‘உள்ளத்தின்
குரல்’ அது உண்மையின்
குரல்- பிரேம் ராவத்
வாழுங்காலத்தில்
மிகுந்த பரவசத்தோடு இருக்கும் மனிதன் யார் என்று ஆய்வு நடத்தினார்கள். நாம் 80
ஆண்டுகள் வாழ்கிறோம் என்றால் அவர்களுள்
சராசரி மனிதன் பரவசத்தோடு இருந்தது சொற்ப மணிநேரம்தான். ஆனால் தங்களை
உணர்ந்தவர்கள், தன்னை
யாரென்று அறிந்தவர்கள், கலைஞர்கள்
பரவசமாக இருந்த நேரம் சராசரிமனிதனைவிட பல 1000 மணி நேரம் அதிகம் என்று அந்த ஆய்வு முடிவில்
தெரிய வந்தது.
சரி
நம்மை நாம் அறிவது எப்படி
தன்னை
அறிதல்
தன்னை
அறிதல் பற்றி பல ஆன்மிகவாதிகளும் தத்துவ ஞானிகளும் சொல்லி வருகிறார்கள்.
கிரேக்க
தத்துவ அறிஞர் சாக்ரட்டீஸ் முதல் விவேகானந்தர் வரை உன்னையே நீ அறிவாய் எனச் சொல்லி
வருகிறார்கள். தன்னை அறிவது என்பது ஞானத்தைத் தொடுவதற்குச் சமம். தன்னை அறியாமல்
இவ்வுலகை அறிய முடியாது. தான் யாரென்றும் அறிந்துகொள்ளவும் முடியாது.
நீ
யார் என்று ஒருவரைக்கேட்டால் அவர் தன் பெயர் ரவி என்று சொல்வார். ரவி என்பது அவர்
பெயர். அது அவரின் அடையாளம் அவ்வளவுதான். நான் கோலாலம்பூரில் செந்துலில்
இருக்கிறேன் என்றால் அது அவர் வசிக்கும் இடம். நான் நீல சட்டை அணிந்திருக்கிறேன்
என்றால் அது அவரல்ல. அவருடைய சட்டையின் நிறம். நான் எம் ஏ பட்டம் வாங்கியவன்
என்றால் அது அவருடைய கல்வித் தகுதி, அது
அவரல்ல.
முதலில் நாம் நம்மை அறிந்துகொள்ள வேண்டும். நாம் நம் உள்ளே யார் என்று அறிந்துகொள்வதே அறிதலின் முக்கியமானது.
ஒரு எடுத்துக்காட்டு,
நாம்
இருக்கும் இடம் இன்னதென்று அறிந்தால்தான் நாம் போகுமிடத்துக்குச் சரியாகப்
போய்ச்சேர முடியும். பலமுறை நான் இதனை அனுபவித்திருக்கிறேன். குறிப்பாக இரவில்
கார் ஓட்டும்போது வேறு ஏதோ சிந்தனையில் இருப்பேன். அத்தருணம் நான் எங்கே
இருக்கிறேன் என்று மறந்து போயிருக்கிறேன். நினைவில் இருள் மட்டுமே எஞ்சும். அப்போது
எனக்குகுள் பதற்றம் வந்துவிடும். நான் என்
இலக்கைப் போய்ச்சேருவேனா என்று கூடுதலான அச்சமும் வந்துவிடும். அந்த அச்ச்ம் ஏன்
வருகிறது? எனக்கு என்
இலக்கு மறந்துபோனதால். என்னை நான் மறந்துபோனதால். நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியாததால்.
அப்போது
மனதைச் சாந்தப்படுத்தி சிந்திக்கிறேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு என் பிரக்ஞைக்கு
வந்துவிடுவேன். நான் பிரக்ஞைக்கு வந்த பின்னர் நான் எங்கே இருக்கிறேன் என்று
தெரிந்துவிடும். அதனால் நான் எங்கே போகிறேன் என்று நினைவுக்கு வந்துவிடும்.
அப்போது பதற்றம் மறைந்து மகிழ்ச்சி வந்துவிடும். கோபம் பறந்துவிடும். நம்பிக்கை பிறந்துவிடும்.
பதற்றம்
மறைந்து மகிழ்ச்சி நிரம்பக் காரணமென்ன? நான் எங்கே இருக்கிறேன், என் இலக்கு என்ன என்று தெளிவானதால்.
