Skip to main content

11.சீனப்பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

                                                  தியானமென் வளாகம்

          3 மணிநேரம் ஒரே இடத்தில்  அசையாமல் நிற்கும் குங்பு போலிஸ்













மறுநாள் காலையில் சீனச் சரித்திரத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைக்காணப் புறப்பட்டோம். உள்ளபடியே இந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்பதே என் நெடு நாளைய ஆசை.சீன வரலாற்றை புரட்டிப்போட்டு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்த ரத்தக்களரி நடந்த இடம் அது.

 பயணம் போகும் போது மைக்கலைk கேட்டேன். அதுபற்றிப் பேசுவதே ஒரு தேசக் குற்றம். வேண்டாம் அங்கே போய் அதெல்லாம் பேசவேண்டாம் என்று எச்சரித்தார். உலகமே அன்றைய சீன அரசை வன்மையாகக் கண்டித்த சம்பவம் அது. அனைவருக்கும் தெரிந்த மயிர்கூச்சரியும் சம்பவமாயிற்றே. பேசாக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? இதைத்தான் ஊரறிந்த ரகசியம் என்கிறார்களோ?
பேசக்கூடாது என்பதை நான் வேறு மாதிரி பொருள்கொண்டு பார்க்கிறேன். அந்த மனித வன்மத்தல் நிகழ்த்தப்பட்ட பேரிடர். நாட்டுக்குஅவச் சொல்லைக் கொண்டு வந்ததால் அது நினைவுறுத்தப் படுவது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கைத் தேடித் தருவதற்குச் சமமாகுமல்லவா. நம் நாட்டின் மே 13 போல!

அந்த இடம் தியானமென வளாகம்.( tianamen squre) 10 லட்சம் பேர் ஒன்று கூடும் வசதிபெற்ற பரந்து விரிந்த பெரு வளாகம்.

1987 ஜூன் மாதம் 4ஆம் நாள் அன்றைய ஆதிக்க அரசு அரங்கேற்றிய  படுகொலையை நினைவுறுத்தும் இடம் இது.

இதுதான் அந்த வன்கொடுமை வரலாறு:-

சீனாவில் கம்னியூஸ்ட் ஆட்சியில் தேங்கிப் போன வறுமை நீங்கவேண்டும். புதிய பொருளாதார மாற்றம் உடனடியாக நிகழவேண்டும்; அதனால் வறுமை ஒழியும்; வேலை வாய்ப்புகள் கூடும்; கையூட்டு இல்லாமல் போகும் என்று முதலில் குரல் கொடுத்தவர் ஹுயாவ்போங் என்ற மக்கள் தலைவர்.

அவருடைய கோரிக்கையை ஆமோதித்த பல்கலைக்கழக மாணவர்கள்  1987 ஏப்ரல் மாத வாக்கில் தியானமென் வளாகத்தில் கூடிப் பேரணி நடத்தினர் .மாற்றாம் கொண்டு வரப்படவேண்டும் என்று குரலெழுப்பினர். தொடர்ந்து பல நாட்கள் உண்ணா விரதம் இருந்தனர். அவர்கள் கோரிக்கை முறையானதே என்று கருதிய பெய்ஜிங் மக்கள் மெல்ல பல்கலைக்கழக மாணவர்களை ஆதரிக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிய மக்கள் பின்னர் லட்சக் கணக்கில் எகிறி, கடைசியில் ஒரு மில்லியன் மக்கள் கூட்டமாகப் பெருகியது. போராட்டம் பெரும் புரட்சியாக மாற ஆரம்பித்தது.

இந்தப் போராட்டம் சீனாவின் ஒட்டுமொத்த மக்களின் குரலாகவே பிரதிபலித்தது. ஏழாவது வாரமாக தொடர்ந்து நீடித்த இந்த நியாய கோரிக்கைக் குரலை அன்றைய பிரதமராக இருந்த டெங் சியாபோங்கும் அவரது அரசியல்   சகாக்களும் என்ன விலை கொடுத்தும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று  கங்கனம் கட்டினர். தங்களின் மக்கள் செல்வாக்கு குறைந்து பின்னர் அருதியாய் இல்லாமல்பதவி பறி போய்விடும் என்ற அச்சம் காரணமாக இந்த மக்கள் பேரணியை முடிவு கட்ட வேண்டுமென்று அறைகூவல் விடுத்தனர்.

