Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

வசூல் ராஜா
சிவனின் பாதங்கள் எஞ்சிய தடம்

ரிசிகேஸ் காசியைப் போலவே நதியோடும் ஊர். இங்கே கங்கை சீராக ஓடுகிறாள்.சமீபத்தில் முத்ரிநாத்தில் கரை புரண்ட வெள்ளம்  ஆயிரக்கணக்கான பக்தர்களைக் காவு கொண்டது. வெள்ளம் ஒரு இயற்கைப் பேரிடர் என்றாலும் வெள்ளம் வந்து காவு வாங்கிப்போன காரணத்தை சிலர் பலவாறாக சிலாகித்துப் பேசினார்கள் . முத்ரிநாத்தில் கங்கையில் காளி சிலை ஒன்று இருந்ததாகவும் அதனை நீக்குவதற்கு அங்குள்ள பகதர்கள் உடன்படவில்லையென்றும், அவர்கள் உடன் படாததையும் மீறி அந்தச் சிலையை நீக்கியதால் காளி ஆவேசம் கொண்டு புரண்டதுதான் இந்த முத்ரிநாத் வெள்ளம் என்றும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப் பட்டது. ஆனால் அதன் சீரழிவு முத்ரி நாத்தோடு நிற்கவில்லை, இங்கே ஆஸ்ரமத்துக்கு அருகில் ஓடும் கங்கையில் சிவனின் பேருருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்த பிரம்மாண்ட  சிலையையும் கங்கை வெள்ளம் சாய்த்து இழுத்துக் கொண்டும் போய்விட்டிருக்கிறது. இப்போது அதன் தடமாக எஞ்சியிருப்பது சிவனின் பாதங்கள் மட்டுமே. காளி ஆவேசம் கொண்டாள் அதனால் அவள் வெள்ளமாக வந்து தாகிக்கினாள் என்றி காளியின் மேல் வீண் பழி சுமத்தக் கூடாது. இந்தப் பிரபஞ்சம் இயக்கத்தில் ஒரு ஒழுங்கமைதி இருக்கிறது. அதாவது அதன் இயக்கம் ஒரு order. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இந்த ஆர்டரை கேள்விக்குட்படுத்தலாமா? ஆயுதம் தாங்கியும் அகோரமாயும் நிற்கும் நம் தெய்வங்களின்மேல் நமக்கு உண்டாக்கப் பட்ட பயமெல்லாம் ஒரு வகையில் நல்லது என்றுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். தீமைகள் செய்ய எண்ணும் மனிதனுக்கு அது  முன்னெச்சரிக்கை கொடுக்கிறதல்லாவா?

நதியோரத்தில்
                                                                         

        நாங்கள் ரிசிகேஸ் ஆஸ்ரமத்தைப் போய்ச்செரும்போது மணி நான்கரை இருக்கும் ஆறு மணிக்கு கங்கை நதிக்கரையில் பூசை ஆரமபமாகிவிடும். ஆஸ்ரமம் அழகிய பூங்காவில் அமைந்திருந்தது. அதன் நதிக்கரையில்தான் கங்கை கரைபுரண்டு ஓடுகிறாள். பெரிய சேதத்தின் சிதலங்களை நீரின் பழுப்பு வண்ணத்திலும் காணமுடிகிறது. வெள்ளம் வடிந்து ஒரு சில மாதங்களானாலும்  அதன் கரையிலும் நீரின் சுழிப்பிலும் பாதிப்பை உணர முடிந்தது. ஆனால் அதெல்லாம் பழைய கதையாகி மனித வாழ்வு எப்போதும் போலவே நகர்கிறது. நதியோரத்தில் (ஒட்டிய படி வீடுகளும் கடைகளும் இருந்தன) கண்டிப்பாய் நதியின் வெள்ளம் அதனை எச்சரித்தே சென்றிருக்கும். ஆனால் நதியை நம்புகிறார்கள். கங்கா மாதா இந்த புனித ஊரை வீழ்த்த மாட்டாள் என்ற நம்பிக்கை ஒளியே அவர்கள் கண்களில் தெரிந்தன.ஆம் வாழ்க்கை எப்போதும் போலவே ஓடுகிறது அவர்களுக்கு.



  மாலை ஆறு மணிக்கெல்லாம் பக்தர்கள் கங்கை கரைக்கு வர ஆரம்பிக்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் ஆயிரக் கணக்கானோர் கூடிவிட்டனர். படிகளில் இடம்தேடி அமர்ந்துகொள்கிறார்கள். இடமில்லாதவர்கள் நெருக்கிக்கொண்டு நின்றே பார்க்கிறார்கள். சிலர் கங்கையில் நீராடவும் செய்கிறார்கள்.
வேள்வியில் இடது பக்கம் உள்ளவர் எங்கள் நண்பர்

  எங்கள் கூட்டத்தைப் பார்த்த ஆஸ்ரம பணியாள் ஒருவர் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் மலேசியர் என்றோம். " ஓ மலேசியா...கம் கம் என்று
கால் நனைத்தபடி கங்கையில் நான்