அதுபோலத்தான் நாம் நம்மை அறிந்து கொண்டால். அமைதி மகிழ்ச்சி நிம்மதி எல்லாம் கிடைத்துவிடும். இதனைத் தெளிவாகவே சொல்லிச் செல்கிறார் பிரேம் ராவத்.
இன்னொரு
எளிமையான உதாரணம் சொல்கிறார்.
உங்கள்
முன்னால் ஒரு மாம்பழம் இருக்கிறது. அதனைப் பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறும். ஏன்
அதன் சுவை உங்கள் எண்ணத்தைத் தொடுகிறது. தொட்டு உங்கள் சுவையுணர்வைத் தீண்டுகிறது. உண்பதற்கு முன்னாலேயே அதன் சுவை
உங்களை பாதித்தது எப்படி?
ஏனெனில்
நீங்கள் முன்னமேயே அதன் சுவையை அறிந்திருந்தத்தால்.
இதுபோலவே நம்மை நாமே அறிந்துகொண்டால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு நல்ல உதாரணம்.
எனவே
என்னை நான் அறிந்துகொள்வது ஞானம். ஞானம் என்பது நமக்குள்ள தெய்வீக அனுபவத்தை
பெறுவது என்பதே. 99
தெய்வீகம்
உணர்வுப் பூர்வமானது. அதனைக் காட்டவோ விளக்கவோ இயலாது. தெய்வீகம் உள்ளுறைகிறது
அவ்வளவுதான். அது எவ்வளவு அற்புதமானது.
உன்னை
நீ அறிந்துகொள்ள முடியாததற்கு இன்னொரு காரணம் நாம் நம் உணர்ச்சிகளுக்கு அடிமையாக
இருக்கிறோம். முன்னர் என் அனுபவத்தில் நடந்ததைச் சொன்னேன்.இருளில்
இலக்கு தெரியாமல் என்னை மறந்தது உணர்ச்சிக்கு அடிமையானதால்.. அவ்வாறான சிக்கல் உண்டானது.
நாம்
நம்மை எப்படி அறிந்துகொள்வது?
அதனை
விளக்க ஒரு கதை சொல்கிறார் பிரேம் ராவத்.
ஓர்
இளைஞன் ஞானத்தைத் தேடி அலைகிறான். அவன் ஒரு ஞானியைச் சந்தித்து தன் விருப்பத்தைச்
சொல்கிறான். அவர் சொல்கிறார் சரி கற்றுக்கொள்ளலாம். நான் இப்போது செடிகளுக்கு நீர்
ஊற்றப்பொகிறேன். என்னுடன் வா. ஆனால் என் வேலை முடியும் வரை ஒரு வார்த்தைப்
பேசக்கூட்டது என்ற நிபந்தனை விதிக்கிறார். அவன் உடன்படுகிறான். ஞானி கிணற்றுப்பக்கம்
போகிறார். ஞானி கிணற்றிலிருந்து நீர் அள்ளும்போது வாளியின் உள்ள துளைகளின் வழியாக நீர்
முழுதும் சிந்திவிடுகிறது. திரும்பத் திரும்பத் அவ்வாறே செய்கிறார் ஞானி. பலமுறை பொறுமையாக
இருந்த அவன் உடனே என்ன குரு வாளி ஓட்டையென்று உங்களுக்குத் தெரியாதா. ஏன் அதே தவறை
மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள் என்று உணர்ச்சிவயப்பட்டு கேட்டு விட்டான். உடனே ஞானி சொன்னார், உண்மைதான் நீரை வாளியில் தக்கவைக்க
முடியாதுதான். உன் மனதிலும் ஒட்டைகள் நிறைய இருக்கின்றன. அதிலும் நீரைத் தக்கவைக்க
முடியாது. வாளியைப் போலவே உன் மனதும் பல்வேறு நம்பிக்கைகளால் நிறைந்துள்ளது.
இவ்வாறு ஓட்டைகள் நிறைந்துள்ளாதால் உன்னால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. உன்னிடம்
பொறுமை இல்லை என்று தெரிந்துகொண்டேன் என்கிறார். பொறுமை இருந்திருந்தால் நீ மௌனம்
காத்திருப்பாய் அல்லவா?
நம்மை
நாம் அறிவதற்கு நாம் சுமந்துள்ள பழைய நம்பிக்கைகளிலிருந்து விலகிவிடுவது அவசியம்
என்கிறார் பிரேம் ராவத்.
முதலில்
மௌனமாக இருந்து பழகு. இது
புற உலக இரைச்சலிலிருந்து விடுதலை பெறும் முக்கியமான உத்தி என்கிறார்.
