Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~5

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 5

துராங்கியின் அருகே உள்ள  தௌப்பௌ  அருகே உள்ள ஹுக்கா falls பார்த்துவிட்டு தொக்கானு விடுதிக்குப் புறப்பட்டோம். ஊர் இடப் பெயெர்களெல்லாம் மௌரிய மொழிகளிலேயே பெரும்பாலும் உள்ளன.அதற்குக் காரணம் உண்டு.






நியூசிலாந்தில் மௌரிகள் என்ற பழங்குடி மக்கள்  இன்றைய கணக்குப் படி 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். நியூலாந்துக்கு நிலம்  தேடி வாழ  வந்த முதல் இனம் இவர்கள்தான்.      2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹவாயி தீவுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்து ஏரிக்கரைகளில் குடியேறியவர்கள் மௌரிகள். அவர்களின் தொடக்க கால பண்பாடுகளில் ஒன்றான கூட்டு நடனத்தை இன்னமும் பாதுகாத்து வருகிறது நியூசிலாந்து.இந்த நடனம் நியூசிலாந்து அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாகப் படைக் கிறார்கள்.  பெரிய உருவ அமைப்பு கொண்டவர்கள்  மௌரிகள். ஆறடிக்கு மேலாக் உயர்ந்து பீமன் கணக்காய் நிற்கிறார்கள்.   ஆனால் நியூசிலாந்து வெள்ளையர்கள் ஐந்தே முக்கால்  அடி உயரத்துக்கு  குறைந்தவர்களாகவே  இருக்கிறார்கள் .

 பழங்குடிகளின் பண்பாட்டு விழுமியங்களை நான் போய் வந்த எல்லா நாடுகளிலும் பார்க்கிறேன். அவர்களுக்கான வாழ்வாதாரம் இந்த பண்பாட்டு நடங்களிலிருந்தும் கைவினைப் பொருள்களிலிருந்தும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

 நியூசிலாந்தில் இருக்கும் வெள்ளையர்களின் மூதாதையர்கள் 17ம் நூற்றாண்டில்தான் நியூலாந்துக்கு வந்திருக்கிறார்கள். இங்கே தங்கம் தேட வந்தவர்கள், நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். ஆனால் மௌரி இனத்தை ஓரங்கட்டி, வெள்ளையர்கள் ஆயுத பண  பலத்தால் அங்கே உயர்க்குடிகளானார்கள்.   . மலேசியாவில் உண்மையான பூமிப் புத்திரர்கள் இங்குள்ள பழங்குடிகளே, மலாய்க்காரர்கள் அல்ல! மலாய்க்கார்ரகள் யுனானிலிருந்து கிழக்காசிய நாடுகளில் குடியேறியவர்கள். அதன் பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலாயா வந்து நிரந்தர பிரஜையானார்கள். பெரும்பான்மையினராக இருப்பதால் அதிகாரத்த்ஜி கையில் எடுத்துக் கொண்டு பூமிப் புத்ரா   என்று தங்களைத் தாங்களே விளித்து  சிலிர்த்துக்    கொண்டார்கள். அம்னோவிடம் அதிகாரம் இருப்பதால்  தடியெடுத்தவனெல்லாம்  தண்டல்   ஆகிவிட்டான்.
  மௌரிகள் ஏரிக்கரையை       விட்டு நாட்டுப் புறம் வந்தாலும் அவர்கள் வாழ்க்கை சரியாக மேம்படவில்லை என்று விக்கிப் பிடியா சொல்கிறது. நம்மைப்போல ஓரங்கட்டப்பட்டு  , கீழ்மையான நிலைக்குத் தள்ளப்பட்ட்டிருக்கிறார்கள்..

