Skip to main content

Posts

எதிர்ப்பாரா திருப்பங்கள் சிறுகதை வாசிப்பின் ஆவலைத் தூண்டின

                வாராந்திர இதழாக குமுதம் இதழ்களின் வழியேதான் நான் கதை வாசிக்கத் துவங்கினேன். குமுதம் இதழ்களை நான் கடையில் வாங்கியது மிகக்குறைவு . ஏனெனில் நான் வளர்ந்த தோட்டத்தில் ஜனரஞ்சக வாசகர் ஒருவரிடமிருந்தே குமுதமும் ஆனந்தவிகடனும் கல்கண்டையும் பெற்றுக்கொண்டு வாசித்தேன். இப்படி ஓசியில் வாசிப்பது எனக்கு மிகச் சுவாரஸ்யமான அனுபவமாகும்.  தமிழகத்திலிருந்து  கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்தே அவருக்குக் குமுதம்  கிடைக்கும். அவர் படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அதை நான் போய் அவரிடம் இரவல் பெறக் காத்திருக்கும் தருணத்தைத்தான் கொஞ்சம் படபடப்பானது என்று சொல்வேன். இதழை அவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருக்கும் படபடப்பைவிட அதில் இருக்கும் சிறுகதைகளும் அது என்னை அலைக்கழிக்கப்போகும் திடீர் திருப்பங்களுமே என்னை நிலைகொள்ளாமல் செய்துவிடும். அங்கிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது என்று சொல்லலாம். கையில் காசில்லாதவர்கள் ஓசியில் படிப்பது தப்பில்லை என்றே வாதிடுவேன். கற்கை நன்றே..பிச்சைப் புகினும்!...

வாக்குரிமை வாக்காளருக்கே உரியது வெற்று வேட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை!

                 (கோ.புண்ணியவான்) நமக்குள் திணிக்கப் பட்ட அச்ச உணர்வு காலங்காலமாய் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. அது அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க உணர்வு. எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு முன்னாலிருந்தே நமக்குள் இது பதிந்து போய் மரபான தொடர்ச்சி பெற்று இன்றைக்கும் அதன் சிதலங்களால் பாதிக்கப் பட்டு வருகிறோம். ரொம்பவும் பின்னால் போக வேண்டாம். ஒரு இரண்டு நூற்றாண்டின் வரலாறை மட்டும் திரும்பிப் பார்ப்போம். பண்ணியார், எஜமானர், துரை, கிராணி, மண்டோர் என்ற அதிகார வர்க்கத்தின் கரம் நம் மென்னியை அழுத்திய வண்ணமே இருந்திருக்கிறது, இப்போது அம்னோ. இவைகளெல்லாம் நமக்கு வலிக்காமல் அச்சத்தை நம்முள் ஊடுறுத்தி வந்திருக்கின்றன.  பலரிடம் பேசியபோது தேர்தலில் அதிகார வர்க்கத்துக்கு வாக்களிப்பது ஆபத்தில்லாதது என்ற மனநிலையே பலரிடத்தில் என்னால் பார்க்கமுடிந்தது. “யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று பலரை நான் கேட்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் இன்றைக்கும் இருக்கும் ஆட்சியாளருக்குத்தான் என்றே   உறுதிதாக இருக்கிறார்க...

ஆளும்கட்சி இனவாத அரசாக நீடிப்பதை ஹிண்றாப் வழிமொழிகிறதா?

                                             பிரதமர் முன்னால் ஒப்பந்தக் கையொப்பம்                  ம லேசியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , ஹிண்றாப் ஆளும்கட்சியோடு கைகுலுக்கி இருப்பதை நாட்டின் பல தரப்பினரிடையே அதிர்வலைகளை உண்டுபணியிருக்கிறது. இது ஹிண்ராப்பின் அடிப்படை கொள்கைக்கும், அதனைத் தொடர்ந்து நடத்திய அரசுக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கும் முரணானது 2007 ஹிண்டராப் தெருப் போராட்டத்தை அரங்கேற்றிய அதிமுக்கிய காரணியாக இருந்ததே அம்னோவின் இனவாதப் போக்கை வன்மையாக கண்டிக்கவே. அப்போது அதன் நோக்கம் உச்சமடைந்து வாக்காளர்களை 2008 தேர்தலில் ஆளும்தேசிய முன்னணிக்கு பாடம் புகட்டியதையும் மக்கள் மனதில் உணர்வுப்பூர்வமான இடத்தைப் பிடித்திருந்தது. தென்னிந்தியர்கள் மட்டுமின்றி சீன மலா...