சிறு
குழந்தையாக இருக்கும்போது வாழ்க்கையில் குழப்பங்கள் ஏதுமில்லை.
உயிருடன்
இருப்பதற்கு அதன் தேவை வேண்டி தூய சக்தியை நம்மால் தன்னிச்சையாக வெளிப்படுத்த
முடிந்தது.
இயல்பாகவே சிரித்தோம், அழுதோம். அதில் எந்த பாவனையும் இல்லை. பசாங்கில்லை.
ஆனால் பெரியவாரன பிறகு பிறருக்காக நடிக்கிறோம்.நம்மீதான பிறருடைய அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறோம்.Dont waste your time chasing butterflies. Fix your garden, and the butterflies will come. ஆம் நமக்குத் தேவையானதை நாமே முயற்சிசெய்து பெறவேண்டும்.
முன்பிருந்த
இயல்பான ஆனந்தம் எங்கே? அமைதி எங்கே? இயல்பாகவே நமக்குள் இருப்பதை நாம்
மறந்துவிடுகிறோம். நாம் சில பதில்களுக்காக வெளியுலகை நம்பலாம் ஆனால் நாம் யார்
என்பதை நாமேதான் கண்டுணரவேண்டும். என் மகிழ்ச்சிக்கு நான் மட்டுமே பொறுப்பு என்ற
முடிவுக்கு வரவேண்டும் என்று வலிந்து சொல்கிறார் பிரேம் ராவத்.
இதனால்தான் ‘மற்றவருடைய அபிப்பிராயங்கள் நம் சிந்தனையைக் குழப்புமானால் அதனை பொருட்படுத்தலாகாது. அவர்களின் அபிப்பிராயமும் நம்முடையதோடும் ஒன்றல்ல.” என்கிறார். ‘ ஒவ்வொரு மனிதனின் ஆனந்தமும் அவனையே சார்ந்துக்கிறது.அப்படி இருந்தும், பார் நீ உன் ஆனந்தத்தை மற்றவர்களின் எண்ணங்களுக்கும். மற்றும் உன்னைப் பற்றிய கருத்துக்களுக்கும் உட்பட்டு இருக்குமாறு செய்கிறாய்’
மார்க் அரலியஸ்’ ரோமானிய தத்துஞானி சொன்ன இக்கூற்றை நமக்கு நினைவூட்டுகிறார்.
பிரேம்
ராவத் இப்படி எண்ணற்ற அறிஞர்களின் தத்துவங்களை தன் கருத்துக்குத் துணயாக
நிறுவுகிறார்.
பிறர்
நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சிந்திப்பதுவும் மன அமைதியக் குலைக்கும்
ஒருவகை இரைச்சல்தான்
ஒரு
சிறைக்கைதி ஒரு முறை குருவைக் கேட்டான். நான் குற்றமற்றவன். நான் விடுதலையாகி வீடு
திரும்பினால் மற்றவர்கள் என்னைப்பற்றி மோசமாக நினைக்கக்கூடும். அதன் எப்படி
எதிர்கொள்வது?
உங்களுடைய
வெறும் கற்பனைதான் அது வேலையை அவர்வர் பிசியாக இருக்கிறார்கள் அவர்களின் பிரச்னையே
அவரவருக்கு முக்கியம். இதில் உங்களைப் பற்றிச் சிந்திக்க நேரமேது, நீங்களேதான் அவ்வாறு
நினைத்துக்கொள்கிறீர்கள். இதுபோன்ற மனப்பயிற்சி நம்மைப் புற உலக இரைச்சலிலிருந்து விடுவிக்கும்
என்று நிறுவுகிறார் பிரேம் ராவத்.
உங்கள்
உள்ளத்தில் நீங்கள் யார் என்று அறிந்துகொள்வதைத்தவிர மற்றதெல்லாம் இரைச்சலே என்று அவர்
சொல்வது எத்துணை உண்மை.
புத்தர்
ஒருமுறை தன்னை நாடி வந்தவரிடம், தன் கிண்ணத்தைக் காட்டி இது யாருடையது என்று வினவுகிறார். இது உங்களுடையது
என்கிறார் அவர். அதனை இன்னும் அவரருகே நீட்டி
இது யாருடையது என் மீண்டும் கேட்கிறார். இது என்னுடையது அல்ல என்கிறார் அவர். அதனை
அவர் கையிலேயே கொடுத்து இப்போது இது யாருடையது எனக் கேட்கிறார். அப்போதும் அவர் இது
எனது அல்ல என்று சொல்கிறார். இந்தக் கிண்ணத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இது
உங்களுடையதல்ல என்று புத்தர் அவரைத் தெளிவுபடுத்துகிறார். மற்றவர் அபிபிராயங்களை
நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவரை அப்பிரச்னை என்டையது அல்ல என்று தெளிவாகும் அல்லவா?