 சிரிலங்கா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் பழங்குடிக்கான வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு அந்தந்த நாடே செய்து தருகிறது. அதே வேளையில் இவர்களை முகாந்திரமாக் கொண்டு    சுற்றுப்பயணத் துறை மேம்பாட்டிலும் அக்கறை கொண்டே செயல் படுகிறது. இதில் மிக மிக அக்கறை காட்டாத  நாடு  இந்தியா. எக்கச்சக்கமான சுற்றுலா பயணிகள் இந்தியா செல்கிறார்கள். அங்கே பழம் பண்பாட்டு விழுமியங்கள், நடனங்கள், கைவினைப் பொருட்கள் பார்க்கக் கிடைக்கின்றன` ஆனால், பிற நாடுகள் போல  இந்திய அரசு அதில் கொஞ்சமும் அக்கறை காட்டியதில்லை. தமிழ் நாட்டுக்குச் செல்பவர்கள் இதனை கவனியுங்கள். நாட்டுப்புறக் கலையையும்  கலைஞர்களையும் அங்குள்ள அரசு வளர்த்தெடுக்கவில்லை. அவை முற்றிலும் பொருட்படுத்தாமையால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழியற்று வீதிக்கு வந்தப்டி இருக்கிறார்கள். இதனை ஒருங்கிணைத்து   முறையாகச்   செயல்பட்டால் சென்னை, மதுரை திருச்சி,சேலம் போன்ற நகரங்களில் மேடை அமைத்து அக்கலை சாகடிக்கப்படாமல் இருக்க வழிவகை செய்து கொடுத்திருக்கலாம். சுற்றுலாப் பயணிகளிடம் டிக்கட் விற்று பணம் சேகரித்து கலையையும் கலைஞர்களையும் வாழ வைத்திருக்கலாம். ஒருங்கிணைப்பு மட்டும் ஒழுங்காகச் செய்தால் பணம் புரண்டிருக்கும். அரசியல் போட்டா போட்டிகளில் மக்கள் நிலை கேட்பாரற்றுக்கிடக்கிறது.
தேசியப் பூங்காவில் லாமாஸ்

 எங்கள் பயணம்    அடுத்து  வெலிங்க்டன் நோக்கிக்    அதிகாலையிலேயே  ஆரம்பித்துவிட்டது.     மணி இரண்டு வாக்கில் தென் தீவுக்கு பெர்ரி பிடித்தாகவேண்டும். ஆனால் அதற்கு முன்னர்  தேசிய வனக் காட்சி சாலையைப் பார்க்கலாம் என்று போகும் வழியில் சில வெள்ளையர்கள் சொன்னார்கள். அது மிகப் பெரிய நீர்த் தேக்கமும், பாதுகாக்கப்பட்ட வனமும், வன உயிர்களும் உள்ள இடம். நியூசிலாந்தில் நாங்கள் தங்கும் விடுதிகளில் மற்ற நாடுகள் போல கேஸ் அடுப்புகள் கிடையாது. எல்லா இடத்திலும் மின்சார அடுப்புகள்தான். இதற்கு முக்கியக் காரணம் ஏரிகள் பெரும் பெரும் நீர்வீழ்ச்சிகள்தான்.    ஆண்டு  முழுவதும் மின்சாரத்தைக் குறைவில்லாமல் வழங்கிக்  கொண்டே இருக்கிறது நீர்வீழ்ச்ச்சிகள். இங்கே மின்சாரத்தின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள், காரணம் நீர் நிலைகள் பாதுகாக்கும் அறிவு இல்லாமைதான் காரணம்.

வெலிங்ட்டன்      நியூசிலாந்தின்  தலை நகரம். இரண்டு தீவுக்கும் மையத்தில் கடற்கரை ஓரத்தில் இருப்பதுதான்   அதற்குக் காரணம்.
பெர்ரியின் மேல்தளம்

வெலிங்டனிலிருந்து பிக்டன் நகரம் செல்லவேண்டும் அன்றிரவு அங்கேதான் தங்குகிறோம். மூன்று மணி நேரப் பயணம். வேனை பெர்ரியின் கீழ்த்தளத்தில் நிறுத்திவிட்டு, மேல்தளத்துக்குச் சென்றுவிட வேண்டும். மேலே மூன்று தளங்கள். உணவகங்கள்,உல்லாசமாய் இருக்க மதுக் கடை, . குழந்தையைத் தூங்க வைக்க தொட்டில்கள், கடல் காட்சியைக் காண நான்காவது தளம் என நேரம் போவதே தெரியாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 550 பேர் பயணம் செய்யலாம். 30க்கு மேற்பட்ட பெர்ரி பணியாட்கள். அந்தப்    பெர்ரியை உல்லாசக் கப்பல்   என்று சொல்லலாம். பச்சையைக் கொட்டும் மலைகள், பொங்கப் பொங்க ஊற்றும் நீர்வீச்சிகள், சில சமயம் நல்லுழ் இருந்தால் திமீங்களத்தியும் பார்க்கலாம். நான் ஏற்கனவே நம் நாட்டில் திமிங்களங்களைப் பார்த்திருக்கிறேன். அவை நம் கஜானாவைத் தின்னு முடிக்கும் திமிங்கலங்கள்.

பிக்டனை அடைந்த போது இரவு ஏழு மணி. பிகடனில்   பேரங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொண்டு தங்குமிடம் போனால்,   அங்கே  ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.
பெர்ரியின் உள்ளே

தொடரும்.......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த