Skip to main content

9. சீனப் பெருஞ்சுரை நோக்கி ஒரு பயணம்



மறுநாள் சீனப் பெருஞ்சுவரை நேரில் காணும் ஆவலில் இருந்தோம்.குறிப்பாக என் மனைவி அதனைப் பார்த்தே ஆகவேண்டும் என்றே சீனாவுக்கு வந்தார். ஒரு உலக அதிசயத்தை இரு முறை பார்த்தாகிவிட்டது- ஆக்ராவில் உள்ள மும்தாஜுக்காக ஷாஜாஹான் கட்டிய காதல் மாளிகை. இரண்டாவதாக இந்தச் சீனப் பெருஞ்சுவர். "சாவறதுக்குமுன்ன இன்னும் அஞ்சையும் பாத்திரனும்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். (அப்போ இன்னும் மொய் அதிகம் இருக்குன்னு சொல்லு)

                                                      பாதையை ஒட்டிய உறைந்த கால்வாய்

                                       பெருஞ்சுவருக்கு இடையிடையே குகை மாதிரியான அறை






" வா...... காச வச்சி ன்னா பண்ணுறது?"

அன்று சேவல் கூவும் நேரம் வரைக் காத்திருக்க வேண்டாம். மாலை நான்கு மணிக்கு மேல் அங்கே இருக்க முடியாது. குளிர் மட்டுமல்ல சாலையும் வழுக்கலானது.  இரவெல்லாம் பனி கொட்டி லில்வெயிலுக்கு உருகி வாகனங்களை வழுக்கித்தள்ள காத்திருக்கும் நெடுஞ்சாலை. என்வே காலையில் சீக்கிரம் கிளம்பிவிடவேண்டும் என்று எச்சரித்தார் மைக்கல். நாங்கள் சென்ற பாதை இடது கைப்பக்கம் எத்தனையோ கிலோமீட்டருக்கு  விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாசண வசதிக்காக  அகன்ற கால்வாயை வெட்டி இருக்கிறார்கள். அது முழுவதுமாய் உறைந்து போய்க்கிடக்கிறது.

இதே மாதிரி நிலத்தோற்றத்தை நாங்கள் வட இந்தியாவில் சிக்கிம்மிலிருந்து டார்ஜீலிங்குக்குக் பஜிரோவில் போகும் போது பார்த்தோம். அதுதான் கங்கை நதி என்று சொன்னார்கள். சீனப்பெருஞ்சுவருக்குச் செல்லும் பாதை குறுகலாக இருந்தாலும் குண்டு குழி இல்லாமல் சமமாக இருந்தது. ஆனாலும் நேர்த்தியான் அழகு. ஆனால் டார்ஜீலிங்குக்குப் போகும் பாதை வலைந்து நெளிந்து செல்கிறது. கீழே சாலையை ஒட்டியே சரிந்து கங்கை சடசடத்து ஓடுகிறது. பஜீரோவிலிருந்து கீழே பார்க்கும்போது பயங்கரமாக இருக்கிறது. இழை பிசகினாலும் கங்கையில் புனித நீராட்டம் நடந்து விடும். வாகன
 ஓட்டுனர்களோ அடுத்த பயணத்துக்காக....பணத்துக்காக கண்மண் தெரியாமல் செலுத்துவது உயிரைக் கையில் பிடித்தும் புண்ணியமில்லை என்ற சமிக்ஞையின் பயணமாக ஆக்கி விடுவார்கள். ஆனால் இன்றைக்கும் அந்த இயற்கை வனப்பின்  நினைவு நெஞ்சை அள்ளிச் செல்கிறது. இயற்கையின் அழகிய தரிசனம் அது. வலது பக்கம் அடர்ந்த காடும் தேயிலைத் தோட்டங்களும், இடது பக்கம் வெண்மை நீர் அனாமாய்ப் பாடும் தாலாட்டும் ... அடேயப்பா....  கங்கைக் கரையை ஒட்டிய கிரமங்களும்-.......அது ஒரு கனாக் காலம் போங்கள்!









