப்பைகளில் பிரித்து அடுக்கிவைத்தேன். நவம்பர் 27 மதியத்தில் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழா முடிந்த கையோடு மாலை 4.30க்கு பினாங்கிலிருந்து திருச்சிக்குப் பறக்கவேண்டும். எனவே ஆயத்த வேலைகள் பரபரப்பு மிகுந்ததாக இருந்தது. வீட்டு வேலைகளில் நான் கவனம் செலுத்தாமல் இருப்பது வீட்டம்மணிக்கு கொஞ்சம் கடுப்பைக் கொடுத்திருக்கும். என் வேலை நிமித்தத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனால் புரிந்துணர்வின்மையின் அலைஓசை எழவில்லை போலும்.

சுவாமி பிரும்மாநந்தாவும் நானும் பினாங்கு விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பதாகத் திட்டம் போடப்பட்டது. ஒரே ஊர்க்காரர்களான  குமாரசாமி சுவாமியோடு பினாங்குக்குப் போக இணைந்துகொண்டதால் நான் விலகிக்கொண்டேன். அதற்கு முதல் நாளே சுவாமியிடம் எப்போது வந்து இறங்குகிறார் என்று கேட்டேன். அவர் நவீன் இன்னும் சொல்லவில்லையே என்ற குழப்பத்தில் இருந்தார்.


அன்றைக்கான ஜெயமோகனின் வலைத்தளத்தில் அவர் அன்று காலை பினாக்குக்கான விமானத்தில் ஏறிவிட்டதாக எழுதியிருந்தார். அன்று காலையில் வாசித்ததும் கொஞ்சம் பதட்டத்துடன் நான் குமாரசாமியைத் தொடர்புகொண்டேன். அவர்கள் விமான நிலையத்துக்குக் கிளம்பி பாதி வழியில் இருப்பதாகச் சொன்னார்.

அவர்கள் அன்றைக்கான மதிய உணவை குமாரசாமி வீட்டில் முடித்துக்கொண்டு சுங்கைகோப் வித்யாரணயத்தில் தங்கவைப்பதாக சுவாமி சொன்னார். அன்று மாலையே ஜெயமோகன் அருண்மொழியுடனான, ஓர் உரையாடல் நிகழ்ச்சி இருப்பதாகவும் சொன்னார்.

நான் சுங்கைப்பட்டாணியிலிருந்து கிளம்பி வித்யாரண்யம் பயணமானேன்.மாலை ஆறு மணிக்கு போய்ச் சேர்ந்தபோது அங்கு யாருமே இல்லை. ஆஸ்ரம வளாகத்தை செம்பனை மரங்கள் மூடிக்கிடந்தது. ஒரு வனப்பகுதிக்கே உரித்தான ஒரு விநோத ஓசை கசிந்துகொண்டிருந்தது. நான் சுவாமியைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் வித்யாரண்யத்தில்தான் இருக்கிறார்கள் என்றார்.

ஐரோப்பிய பயணக் களைப்பில் ஜெயமோகன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம் என்று வெளியே காத்திருந்தேன். 

அதற்கிடையில் மலேசியாவில் யார் பிரதமராக வரப்போகிறார் என்ற அறுதித் தகவல் கிடைக்காமல் அலைமோதிக்கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த சீன இந்திய சமூகமே அன்வார் வரவேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மலாய்க்காரகளில் ஐம்பது விகிதத்தினர் ஆதரவும் அவருக்கு இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அன்வார் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்யை வழங்கிவிடவில்லை. எனவே சிறிய கட்சிகளின் இணைவு அவர் தலமைபீடத்தில் அமர ஆதரவு வேண்டும். பேரம் நடந்துகொண்டிருக்கலாம். துணை முதல்வர் பதவியைக் கொடு இல்லேண்ணா அந்தப் பக்கம் போயிருவோம் என்ற அச்சுறுத்தல் அவரை அலைக்கழிய வைத்திருக்கலாம். காத்திருப்பு நேரத்தை கடத்திக்கொண்டிருந்தது. ஜெயமோகனை சந்திக்கும் ஆவலும் பிரதமராக யார் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அன்றைய மாலையைப் பரபரப்பு மிகுந்ததாக கடந்துகொண்டிருந்தது எனக்கு. ஒரு படைப்பாளன் என்ற முறையில் நல்லாட்சி கிடைக்கவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவன் நான். கடந்த 65 ஆண்டுகால சிறுபான்மை சமூகத்தை ஒரம்கட்டிய தந்திர அரசியல்  முடிவுக்கு வரவேண்டும் என்ற உளப்பதைப்பின்போதே தமிழ்மாறன் வந்து சேர்ந்தார். வனச் சூழ்தலின் தனிமை கலையத் தொடங்கியது. ஜெயமோகன் துயில் கலைந்து வெளியே வரக் காத்திருந்தோம்.

இணையுங்கள்..

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...