Skip to main content

5. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்













பாண்டா கரடிகளை தொலைகாட்சிகளில் பார்த்ததுதான். சில சமயங்களில்

நம் நாட்டு அரசியல் வாதிகளோடு அவற்றைப் பார்ப்பதில் குழப்பம்

உண்டாகிவிடுகிறது. எது கரடி , எது அரசியல் வாதி என்று அடயாளங்

காண்பதில்!

 குழந்தைகள் அவற்றைப் பார்க்கப் போகிறோம் என்பதில்

பேரானந்தம். பாண்டாக்கள் குளிர் பிரதேசத்து  மிருகங்கள். அங்கே அவறுக்கான

வாழும் சூழல் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தியடோர் பாஸ்கரிடம்தான் அவறைப்பற்றி மேலதிக விபரங்களைக்  கேட்டுத்

தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் மீதே எனக்குப்

பிரியமில்லை. நிறைய பேரப்பிளைகளை வளர்த்தாயிற்று!

இரண்டு பாண்டாக்கள் புரண்டு புரண்டு விளையாடியதை வெகுநேரம்

குழந்தைகள் ரசித்துக்கு கொண்டிருந்தனர். ஒன்றையொன்று கட்டிப்பிடித்து

உருள்வதும், முத்த மிடுவதும், குழியில் விழுந்து புரள்வதுமாய்

'சாகசங்களாகவே' குழந்தைகள் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

பெரியவர்கள் கூட சற்று நேரம் கவலை மறந்து சிரிக்கலாம். ஆனால் குளிர்

அங்கிருக்க விடாமல் விரட்டியது. என்னதான் உடல் முழுதும் தடித்த

துணியால் போர்த்தி இருந்தாலும் குளிரின் தாக்குதலிலிருந்து தப்பிக்க

முடியவில்லை. உடனே ஓடிப்போய் சூடூட்டி இருக்கும் வேனில் ஏறிப்போய்

உட்கார்ந்து விடவேண்டுமென்றே தோன்றியது. ஆனால் அங்கிருந்து நகர

முடியவில்லை. குழந்தைகள் பாண்டாக்களிடம் தங்கள் மனதை பணையம்

வைத்து விட்டிருந்தார்கள். நன்றாகக் கொழுத்து, உருண்டு திரண்டு திப்பி

திப்பியான, கருப்பு வெள்ளையில் பாண்டாக்கள் செய்யும் சேடைகளில்

குழந்தைகள் லயித்துப் போயிருந்தார்கள். பாண்டக்கள் பற்றிய

திரைப்படங்கள், கேளிக்கைப் படங்களைப் பார்த்தவர்கள் இப்படி நேரடி

தரிசனம் தரும்போது லேசில் விட்டு விட்டு வந்துவிடுவார்களா என்ன? தங்கள்

பெற்றோரைத் துருவித் துருவி வினாக்களைத் தொடுத்த வண்ணம் இருந்தன

குழந்தைகள். குழந்தைகளை விட்டு பேருந்துக்கு ஓடவும் மனம் வரவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தார்கள்.

குழந்தைகளுக்கு குளிரைத்தாங்கும் சக்தி அதிகமாம். அவற்றின் வளரும்

உடற்செல்கள் கடுங்குளிரைத் தாக்குப் பிடிக்கும் சக்தி உண்டாம். நமக்கோ

செல்கள் (உயிர் அணுக்கள்) நாளெல்லாம் அதிகப் படியாகச் செத்த

வண்ணமிருக்கிறது. குழந்தைகளுக்கு அதிகம் வளர்ந்த வண்ணமிருப்பதாலே

அவற்றுக்கு தாங்கு சக்தி அதிகம் என்கிறார்கள். ஆனால் குழந்தைகளைத்

தாங்கும் சக்தி நமக்கு அதிகம் இருந்தாலே போதும்!

ஒவ்வொரு கணமும் குளிர் உடல் முழுக்க ஊர்ந்து மிரட்டியது. குறிப்பாக

கைவிரல்கள் மரத்தன. கால் பாதங்கள் ஈரமானது போன்று இருந்தது. காலுறை

நனைந்துவிட்டதோ என்ற உணர்வு மேலிடுகிறது. கால் விரல்களும்

மரத்துவிட்டிருந்தன. உடனே வேனுக்குள் நுழைந்துவிட வேண்டும்.

குழந்தைகளை ஒன்றுதிரட்டி  வேனுக்கு ஓடினோம்!
   
என் ஒரு வயது பேரனின்  

முகம்குளிரில் சிவந்து வீங்கி விட்டது போன்றிருந்தது. எந்தச் சலனமும்

அவனிடமிருந்து வருவதில்லை.

அழுவதுமில்லை! சிரிப்பதுமில்லை! புள்ளையார் சிலை போல கண்களும்

முகமும் அசைவற்றே இருந்தது. எங்களுக்கு பயமாகவே இருந்தது . பேரன்களில்

அவனுக்கு மட்டுமே பேசும் வயதில்லை. எனவே மனதில் கொஞ்சம்

அச்சம்தான். ஆனால் வேனுக்குப் போனவுடனே அவன் பழைய ஆளாகி

விடுவான். அப்போது அவனும் குளிரைத் தாங்கி கொள்கிறான் என்று மனம்

ஆசுவாசப் படும்.

வேனில் ஏறும் போது மணி இரண்டாகிவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது.

வேன் ஒரு உணவுக்கடையை நோக்கிப்போனது.

சீன உணவில் எப்போதுமே எங்கள் குடும்பத்தாருக்கு ஆசை அதிகம்.

மலேசியாவில் கூட என் கட்சி யாருமில்லை. நான் இந்திய உணவகத்துக்கு

அழைத்தால் மற்றவர் அனைவரும் சீன உணவை விரும்புவார்கள்.

இங்கே சொல்லவே வேண்டாம்.சீனாவில் உணவு ஒருபடி சுவை மிகுந்தது.

கீரை வகைகள்தான் ஏராளம். பத்து வகைக்கும் கூடிவிடும்.அசைவத்தில்

 வளர்ப்பு மீனோ, பன்றி வகையோ கிடைக்கும். நண்டு இறாலென்றெல்லாம்

கிடைக்காது. ஏன் என்றால் பெய்ஜிங் கடற்கரை பட்டினமல்ல. நம்

இந்தியாவில்

பஞ்சாப் போல அங்கேயும் கடல் உணவு கிடைக்காது. அவை இருந்தாலும்

அதற்கு துட்டு அதிகம் வேண்டும்!





சீன உணவகத்தில் இருந்த சீனர்கள் எங்கள் பேரப்பிளைகளை வளைத்து வளைத்து

படமெடுத்தனர். இது சீனாவில் எல்லா இடத்திலும் நடந்தது. தெருவில்

போனாலும் நம்மை அனுமதி கேட்டு கூட நின்று படமெடுத்தார்கள்.

எங்களுக்கும் மட்டும் இந்தக் கௌரமா என்று புள்காங்கிதமடைந்தோம்.

கண்டிப்பாக நான் மலேசியாவின் முக்கிய எழுத்தாளர் என்று சீன தேச

மக்களுக்குத் தெரியாதுதான். பின்னர் ஏன் இந்தப்புகைப்படப்

பிடிப்பு. பின்னர் சொல்கிறேன். (இனியும்

புகைப்பட மென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது) டிஜிட்டல்

முறை வந்த பிறகும் இன்னுமென்ன புகை வேண்டிக்கிடக்கிறது. ஹைதர் கால

கேமராவெல்லாம் எப்போதோ காலாவதியாகிவிட்டது.புகை அடுப்பில் கூட

வருவதில்லையே.)

உணவு உண்ட பின்னர், கீழ்த் தளத்தில் முத்து மாலைகள், தோடு ஆகியவை

விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றார் மைக்கல். சுற்றுலா வழிகாட்டிகள்

இவ்வகையான வணிக இடங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அந்நிய

தேசத்தில் விஷேச உற்பத்திப் பொருட்களை நம்மை வாஙக்வைக்கவும்

அதனால் வழிகாட்டிகளுக்கு கொஞ்சம் உபரி வருமானம் ஈட்டிக்கொள்ளவுமான்

முன் ஏற்பாடு . இங்கே கடல் இல்லையென்றால் என்ன , செயற்கையாக

முத்துச்சிப்பிகளை உருவாக்குகிறார்கள். ஒரு சிப்பியை உடைத்து

கண்முன்னாலேயே முத்து வளர்ந்திருப்பதைக் காட்டினார்கள். ஆனால் அசல்

முத்தைப் போன்று கவர்ச்சி இல்லை. மனித அறிவின் கண்டுபிடிப்பு என்பதால்

கொஞ்சம் ஈர்ப்பு உண்டாகிறது. அவ்வளவுதான்!


அன்று மணி நான்குக்கெல்லாம்  சீன எக்ரோபேட்டிக் கலைக்காட்சி நடக்கும்

மண்டபத்துக்குள் நுழைந்தோம். அதுபற்றி சொல்லும் போது நம் இந்திய

நாட்டார் கலை வடிவம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அப்போதே நமக்குக்

கோபமும் வந்து விடுகிறது தமிழ்நாடு மீது. இங்கே எக்ரோபேட்டிக்குக்கு நம்

பணம் ஒரு தலைக்கு ஐம்பது ரிங்கிட்டுக்கு மேல் வசூலித்து, கலையை

விரிவாக்கி அதனை சுற்றுலாமூலம் வரும் பெரும் வருமானமாக மாற்றி

இருக்கிறார்கள். ஆனால் இந்திய நாட்டார் கலை, விளையாட்டுகள் இன்னும்

தெரு நாடகமாகவே

வளர்ச்சியற்று கிடக்கிறது. அதனைச் சுற்றுலாப் பயணிகளுக்கென எல்லா

நகரங்களிலும் வணிக

நோக்கத்தோடு மேம்படுத்தி இருந்தால் அக்கலை விளையாட்டு பல

கலைஞர்களை வாழ்வைத்திருக்கும். அந்நிய செலவாணியும்

அதிகரித்திருக்கும்.நடக்கிறதா? அரசியல் கூத்து நடக்கிறது மிக அசிங்கமாக!


தொடரும்......




Comments

சீன தயாரிப்பு, முத்து என்ன முட்டையையே தயாரித்து விடுவார்கள்.பலே கில்லாடிகள். சுவாரஸ்யம் சார். குளிர் பயமுறுத்துகிறதே. பெண்களால் தாங்க முடியாதே. எப்படி அம்மா தாங்கிக்கொண்டார்?
ko.punniavan said…
விஜி,
தொடர்ந்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி.
எப்பொதுமே சுற்றுப்பயணம் அக எழுச்சியை உண்டுபண்ணக்கூடியது.அதனால் குளிரெல்லாம் பெரிய விஷயமே அல்ல.புதிய இடம், புதிய அனுபவம், புதிய மகிழ்ச்சி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...