இங்கே சீனாவில் பனிக்காலம்தான் அழகு. ஆனால் அந்த நீரோடை மனிதர்களால் வெட்டப் பட்டதால் அதனின் இயற்கை வனப்பைப் பார்க்கமுடியவில்லை. மிக நேர்த்தி. இரு பக்கமும் கரை உடையாமல் இருக்க பலத்த சுவர் எழுப்பி இருக்கிறார்கள்.  ஆற்றின் அகலம் அத்தனை தூரத்துக்கும் ஒரே அளவு. பனிக்காலமாகையில் பச்சை நிறத்தை பார்க்க முடியவில்லை. நீர் நிறைந்த இடம் எப்போது சொல்லொனா அழகு தெரியுங்களா? ஆற்றோரங்களில் பச்சைப்பிடித்து பரந்து நிற்கும் போதுதான். அதன் நாணல் நீரில் தலை நனைத்து நெகிழ்ந்தாடும் போதுதான். செடிகொடிகள் ஆற்றின் பக்கம் தலை சாய்த்து முகம் பார்த்துக் கொள்ளும் போதுதான்!

"ஆறுன்னா அது சுழித்து ஓடணும். இப்படி நம்மல பராக்கு பாத்துக்கிட்டு ஒறஞ்சி போய் நிக்கக்கூடாது! என்னா வராதவங்களா வந்துட்டாங்க.. இப்படி வாயப் பாத்துக்கிட்டு நிக்கிறதக்கு!ம்!"

வாகனத்தில் பயணம் செய்யும் போது கால்வாயைப் பார்ப்பதற்கு அழகாககத்தான் இருந்தது.

பயண  நேரத்தில் மைக்கலைப் பேசவிடக்கூடாது( அறுத்து தள்ளிடுவாருல்ல) எனவே நாங்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டோம்.

சீன ஜனத்தொகையை எப்படி கட்டுப்படுத்திக் கொண்டு வந்தார்கள்? 
அது ஒரு சோகக்கதைதாதான். ஒரு பெற்றோர் ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒன்றே ஒன்றுதான் பெற்றுக் கொள்ளவேண்டும். மிகக் கடுமையான சட்டம் இது! இன்னொன்றைப் பெற்றுக்கொள்ள நேரிட்டால் அதற்காகத் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தண்டம் கட்டவேண்டும். பணம் இல்லாதவர்கள் கதி? அவர்கள் வீட்டில் எனென்ன உடமைகள் இருக்கின்றனவோ எல்லாம் அரசால்  அபகரிக்கப் பட்டுவிடும். அது பழைய சைக்கிலோ, தொலைக்காட்ட்சிப் பெட்டியோ எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு நிராயுதபாணியாய் விட்டுச் சென்று விடுவார்கள்!

சாலை விதிகளை அப்படியே சிங்கப்புரைக் காப்பியடித்திருக்கிறார்கள். சாலை விதி மீறல்களெல்லாம் அப்படியே கேமரா படம் எடுத்து விடும். ஒரு குறிப்பிட்ட புள்ளிகள் அவற்றுக்கு தண்டனையாக உங்கள் பேரில் பதிவாகும். புள்ளிகள் அரசு சட்டம் விதித்துள்ள எல்லையை மீறினால் லைசன்ஸ் பறிக்கப் பட்டுவிடும். அப்புறம் நட ராஜான். அல்லது பொதுப் போக்குவரத்துதான்.

நாம் நாட்டில் பாருங்கள் எவ்வளவு அறிவுப் பூர்வமாய் சட்டங்களைக் கண்டு பிடிக்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக மோட்டர் சைக்கில் ரேஸ் ஓடும் பித்தர்களுக்கு, அவர்கள் ரேஸ் ஓட பிரத்தியேகமாக ஒரு ரேஸ் தளத்தைச்  அமைத்துத் தரலாம் என்றார்கள். என்ன ஒழுங்கு இது? பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல் இது என்பதால் அவர்களே முட்டி மோதி சாகட்டும் என்ற 'கரிசனமா' இது?  பிடித்துச் சிறையில் போட வக்கில்லாதவர்கள் .பேச்சுதானே இது? அவர்கள் மலாய்க்கார இளைஞர்கள் என்பதால் இந்த சலுகை. அய்யா சலுகை தருவதிலும்  அறிவார்ந்து இயங்க வேண்டாமா?

நாட்ட என்னா கதிக்கு கொண்டாரப் போறானுங்களோ?

வாகனம் அப்போது பெருஞ்சுவரைநெருங்கிவிட்டிருந்தது. மலை உச்சியில் அது மலைப் பாம்பைப்போல நெளிந்துஓடுகிறது. 

அதோ... அதோ... தெ கிரேட் வோல்.... என்றார்கள் பொடிசுகள்!


 


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...