Skip to main content

12. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்.




                                   சொர்க்கத்தின் கோயில் முன்
                                     சொர்க்கத்தின் கோயில்


                                                    ஒலிம்பிக் கிராமம்
                                   சொர்க்கத்தின் கோயில் அருங்காட்சியகம்

                                      ஒலிம்பிக் கிராமப் பின்னணியில்



                                          ஒலிம்பிக் 7 நட்சத்திர விடுதி






சீனாவில் நாங்கள் பயணம் செய்த இடத்திலெல்லாம் சீனர்கள், அல்லது சீனர்களைப்போலுள்ள பிற இனத்தவர் எங்களை அணுகிப் படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்பார்கள்.

நான் அழகாய் இருக்கிறேன் அதனால்தான் என்னைப் படமெடுக்கிறார்கள் என்று சொல்வாள் என் மகள். அது காரணமாக இருக்காது!

குறிப்பாக எங்கள் பேரப்பிள்ளைகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவதும் மாறி மாறி கிளிக்செய்வதுமாய் இருப்பார்கள். எனக்கு ஒரு காரணம் புலப்பட்டது. சீனாவின் சட்டவிதிப்படி ஒரே ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள முடியும்.அதனால் குழந்தைகள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஏக்கத்தைத்தான் நான் பார்த்தேன்.

ஆனால் என் மருமகனுக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். அவர் வேலை நிமித்தமாக முன்பு அடிக்கடி சீனா செல்வது வழக்கம். ஷாங்ஹாய் பக்கம்தான் அவருக்கு வேலை.
ஒரு முறை அவர் கடைத்தெரு பக்கம் செல்கிறார். சீனர்கள் அவரையே வெறித்து வெறித்துப் பார்ப்பதும், பார்த்தவர் பார்க்காதவரிடம் சுட்டிக் காட்டுவதுமாய் இருந்திருக்கிறார்கள். அவரின் 'தரிசனம்' கிட்டாதவர்கள் அவருக்கு முன்னால் ஓடி வந்து அவரை ஒரு முறை பார்த்துவிட்டும் போயிருக்கிறார்கள். அவருக்கு  அப்போது உடற்கூச்சம் உண்டாகி அங்கிருந்து விலகி விடு விடு வென நடந்து அவர்கள் கண்களிலிருந்து மறைந்துவிட்டாராம்!

 என்ன விஷயமென்றால் அவர் கருப்பாய் இருந்ததுதான். கருப்பர்களைச் சீனர்கள் பார்ப்பது மிகக்குறைவு. கருப்பரகள் அவருக்கு வினோத மனிதர்களாகப் பட்டிருக்கிறார்கள். சீனா கம்யூனிஸ்ட்
 நாடாக இருந்த போது வேற்று மனிதர்கள் அங்கு செல்வது மிகக் குறைவு. என்றைக்கு அது            கம்யூனிஸ்ட்' ஆட்சியைக் கைவிட்டு முதலாளித்துவ நாடாக ஆனதோ அன்றிலிருந்து பிற நாட்டு மனிதர்கள் அங்கு செல்வது இயல்பாகிவிட்டது.

இங்கே பெய்ஜிங்கில் கருப்பர்களின் வரவு சகஜமாகி விட்டது. அதனால் முன்பிருந்த விந்தைக் கண்களின் பார்வை இப்போது அதிகம் படுவதில்லை.
நாம் எப்படி அவர்களை மஞ்சள் நிறத்தவர் என்று அடையாளப் படுத்துகிறோமோ அதுபோல நம்மை அவர்கள் கருப்பர்கள் என்று அடையாளிமிடலாம்! ஆனால் சீனர்களுக்கு 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரி". எத்தனைக் காலத்துக்குத்தான் மஞ்சளே கதியாகப் இருப்பது?

தியான்மின் சதுக்கத்தை அடுத்து இருப்பது சொர்க்கத்தின் கோயில் அதாவது 'temple of heaven'  அதனை ' forbidden city' என்று அழைக்கிறார்கள். தியானமின் சதுக்கத்திலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்
அழகிய சொர்க்கத்தின் கோயிலைப் பார்க்கலாம்.

குளிர் குறைந்தபாடில்லை. அரை கிலோமீட்டர் தூரம் நடக்கலாம்தான். ஆனால் என்
ஒரு வயதுப்பேரன் அழ ஆரம்பித்துவிட்டான். குளிர் காரணமாக இருக்கலாம். அவனுக்கு  வெளி உலகத்தைப் பார்ப்பதென்றால் மிகப்பிரியம். ஆனால் இந்தக் குளிரை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.சொர்க்கத்தின் கோயிலைக் கடந்து செல்லவே ஒரு மணி நேரம் ஆகிவிடும். வேன் கண்ட இடத்தில் நிறுத்த முடியாது.  வேன் சொர்க்கத்தின் கோயில் அடுத்த முனையில்தான் காத்திருக்கும் . எனவே நடந்தே ஆகவேண்டும். சொர்க்கத்தின் கோயிலை அவசர அவசரமாய் வெளியே இருந்து பார்த்தவாறே
நடந்து கொண்டிருந்தோம். கோயில் உள்ளேசெல்ல இங்கேயும் அனுமதி இல்லை. மனிதச் ஸ்பர்சம் பட்டு மெல்ல வீணாகிவிடும் என்பதற்காகவே இந்தத் தடை. விக்கிப் பிடியாவில் போய் பார்த்தால் கோயிலின்
நுணுக்கமான வேலைப்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

 1406 தொடங்கி  1420 வரை அதன் கட்டுமானப் பணி நடந்திருக்கிறது. யோங்லே
என்ற பேரரசர் அது எழும்புவதற்குக் காரணமாய் இருந்திருக்கிறார். சீனாவில் நல்ல அறுவடை நடக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்வதற்காகவே இந்தக் கோயிலை நிறுவப்பட்டிருக்கிறது.  அது வெறும் மர வேலைப்பாடுகளால் ஆனது. சீனா சுவர் கட்டுவதிலும் மர வேலைப் பாடுகளிலும் முன்னோடியாகவே இருந்திருக்கிறார்கள். அதற்கு நல்ல உதாரணம்  சீனப் பெருஞ்சுவரும், இந்த சொர்க்கத்தின் கோயிலும்தான்.

