Skip to main content

எல்லாவற்றையும்விட தமிழனுக்குத் தமிழ்மொழிதான் ஆகக்கடைசித்தேர்வு

சம்பவம் 1
ஒரு நாள் தேனீர்கடையில் இருவர் உரையாடலைச் செவிமடுத்தபடி அமர்ந்திருந்தாராம் நண்பர் ஒருவர். அவர்களின் போதாத காலம் செவிமடுத்துக்கொண்டிருந்த நண்பர் தமிழ்ப்பற்று(வெறி) உள்ளவர். தமிழ் மொழியால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றிப்பேசப்படும் தருணங்கள் வெகுண்டெழுந்துவிடுவார். யார் பேசுகிறார் எங்கே பேசுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.
கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தமிழ்மொழி கற்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிப்பேச, பிறிதொருவர் அதனால் உண்டாகும் தேக்கங்கள் , வனிக ரீதியிலான பின்னடைவுகள் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். தர்க்கங்கள் வெப்பமேறிக் கொண்டிருந்த வேளையில்,”தமிழ் சோறு போடுமா?” என்ற தமிழ்மொழியைக் கேவலப்படுத்தும் வினாவை முன் வைக்க உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவர் தடாலடியாகப்பாய்ந்து,” உனக்குச் சோறுதான வேணும் இந்தா தின்ரா” என்று தன் மேசையில் உள்ளதை எடுத்துக்கொடுத்திருக்கிறார். “ன்னும் வேணும்னா சொல்லு ஆர்டர் பண்றேன்,” என்று காத்திரமான முறையில் யானை பாத்திரக்கடையில் புகுந்ததுபோல உரையாடலின் இடையில் புகுந்தாராம்.
ஒரு அறிஞர் இதே வினாவுக்கு அறிவார்ந்த முறையில் பதில் கூறிருக்கிறார் -இப்படி, தமிழ் சோறும் போடும் அதை விட முக்கியம் சொரணையும் போடும் என்றாரம். ஒரு மொழி சோறுபோடத் தகுந்த மொழியா என் வினவுவது மொழியை ஆகக்கடை நிலையில் வைத்து கீழ்மைப்படுத்துவதற்குச் சமம். சூடு சுரணை தரும் மொழி மனிதனின் ஆக்கச்சக்திக்கும், முன்னேறத்துக்குமான தேடலையும் தூண்டலையும் தரும் மேதைமையைக்கொண்டது. பள்ளியில் கற்பவர்கள் தமிழ்மொழியை மட்டுமா படிக்கப்போகிறார்கள், மற்ற முக்கிய பாடங்களோடு தமிழ் மொழியையும் ஒரு பாடமாகப்படிப்பதால் எந்த குறையும் வந்துவிடப்போவதில்லை. துணைப்பாடமாகப் பயிலப்போகும் தமிழ்மொழிமீது தமிழர்களுக்கு அப்படியென்ன வன்மம்?

