Saturday, January 12, 2013

7. சீனப்பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

மறுநாள் காலை குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தனர். பனிச்சறுக்கு விளாயாட்டு இடத்துப் போகலாம் என்ற முடிவால் நேர்ந்த மகிச்ச்சி காரணமாகத்தான்.  நல்ல வேளையாக அதற்கு சறுக்கு என்ற சொல் இருப்பதால் சறுக்கி விழுந்தாலும் தப்பில்லை என்றாகிவிடும்! விளையாட்டே சறுக்குதான் என்பதால் பனியில் சாகசம் காட்டினாலும் சறுக்குதான். சாகசம் காட்டத் தெரியாவிட்டாலும் சறுக்குதான். எனவே தாராளமாகச் சறுக்கலாம். பெண்கள் எவ்வளவுதான் வழுக்கி விழுந்தாலும் அங்கே கெட்ட பெயர் வந்துவிடாது.
விடுதியிலிருந்து இரண்டு மணிநேர ஓட்டம். பட்டணத்திலிருந்து முதல் முறையாக கிராமப்புறம் வழியாக வேன் செல்கிறது. எங்கு பார்த்தாலும் வெண்மை பூசிக் கிடக்கிறது பூமி.பனி பெய்து கெட்டி தட்டிப்போய்க் கிடக்கிறது. சாலையில் வாகனங்களைத் தவிர  வெளியே மனித சலனமே இல்லை. விவசாய நிலம்போலத் தெரிகிறதே தவிர, மனித நடமாட்டமே இல்லை.ஆங்காங்கே சுவர்க்குடிசைகள் இருக்கின்றன. விவசாயிகளுடையது. கடும் குளிருக்குப் பயந்து உள்ளே பதுங்கி இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் ஏகழைகள்தான். கம்னியூஸ்ட்நாடாகச் சீனா இருந்தபோதே ஏழைகளாக இருந்த குடியானவர்கள் அதே நிலையிதான் இருக்கிறார்கள். பட்டணங்கள் வணிகங்கள், பெரும் பணக்காரர்கள் பெருகிவிட்டால் இந்த ஏற்றத்தாழவு இருக்கத்தான் செய்யும். சோசியலிஸ்ட் கொள்கை நீர்த்துப் போகும் போது ஏழை பணக்காரன் என்ற நிர்ப்பந்தம் இருக்கத்தான் செய்யும். முதலாளித்துவ நாடுகளில் தவிர்க்க முடையாத நிலைப்பாடுகள் இவை! குளிர்காலத்தில் விவசாயம் ஸ்தம்பித்துப் போய்விடுகிறது என்று சொன்னார் மைக்கல். நாங்கள் கடந்து போகும் இடங்களில் குளம் குட்டைகள் ஆறு எல்லாம் பனியில் கட்டிப்போய்கிடக்கிறது.மேல் மட்டத்தில்தான் பனி கட்டிப்போய் இருக்கிறது. உறைந்த பனி அடுக்குக்குக் கீழே ஆறு மௌனமாய் ஓடிக்கொண்டுதான் இருக்குமாம். தப்பித்தவறி அதன் மேல் நடந்தால்.. நமக்கு சனி ஏழாம் இடத்தில் இருந்தால் மேல் மட்டம் உடைந்து ஆறு நம்மை ஆழத்தில் இழுத்து நீரோட்டத்தில் அடித்துச் சென்று விடுமாம்.அப்படியே காப்பாற்றினாலும் பிணமாய்த்தான் கிடைக்குமாம். அழகாய் இருப்பதெல்லாம் ஆபத்து. ஆழமறியாமல் காலை விடாதே என்ற பழமொழி இங்கிருந்துதான் 'மிதந்து' வந்திருக்கவேண்டும்!

சாலை நெடுக்க தூண்கள் இருகின்றன.நாம் நினைப்பதுபோல அவை தொலை பேசிக் கம்பி இணைப்புத்தூண்கள்  அல்ல. தூண்களின் மேலே சோலார் சக்தித்தட்டுகள்  இணைக்கப் பட்டிருகின்றன. கிராமங்களில் மின்சாரமும், பயிர்களுக்கான நீர்ப்பாய்ச்சலும் நடக்கவேண்டுமென்பதற்காக அரசாங்கத்தின் முன் ஏற்பாடு இது.  பெய்ஜிங் பெருநகரத்தின் கட்டட வெளி கண்ணாடிகளில் சூரிய வெப்பத்திலிருந்து சக்தியை சேகரம் செய்யும்  கூட வகையச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் நாட்டைப்போல காவெரி நீரையோ மற்ற ஏரிகளின் நீரையோ
 நம்பி வாழும் நிலையில் இல்லை. கேரளாவையும் கர்நாடாகாவையும் கெஞ்சியும் ஆர்ப்பாட்டம் செய்தும் அரசியல் நடத்தவில்லை. நடுவன் அரசு ஆடும் அரசியல் லாப  நாடகத்துக்கு பலியாகிப்போகும் மக்களும் அங்கில்லை! எல்லாம் மக்களாட்சி கோட்பாட்டுப்படி, மக்களே மக்களால் மக்களுக்கான அரசாங்கம் அங்கே நடக்கிறது. மைக்கல் தன் நாட்டின் பெருமையை சொல்லிச் சொல்லி
புளகாங்கிதம் அடைகிறார்.  

