Skip to main content

4. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்






        4. மறுநாள் காலையில் சீனப் பூமியைப் பார்க்க எப்படி இருக்கும் என்ற ஆர்வம்

மிகுந்திருந்தது. புது மண், புது காற்று ,புது சூழல், ஆர்வத்தைத் தூண்டியது.

ஆனால் பழக்கப்பட்ட அதே மஞ்சள்   நிற மனிதர்கள்.

அதிகாலையில் பத்துக்கெல்லாம்   எழுந்துவிட்டோம். பதினோரு

 மணிக்கு மேல் காலை உணவு  உண்ண முடியாது என்பதால்

அப்படி 'வெள்ளனெ' எழுந்துவிட வேண்டியிருந்தது. சீன உணவு வகை உலகப்

புகழ் பெற்றது. அதிலும் 'டிம் சம்' என்ற பலகார உணவை ஒரு கை

பார்க்கவேண்டி நா துடித்தது. என் மகன் தான் ஈப்போவில் ஒரு முறை அந்த

உணவை அறிமுகப் படுத்தினான். அதிலிருந்து அதன் மேல் ஒரு தனியாத

மோகம்.  எல்லாரையும் கதவைத் தட்டி எழுப்பிவிட்டு கீழ் தளத்துக்கு

வந்தோம். ஒரு சிலரே அங்கே இருந்தனர். குறிப்பாக ஐரோப்பியர்கள்.

சீனர்கள் சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள். பதினோரு மணிக்குள் பகல்

உணவுக்கு தயாராகி விடுவார்கள் அல்லவா? உணவுதானே அவர்களுக்கு

வாழ்க்கையே! இன்றைக்கும் சீனர்களை நாம் சந்திக்கும்போது , அது எந்த

நேரமாக இருந்தாலும் ''சாப்பிட்டு விட்டாயா?" என்றுதான் நலம்

விசாரிப்பார்கள்.

எல்லாரும்  இறங்கி வந்துவிட்டார்கள். என் கடைக்குட்டி  பையனும் அவன்

குடும்பத்தாரையும் காணோம். பன்னிரண்டாவது மாடிக்குப் போய் அவன்

அறைக் கதவைத் தட்டினால் என் செல்லம் அசதியில்

தூங்கிக்கொண்டிருந்தது.

காலை உணவை அவர்கள் அன்று எடுக்க முடியவில்லை. வேஸ்ட்தான்.

நான் சொன்ன டிம் சம் உணவு வகை இருந்தது. ஆனால் மாறு வேசத்தில்தான்.

அங்கே டிம் சம் என்று எழுதப் பட்டிருந்ததே தவிர நான் பார்த்த வடிவத்தில்

இல்லை. இட்லியை விடச் சிறயதாய், பல வண்ணங்களில் இருந்தது. கலி

போன்ற  கருப்பாக ஒரு கோழி முட்டை சைசில் இருந்தது. சரி வடிவம் தான்

வேறு. சுவை ஒன்றுதானே என்று சாப்பிட்டுப் பார்த்தால் ஈப்போ சுவையைக்

காணோம்.   உணவை உண்ணும் வகையும் முக்கியமல்லவா?    

வேறு                                            உணவு வகையைச் சாப்பிட வேண்டியதாயிற்று. பரவாயில்லை . வைக்கப்பட்டிருந்த

பல வகை உணவுகள் பார்த்தாவது திருப்தியடைய வேண்டி இருந்தது.

என்

பேரன் கேப்பச்சினா காப்பி கொண்டு வந்து வைத்தான். உயர்தர காப்பி வகை,

நல்ல சுவை. "இன்னொன்னு கலக்கிட்டு வாடா," என்று சொன்னேன். அவன்

கலக்குவதுபோல நாமும் நாளைக்கு கலக்கிக் குடிக்கலாம் என்று எட்டி

இருந்து பார்த்தேன். "எப்படிக் கலக்கின?" என்று இந்த வயதில் அவனைக்

கேட்பது கௌரவக் குறச்சலாகிவிடுமே. தாத்தாதாவுக்கு ஒன்னுமே தெரியாது

உலகமே புரியாது என்று சொல்பவனிடம் கேப்பசினா கலக்கச் சொல்லித்தர

கேட்கலாமா? நெலம மோசமாயிடும்! சில சமயங்களில் கணினி சார்ந்த

விசயங்களைப் பேரப்பிள்ளைகளிடம் கேட்டே தெரிந்து 

கொள்ளவேண்டியுள்ளது.

"இது செய்யத் தெரிமாடா ஒனக்கு.. செய் பாப்பம்." என்று ஒரு கெத்தா உடல்

செருக்கைக் காட்டி உளவியல் தனமாகத்தான் அணுக வேண்டியுள்ளது. 

பேரப்பிளைகள நாம் கையாண்ட உளவியலைத் தோற்கடிக்கும் வண்ணம்.

செய்து காட்டிவிட்டு," என்னா தாத்தா இவ்ளோ சின்னாங்கா இருக்கு, இது கூட

தெரிலங்கிறீஙக," என்று நம் 'தலையில் தட்டி' விட்டுப் போய்விடுவார்கள்.

என்னா பண்றது கணினி யுகம் ஒங்கயுகமில்லியா? பழி வாங்கலாம்னா

எங்களுக்குன்னு எங்க இருக்கு யுகம் இனிமே? விடுடா... இனிமே கவலப் பட்டு

ஆவப்போறது ஒன்னுமில்ல!