சண்டைக்காரனிடமே சரணடைந்த ஹிண்ட்ராப்

                                                                                                      எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று ‘வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டிருக்கிறது. 2007 ஆண்டு லட்சகனக்கான இந்தியர்கள அணி திரட்டி, ஓரங்கட்டப்பட்ட தென்னிந்தியருக்காக நீதி கேட்டுப் வீதிப் போராட்டம் நடத்திய ஹிண்ட் ராப், ஆறு ஆண்டுகளாகப்  போராடிய பிறகு தன் கோரிக்கைகளை ஆளுங்கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. எதிர்கட்சி நாளுக்கு நாள் வலுபெற்று ஆளுங்கட்சியை வீழ்த்தும்...

சொல்றத சொல்லிப்புடுறேன்

ஐநூறு கொடுத்தான்னு  அவனுக்கே ஓட்டுன்னா? ஆயுள் முழுக்க ஒதுக்கனானே  அதுக்கென்ன அர்த்தம்ன்னேன்? நம்மல ஓரங்கட்டி  ஒசத்திப்புட்டான் தஞ்சனத்த  சும்மா தூசுதட்டி போட்டாப்புல  மறந்துப்புட்டான் என் எனத்த  கோயிலுக்கு கொடுத்தான்னு  கையெடுத்து கும்பிடுறியே  சாமியெல்லாம் ஒடச்சப்ப்போ  கைபெசஞ்சி நின்னேல்லா  பள்ளிக்கு தந்தான்னு  பல்லிளிச்சு நிக்கிறியே  இப்பமட்டும் செய்றியேன்னு  எப்பியாவது கேட்டியா? கைக்கட்டி கைகட்டி  காலத்த ஓட்டாத  டைகட்டி மெடுக்கா  இருக்கத்தான் வேணுங்கிறேன்  கொடுத்த தெல்லாம் வாங்கிக்கோ  வேணான்னு தடுக்கல  கோடு போட்ட வாழ்க்கத்தான்  வாழனுந்தான் கேட்டுக்கோ  நம்ம புள்ள நாளைக்கு  நல்லாத்தான் இருக்கனும்னா  நாயக் கட்டி இழுத்தாந்து  நடு வூட்ல வைக்காத  கூழாங்கல்ல தங்கம்ன்னு  கும்பிட்டு ஏற்காத  வைரத்த சோரம்ன்னும்  வந்த வழி அனுப்பாத  எப்பியோ நடந்திடுச்சு  இப்போ அதுக்கென்னாங்கிற  அப்போ செஞ்சதெல்லாம்  இப்பியுமில்ல பாதிக்...

மலேசிய அரசியலில் ஒரு அதிரடி மாற்றம்

Mahathir                                                             Abthullaa Badawi                                                        Anwar Ibrahim ( அடுத்த பிரதமராகும் முகம்)                                        ...

தெய்வம் தாய்க்கு ஈடாகுமா?

இலக்கிய நண்பர்கள் ஆறேழு பேர் கூலிம் தியான ஆசிரமத்தில மாதமொருமுறை கூடி இலக்கியம் சார்ந்த உரையாடல்களை  நடத்தி வருகிறோம். இரவு 7.30 மணிக்கு உரையாட ஆரம்பித்தால் நள்ளிரவு நெருங்கும் வரை தொடரும். அது எங்கள் வாழ்நாளில் பதிவாகும் இனிமையான அனுபவப் பொழுதுகள். நன்கைந்து மணி நேரம் அப்படி என்னதான் பேசுகிறீர்கள் என்று நக்கலோடு பிற நண்பர்கள் கேட்கும்போது  இலக்கியத்திலிருந்து அந்நியமானவர்களின் கேட்கின்ற நியாமான கேள்வியென்றே எடுத்துக் கொள்வோம்.  இலக்கிய நூல்கள் பக்கம் வராதவர்களிடம் சொல்லி விளக்குவதில் பயனில்லை . எங்களை வழி மாறிப்போன ஆடுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள் பாவம். ஆனால் அவர்கள்தான் வழி தவறிப் போனவர்கள் என்று கருதவேண்டியுள்ளது. உரையாடல்கள் மூலமே படைப்பின் ஆழ அகலத்தை உழ முடியும் என அறிந்திருந்தோம். படைப்பாளருக்குக் கிட்டாத ஆழம் பலசமயங்களில் எங்களின் உரையாடல்கள் மூலம் தட்டுப்பட்டிருக்கிறது! எனவே இதுபோன்ற  எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்பட...