இரைச்சலைப்
பொருட்படுத்துவது நம் நிம்மதியைக் கொடுக்கும். ஒரு உதாரணம்.
கைப்பேசி
நம் கைக்குள் இருக்கிறது. அதன் வண்ணமயமான செய்திகள் நம்மை ஈர்க்கின்றன. அதன் எண்ணற்ற
செயலிகளால் நாம் அடிமையாகிவிடுகிறோம்.
ஆனால் தேர்வு நம்முடையதுதானே? நாம்
ஏன் கைப்பேசியைத் தேர்வு செய்கிறோம். நாம் ஏன் அத்ற்கு அடிமையாகவேண்டும். நம்மிடம்
தன்னம்பிக்கை இருந்தால் அதனால் ஈர்க்கப்படமாட்டோம் அல்லவா?
புற
உலகம் நம்முடைய மன அமைதிக்குச் சவாலாக இருந்துகொண்டே இருக்கிறது. இயல்பிலேயே நாம்
எல்லோரும் தாய் வயிற்றுக்குள் அமைதியாகத்தான் இருந்திருக்கிறோம், உள்ளே பேரிருள் ஆனாலும் அமைதியுடன்தான்
இருந்திருக்கிறோம். சிறு பிள்ளையாக இருக்கும்போது நல்லதையே விரும்பியிருக்கிறோம், ஆனால் வளர்ந்து பின்னர் புற உலக
நடவடிக்கைகளை பார்த்துப் பார்த்து நம் தூய்மை நிறைந்து உள்ளம் மாசு அடைகிறது.
யாராவது கோபபட்டாலோ,
அடித்தாலோ கொள்ளையடித்தாலோ நாம் அவற்றை விரும்புவதில்லை. அவ்வாறு நடப்பதைக்
கண்டிக்கிறோம். அதனால்தால் இயல்பிலேயே நாம் நல்லவர்கள். ஆனால் புற உலக ஈர்ப்பு
கூடக் கூட நாமும் நம் இயல்புக்கு மீறி நடக்கிறோம். அதனை இரைச்சல் என்கிறார் பிரேம்
ராவத். இந்த இரைச்சல் நம்மைப் பாதிக்கமல் இருக்க நாம்தான் பயிற்சி எடுக்க வேண்டும்.
மெல்ல மெல்ல அதனை நீக்கும் வழிமுறைகளைக் கடைபிட்க்கவேண்டும். தேர்வு நம்முடையது
அல்லவா? தொலைபேசி ஒரு
ஜடப்பொருள். நாம் உணர்வுள்ள மனிதர்கள். எனவே நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். தொலைபேசி
நம்மைத் தேர்வு செய்ய விடலாகாது.
தீதும்
நன்றும் பிறர் தர வாரா
நோதலும்
தணிதலும் அவற்றோரன்ன
கணியன்
பூங்குன்றன் மிகத் துல்லிதகாகச் சொல்கிறார். நாம்தான் நமக்கான் நன்மைக்கும்
தீமைக்கும் காரணம். நாம்தான் பந்தை சுவரில் எரிகிறோம் அது நம்மிடமே மீண்டும்
திரும்பி வருகிறது. நாம்தான் முடிவெடுக்க வேண்டும் பந்தை தூர எரிந்துவிடவேண்டும்
என்று. வருத்தமும் மகிழ்ச்சியும் நாம்தான் நம்முடைய நன்மைக்காக தேர்ந்தெடுக்க
வேண்டும் என்பது எவ்வளவு பெரிய தத்துவம்..
நம்முடைய
பொருளை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் அதனை யாரும் திருடிவிட முடியாது. நம்மிடம்
ஒரு தங்கச் சங்கில் உண்டு. அதனை மானாவரியாய் போட்டுவிட்டால் கண்டிப்பாகக் களவு
போய்வுடமல்லவா? இரைச்சல்
என்று இதைத்தான் சொல்கிறார் பிரேம் ராவத்.
நமக்குப்
பிரச்னை வரும்போது அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது?
