நட்பின் மரணம்
கோ.புண்ணியவான்
நம்மிடையேயான நட்பு
மலர்ந்து செழித்தபோதெல்லாம்
எண்ணிக்கையற்ற வார்த்தைகள்
ஊற்றென சுரந்தன
ஒவ்வொரு சந்திப்பிலும்
தித்திக்கும் பொழுதுகளில்
வார்த்தைகளற்றும் திணறியிருக்கிறோம்
நாம் சந்தித்த இடங்களிலெல்லாம்
வார்த்தைகளின் வாசம்
ஈரமாய் மிதந்தவண்னம் இருக்க
ஒரு கரிநாளில் நட்பு மரணித்துகொண்டபோது
எல்லாம்
ஒரு நிலச்சரிவில் துர்ச்சம்பவமாய்
புதையுண்டு மடிந்தேபோயின.
நட்பின்போதில் நடனமாடிய
வார்த்தைகளில்
ஒன்றுகூட உயிர்பெற்று
அபிநயிக்கவில்லை
Ko.punniavan@gmail.com
கோ.புண்ணியவான்
நம்மிடையேயான நட்பு
மலர்ந்து செழித்தபோதெல்லாம்
எண்ணிக்கையற்ற வார்த்தைகள்
ஊற்றென சுரந்தன
ஒவ்வொரு சந்திப்பிலும்
தித்திக்கும் பொழுதுகளில்
வார்த்தைகளற்றும் திணறியிருக்கிறோம்
நாம் சந்தித்த இடங்களிலெல்லாம்
வார்த்தைகளின் வாசம்
ஈரமாய் மிதந்தவண்னம் இருக்க
ஒரு கரிநாளில் நட்பு மரணித்துகொண்டபோது
எல்லாம்
ஒரு நிலச்சரிவில் துர்ச்சம்பவமாய்
புதையுண்டு மடிந்தேபோயின.
நட்பின்போதில் நடனமாடிய
வார்த்தைகளில்
ஒன்றுகூட உயிர்பெற்று
அபிநயிக்கவில்லை
Ko.punniavan@gmail.com
Comments