    மைக்கல் லோபியில் காத்துக் கொண்டிருந்தார். வெளியே குளிர் -ஏழு

என்றார். நல்ல வேளையாக வெயில் அடிக்கிறது..காற்று கம்மி என்றார்.

காற்றடித்தால் குளிர் முகத்தில் ஈரமில்லாமல் வந்து அறையும் என்றார்.

நேற்று இரவு அதன் வெள்ளோட்டத்தை அறிந்தே இருந்தோம்.

இன்றைக்கு நாம் பாண்டா உயிர்காட்சி சாலைக்குப் போகலாம் என்றார். உடல்

மறைக்க மறைக்க குளிராடையை அணிந்து கொள்ளுங்கள். கையுறை

காதுகளையும் கண்டிப்பாய் அணிந்துகொள்ளும்படி கட்டளையிட்டார்.

வெளியே வேனில் ஏறும்போதே குளிரின் ஊடுறுவல் மேனியை

கூசச்செய்தது.  முகத்தில் திறந்த  இடங்களிலெல்லாம் ஊசி முனை கொண்டு

குத்துவது போலிருந்தது.

பெய்ஜிங் நீயூ யோர்க் மாதிரி இருக்கிறது என்று சொன்னான் என் பெரிய

பையன். அவன் பத்தாண்டுக்கு முன்னர் இங்கே வந்ததற்கும் இப்போதைக்கும்

மிக விரைவான முன்னேற்றம் அடைந்ததைச் சொன்னான். 2008ல் நடந்த சீனா

ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கை பேய் வேகத்தில் மாற்றிவிட்டிருக்கிறது.

சீரான சாலைப் போக்கு வரத்து.. வானைக் குத்திக் கிழிக்கப் போகிறேன் என்று

அச்சுறுத்தும் கட்டங்கள். குளிரைப் பொருட் படுத்தாத விரையும் சுறு

சுறுப்பான மஞ்சள் கால்கள் எனக் காலையிலேயே பெய்ஜிங் களைகட்டி

இருந்தது. வேனின் ஹீட்டர் மீண்டும் மிதமான சூழலைத் தந்தது. இப்போது







                            பனி படர்ந்து திமிறி நிற்கும் பெய்ஜிங் சாலை


வேன் பாண்டா உயிர் காட்சி சாலைக்கு நகர்ந்தது. ...

தொடரும்

Comments

ரொம்ப ஜாலியாகச் செல்கிறது உங்களின் பயணக்கட்டுரைப் பகிர்வு. தொடருங்கள். எனது அடுத்த பயணம் சீனா தான். அதிவேகமாக முன்னேறி வரும் நாடுகளில் சீனா இப்போது முதல் நிலையில் இருப்பதை யாரும் மறுக்கலாகாது. நீங்கள் சீனா சென்ற அதே விடுமுறையில் தான்; நான் தமிழ்நாடு (இந்தியா) சென்று வந்தேன். 2004யில் இருந்து சென்று வருகிறேன், மாற்றம் என்பது இன்னும் இல்லை... அடுத்த முறை வேறு நாடுகளுக்குச் செல்லலாமே! என்றேன் கணவரிடம். `நானா வேண்டாம் என்கிறேன், நீதான் `ஆச் பூச்’ என்றால், இந்தியா.. இந்தியா என்று அடம்பிடிக்கிறாய்.. உன் விருப்பம்’. என்றார். என்ன செய்ய, நம் மொழி இருக்கும் ஊர்களுக்குச் செல்லும்போது, நம் ஊரில் இருப்பதைப்போன்ற ஓர் உணர்வு.. உணவுப்பிரச்சனையும் அவ்வளவாக இருக்காது. `டிம் சம்’ என்றவுடன் எனக்குக் கலவரமாகவே இருக்கிறது.. எவ்வளவு சுவையாக அவை சமைக்கப்பட்டிருந்தாலும்.. மசாலா மணம் இல்லையென்றால், தொண்டையில் இருந்து கீழே இறங்காதே சார். தொடருங்கள்..சுவாரஸ்யம்.
ko.punniavan said…
விஜி, எல்லாத் தமிழருக்கும் உண்டாகும் அதே தாய் மண், தாய்த் தமிழ் பற்றுதான் எனக்குமிருந்தது. 10 தடவைக்கு மேல் தமிழ்நாடு போயிருக்கிறேன். காற்று தூய்மையற்றதால் மூச்சடைப்பு,இந்திய உணவில் ஒருவகை வைரஸ் இருப்பதால் வயிற்றுக் கோளாறு என வாட்டி எடுத்துவிடும். அங்கு நூல்கள் வாங்கவும், சரித்திர புகழ் இடங்களைப் பார்க்க மட்டுமே ஆவல் குறைவதில்லை. லஞ்சப் பிடுங்கள் தாளமுடியாது.ஒரு முறை மதுரையில் டியூட்டியில் உள்ள போலிசே 10 ரூபாய் கேட்டான். ஆள் புல் போதையில்.ஆனால் சீனா அப்படியல்ல. தூய்மை, ஒழுக்கம்,நியாயம் எல்லாம் பார்த்தேன். ம்... இந்தியா எப்பதான் இப்படி ஆவுமோ? ன்னு ஏக்கமே எஞ்சி நிற்கிறது. நமக்கு ஏக்கம் இருந்து என்ன புண்ணியம்?

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...