சம்பவம் 2

இதே நண்பரின் தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார் அந்தத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அப்போது தமிழ் பள்ளியின் மாணவர் சேர்க்கை பற்றிய கருத்துப்பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன.அவ்வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் மேல் தனக்கு மிகுந்த கரிசனமிருப்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர். ( எங்கள் மலேசிய சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள், இன்ன பிற அரசியல் தலவர்களும் தமிழ்ப்பள்ளிகளையும் கோயில்களையும் தங்களின் அரசியல் லாபத்துக்கான கவசங்களாகவே பயன்படுத்திக்கொள்வர்) கவசங்கள் தற்காப்புக்கு மட்டுமே தாக்குவதற்குப் பயன்படாதுபோலும்.
தன் கருத்துக்களூக்குக் கூடுதல் பலம் சேர்க்க தான் தமிழ்ப்பள்ளியில்தான் படித்தவன். ஒரு தமிழ்ப்பள்ளியில் அல்ல பல தமிழ்ப்பள்ளிகளில் படித்தவன் என டம்பமடித்திருக்கிறார்.( மலேசியாவில் முதல் ஆறு ஆண்டுகள் மட்டுமே பள்ளியில் தமிழ்க்கல்வி உண்டு) இந்த ஆறு ஆண்டுகளில் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு தான் மாற்றமானதை அவர் தமிழ்மேல் பற்றுள்ளவர் என்பதைக்காட்ட நிறுவ முயன்றிருக்கிறார். இந்தக்கூற்று எவ்வளவு அபத்தமானது, எவ்வளவு அறிவீனமானது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆறு ஆண்டுகளில் அறுபது பள்ளியில் படித்தாலும் ஆறு ஆண்டுகள் படித்ததாகத்தான் பொருள். எல்லாரையும் முட்டாளாக்க நினைத்து தன்னை முழு முட்டாளாக்கிக்கொண்ட கதை இது!
இதனைக்கேட்டுக்கொண்டிருந்த நண்பர் மீண்டும் பாய்ந்தார் அவர் மேல். “நீங்க உங்க பிளைகள எந்த ஸ்கூல்ல போட்டிங்க”. ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்கக்கூடாத கேள்வி. மேல்தட்டு சமூகமும் நடுத்தர வர்கத்தினரில் பெரும்பாலோர், தங்கள் பிள்ளைகளை வசதி குறைந்த தமிழ்ப்பள்ளியில் படிக்கவைப்பது அரிது. அரிது அரிது மேல்தட்டு மக்கள் தமிழ் படிப்பது அரிது என்று அவ்வையார் பாடியிருந்தாரென்றால் அந்தப்பாடல் இன்று உயிர்த்தன்மையோடு மிகப்பொருந்தியிருக்கும்.
“ நான் மூன்று தமிழ்ப்பள்ளிகளில் படித்தவன்.” என்று தன் பல்வீனத்தைத் திசை திருப்ப முயன்றிருக்கிறார். நீ எத்தன தமிழ் பள்ளியில படிச்சா என்ன, உங்க பிள்ளைங்க தமிழ்ப்பள்ளியில படிக்குதா?” எனக்கேட்க அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டிருக்கிறது. அங்கே சூழ்ந்திருந்தவர்கள் பின்னர், பெரிய மனுஷங்கிட்ட இதெல்லலாம் பேசப்பிடாது என்று தடுத்து நிறுத்திவிட்டனர். அவர் முகத்தில் ஈ டிஸ்கோ ஆடவில்லை பாவம். பேசாமல் இடத்தைக் காலி செய்துவிட்டார். மேல் வர்க்க மனிதர்களிடம், நடுத்தர வர்கத்திடமும், குறிப்பாக அரசியல் தலைவர்களிடம் ஆசிரியர்களிடம் இக்கேள்வியைக் கேட்டுவிடக்கூடாது- அவர்களுக்கு இது மிகுந்த ஒவ்வாமையை உண்டாக்கிவிடும் பாவம்.

தமிழர்கள் இயல்பாகவே உணர்ச்சிவயப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது உண்மைதான் என் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் மொழி என்று வந்துவிட்டால் அந்த உணர்ச்சிவயப்படல் என் நண்பரைப்போன்ற ஒரு சிலருக்கே நேருகிறது. இப்படி மிகச்சிறுபான்மையினருக்கு நேருவதால் தமிழ்க்கல்வியின் பாதிப்பை நிறுத்தமுடிவதில்லை. உணர்ச்சி யாருக்கு வரவேண்டுமோ அவர்களுக்கு வருவதில்லை. நாடாளு மன்றத்தில், சட்ட மன்றத்தில், அரசியல் வாதிகளுக்கு, அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு, கல்வியாளர்களுக்கு இப்படி யாருக்குமே உணர்ச்சி பொங்குவதில்லை. ஹாஙாட் ஹாஙாட் தஹி அயாம் என்று மலாய் மொழியில் ஒரு பழமொழி உண்டு. அதாவது கோழியின் கழிவு போல கழிந்தபோது சுடாயிருக்கும் பின்னர் ஆறிக்காய்ந்துவிடும். தமிழர்களுக்குப் பிரச்னை வந்துவிட்டால் முதலில் பொங்கி மெதுவாக ஆறப்போட்டு பின்னர் அதனிலிருந்து நழுவிவிடுவதை மிகச்சமார்த்தியமாகச் செய்கிறார்கள். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடுவதில்லையா? (தொடரும்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...