Skip to main content

Posts

பேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் .

மலேசியா, கெடா மாநில சுங்கைப் பட்டணியிலிருந்து கோலாலம்பூருக்குப் போய்வருவதை நினைக்கும்போதே பழைய பயண அனுபவமங்கள் நினைவுக்கு வந்து தொல்லைசெய்யும்.    பயணமாகும் நேரம் விமான டிக்கெட்டின் விலை குறைந்திருந்தால் பயணம் சுகமாய் அமையும். அவவாறில்லையெனில் ஐந்தாறு மணி நேரம் பேருந்துப் பயணம்தான். போகும்போது டிரான்ஸ்னேசனல் பேருந்து எடுத்துக்கொள்வேன். நேரப்படி ஏற்றி நேரப்படி இறக்கிவிடும். ஓட்டுனர்கள் அதிசயமாய் புனிதர்களாக இருப்பார்கள்.  கோலாலம்பூரை விட்டுத் திரும்பும் தருணத்தில் கே எல். நம்மை விரட்டிக்கொண்டிருக்கும்.  உடனடியாகக் கிளம்பும் மனநிலைதான் எப்பாதுமே உருவாகும்.  வீடு போய் சேர வேண்டும் என்ற ஆவலைவிட கே.எல்லின் புழுக்கமும், கந்தகக் காற்றும், செலவும், காரணங்கள்தான்.அதனால் எந்தப் பேருந்து முதலில் கிளம்புகிறதோ அதற்கு டிக்கட் எடுத்து ஏறிக்கொள்வேன்.  அதையும் தாண்டி என்ன நடக்குமென்றால், நாம் புடுராயா வளாகத்தினுள் நுழையுமுன் சில கழுகுகள் உங்களை பிராண்டத் தொடங்கிவிடும். விடாமல் பின்தொடரும். "இப்போ கெளம்புது எஸ்பிக்கு," என்று சுற்றி சுற்றி வரும் நம்மை. தொல்லைகளைத் த...

ஜெ.கே கைவிடப்பட்டவர்களின் கதைசொல்லி

ஜெகே கைவிடப்பட்டவர்களின் கதைசொல்லி தமிழில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை 50 களிலும் 60களிலும் அதிகம் எழுதப்படாமலேயே இருந்தது . தலித்துகள் அல்லது தீண்டப்படாதவர்கள் எழுத்திலக்கியம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. எழுத்து மூலமாகவும் அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே இருந்தார்கள். பாரதிக்குப் பின்னர் புதுமைப்பித்தன் காத்திரமாக முன்னெடுத்தார் . பாரதியாரை ஆதர்ஸமாகக் கொண்டதனாலேயே  ஜெயகாந்தனால் அதனை அடியொற்றி வளர முடிந்தது. பாரதி காலக்கட்டத்துக்குப் பிறகு புதுமைப்பித்தன் அவர் வழித்தோன்றலாக உருவாகிறார். உரை நடையில் நவீன இலக்கியத்தை எழுதவேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர் புதுமைப்பித்தன் . அவர் காலக்கட்டத்துக்குப் பிறகு ஒரு பெரும் எழுத்துப் புயலாகக் கிளம்பியவர் ஜெயகாந்தன் . மற்றெல்லா சமகால புனைகதை எழுத்தாளர்களையெல்லாம் பின்தள்ளி தன்னை முற்போக்கு சித்தாந்தம் கொண்ட படைப்பாளனாக அடையாளம் காட்டிக்கொள்கிறார் ஜெகே . அவருடைய எண்ணற்ற சிறுகதைகள் , நாவல்கள் இதற்குச் சான்று . என்னை மிகவும் பாதித்த கதை ஒன்றிலிருந்தே நான் ஜெகேவை தேடத் துவங்குகிறேன் . ஜெ...

ஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்

ஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார் இரண்டாயிரத்தில் தொடக்கத்தில் சை . பீர் முகம்மது ஜெயகாந்தனை உங்கள் ஊருக்கு அழைத்து வருகிறேன் என்ற   தகவலைச் சொன்னதும், . அவரிடம் நான் மேலதிக விபரம் கேட்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன் சில நொடிகள் . தமிழ் எழுத்துலகின் ஒரு மாபெரும் ஆளுமை, நவீன சிந்தனையாளர், சுங்கைப் பட்டாணிக்கு வரும் வாய்ப்பு உண்டா ? நடக்கும் செயலா அது ? என்று சந்தேகத்தை கிளப்பிய வண்ணம் இருந்தது . சற்று தாமதித்தே “ உண்மையாகவா பீர் ? என்று கேட்டேன் . “ யோவ் … நான் என்ன விளையாட்டுக்கு சொல்றேன்ன்னு நெனக்கிறியா ?   என்றார் . யோவ் என்று நெருங்கிய நண்பரை மட்டுமே விளிக்கும் சொல்லாகப் பயன்டுத்துவது அவரின் இயல்பு . அந்த ‘யோவில்’  எனக்கு நம்பிக்கை மலரத் துவங்கியது. நான் அதற்காகச் செயலூக்கம் பெற ஆரம்பித்தேன். மலேசியாவில் நூறு எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து அதனை “ வேரும் விழுதுகளும் ” என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருந்தார் சை . பீர் . அதில் என்னுடைய ‘ நிஜம் ’ கதையும் பதிவாக...