பிரேம்
ராவத் சொல்கிறார். நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன். நான் இருக்கிறேன். அதாவது நான் உயிரோடு
இருக்கிறேன். நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.நான் நலமாக இருக்கிறேன். எனவே
நான் இருப்பதால் என்னால் சிந்திக்கமுடியும். அடுத்து என்ன செய்யலாம் என்று
யோசித்து முன்னோக்கி நகரமுடியும். .இப்படித்தான் ஆக்கப்பூர்மாக சிந்திக்க நாம்
நமக்கு பயிற்சியளிக்க வேண்டும். அடுத்தடுத்து முன்னேறுவதற்கான மருந்து இது,
நாம் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். நம் உள்ளத்தில் உள்ளது மட்டுமே நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளமுடியும். மகிழ்ச்சியோ ஆனந்தமோ கோபமோ பொறாமையோ இப்படி எல்லா மனித உணர்ச்சிகளுமே நமக்குள்ளே இருக்கின்றன. நமக்குள்ளே இருப்பதை நாம் கண்டிப்பாக நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஏனென்றால் நம் உணர்வுக்ளுக்குள் உள்ளது. வெளியே உள்ளதை, நடப்பதை ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள், இன்ன இன்னதெல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்று.நாம்தான் இது இதெல்லாம் நம் கட்டுப்பாட்டில உள்ளது என்று. இல்லவே இல்லை அது வெறும் மாயை. நீங்கள் பெற்ற பிள்ளைகளைக் கூட உங்கள் காட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியாது. எனவே நம் கட்டுப்பாட்டில் இருக்கும் மனதை நம்மாள் ஆளமுடியும்.
தாமரை சேற்றில் வளர்ந்தாலும் அது அழகான மலராகவே
மலர்கிறது. பிரச்னை கடுமையாக இருக்கலாம் நாம்தான் சவால்களால் சூழப்பட்டாலும் சேற்றுக்குள்
வேர் பிடித்திருந்தாலும் , தாமரை
மலர்போல அழகாக மலரவேண்டும்.
அமைதி
உண்டாக நம் மனதில் இயல்பாகவே உறையும் நல்லனவற்றை நினைத்துக்கொள்ள வேண்டும். அன்பு, பரிவு, இவற்றை நிலை நிறுத்த பயிற்சி செய்ய வேண்டும்.
நல்ல எண்ணங்களை நாமே நிலைநிறுத்தும்போது அமைதி தானாகவே உண்டாகும். ஒரு
உதாரணம் சொல்கிறேன். பெற்ற தாயைக் கொன்று வெட்டி ஐஸ்பெட்டியில் போட்டுவிட்டான் ஒரு
பாதகன். அந்த கொலைகாரன் மேல் நமக்கு அள்வற்ற கோபம் வருகிறது. அநியாயத்தைக் கண்டு
ஏன் கோபம் வரவேண்டும். ஏனெனில் இயல்பாகவே நமக்கு நல்ல எண்ணங்கள் உண்டு. அதே
வேலையில் கொல்லப்பட்ட தாயின் மீது பரிதாபம் ஏற்படுகிறது. நம்மிடம் இயல்பாகவே
உறையும் தூய்மை எண்ணம்தான் தாயின் மீது பரிதாபம் பிறக்கக் காரணம்.
ஒரு
பிச்சைக்காரனுக்கு உதவாமல் கடந்திருப்பீர்கள். கடந்த பின்னர் சற்று நேரம் கழித்து அவனுக்கு உதவாததை எண்ணி வருந்தியிருப்பீர்கள். உதவியிருக்கலாமே என்று தோன்றும். அந்த
எண்ணம்தான் நாம் இயல்பிலேயே நல்ல பண்புள்ளவர் என்பதற்கான ஆதாரம்.
ஒருவருக்கு நன்றி சொல்வது நன்றியை எதிர்பார்ப்பதும் நம்முள் உறையும் நல்லெண்ணங்களின் பிரதிபலிப்புதான். அமைதி தனிமனிதனிடமிருந்து உண்டாக வேண்டும் என்கிறார்.
போரில்லாமல்
இருந்தால் உலகம் ஒரு சொர்க்க பூமிதான். ஆனால் போரில்லாமல் இருந்ததே இல்லை. அது
சாத்தியமே இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டது.உலகம் அமைதி அடைய என்ன செய்யலாம்
முதலில் அது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். ஒரு காட்டை உருவாக்க வேண்டுமென்றால்
நாம் ஒரு மரமாக உணரவேண்டும் என்று நல்ல உதாரணம் காட்டுகிறார் பிரேம் ராவத். ஒரு மரம் மெல்ல மெல்ல காடாக பெருகி வரும் என்பது சாத்தியம்தானே.
