Skip to main content

பயணக் கட்டுரை 4 : இருபதும் எழுபதும்


4. வீரமங்கை வேலுநாச்சியார்

2-ம் நாள் காலை டாக்டர் மிமியின் வீட்டில் மிமி யின் அம்மா பரிமாறிய காலை உணவு மதியும் வரை பசிக்காது போலிருந்தது. கனமான   உணவு. பூச்சுருள் போன்ற மிருதுவான இட்லியும் பொருத்தமான புதினா சட்னியும் சுவையைக் கூட்டும் காரமான கோழிக் கறியும் பரிமாறப்பட்டது. மீண்டும் அவர்கள் காரிலேயே மதுரையை நோக்கிப் பயணம். இம்முறை மிமி யின் தாய் எங்களோடு இணையவில்லை.விடுமுறை தொடங்கிவிட்டதால் பேரனோடு சென்னை கிளம்பி விட்டார்கள். ஆனால் மிமி யின் தந்தை‌ டாக்டர் வல்லபாய் சிவகங்கையில் எங்களோடு இணைந்து கொள்வதாகத் திட்டம். அவரும் டாக்டர். அறுவை சிகிச்சை நிபுணர். மலேசியா சிகாமாட் மருத்துவ மனையில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் ஏய்ம்ஸ்ட் பல்கலையில் இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார் . மலேசிய பண்பாடு, அரசியல் அத்துப்படி அவருக்கு. பல மலாய்ச்சோற்கள் தெரிந்து வைத்திருந்தார். இந்தியாவின்  தொன்ம வரலாறு, தற்காலத் தமிழ் இலக்கிய அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கமுள்ளதால் அவரோடு உரையாடுவது என் அறிவுப்பெருக்கத்துக்கு இன்பமாய் அமைந்தது.
போகும் வழியில் வரலாற்றைக் குருதியில் எழுதிய திருமயம் கோட்டையைப் பார்த்தாக வேண்டும் என்ற ஆசை உண்டானது. 



சிவகங்கையில் பேராசிரியரைப் பயணத்தில் இணைக்கும் முன்னர் இந்த இடைச்செருகல்.திருமயம் 15ம் நூற்றாண்டில் விஜயரகுராத சேதுபதியால் கட்டப்பட்டது.1671-1710 வரையிலான காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு‌ முக்கிய வரலாற்றுச் சின்னமாக அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப் படுகிறது.
திருமயம் கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்ற பெயரும் மருவி வந்திருக்கிறது.கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துறை வெள்ளையர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விஜயரகுநாத சேதுபதியை அடைக்கலம் தேடிவந்திருக்கிறார். இங்கே அவருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.கட்டபொம்மன் ஊமைத்துரை போன்ற போராளிகளின் வரலாறு சிவகங்கை வரலாற்றோடு இணையும் போது அதன் வீரம் மேலும் செயலூக்கம் பெறுகிறது.

திருமயம் என்ற சொல் திருமால் மெய்யன் என்று மருகி வந்திருக்கிறது .மெய்யர் என்பது உண்மையானவர் என்று பொருள்.  திருமாலை  குறிப்பிடுகிறது. திருமால் திருமயத்தை ஆண்ட குறுநில மன்னர்கள் வணங்கிய கடவுள். திருமாலே திருமயம் என்றாகியிருக்கிறது.
திருமயம் கோயிலின் சந்நிதியில் திருமாலின் முழு உருவச்சிலை செதுக்கப்படிருக்கிறது. இது கோயிலின் பின்னால் தெரியும் பிருமாண்ட மலையின் அடிப்பகுதி என்பது பிரம்மிக்க வைக்கும் தகவல். 

ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னரான சிற்பக்கலையின் அற்புதத்தையும் சிற்பிகளின் கடும் உழைப்பையும் கண்டு நாம் வியந்து போகிறோம்.மலை அடிவாரக் கோயில் ஸ்தலத்தில் பெரும்பாறையின் ஒரு பகுதி திருமாலாக செதுக்கப்பட்டிருப்பது வியப்பினை மேலிடச் செய்தது.
அங்கிருந்து பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலுக்குச்  சென்றோம் .

இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். இங்கேதான் கோயில் அர்ச்சகர் பள்ளி உள்ளது. இதனை குருகுலம் என்று சொல்லலாமா எனத்   தெரியவில்லை.நூற்றுக்கணக்கான மாணவர்கள் ‌பயில்கிறார்கள்.
. இங்கேதான் கடவுளை நேரில் பார்ப்பது போல ஒரு காட்சியைப் பார்த்தோம். அதனை இங்கே சொல்வதால் என் மேல் வழக்கு பாயலாம்.
புள்ளையார் தரிசனத்தை முடித்துக்கொண்டு நேராக சிவகங்கை பயணமானோம். இந்த முறை கார் ஓட்டியவர் அலுங்காமல் குலுங்காமல் ஓட்டி வந்தார்.முதல் நாள் ஓட்டுனர் முன்னால் டிராக்டர் ஓட்டுனராக இருந்திருக்கக்கூடும்.
 கார் ஓட்டுனர் பற்றிக் ஒரு கதை உண்டு.பயப்படாமல் வாசிக்க வேண்டிய. கதை. ஓர் ஓட்டுனர் காரை ஓட்டிக் கொண்டிருக்க பின்னால் அமர்ந்துகொண்டிருந்த பயணி எதையோ கேட்க அவர் தோளில் கை வைைைக்ககிறார் .அதிர்ச்சியில் அரண்டுபோக கார் நிலையிழந்து பயங்கர விபத்துக்குள்ளாகிறது. போலிஸ் விசாரணை முடிவு விபத்துக்கான காரணத்தைச் இப்படிச் சொன்னது .காரோட்டி மிகச் சமீபத்தில்தான் சவ வாகன ஓட்டுநர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் என்று.
வாகன ஓட்டுனராக இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன்.
சிவகங்கை தமிழக எல்லா பட்டணங்களைப் போலவே கலைந்து கிடந்த அமைப்பைக் கொண்டது. ஒரு பட்டண அமைப்புக்கும் இன்னொரு பட்டண அமைப்புக்கும் பாரிய வேறுபாடுகளைக் காணமுடியாது.
சிவகங்கையில் டாக்டர் மிமியின் தந்தையான அறுவை சிகிட்சை நிபுனர் காத்திருந்தார். அவரைப் பார்த்த கணத்தில் நீங்கள் புண்ணியவான், எழுத்தாளர், அவர் ஹரி என்று சொல்லி பலநாள் பழகியது போல நட்புறவானார். அவரோ உரையாடுவது ஒரு என்சைக்லோபிடியாவைப் படிப்பது போன்றது. அப்போது காலனித்து ஆட்சியில் நடந்த ஒரு கதையைச் சொன்னார். வல்லபாய் என்ற அவர் பெயரைக் கேட்டதும் விடுதலைப் போராளி பெயராக இருக்கிறதே என்ற வினவியபோதுதான் அந்த கதையைச் சொன்னார். வல்லபாயின் அப்பா சேதுராமன் ஒரு விடுதலைப் போராளி. அவர் ஒரு பகத்சிங்கின் படத்தை வீட்டு மாடி அறையின் சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்.(அந்த வீடு இப்போது அவர் குடியிருக்கும் வீட்டின் எதிரே புராதனமாகக் கிடந்தது) வெள்ளைய போலிசார் அவர் தந்தையின் வீட்டை சோதனை செய்ய வருகின்றனர். துப்பு கிடைத்ததன் அந்தத் திடீர் சோதனை நடவடிக்கை. .அந்த இக்கட்டான அவசர தருணத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த பகத்சிங்கின்  நிழற்படத்தை ஒரு கயிறில் கட்டி வீட்டின் சன்னல் வழியே கீழே இறக்கி சோதனையிட வந்த வெள்ளையர் கண்ணில் படாமல் செய்திருக்கிறார்.காலனித்துவர்கள் பெரிதும் வெறுத்த பெயர் பகத்சிங். இச் சம்பவத்தை டாக்டர் வல்லபாயின் தம்பி தொலைபேசியில் சொன்ன தகவலாகும்.
 
