11. எட்டு மணி நேர ஓட்டம்.
டில்லியை இரவு வேளையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கூடியிருந்தது. காலையில் கொஞ்சம் பேருந்து சன்னல் வழியே அவதானிப்பது எட்டி இருந்தே ஒருதலையாய் காதல் செய்வது போலத்தான். சுற்றிப்பார்ப்பதை விட கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கடைத்தெருக்களில் அபிஷேகம் செய்வதில்தான் பயணத்தின் மோட்சத்தை அடையமுடியும்.
"கடைசி நாள்ல சாப்பிங்கு டைம் போதுமா?" என்ற ஏக்கக் குரல் எழுப்பாத பெண்கள் குறைவு. பிளைகளுக்கும் பேரப்பைள்ளைகளுக்கும் வாஙக வேண்டும் என்றே பையில் இருக்கும் ரூபாய்கள் தூது விட்டுக்கொண்டிருந்தன. பேருந்து சன்னல் வழியே
நோக்கும் ஏக்கக் கண்கள் மொழி அறியாதவனா நான்? கடைசி நாளில் காலை பத்து மணி முதல் நான்கு மணிவரை ஒதுக்கியிருந்தார்கள். எல்லாம் எப்படி அமையப் போகிறது என்ற கொசுறாக பயம் வேறு தலைநீட்டியபடி இருந்தது.
பேருந்து இம்முறை நேராக ஜெய்ப்பூர் செல்கிறது. 2002ல் முதல் முறை வந்தபோது பெங்கலூரிலிருந்து டில்லிக்குப் பறந்து பின்னர் ஒரு வாகனத்தில் ஜெய்ப்பூர் போனோம். இரண்டாவது முறை நேராக டில்லிக்கு வந்து வாகனத்தில் தாஜ்மஹால் சென்றோம். இம்முறை கூட்டமாக பேருந்து வழி ஜெய்ப்பூர் செல்கிறோம். எல்லாம் பார்த்த இடம் தான். ஜெய்ப்பூர் கோட்டைகளைப் பார்ப்பதும், தாஜ்மாஹாலைப் பார்ப்பதும், கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவைப் பார்ப்பதும் சலிப்பு தட்டக்கூடிய விஷயம்தான். மனைவி இந்த முறையும் போகலாம் என்றும், மதுராவுக்குமீண்டும் போய் தரிசிக்க வேண்டுமென்றும் கொஞ்சம் பிடிவாதமாய் இருந்துவிட்டாள். வீட்டிலேயே கிடந்து வாக்கப் பட்டவள் அவள், பாவம்.
பயண நிறுவனத்திடம் சொல்லி மதுராவையும் ஐட்டெனரியில் சேர்க்கச் சொன்னது நான்தான். அது பெரிய விசயமில்லை, பயணம் செய்யும் வழியில்தான் இருக்கிறது என்று பச்சை விளக்கு காட்டிவிட்டார்கள்.
ஆனால் பேருந்தில் ஏறியவுடன்தான் தெரிந்தது இந்தப் பயணத்தில் முதலில் ஜெய்ப்பூரும் இறுதியில்தான் மதுராவையும் பார்க்கமுடியும் என்று ஏற்பாடாகியிருப்பது.