மன
அமைதியைப் பெறுவது சாத்தியமே இல்லை என்று நினைக்கலாம். ஆனால் ரைட் ச்கோதரர்களின்
விடா முயற்சியினால் தான் இன்றைக்கு நாம் பறக்கிறோம். நாம் விரைவில் வானத்தில்
பறக்கப்போகிறோம் என்று அந்தச் சகோதரர்கள் சொல்லியிருந்தால் உலகம் அவர்கள்
பைத்தியக்காரர்கள் என்று சொல்லியிருக்கும். ஆனால் விடாமுயற்சி அதனை நனவாக்கியது.
ஏன்
இந்நூலைப் வாசிக்க வேண்டும்?
1.நான்
இந்நூலை மெதுவாகப் படித்தேன். இதில் தத்துவங்கள் நிறைந்துள்ளன. தத்துவங்கள்
என்றால் வாழ்வின் உண்மைகள். இதனை மெதுவாகத்தான் படிக்கவேண்டும். ஏனெனில் உண்மைகளை
நாம் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள.
2.
தத்துவங்களை விளக்க ஏராளமான கதைகளைச் சொல்கிறார். கதைகளை நுழைக்கும்போது மிகுந்த
ஆர்வத்தோடு வாசிப்போம். எதையெல்லாம் ஆர்வத்தோடு செய்கிறோமோ அதனை உள்மனம் ஆழமாகப்
பதிவு செய்துகொள்ளும்.
3. ஒரு
உண்மையை மீண்டும் மீண்டும் வலியுறுத்த அறிஞர்கள் பொன்மொழிகளை துணைக்கு
எழுதுகிறார். அறிஞர்கள் அறிவுப்பாதையில் சென்றவர்கள். எனவே அவர்கள் ஆலோசனை நம் நற்கதிக்குத்
தேவை.
4. பிரேம்
ராவ்த் தன் சொந்த அனுபஙகளை சான்றாகக்கூறும்போது நம் நம்பகத்தனமை வலிமையாகிறது.
5.
கடைசியாக எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. பெரிய பெரிய அச்செழுத்து வாசிக்க
எளிமையாக இருக்கிறது.
6. ஒரு
நூலை நாம் வாசிக்கும்போது நம் புலன்களை அதற்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஆசிரியரோடு உரையாடுகிறோம்.
அவர் சொல்லும் உண்மைகளை உணர்கிறோம். நம் சந்தேகங்களை அவரோடு விவாதிக்கிறோம். அந்த
சந்தேகங்களுக்கு அது தெளிவைத் தருகிறது.எனவே நூலின் ஆன்மாவோடு நாம்
ஒன்றித்துவிடுகிறோம். இந்த நூலை வாசிக்கும்போதெல்லாம் அவர் நம்முடன் இருப்பதுபோலவே
உணர்வோம். அந்நூல் தர்ம் நிகர் வாழ்க்கை அது.
கடைசியாக, இந்நூல் எளிமையான மொழியில்
எழுதப்பட்டுள்ளது. பெரிய பெரிய அச்செழுத்து வாசிக்கச் சிரமம் உண்டாக்காம்ல் இருக்கிறது.
நான்
புத்தகங்கள் திறக்கப்படும்போது அது நம்மை விரிவாகத் திறந்துவிடுகிறது.
இந்த
நூலை நான் மிக மிக மெதுவாகப் படித்தேன். ஒரு அத்தியாய்த்தை படித்துவிட்டு பின் அது
பற்றி ஆழமாக உள்வாங்கி மீண்டும் வாசித்தேன். ஏனெனில் நம் மகிழ்ச்சியாக வாழ
அமைதியைப் பயிற்றுவிக்கிறது. அமைதி உண்டானால் இரைச்சலை உணரமாட்டோம். நிம்மதி
உண்டாகிறது.
இதனை வாழ்நாளெல்லாம்
வைத்திருந்து படிக்கலாம். வாக்கையைப் போதிக்கும் மெய்யியல் நூல் இது.
இந்நூல் 8.12.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00க்கு விஸ்மா ஜெயபக்தி, ஜாலான் செண்டாருஹ் 2, பத்து ஜாலான் ஈப்போ, கோலாலம்பூரின் முதல் வெளியீடு காண்கிறது.
Comments