வெள்ளிப்பனி மலையை அடைந்தபோது நூற்றுக்கணக்கானோர் சறுக்கு விளையாட்டில் மகிழ்ந்திருந்தனர். பனிச்சறுக்கு விளையாட்டுக்கான பொருட்களை பெற்றுக்கொண்டு எல்லாரும் சறுக்கக் கிளம்பிவிட்டார்கள். எனக்கும் மனைவிக்கும் முக்கியமான வேலை. அதாவது பனிச்சறுக்கு விளையாட முடியாது வயதுப் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பணி. எதற்குப் போய் சறுக்கி விழவேண்டும் பேசாமல் 'ஆயாக் கொட்டாய்' வேலையே செய்யலாம் என்று முடிவெடுத்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்! வெளியே போய் விளையாடும் குழந்தைகள் வழுக்கி விழுந்து அழுவதும் அவற்றை ஆசுவாசப் படுத்த தின்பண்டங்கள் வாங்கித் தருவதுமாக இருக்கவேண்டியதாய்ப் போய்விட்டது. விலையோ பயங்கரம். ஒரு டின் பானம். பதினைந்து வெள்ளிக்கு மேல். ஐஸ் கிரீம் அதைவிட அதிகம். குழந்தைகள் அந்தப்பனியிலும் ஐஸ்கிரீம்தான் வேண்டுமென்று அடம் பிடிக்கின்றன. வெளியே குளிரோ அதிகம். கிட்டதட்ட மைனஸ் பத்து. இப்படியாகக் குழந்தைகள் செய்த சேட்டையைத் தாங்க முடியவில்லை. பிள்ளைகள் வந்தவுடன். இதற்கு விளையாடவே வந்திருப்பேன் என்றேன். சரி வாங்க விளையாடுஙக என்று சறுக்கு விளையாட்டுக்கான பொருட்கள மாட்டி விட்டான் பெரியவன். ஒரு அடி நகர்ந்தால் பின்புறமாய் விழுகிறேன். தூக்கிவிட  ஆள் வேண்டும். மீண்டும் முயற்சி. மீண்டும் விழுதல். அப்பா தாங்காத என்னை விட்டுடு என்று சொல்லித்திரும்புகிறேன். மகனைக் காணோம். பிறகு யாருஒரு அந்நியர் தூக்கி விட்டார்.( இதற்குப் பேசாமல் baby sitting வேலையே மேல்)
அங்குள்ள மக்கள் சீனர்கள் மாதிரி இல்லை. நான் இந்திய சீன எல்லையின் சிக்கிம்மில் பார்த்த முக ஜாடை. ஏறத்தாழ நேப்பால் கார்கள் மாதிரியான முகத்தோற்றம். அல்லது மங்கோலியக் காரர்கள் மாதிரி இருந்தார்கள்.
அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்தன குழந்தைகள். குளிரோ அங்கிரு விரட்டுகிறது.மீண்டும் வேனில் ஏறி விடுதிக்குப் புறப் பட்டோம். அன்றைக்கான் பகல் உணவு உட்கொள்ள நான்கைத் தாண்டிவிட்டது. அதனால் இனி அகல் உணவு பெய்ஜிங்கில் கிடைக்காது. இரவு உணவுதான். ஆனாலும் பிளைகளுக்குப் பசி. எங்கேயோ நின்று சாப்பிட்டோம். இருட்டிக் கொண்டிருந்தது.

தொடரு.......ம்

2 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சூப்ப்பர் படங்கள்... குடிசை குடியானவன் என்கிறீர்கள் அவர்களின் படங்களையும் போட்டிருக்கலாமே சார். தொடருங்கள். அருமை

ko.punniavan said...

அன்புள்ள விஜி,
நன்றி

அவர்கள் யாரையும் வெளியே பார்க்கவில்லை.குடிசைகளைப் படம் எடுத்திருக்கலாம்தான்.விடுபட்டுவிட்டது.