டில்லியிலிருந்து எட்டு மணி நேரப் பயணத்திதான் ஜெய்ப்பூரைப் பிடிக்கமுடியும். போகும் வழியில் ஏதோ ஒரு விடுதியில் பகல் உணவு எடுக்கவேண்டும். ஆனால் அந்த உணவிடத்தை அடைய ஐந்தறை மணி நேரம் பிடித்தது. அதுவரை வயிறு கேட்குமா. அதுவும் இனிப்பு நீர் நோயாளிகளாக இருப்பவர்கள் தாக்குப் பிடிக்க முடியுமா? மூன்று மணி நேரத்திலேயே உடல் சமிக்ஞை செய்ய ஆரம்பித்துவிடும். இன்னும் அரை மணி நேர நீண்டால் ஹைப்போதான். அதாவது மயக்க நிலை. மூச்சு இருக்கும் பேச்சிருக்காது. கையில் வைத்திருந்த பிஸ்கட், மிட்டாய வகைகள் மாற்றி மாற்றி பசியைத் தணித்தார்கள். இடையில் ஒரு நெடுஞ்சாலை 'டபாவில்' நின்று சிற்றுண்டிக்குச் சென்றோம். பசியில் விலைப் ப்பட்டியலைப் பார்க்கவில்லை. பில் வந்தவுடந்தான் தேனீர் பலகாரங்கள் கூட பயங்கர விலையில் இருந்ததமப்போதுதான் உள்ளபடியே சிலருக்கு ஹைப்போ வந்துவிட்டது.
இனி இப்படிப்பட்ட கடைகளில் நிற்க வேண்டாம் என்ற முனு முனுப்பு கேட்டது. கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம்.
நெடுஞ்சாலையில் இப்படித்தான் கழுத்தறுப்பு நடக்கும் என்று சொன்னார் சரத். இந்தியாவில் பெரு நகரங்களுக்குப் போகும் நெடுஞ்சாலையில் சின்ன சின்ன ஊர்களைப் பார்க்க முடியாது. அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் சுத்தமான உணவு கிடைக்காது.
நெடுஞ்சாலை அமைப்பதே இந்தியாவில் பெரும் சவாலான விஷயம். நெடுக்க கிராமங்கள், தனியார் நிலங்கள், விவசாய நிலங்களை அமைத்துவிட முடியாதபடி தடை இருக்கும். பாட்டன் பூட்டன் சொத்து இதனை யாருக்கும் விறக முடியாது என்றே செண்டிமென் பேசுவார்களாம். ஓரிருவர் ஒத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால்தான் தொல்லையே வேண்டாமென்று முடிந்தவரை புதுத் தடத்தில் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். கிட்டதட்ட நம் நாட்டு நெடுஞ்சாலை மாதிரித்தான் இருந்தது. ஆனால் இங்கே உள்ளதுபோல சாவடி கொடுக்கும் டோல் சாவடிகள் இல்லை.அங்கே சாவடி க் கட்டணம் விதித்தால் அரசாங்கத்துக்கான் சாவடி, தேர்தலில். இங்கே முடியுமா. எல்லாம் இருட்டில் விதி சமைக்கப்ப் பட்டுவிடும். தேர்தல் ஆணையமே அதற்குத் தலைமை தாங்கும். அப்ப்டியெல்லாம் கிடையாது என்று நெஞ்சறிய பொய் சொல்லும். கள்ள ஓட்டில் 'வென்று' வெட்கமில்லாமல் ஆட்சியும் நடத்துவார்கள்.
தமிழகத்தில் தி.மு.காவினரின் மூட்டை மூட்டையாய் பணப் பட்டு வாடாவை
தேர்தல் ஆணையம் கைப்பற்றி' அவர்கள் ஆட்சிக்கே ஆப்பு வைத்தது.தேர்தல் ஆணையத்துக்கு ஆணை பிறப்பித்த அரசு நம் அரசு. 'இரவினில் 'ஆட்டம்', பகலினில் ஆட்சி, இதுதான் எங்கள் மலேசியா...... எங்கள் மலேசியான்னு பாட்டை மாற்றி பாடுவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்?
நீண்ட பயணத்தில் ஏற்படும் பெரிய சிக்கல் சிறுநீர் சிக்கல்தான். ஜெய்ப்பூரை நெருங்க நெருங்க எல்லாமே தரிசு நிலமாக்த்தான் இருக்கும். எங்கேயும் 'ஒதுங்கிட' முடியாது. பெட்ரோல் ஸ்டேசனில் நின்றால் அவரசர்த்துக்கு போக முடியாது. மூச்சு பிடித்துக் கொண்டு கடுக்கக் கடுக்க காத்திருக்க வேண்டும்.