என்ன மிரட்டியும் மக்கள் கூட்டம் அசைந்து கொடுப்பதாய் இல்லை! நாட்டில் மாற்றம் கொண்டு வர உறுதி கூறும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக இருந்தனர்.
கடைசியில் எல்லா சர்வாதிகார தலைவர்கள் செய்யும் அதே செயலை டெங்க்சியாபோங்கும் செய்தார். போராட்டக் காரர்களைச் சுட்டுத் தள்ள உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், டேங்க்குகளும் தியானமென் வளாகத்தில் குவிக்கப் பட்டது. 1987 ஜூன் 7 நாள் பேரணியை நோக்கி குண்டுகள் பாய்ந்தன. மக்கள் உயிருக்குப் பயந்து ஓடினர்.
குண்டுகள் சரம் மாரியாகப் பாய்ந்து ஆயிரக் கணக்கானோரை  மண்ணில் சாய்த்தது. ரத்தம் தியான மென் வளாகத்தில் வெள்ளப் பெருக்கெடுத்தது. பிணங்கள் கேட்பாரான்றி நிலத்தில் கிடந்தன.பெய்ஜிங் பெருநகர் கொலைக்களமாக கலை இழந்து கிடந்தது.
மக்கள் உல்லாசமாகக் கூடும் தியானமென் வளாகம் சவ வளாகமாக மாறியது.

அதற்குப் பிறகும் அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சும்ம விடவில்லை.
 வீடு வீடாகப் போய் கைது வேட்டையாடி சிறையில் அடைத்தது.  தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சிய அதிகார வர்க்கத்தின் அட்டூழியம் எல்லை மீறிக்கிடந்தது.
இந்த கொடுஞ்செயல் வெளி உலக்குக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக
வெளிநாட்டு நிருபர்களைக் கொலைக்களம் நடப்பதற்கு முன்னரே
நாட்டை விட்டு  வெளியேற்றி வீட்டது. ஆனாலும் உயிர்பலியின் பாவம் சும்மா விடுமா?
இதையறிந்த உலக நாடுகள் சீனாவுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது.

அதன் பின்னர் ஒருசில ஆண்டுகள் கழித்து டெங் சியாபெங் ஆட்சி கவிழ்ந்து ஜுவாங்க் ஜிமிங் ப்ரதமராக வந்தார்.

வெள்ளையர் ஆட்சியின் போது பஞ்சாபில் நடந்த ஜாலியன்வாலா படுகொலை என் நினைவுக்கு வருகிறது. சுதந்திரப் பேரணியைக் கலைக்க வெள்ளையர்கள் கூட்டத்தை நோக்கி சுட்டதுகூட அதிகார வரக்கத்தின் ஒடுக்குமுறையினால் நேர்ந்ததுதான்.

தியானமென் வளாகத்தை நோக்கி வேன் புறப்பட்டது. சாதாரண நாட்களில் அங்கு பெரிய விஷேமெல்லாம் கிடையாது. ஒவ்வொரு நாளும் கொடியேற்றம் நடக்கும். இறந்தவர்கள் உறவினர்கள் துக்கம் அனுசரிப்பார்கள். பெரிய திரைகளில் சீன வரலாறு ஓடும். எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் .குங்பு போலிஸ் 24 மணிநேரமும் பாதுகாப்பாக இருப்பார்கள். எப்போது 2 குங்பு போலிஸ் ஆடாமல் அசையாமல் 3 மணி நேரம் தொடர்ந்து நிற்பார்கள்.( கொலைக் குற்றவாளிக்கு கொடுக்க வேண்டிய தணடனை) பிறகு டியூட்டி மாறுவார்கள்.

த்யானமென் வளாகத்தை அடுத்து இருப்பது சொர்க்கத்தின் கோயில் (Temple of heaven or forbidden city) இதுவுமொரு சுற்றுலா தளம்தான். தியான்மின் சதுரத்துக்கு நடை தூரத்திலேயே சொர்க்கத்தின் கோயில் இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. அது பற்றித் தொடர்ந்து எழுதுவேன்.

நாங்கள் கேமரா வைத்திருந்தாலும் அங்கே நம்மைப் படம் பிடிக்க வற்புறுத்த பலர் கேமராவோடு அலைகிறார்கள். மைக்கல் அதற்கெல்லாம் தரகராக இருந்தார். மூன்று காப்பி குடும்பப்படம் எடுத்துக் கொண்டோம். 300 யுவன் மொய்!

எங்களை பலர் விரும்பி கேட்டுக்கொண்டு படம் எடுத்தார்கள் என்று முன்னர் கட்டுரையில் குறிப்பிட்டேன் அல்லவா. அந்த சுவாரஸ்யம் மிகுந்த சம்பவத்தை அடுத்து சொல்கிறேன்.....ஏனெனில் தியான்மென் வளாகத்திலும் அது நடந்தது...!

தொடரு.........ம்.

Comments

அடக்கடவுளே.. பயங்கரமான ஆட்சியாக இருக்கே.. வரலாறு திகிலாக இருக்கின்றதே.! நன்றி சார் தகவலுக்கு. சுவைக்குன்றாமல் எழுதும் உங்களின் எழுத்திற்கு வந்தனங்கள். தொடருங்கள்.. ஆர்வமாகவே உள்ளது
ko.punniavan said…
நன்றி விஜி,

தொடர்ந்து வருகை தாருங்கள்.சுவையான தருணக்களைச் சந்திப்பீர்கள்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...