இன்றைக்கு மலேசியக் கல்விச் சான்றிதழில் (ம.க.சா) (SPM) மாணவர்கள் தமிழ் இலக்கியப்பாடத்தைச் சோதனையில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2012ல் பத்து பாடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது என்ற அரசின் புதிய ஆணை தமிழ் இலக்கியப்பாடத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஒரு மாணவர் எத்தனை பாடம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றிருந்தது. அத்திட்டத்தின் வழி இலக்கியபாடத்தைச் சோதனையில் எடுக்க பல ஆயிரம் மாணவர்கள் முன்வந்தார்கள். ஆசியர்களும் பொது இயக்கங்களும் அதற்காகப்பாடுபட்டன. இன்றைக்கு அமல்படுத்தப்பட்டுவரும் சட்டம், முன்பு இல்லாத நிலையில் தமிழ் இலக்கியம் எடுப்பது சாத்தியமானது.
இதற்கு முன்னர் இருந்த திட்டத்தின்படி பெருவாரியான சீன இன மாணவர்கள் மலாய்க்கார மாணவர்களைவிட அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தங்கள் மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பின்தங்கி இருக்கும் மலாய்க்காரச் சமூகத்தைக்கைதூக்கிவிட அவர்களுக்குத்தரப்படும் பிரத்தியேக கல்விமுறைக்கு சவால்விடும் வண்ணம் சீன இன மாணவர்களில் சோதனை முடிவுகள் அமைந்துவிடுகின்றன. பெரும்பான்மையில் இருக்கும் மலாய்க்கார மாணவர்களைவிட எண்ணிக்கையில் அடுத்த நிலையில் இருக்கும் சீன இன மாணவர்களில் சாதனை மலாய் சமூகத்துக்கு வழங்கப்படும் சிறப்பு கல்வி வாய்ப்புக்களை கேள்விக்குட்படுத்துவதால் மலேசியப் கல்விச்சான்றிதழ் ஆண்டுச்சோதனை முறையை மாற்றி அமைக்கவேண்டிய காட்டாயம் உண்டானது. (10 பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைவிட 17 பாடங்களில் கூடிய பட்ச மதிப்பெண்கள் பெறும் மாணவன் சிறந்தவர்களில்லையா?) மலாய்க்கார மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிறப்புக்கல்வித் திட்டத்தில் சீன இந்திய மாணவர்களுக்குக்குத் தரப்படும் விகிதத்தை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழவே மலேசியப் கல்விச் சான்றிதழ், ஆண்டுச்சோதனையில் இனி அதிகபட்சமாக பத்து பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரையறையை வகுத்துள்ளது. ம.க.சா கல்விக்குப்பிறகு தொடரும் இந்தச்சிறப்புக்கல்வி முறையால் முகாந்திரமான துறைகளில் வெளி நாடுகளில் மேற்கல்வியைத்தொடர அரசு எல்லாவித வசதிகளையும் இலவசமாகவே செய்து தருகிறது. இதில் அதிக அளவில் வாய்ப்பைப்பெறும் மாணவர்கள் மலாய் சமூகத்தினர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற சீன இந்திய மாணவர் சிலருக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ம.க.சா கல்வியில் 2012 முதல் பத்து பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரையறையை நிர்ணயித்தவுடன் மேற்கல்வியைத் தொடர்வதற்கும், வேலை வாய்ப்புக்கும் தேவையான பாடத்தையே மாணவர்கள் தேர்வு செய்வார்கள். ஆகக்கடைசி நிலையில் இருக்கும் தமிழ் இலக்கியப்பாடம் இந்தத்தேர்வில் இடம்பெறுவது சாத்தியமற்றது. பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு எப்போதுமே தமிழ்மொழி இரண்டாம்பட்சம்தான். எது தம் பிள்ளைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துமோ அதுதான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. (அதாவது எது ‘சோறு’ போடுமோ அது!) தமிழ் மொழியின்பால் அவர்களுக்கு ‘don’t care’
ம.க.சா கல்வியில் தமிழ் மொழி பாடமும் உண்டென்றாலும், அதனுடைய நிலையும் 10 பாட வரையறை ஆ¨ணைக்குப்பிறகு ஆபத்தான நிலைக்கு ஆளாகியிருக்கிறது. 2012 ஆண்டுச் சோதனை அட்டவணையில் கணக்கியல் (prinsip account) பாட வேளையில் தமிழ் மொழியையும் திணிக்கவிருப்பதால், கணக்கியல் பாடமெடுக்கும் மாணவர்கள் பட்டியலில் முக்கியமற்ற பாடமாகவிருக்கும் தமிழ் மொழியை எடுக்கமாட்டார்கள் என்பது உறுதி. அதிலும் அறிவியல் பிரிவைச்சேர்ந்த மாணவர்களின் கவனமெல்லாம் அறிவியல் சார்ந்த பாடத்தின்மேல் தான் இருக்கும். அவர்கள் மேற்கல்வியைப்பயில பல்வேறு பல்கலைக்கழகங்கள் அறிவியல் கல்வி சார்ந்த வாய்ப்பை வழங்க கதவுகளை அகலத்திறந்து வைத்திருக்கின்றன. முன்னேற்றமடைந்துவரும் மலேசியாவின் தொழில்நுட்பத்தேவைக்கு ஏற்ப கல்வித்திட்டம் இயங்கி வருகிறது.
