Skip to main content

தாயுமான மண்

குழந்தைகளுடனான
ஓர் உல்லாசப்பயணத்தில்
கே.எல்.ஐ.ஏ விமான நிலைய
வழவழப்பான மொசைக் தரையில்
கால் நனைத்து
ஈரக்காற்றின் இதம் சுமந்து
புத்ரா ஜயா பிரம்மாண்ட
புராதனப்புதுமையில் சுயம் மறந்து
பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை
அண்ணாந்து பார்த்து
அதிசயத்துப் பொங்கி பிரவாகித்து
ஏறி வானத்தைத்தொட்டு
விதான விசித்திரத்தை முகத்தில் பூசி
எல் ஆர் டி விரைவு ரயில்
தலயுரசி ஊர்ந்து
அதனுடன் பார்வையை நகர்த்தி
ஆகாயமாய் உயர்ந்துபோன
தாய்மண்ணை வியந்து
பின்னர் சீக்ரட் ரெசப்பியில்
ஐஸ் கிரீமில் நா குளித்து
வெளியேறியதும்
பாழடைந்த சேலையில்
காதும் கழுத்தும் வெறிச்சோடி
முகத்தில் களைப்புச்சோகையுடனான
அடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க
இடுப்பில் இன்னொன்றுடன் சரிந்து
பால்வற்றிய புட்டியை உறிஞ்சும்
குழந்தையோடு
எதற்காகவோ
யாருக்காகவோ
வெகுநேரம் காத்திருக்கும்
அந்தத்தாயின் நினைவே
மிஞ்சித்தேங்கியது
உல்லாசப்பயணத்தில்

Ko.punniavan@gmail.com
ஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள்.

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...