"பொது எடத்துல மூத்திரம் அடிக்காத போலிஸ் புட்டிச்சுடும்," என்று சொன்னார் ஒரு நண்பர்.
"போலிஸ் எதைத்தான் உருப்படியா புடிச்சிச்சி? சும்மாதான போவுது இதையாவது புடிச்சிட்டு போவட்டுமே என்றேன். பழைய நகைச்சுவைதான். இந்த சந்தர்ப்பத்துக்கு எவ்வளவு உதவுகிறது பார்த்தீர்களா...?
ஜெய்ப்பூர் நெருங்கிக் கொண்டிருப்பதன் அடையாளமாக கல் மலைகளும் கட்டந்தரைகளும் எங்களை வரவேற்று நின்றிருந்தது. இனி கோட்டைக் கொத்தலங்கள் எங்களைச் சுற்றி நிற்கும்.......
தொடரும்.....

Comments
உங்களது இந்திய பயணக் குறிப்புகளை படித்துக் கொண்டு வருகிறேன். பெரும்பாலும் நாம் பயணம் செய்வது நமது மனதின் இதத்திற்கு என்றாலும் இடைச்சொருகளாக சில தடைகள் கடுப்படிக்கவே செய்கின்றன. ஏர் ஆசியா மீதான உங்கள் கண்ணோட்டம் உண்மையே. அவர்களுக்கு எல்லாமே மினி சைஸ் தான், அது இருக்கையாகட்டும் அல்லது படுக்கையாகட்டும். அந்த பெரிய சைஸ் டோனிக்கு மினி சைஸ் தான் பிடித்திருக்கிறது.
5-வது பாகத்தில் இந்தியாவில் இரயில் கழிவரை அசுத்தத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடன் பணியாற்றிய நண்பர் தற்சமயம் சென்னை தூதரக்த்தில் மலேசிய பிரதிநிதியாக இருக்கிறார். (நான் பணியாற்றும் இலாக்காவில் அதிகாரியாக இருப்போருக்கு 3 ஆண்டுகள் வெளிநாட்டு தூதராகும் வாய்ப்புக் கிட்டும்.) அவர் அடிக்கடி அங்கு வரும்படி அழைப்பார். இருந்தும் அவர் என்னிடம் விளக்கிய அங்கிருக்கும் சூழல் ஏனே அங்கு என்னை இட்டுச் செல்ல மறுக்கிறது. கூட்டம் அப்பிய சூழல் என்னை ஸ்ட்ரெசான மன நிலைக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதாலும் இந்தியா போகும் எண்ணத்தை தற்சமயம் கைவிட்டுள்ளேன்.
அருமையாக எழுதி உள்ளீர்கள். சுத்த அசுத்த சாப்பாட்டு படங்களையும் இங்கு கொடுத்திருந்தால் படிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். சிலவிடங்களில் உங்களின் நகைச்சுவையை இரசித்தேன். 12-ஆம் பாகத்தை எதிர்ப்பார்கிறேன்
இடுகைக்கு நன்றி.
இந்தியா பார்க்கவேண்டிய இடம். அதன் ஆரோக்கியமற்ற சூழலை மனதில் கொள்ளாமல், புராதன இடங்கள், கோயில்கள், பண்பாடு , வாழ்க்கை முறை,உணவு இவை மிகத் தூக்கலாக இருக்கும். புத்தகங்கள் மலேசியாவை விட 60 விகிதம் மலிவு. ஒவ்வொரு முறையும் பெட்டி பெட்டியாக கட்டிக்கொண்டு வருவேன். அவசியமாய் பாருங்கள் 10 முறைக்கு மேல் நான் போயிருக்கிறேன் அங்கே.