சோதனையில் பெரும்பான்மையான மாணவர்கள் கவனம் செலுத்தும் பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர்கள் ஒதிக்கீடும், பள்ளிப் பாட வேளை அட்டவணையிலும் முக்கியப்படங்களுக்கான நேர ஒதுக்கீடும் இடம்பெறும். குறைந்த எண்ணிக்கையில் எடுக்கப்படும் தமிழ் மொழி பாடங்களின் மேல் பள்ளித்தலைவர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள். 15 பேருக்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் படிக்கும் பாடங்களுக்குக் கல்வி அமைச்சு ஆசிரியர்கள் வழங்காது. நம் இனத் தலைவிதி என்னவென்றால் பெரும்பான்மையான பள்ளிகளில் 15 பேருக்கும் குறைவான மாணவர்களே தமிழ் மொழி எடுப்பார்கள். இவர்களுக்குப் போதிக்க ஆசிரியர் இல்லாத குறையினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ் மொழி பயிலும் மாணவர்கள் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பும், தமிழ்மொழியை சோதனையில் எடுக்க முடியாத நிலையும் உண்டாகிவிடுகிறது . ஆசிரியர் போதனை இல்லாமல் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பள்ளிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்மொழியைச் சோதனையில் எடுக்கும் அனுமதியைப் பள்ளித்தலைவர்கள் நிராகரித்துவிடுவதும் உண்டு. பள்ளித்தலைவரிடம் மாணவர்கள் வலியக்கேட்கும் போதும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் மனம் பெருவாரியான பள்ளித்தலைவர்களுக்கு இருப்பதில்லை. பள்ளித்தலைவர்களை அக்கறையோடு அணுகி இதன் பொருட்டு பேசும் பெற்றோர்களும் அரிது. பள்ளித்தலைவர்களுக்கு தன் பள்ளியின் தேர்வு விகிதம் அதிகரிக்கவேண்டுமென்ற கவலை .
தமிழருக்கே தமிழ்மேல் அக்கறையில்லாதபோது பிற இனப் பள்ளித்தலைவர்களுக்கு எப்படி வரும்?
இப்படியாக எல்லா முனையிலிருந்தும் தமிழ் மொழிக்கு எதிரான தாக்குல்கள் அதிகரித்த வண்ணமிருக்கிறது. ஒரு பக்கம் பாராமுகமாய் இருக்கும், தமிழர்களே தமிழ்ப்பாடத்துக்கு எதிரி. இன்னொரு புறம் பள்ளித்தலைவர்கள். நாட்டின் ஒட்டுமொத்த கல்வித்தேவையையும், சமூகச்சிக்கல்களையும் கருத்தில் கொண்டு சோதனைப்பாடங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்ட அரசின் முடிவு மற்றுமொரு புறம்.
கல்வித்திட்டத்தில் தமிழ் மொழி எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களினால் உண்டாகப்போகும் பின் விளைவுகள் மிகப்பயங்கரமானது.