சிவகங்கை என்றவுடன்   சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வீரதீரச் சாகசங்கள் நினைவுக்கு வரவேண்டும்.கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையர் ஆதிக்கத்தின் போது அவர்களை குறுநில மன்னர்கள் எதிர்த்துப் போராடிய சம்பவங்கள் வரலாறு ரத்தக் களரியானவை. அதிலும் ஒரு பெண் வெள்ளையனுக்கெதிராக  வாளை ஏந்தி குதிரை மீதேறி பொருதியதை சரித்திரம் எளிதில் மறந்துவிடாது? நான் வீர மங்கை ராணி வேலு நாச்சீயாரைத்தான் குறிப்பிடுகிறேன்.
முத்துவடுகநாதர் அவர் கணவர்.வளரி (பூமரேங்) ஆயுத்தத்தை கையாளத் தெரிந்த நிபுனர், வளரி ஆயுதம் எதிரியை நோக்கி வீசப்பட்டத்தும் அவன் தலையைக் கொய்துவிட்டு மீண்டும் வீசப்பட்டவரிடமே திரும்ப வந்து சேர்ந்துவிடும். இதனைக் கொண்டு பல வெளையர்களைக் கொன்றவர். அப்போது இந்தியா காலனித்துவ ஆட்சியில் இருந்தது. குறுநில மன்னர்களிடம் வரி வசூல் செய்து வந்தது இந்தக் கிழக்கிந்திய கம்பெனி. முத்துவடுக நாதர் கிழக்கிந்திய கம்பெனி கோரும் வரியைக் கொடுக்க மறுத்தார். வீர்பாண்டிய கட்டபொம்மனும் வரி செலுத்த மறுத்ததாலேயே பொருத வேண்டியதாயிற்று. அவர் தோற்றவுடன் கைது செய்து தூக்கிலிட்ட கதை உங்களுக்குத் தெரியும்.
 வேலு நாச்சியார் கணவர் முத்துவடுகநாதர் ஒரு சிவபக்தர். ஒருநாள் சிவனை வணங்க கோயிலுக்குச் செல்கிறார். வழிபடச் செல்லும்போது கையில் எந்த ஆயுதத்தையும் கொண்டு செல்லமாட்டார். இதனை அறிந்த வெள்ளையர் நேருக்கு நேர் மோதாமல் நிராயுதபாணியாய் இருந்த வேலு நாச்சியார் கணவனை சூழ்ந்து சுட்டுக்கொன்று விடுகின்றனர்.அவரைச் சுட்டவன் ஜோசப் சிமித். இதன் பிறகுதான் ராணி வேலு நாச்சியர் வெகுண்டெழுகிறார். தன் கணவனைக் கொன்றவனைப் பழி தீர்க்கவேண்டும் எனக் கங்கணம் கட்டினார்.ஆண்கள் வாரிசு இல்லாததால் கிழக்கிந்திய கம்பெனியார் சிவகங்கையை தங்கள் ஆளுகைக்குக் கொண்டுவர  முனைகின்றனர், ஆனால் வேலு நாச்சியார் பெண்ணாக இருந்தாலும் அந்த மரபை உடைத்து அரியாசனத்தில் அமர்கிறார். வெள்ளையர்களை வீழ்த்தப் ஹைதர் அலியின் உதவியை நாடுகிறார். வேலு நாச்சியார் உருது மொழியில் நன்றாகப் பேசவே ஹைதர் அலி அவருக்கு உதவிட சம்மதிக்கிறார். ஹைதர் அலி இன்னொரு குறுநில மன்னர். 5000 படைவீரகளை அனுப்பி உதவுகிறார் ஹைதர் அலி. வெள்ளையர்களை வீழ்த்த தானே தளபதியாகி போருக்குப் புறப்படுகிறார் வேலு நாச்சியார். முதல் கட்டப் போரில் ஜோசப் ஸ்மித் படையைத் தோற்கடிக்கிறார். ஆனால் பின்னர் நடந்த போரில் வெள்ளையர்களால் கொல்லப்படுகிறார். தன் திருமாங்கல்யத்தை தன் மண்ணுக்குக் காணிக்கையாக்கி உயிர் விடுகிறார் வீரமங்கை வேலு நாச்சியார். வேலு நாச்சியார் நினைவாக நகரின் மையத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. மணி மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வேலு நாச்சியாயர் சிலை கம்பீரமாகக் காட்சி தருகிறது.குயில் என்ற வீரம்ங்கையின் சாகசமும் சேர்த்தே வரலாறு சொல்லப்படுகிறது. இவள் வேலு நாச்சியாருக்குப் போரில் உதவி தீக்குளித்து மாண்டவர் என்ற தகவலும் பேசப்படுகிறது.



வேலு நாச்சியர் பற்றிய கையேடு இருக்கிறதா என்று அங்கே பணியில் அமர்த்தப்பட்டவரிடம் கேட்டேன். அவர்கள் கைவிரித்தனர். இதுதான் தமிழகத்தின் வரலாற்று விழுமியங்களைக் காப்பாற்றும் லட்சனம்!


நிகழும்….


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...