Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 15


முத்தம் 15

அன்பு வாசக நண்பர்களே,


என்னுடைய நாவலான 'செலாஞ்சார் அம்பாட்' தேசிய நில நிதி கூட்டுறவு சங்க கலை இலக்கிய அறவாரியத்தின் 2012/13 ஆம் ஆண்டுக்கான சிறந்த புத்தகப் பரிசை ரி.ம.10000.00 வென்றதிலிருந்து அதன்  வேலை நிமித்தமாக இந்தத் தொடரை சில நாட்கள் எழுதமுடியாமல் போயிற்று. இருந்தாலும் இன்றிலிருந்து அதனைத் தொடர்கிறேன்.

இந்த நூலை கோலாலம்பூரில் வெளியிடும்படி என் வாசக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடியால் எதிர்வரும் 14.9.14 ஞாயிறன்று, மாலை 4.00க்கு ,கோலாலம்பூர் தே.நி.நிதி கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் , தான் ஶ்ரீ சோமா  அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன். நூலின் விலை 15 ரிங்கிட் மட்டுமே. அந்தத் தொகையைக் கொடுத்து வாங்கினாலே நான் பெருமை அடைவேன்.


முத்தம் 15-  நீரின் சாரலில் வெனிஸ் நகரம்

பின்னிரவு மணி 1.00க்கு வெய்ன்சா நகர ரயிவே ஸ்டேசனில் இறக்கிவிட்டது புல்லட் ரயில்.வெனிசைத்தான் வேய்ன்சா என்கிறார்கள். நீங்கள் வெனிஸ் என்று சொன்னால் உள்ளூர்க்காரர்களுக்குப் புரியாது. வெய்ண் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எப்படிச்சொன்னாலும் அது அழகுதான்.
 ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜாதான்
என்ற கவிதையின் பொருளைத்தான் வெய்ன்சா வெனிஸ் என்ற சொல்லின் பொருளுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.
ஒரு ரோஜாவை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டாலும், எப்படிப் பயன்படுத்தினாலும் அது அடிப்படையை மாற்றிக்கொள்ளாத  ஒரு அழகிய ரோஜாவாகவே பரிணமிக்கிறது என்றுபொருள் படுகிறது.

ரயில் நிலையத்திலிருந்து   வெளியே வந்தால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. பின்னிரவு வேளைக்கு இடம்கொடுத்து ஒளி சற்றே ஒதுங்கிக்கொண்டபோது கம்மிய ஒளியோடு வெனிஸ் எங்களை வரவேற்றது.மூடிய கடைகள், ஒளியிழந்த விடுதிகள், மூடிய வீடுகள் , வாகனமற்ற வெறித்த சாலைகள் , மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள் என மூடிக்கிடந்தது வெனிஸ். பைகளை கனத்த ஓசை எழுப்பியபடி இழுத்துச்சென்றோம். அடங்கிய இரவில் அதன் ஒலிதான் சலனத்தைக் கிளறிக்கொண்டிருந்தது. விடுதி அருகேதான் என்றார் மருமகன். ஆனாலும் அந்த அந்தகார வேளை விடுதி தொலைவில் இருக்குமோ என்ற அனாவசிய அச்சத்தை கிளர்த்தியது.

கொஞ்ச தூரம் நடந்ததும் நாலைந்து கருப்பின இளைஞர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த அகால வேளையில் அவர்களைக் கண்டதும் பயம் வந்து விட்டது. இங்கே வழிப்பறி நடக்கும் என்றே எங்களை எச்சரித்திருந்தார்கள். அதனால் அவர்களை நெருங்க நெருங்க பயம் கூடிக்கொண்டே போனது. அவர்களைக் கடந்து செல்லும் போது ஒன்றும் நடந்துவிடவில்லை. அவர்களத் தாண்டியதும்  'கொலம்போ' விடுதி மினுக்கிட்டுத் தெரிந்தது. இன்னும் 50 மீட்ட்ர் தூரம் நடந்தால் வாசலை எட்டிவிடலாம். எனவே  களவாணிப்பயல்கள் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது. இருளும், தனிமையும், ஓசையின்மையும் பீதியைக் கிளப்பும் சூழல்கள்தாம். அவை புனித நகராகவே இருக்கட்டும், ஆனால் கரிய இருள் புனிதத்தை மறைத்தேவிடுகிறது.

வாசலைத்திறந்து உள்ளே போனவுடன் ஒரு வங்காளதேசி வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்தான். பதிவு செய்துகொண்டு அறைச்சாவியை வாங்கிக்கொண்டு அறைகள் எங்கே என்று கேட்டோம். விடுதி பின்வாசலைக் காட்டினான். பினவாசலில் வெளியே வெளிச்சமில்லை. மிக மங்கிய  ஒளியில் நடந்து அறையைத் தேட வேண்டும். அது சாத்தியமே இல்லை. என் மருமகன் தொலைபேசி ஒளி வெளிச்சத்தில் கட்டடத்தை அடைந்து ஒரு வழியாய் அறையைத் திறந்தாயிற்று. அறைக்குள் சுவிட்சைப் போட்டதுதான் வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. ஏன் ஐந்தடி வெளியே வெளிச்சம் இல்லை. பல்ப்  எரிந்து போயிருக்குமோ? இருக்கலாம். என்றே நினைத்தோம் . ஆனால் ஒரு புகழ் பெற்ற சுற்றுப்பயணிகள் மண்டும் ஒரு பெரு நகரத்தில் இவ்வளவு அசட்டையாக இருப்பது? 

அறையில் குளிர்சாதனம் இருந்தது. குளிக்க சுடு நீர் தராளமாக வந்தது. மேலை நாடுகளில் குளிர் சாதன வசதிகள் பெரும்பாலும் இருக்காது. ஏனெனில் கோடை காலத்தில் ஆசியா போல கொளுத்தாது. மிக மிதமாகவே இருக்கும். அதிலும் இரவில் குளிர்ச்சியாகவே இருக்கும். சன்னல் ஒன்று கால்வாசி திறந்தடி இருந்தது. சன்னலை அதற்கு மேல் மூடவோ திறக்கவோ முடியாதபடி ஸ்தமபித்துப்போயிருந்தது. இருந்தாலும் மறுநாள் காலையில் பார்த்துக்கொள்ளலாம்  என்ற களைப்பில் படுக்கச் சென்றுவிட்டோம்.
சுப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பால், பழச்சாறு, ரொட்டி இவைகள் காலையில் பசியாற உதவியது. விடுதியில் காலை உணவு கொடுக்கப்படவில்லை. வெளியே கடைத்தெருவுக்குச் சென்று 'ஒரு டாலருக்கு காப்பி வாங்கினால் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மிகச்சிறை கிண்னத்தில் எலி மூத்திரம் அளவுக்கே  கொடுத்தான். ஒரு மிடறுகூடப் போதாது.  கசப்பா.... தாங்க முடியவில்லை. இங்குள்ளவர்கள் காப்பியை இப்படித்தான் குடிப்பார்களோ என்ற சந்தேகமே பிறந்தது.
.
சற்று நேரம் சென்று கவனித்தால்தான் தெரிந்தது பால் பெரிய கிண்ணத்தில் இருபபதை. அப்படியே அதைக்கலந்து குடித்தாலும் ஒரு மிடறுகூட இருக்காது. ஒரு முறை கல்கத்தாவில் மண் கிண்ணத்தில் காப்பி கொடுத்தார்கள். நகரம் முழுக்க இப்படியேதான். அது இரண்டு மிடறுதான் இருக்கும். அதுவே கிண்ணஸ் சாதனை என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்தச் சாதனையை முறியடித்தது வெனிஸ் காப்பி.

தொடரும்......



Comments

வணக்கம்
ஐயா.

தகவலைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி பொங்கியது மேலும் வளரவும் .தங்களின் புத்தக வெளியீடு சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்


தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...