1. சில மாதங்களுக்கு முன்பு தமிமொழி போதிக்கும் ஒரே பல்கலைக்கழகமான மலாயா பல்கலைகழகத்தின் தமிழ்த்துறையை மூடும் ஆபத்து நேர்ந்தது. அங்கே தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே போவது முக்கியமான காரணமாக தலை தூக்கியது. மலேசியப் பள்ளிச் சான்றிதழ் சோதனையில் தமிழ் , தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் குறைந்துவிட்ட காரணத்தால் பல்கலக்கழகத்துக்கு செல்லும் மாணவர் எண்ணிக்கையும் கனிசமாகக் குறைந்துவிட்டது எனவே பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நீடிக்கமுடியாத ஆபத்து நேர்ந்தது.
2. பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி போதிக்கமுடியாத நிலை ஏற்பட்டால்
இடை நிலைப்பள்ளிகளில் ம. க.சா (SPM) , மலேசிய உயர்நிலைப் பள்ளிச்சான்றிதழ் (STPM) தமிழ் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கடைசியில் இல்லாமல் போய்விடும்.
3. S.P.M , STPM சோதனையை முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சியில் தமிழில் போதானமுறைக்கல்வியைத் தொடரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து மெதுவாக இல்லாமல் போய்விடும்.
4. இங்கிருந்துதான ஆறாண்டுகால ஆரம்பக்கல்வி போதிக்க அசிரியர்கள் அனுப்பப்படுகிறார்கள். கல்லூரியிலேயே தமிழ் கற்க ஆசிரியர் இல்லாதபோது
தமிழ்ப்பள்ளிக்கு எங்கிருந்து ஆசிரியர் வரமுடியும்? எனவே தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஆபத்து நேர்ந்துவிடும்.
இன்னொரு கொசுறுச்செய்தி- தமிழ் மொழிப்போதனை இல்லாதபோது இலக்கியம் வெங்காயமெல்லாம் படைப்பது எப்படி. அந்நியத்தொழிளாளர்களைக் கொண்டுவருவதுபோல , இலக்கியம் படைக்கவும் தமிழ் நாட்டினரை, புலம்பெயர்ந்தவரைக்கொண்டு வரலாம். சிங்கப்பூர்ல இதானையா நடக்குது!
இன்றைக்குத் தமிழ்ப் பள்ளியில் கற்கும் மாணவர் எண்ணிக்கை மலேசியத்தமிழர்களின் 45 விகிதத்துக்கும் குறைவே. நான் ஏற்கனவே கூறியது போல மேல்தட்டு மனிதர்களும், நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதன் நீட்சியாக 60 விகித தமிழர்களால் தமிழைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர தமிழில் எழுதப்படிக்கத்தெரியாது. மேற் சொன்ன காரணங்களால் தமிழ் படிப்போரின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் பெரிதும் பாதிக்கப்படும். இன்றைக்கு இருக்கிற தமிழ் மொழியை எழுதப் படிக்கத்தெரிந்தோர் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து பின்னர் அருதியாகிப்போகும் போகும் நிலை வெகுதூரமில்லை.
இப்போது அடிக்கப்படும் எச்சரிக்கை மணியைப்புறக்கணித்தால்
நம் மொழியின் கதி............!
இதற்கு என்ன செய்யலாம்? 1 மலேசியா கொள்கையின் அடிப்படையில் இனபேதமற்ற மலேசியாவை முன்னெடுத்துச்செல்வதில் முழுமூச்சாக இருக்கிறார் பிரதமர். அவரின் செயலாக்கங்கள் 1 மலேசியா கொள்கையை நிறைவேற்றும் தீவிரத்தில் நடைபோடுகிறது. ஒரு இனத்தின் தாய்மொழி கல்விக்கொள்கையால் பாதிப்புறுவதை எந்த இனமும் அனுமதிக்காது. இது 1 மலேசியா கொள்கையின் செயலூக்கத்துக்கு முரணான
எதிர்வினைக¨ளை உண்டுபண்ணும் . மொழிக்குப் பாதிப்பு உண்டாவதையும் அதனால் உண்டாகும் மக்களின் அதிருப்தியின்மையையும் பிரதமரிடம் எடுத்துச்சொல்லும் வாய்ப்பு இதுவரை கிடைத்திருக்காமல் போகலாம். அதனை ஏற்படுத்தி அவரைச்சந்தித்து விளைவுகளை விளக்கமாகச் சொல்வது சமூகத்தின் கடமை. நாம் ஒன்றிணய வேண்டும். உரத்த குரல் கொடுக்க வேண்டும்.

Comments