Skip to main content

விளிம்பு நிலையில் கடவுள்

அரசர் சாலமனிடம்

இன்னொரு விசித்திரமான

வழக்கு வந்தது

ஒரே கடவுளை

இரு மதங்கள்

உரிமை கொண்டாடின

சாலமன் ஆழச்சிந்தித்து

ஒரு முடிவுக்கு வந்தான்

கடவுளைச் சம பாதியாக

துண்டுபோட்டு

ஆளுகொன்றாய் கொடுத்துவிடு

என்று உத்தரவிட்டான்



கதி கலங்கிய

இரண்டு மதங்களும்

அழுது கதறிப்புலம்பின



தன் வாழ்நாள் முழுதும்

இரண்டு பக்கமும்

இருந்துவந்த கடவுள்

இப்போது யார் பக்கமும்

போகாமல் இருந்துவிட்டார்.

Comments

Se.Gunalan said…
mozi inri panbaadu inri inriyamaiyaatha oru samugam,uchathin yechathai thoddathu yenraal athu tann inathin meethu vaitha aazamaana nambikkaiye, kadavulin peyarum athan saaraamsamum tanakku sontam illai yenru kooda ninaivil vaithukkollaatha oru samugam pohdri pugazappada vehendiya samugam.avargal samugathil akkarai seluthigiraargal, naam akkkarai inri samugathai koluthugirom. oru uruppadi karppanai yenru terinthum avargal athaiye pidithukolliraargal kaaranam avargalukku avargalin inathin,samugathin mehl avvalavu akkarai.( anbu koorrnthu tamizil veliyidavum)
Se.Gunalan said…
arasar saalamanidam
sathaarana vazakkuthaan,
oru kadavul
iru matham piditha yaanagal
kadavulai karumbaaga yennikkondathaal,
salaman sirihu sinthithaan
iru paathiyaaga kadavulai
pirippathai vida-
iru matham piditha yaanaigalai illaamaleye aakkividalaame.
aakkividalaam
ko.punniavan said…
உங்கள் மொழியில்...
மொழி இன்றி பண்பாடு இன்றி இன்றியமையாத ஒரு சமூகம், உச்சத்தின் எச்சத்தைத் தொட்டது என்றால் அது தன் இனத்தின் மீது வைத்த ஆழமான நம்பிக்கையே, கடவுளின் பெயரும் அதன் சாராம்சமும் தனக்குச்சொந்தமில்லை என்றுகூட நினைவில் வைத்துகொள்ளாத ஒரு சமூகம் போற்றி புகழப்படவேண்டிய சமூகம்.அவர்கள் சமூகத்தில் அக்கரறை செலுத்துகிறார்கள், நாம் அக்கறையின்றி சமூகத்தைக்கொளுத்துகிறோம். ஒரு உறுப்படி கற்பனை என்று தெரிந்தும் அவர்கள் அதையே பிடித்துக்கொள்கிறார்கள் காரணம் அவர்களுக்கு அவர்களின் இனத்தின், சமூகத்தின்மேல் அவ்வளவு அக்கறை.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த