        எல்லாருக்கும் ராஜ மரியாதை கொடுத்து வேள்வி நடக்கும் இடத்துக்கு அருகிலேயே அமர்ச் செய்தார்.  கங்கை நீரில் கால்களை நனைத்தபடியே நான் அமர்ந்து கொண்டேன்.எத்தனை பேர் என்று எண்ணிக்கொண்டார். யார் இந்த பகதர் கூட்டத்துக்க்த் தலைவர் என்று கேட்டு அவரிடம் சென்றார். " நீங்கள் போகும்போது ஆஸ்ரமத்துக்கான, அல்லது வேள்விக்கான நன்கொடைத் தொகையை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று மூன்று நான்கு முறை திரும்பச் திரும்பச் சொன்னார். கங்கை படிகளில் மூன்று நான்கு சீல் செய்யப்பட்ட உண்ண்டியல்களைப் பார்த்தேன். நான் எங்கள் குழுத் தலைவியிடம் என்ன இது உண்டியல் வைத்திருக்கிறார்கள்.இவர் என்னிடம் கொடுங்கள் என்கிறானே என்று கேட்டேன். ஆமா இல்ல .!  என்றார் அவரும். பூஜை நடந்து கொண்டிருக்கும் போது எங்கள் குழுவில் ஒருவரை வேள்விக்கு அருகில் உட்கார வைத்தார். அனைவருக்கும் அதில் பரம மகிழ்ச்சி. இவ்வளவு பேர் இருக்க அவரை மட்டுமே அழைத்திருக்கிறார் என்றால் , அது கங்கையின் அனுக்கிரகம்தான் என்றே கருத்துரைத்தனர்.ஆனால் சற்று நேரத்தில் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் சிலரையும் யக்ஞ குண்டத்துக்கு அருகே அமரச் செய்தனர்.

வேள்வி முடிந்தும் மீண்டும் வந்தார் அந்தப் பணியாள்.தலைவியிடம் எங்கள் பக்தர்கள் கொடுத்த பணத்தை லம்பாக வாங்கிக் கொண்டார். பிற நாட்டவரிடமும் இப்படியே வசூலித்துக் கொண்டார். நான் கண்டிப்பாய் கொடுக்கவில்லை. நூறு ரூபாயை உண்டியலில் சேர்த்தேன். அதோடு கிளம்பி விட்டேன். ஆனால் பேருந்தில் எல்லாரும் ஏறிய பிறகு நீங்கள் கொடுத்த பணம் அந்த ஆஸ்ரமத்துக்குச் சேருமா என்றே கேட்டேன். பசித்த வயிறுகளுக்கு உண்வு கிடைத்திருக்குமா என்றும் கேட்டேன். எல்லாரும் பெரும்பாலான தமிழர்கள் போலவே பதில் சொல்லவில்லை. ஆமாம் நம்முடைய ஆயுதக் கடவுள்கள் இவர்களை அச்சுறுத்துமே... அதனால் ஆசாமிகளையும் அரவணைத்துக் கொள்கிறார்கள்!

கங்கையை விட்டு மேலே வந்தவுடன்  சற்று நேரம் கடைத்தெரு உலா நேரம் கொடுத்தார் சரத். அங்கேதான் வில்லங்கம் ஆரம்பித்தது. எல்லாரும் கூடிய இடத்தில் இருவர் வந்து சேரவில்லை. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அலசுகிறோம். ஆள் கண்ணில் படவே இல்லை. காணாமற்போனால் என்னாவது? அதில் ஒரு மூதாட்டி கொஞ்சம் விபரம் தெரியாதவர். நான் கேமாரவைக் கொடுத்து படம் எடுக்கச் சொன்னபோது அவரின் கண்ணையே படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தெளிவானவர். எனவே இவர்கள் விடுதியையாவது போய்ச் சேர்ந்திருப்பார்களா என்ற சந்தேகம் வலுக்கவே விடுதிக்குத் தொடர்பு கொண்டார். இல்லை என்றே பதில் வந்தது. இன்னொரு அரை மணி நேரம் காத்திருந்தோம். அவர்கள் விடுதியைப் போய்ச் சேர்ந்துவிட்டதாக இருவரில் தெளிவான ஒருவர் சரத்திடம் செய்தியைச் சொன்னார். கோபம் அடங்கி பசி தொடங்கியிருந்தது. தனியார் ஆட்டோ பிடித்து மீண்டும் தபோவனத்துக்கு பயணமானோம். மறு நாள் காலை டில்லி பயணம். அன்று இரவில் மீண்டும் கோலாலம்பூர் பயணம். மறு நாள் பகலில் எல்லாருக்கும் மோட்சம் கிடைக்கும் நாள். அதாவது டில்லியில் ஷோப்பிங் டைம்.

நீலச் சட்டையில் எங்கள் குழுவோடு சரத்



முடிந்தது.





Comments

செஸ் நகர்த்துவதை போல் அழகாக எழுதி முடித்து இருக்கிங்க. வட இந்திய பயணம் மேற்கொள்வோருக்கு பயன் மிக்க டிப்ஸாக அமையும்.

தற்சமயம் பெரும்பாலானோர் அவுங்க பாத்துட்டு வந்துட்டாங்க அதான் நானும் போய் பார்த்தேன் எனும் வகையில் பயணம் மேற்கொள்கிறார்கள். இப்படியானவர்கள் நிச்சயம் அங்கு எதையும் இரசிக்க போவதில்லை.

உங்கள் பயண கட்டுரை நெடுகினும் பல ஸ்காம்களை சொல்லி இருக்கிறீர்கள். பயண வழிகாட்டி நினைத்திருந்தால் அதை தடுத்திருக்க முடியும். அவர் அப்படி செய்யாமல் போனது வியப்பு.
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின