Skip to main content

உறக்கம் போக்கும் வனநடை







3.1.25 அன்று நான் பதிவு செய்த என் உறக்கமின்மை இன்னலுக்கு பல முகநூல் நண்பர்கள் அனுதாபங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நண்பர் ராஜேந்திரன் அண்ணாமலை,அம்பிகா,  விரிவுரையாளர் சேகரன், எழுத்தாளர் மதிப்புமிகு மாலன், ரெ,  விஜயலெச்சுமி, ஏய்ம்ஸ்ட் பேராசிரியர் டாாக்டர்  கோமதி கேசவ் , கனகராஜன், பேராசிரியர் நாராயணன் கண்ணன்,   ( தமிழகத்திலிருந்து பேசினார், ஆசிிரியர் முனுசாமி, வாசக நண்பர்   கிருுஷ்ணன் , உதயகுமார் ஆகியோர்  தொடர்பு   கொண்டனர். 

       யோகா மாஸ்டர் சௌந்தர்   மூச்சுப்பயிற்சி ஒன்றை வலியுறுத்தினார். நான் வனத்துக்குச் சென்று       அப்பயிற்சியை மேற்கொள்ளலாமே என்று சிந்தித்தேன் . வாழ்க்கையில் வானப்பிரஸ்தம் ஒரு அங்கம்தானே.    என் மகன் பிநாங்கில்  சுஙைை அராவில் வசிிக்கிறான் .அவன் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் மாரியம்மன் கோயில்.  அங்கிருந்து 
காட்டுக்குள் நுழையும் மண்சாலை நம்மை உள்ளே அழைக்கிறது. 

விண்ணைத் தொடும் கற்கட்டடங்கள் நிறைந்த நகர மையத்திலிருந்து சில மலைகள் நிலம் மீதான மனித வன்முறைகளிலிருந்து  தப்பித்து,  சில சிறு சிறு காடுகள் இன்னும் மூச்சுவிட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் தாமான் கினாரி அருகே மலையை நோக்கி நகரும் ஒரு சிறு காடு. காட்டுக்குள் நுழைந்துவிட்டால் அது சிறியது என்று சொல்ல முடியவில்லை. நடக்க நடக்க அது விரிந்துகொண்டே நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. காட்டின் தன்மையே அதுதான் அது இடுகாடாக இருந்தாலும். உங்களை ஒருநாள் முழுமையாகவே உள்ளிழுத்து வைத்துக்கொள்ளும்.

என் வாசக நண்பர் சிதம்பரம் பினாங்கில் குடியிருப்பது எனக்கொரு வசதி. முன்பு ரெ.கார்த்திகேசு பினாங்கில் தான் இருந்தார்.இப்போது சிதம்பரம்.பினாங்கில் தங்கும் நட்களில் அவரோடு தேனீருக்குப் போவேன். நூலகம் செல்வேன்.இம்முறை நான் நடைப் பயிற்சி செய்யும் வனத்துக்கு அழைப்பு விடுத்தேன். சரியாக மாலை 5.00க்கு காட்டின் முகப்புக்கு வந்து சேர்ந்துவிட்டார். இருவரும் 5.05க்கு உள்ளே நுழையத் தொடங்கினோம். கிட்டதட்ட ஒரு மணி நேரம் நடக்கலாம் என்று முடிவு செய்து ஒன்றே கால் மணி நேரம் நடந்தோம்.

உள்ளே நுழைய நுழைய காட்டின் அடர்த்தி நிறைந்துகொண்டிருந்தது. மரத்தண்டுகள் அகன்றும் குறுகியும் ஒற்றைக் காலில் தவம் செய்துகொண்டிருந்தன. அது மழைக்கான தவம். சூழியில் சீதோஷ்ணம் குலையாமல் இருக்க மரங்கள் செய்யும் தலைமுறை தலைமுறையான தவம். இலைகள் ஆயிரமாயிரம் விழிகள் போல விண்ணையும் மண்ணையும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றன. சரிந்த நிலப்பகுதிகளிலும் வேர்கள் சரியாகவே மண்ணைப் பிடித்து நிலைக்கின்றன. பள்ளத்தாக்கில் வனத்தின் ஆன்மாவாக ஓடை ஒன்று சலசலவென சிரித்துக்கொண்டே நகர்கிறது.நடைப் பாதையிலிருந்து கீழே ஓடும் நதிநீர் பாறைகளைக் கறைக்காமல் விடுவதில்லை என்ற கங்கனம்கட்டிக்கொள்கின்றன. பாறைகளின் வடிவமைப்பையே மாற்றி பின் நவீனச் சிற்பங்களாக மாற்றிக்காட்டும் வித்தை அவற்றுக்குக் காலம் கற்பித்த கலை போலும்.
நாங்கள் EMPRESS VILLA வரைக்கும் நடந்து போய்ச்சேரவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். மேய்ன் சாலையிலிருந்து கிட்டதட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்தில் மலையுச்சியில் இருக்கும் மாளிகை அது. அது ஒரு ஓய்வு விடுதி. வாடகை எடுத்து தங்கலாம். எல்லா வசதியும் உண்டு. காடுசூழ் இடம். விலங்குகள் கண்டிப்பாய் இல்லை. நாங்கள் குரங்குகளைக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் அந்த மாளிகையைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தூரம் செல்ல முதுமையான கால்கள் அனுமதிக்கவில்லை. பரவாயில்லை இன்னொரு நாளைக்குப் போகலாம் என்று திரும்பிவிட்டோம்.
இடையில் ஓரிடத்தில் நின்று மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டோம். காற்றை ஒரு நாசி வழியாக நிறைய நிறைய உள்ளிழுத்து நிறுத்தி மறு நாசி வழியே மெல்ல மெல்ல விடவேண்டும்.இப்படி மாற்றி மாற்றி பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.  அவ்வாறு இருபத்தேழு முறை செய்தேன். பிராணவாயு நிறைந்த இடம். சுகமாகவும் திருப்தியாகவும் இருந்தது. 10 லிருந்து 15 நிமிட யோகப் பயிற்சி. அந்த நடைப்பயிற்சிக்குப் பின்னர் மூச்சுப் பயிற்சி. உறக்கம் வருமா இல்லையா என்ற மனப்போராட்டம். பரவாயில்லை கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. ஒருநாள் பயிற்சியில் எல்லாம் சரியாகிவிடாதல்லாவா. இப்போது தினமும் வனத்துக்குள் செல்கிறேன். உறக்கம் கவ்வும் என்று நம்பிக்கையோடு.







காட்டின் சில பகுதிகளை வாடகைக்கு எடுத்து டுரியான் அறுவடை செய்கிறார்கள். நாய்கள் ஜாக்கிரதை என்று குறிப்பதோடு அந்த நாய்கள் கண்டிப்பாய்க் கடிக்கும் என்று வலியுறுத்துவது நாய்களைக் கேவலப்படுத்துவதாகும்.

வனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக வனத்துக்குள் உள்ளேயே நிறைய கொண்டோமினியம் வளர்ந்துவிட்டன பினாங்கில். அவை கட்டுமான‌அழிவைத்தடுக்க எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

காட்டின் பள்ளப்பகுதிகளில் ஓடும் சளைக்காத நதி.


உல்லாச வேளைக்கு இங்கே வரலாம்.

நதியோட்டம்


நண்பர் சிதம்பரம் அவர்களோடு.

நமக்கு முன் காட்டுக்குள் நடக்கும் பாதை

 

Comments

Anonymous said…
வாழ்த்துகள் ஐயா. ஆம். காடென்பது இன்னொரு உலகம்
உடன் நித்திரை தேவதையை அழைத்து வரலாம்.
ko.punniavan said…
பின்னூட்டத்துக்கு மகிழ்ச்சி
ko.punniavan said…
Sebastian Stansilas
"மரங்கள் ஒற்றைக் காலில் தவம் செய்கின்றன". என்னைக் கவர்ந்த வரி.
மலை தந்தை என்றால் , காடு நம்மை அரவணைக்கும் தாய். தலைமுடியை கோதிவிட்டு நம்மை மௌனத்தில் ஆழ்த்தி அவள் மொழியில் பேசத் தொடங்குவாள் தாய்க் கிழவியான காடு. நம் கரங்களைப் பற்றிக் கொண்டு தன் கால்களில் மேல் மெதுவாய் ஏறச் செய்யும் தகப்பன் மலை, உச்சியை அடையும் வரை நம் கையை விடுவதில்லை.
எங்கள் மலேசிய " ஷெர்பா-Sherpa" நீங்கள். 🙌 தொடர்ந்து சாகசம் செய்ய வாழ்த்துகள் சார்.

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...