துரதிஸ்டவசமாக 1889 தீ இதனைத் தின்றுவிட்டிருக்கிறது.  அதே போன்று ஒரு கோயிலை மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள். சீனப் படங்களிலும் ஹாலிவுட் சினிமாவிலும் இக்கோயிலின் காட்சி படு பிரமாதமாய் இருக்கும்.
பேரரசரை இங்கேயும் இறைவனுக்கு நிகராகவே போற்றி இருக்கிறார்கள். நம் மரபில் கூட அவ்வகைப் போற்றுதல் இருந்திருக்கிறது.
'கோ'என்றால் நாம் இறைவன் என்றும் மன்னர் என்று பொருள் கொள்கிறோம் என்பதே இதற்கான மிகப்  பொருத்தமான எடுத்துக்காட்டு.

இக்கோயில் பழம்பெருமையும், மரபும் ஒருசேர காட்சிதரும் இடமாகும்.!

1900 ல் கஞ்சாப்(செண்டு) போர்(opium war)  நடந்த போது அங்லோ பிரஞ்சு ஒன்றியம்  இக்கோயிலைக் கைப்பற்றி இராணுவ தலைமை அலுவலகமாக மாற்றி இருக்கிறது.

1914ல் மிங் அரச வம்சம் வீழ்த்தப்பட்டு 1918ல் இது சுற்றுலா அல்லது உல்லாசத் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது.

யுனிஸ்கோ இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகப் பிரகடனப் படுத்தி பெருமை சேர்த்திருக்கிறது.

அங்கே நேரத்தை கழிக்க முடியவில்லை!பேரன் மிகச்சிரமப் பட ஆரம்பித்தான். அவனை வேனுக்குள் சேர்த்தால் போதும் என்றாகிவிட்டது. மள மள வென நடந்து
 வேனை அடைந்ததும்தான் அவன் அழுகையை நிறுத்தினான்.
பகல் உணவை முடித்துவிட்டு ஒலிம்பிக் கிராமத்தைப் பார்க்கச்சென்றோம்.
ஆசிய நாடுகளில் ஒலிம்பிக் நடப்பது அரிது. ஜப்பான் கொரியா போன்ற துரித முன்னேற்றம் கண்ட நாடுகளே ஒலிம்பிக் போன்ற பிரம்மாண்டமான போட்டிகளை நடத்தியிருக்கின்றன.
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலையில் ஒலிம்பிக்கை நடத்தி இருக்கவே முடியாது. எப்போது அந்நாடு தன்னை வெளி உலகுக்குத் 'திறப்பை' உண்டுபண்ணியதோ அப்போதிருந்தே அதன் முன்னேற்றம் அசுர கதியில் நடந்தது.
2008 ல் சீனாவுக்கு ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அனுமதி கிட்டியபோது அது உலக நாடுகளை வரவேறகத் தயாராகிவிட்டது. ஒலிம்பிக் கிராமத்தை அது நிறுவவும் , ஏனைய தேவைகளைப்பூர்த்தி செய்யவும் அது காட்டிய முன்னேன்றம் மிக பிரமிப்பானது. ஒலிம்பிக் நடப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் பெய்ஜிங் இருந்ததைவிட ஒலிம்பிக் நடந்த போது இருந்த அதன் தோற்றம் முற்றிலும் மாற்றம் கண்டு விட்டிருந்ததாம் என என் மகன் சொன்னான்.முன்பு அடிக்கடி சீனாவுக்கு வேலைக்கு வந்தவன் அவன்.

ஒலிம்பிக் நடத்துவதற்கு பழைய போட்டி விளையாட்டு இடத்தைப் பயன் படுத்தாமல் புதிய நிலப்பகுதிய்ல் விளையாட்டுத் தளங்கள், தங்குமிடம் , விளையாட்டு பணிமனைகள் போன்றவற்றை  நிறுவியிருக்கிறார்கள்.
ஒரு மேம்பாலத்திலிருந்து கழுகுப் பார்வையில் அதனைப் பார்த்தோம். அன்றைக்குக் காற்று பலமாக வீசியது. காற்று அடிக்கும் போது குளிரின் தாக்குதல் பலமாகவே இருக்கும். எட்டியிருந்த காட்சிகளைப் பதிவு செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பினோம்!




                                             சொர்க்கத்தின் கோயில் உள்ளமைப்பு
தொடரு............ம்.

Comments

படங்கள் எடுத்த விதம் அற்புதம்... டைப்பிங் எரர் இருக்கு சார். சரி படுத்தவும்
ko.punniavan said…
This comment has been removed by the author.
ko.punniavan said…
அன்புள்ள விஜி,
கண்ணில் பட்டதைத் திருத்தி இருக்கிறேன்.

நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...