திகட்டத் திகட்ட சுட்ட பன்றி இறைச்சி- முத்தம் 21
லுசேனிலிருந்து கிளம்பியபோது இரவு மணி எட்டு இருக்கும். ஆனால் வெளிச்சமாகத்தான் இருந்தது. இரவு 9 மணிக்குத்தான் இருள் மெல்லப் பரவத் தொடங்கும்.
மழை மெல்லிய இசைபோல இதமாகப் பெய்யெத் தொடங்கியது. சாலை இன்னும் கருமையாகி மின்னியது. மழையின் நனைவில் ஈரப்பசை கூடியிருந்தது. கார் ஈரப்பசையில் நகரும்போது வழுக்கிவிடுமோ என்ற அச்சம் ஊடுருவிச்சென்றது. இருள் சூழச் சூழ நிலத்தின் அழகு மங்கி மறைந்துகொண்டிருந்தது.
வெளிநாட்டுக் கார்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ் வழிகாட்டி கருவியிருக்கும். நம் இலக்கு எது என்று அதனுள் பதிவு செய்துவிட்டால் நேர்த்தியாகவே நம்மை இலக்கி நோக்கி அழைத்துச் சென்று சேர்த்துவிடும். முதல் நாள் நாங்கள் பயணம் செய்யும் போது அது உதவியாகத்தான் இருந்தது என்றாலும். நம் பண்பாட்டிலேயே நாம் ஊறியவர் என்பதால் அதன் மனநிலையிலேயே இருந்தே வெளியூர்களை அவதானிக்கிறோம். எத்தனை மணியானால் என்ன கடைகள் விடுதிகள் கதவு திறந்தே இருக்கும் என்ற எண்ணம் அயலகத்தில் செல்லாது. முதல் நாள் இரவு ஜி.பி.எஸ்ஸை பயன்படுத்தி இரவு பதினொன்று வரை விடுதியைத் தேடித் தேடிக் களைத்துவிட்டோம். ஜி.பி.எஸ் நீங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்று சொல்கிறது. ஆனால் அடைந்த இடத்தில் ஒரு சலனமோ மனித நடமாட்டமோ இல்லை. இங்கே யாரையும் காணோமே என்று திரும்பிவிட்டோம், நான்கைந்து முறை. ஆறாவது முறை அங்கேயேதான் கூட்டிச் சென்று விட்டது. எதற்கும் மூடிய கதவைத் தட்டிப் பார்த்துவிடுவோம் என்று இறங்கி தட்டும்போதே கதவு திறந்துகொண்டது. உள்ளே ஒரே கொண்டாட்டம். ஒளி வெள்ளத்தில் விடுதி கலைகட்டி இருந்தது. மது அருந்திக்கொண்டு உல்லாசமாக இருந்தார்கள் வெள்ளையர்கள். விசாரித்தால் அதே விடுதிதான். இறங்கிப் பார்க்காததால் இந்த இன்னல்கள்.
பசி வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது . வரவேற்பாளாரிடம் உணவு கிடைக்குமா என்று கேட்டோம்.
"ஓ மன்னிக்கவும் கிச்சனை அடைத்துவிட்டோம் "என்று கூறினாள்.இந்த நேரத்தில் எங்கே போய் உணவு தேடுவது?
அவள் சற்றே பொறுங்கள் என்று சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போய்வந்தாள். உங்களுக்காக மீண்டும் திறக்கச் சொல்லியாயிற்று போய் உட்காருங்கள் என்றாள். அவளிடம் அத்தனை பணிவு, கூச்சம். வெள்ளைத் தோளில் தமிழ்ப் பண்பாடு மின்னிச்சென்றது.
சமையல்காரன் என்ன வேண்டும் என்று மென்மையாகக் கேட்டான். அவர்கள் உணவுக் காலாச்சாரம் நமக்கு முற்றிலும் புதியது. நாங்கள் மெனுவைப்பார்த்து விழிப்பதைப் பார்த்தவன் அவரே சொன்னார். உங்களுக்கு ஸ்பேகட்டி கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சுட்ட பன்றி இறைச்சி வேண்டுமா என்றார். நானும் மருமகனும் கொண்டுவரச் சொன்னோம். என் மகளும் மனைவியும் உதட்டைப்பிதுக்கி வேண்டாம் என்றனர்.
ஸ்பேகட்டி சுவையாகத்தான் இருந்தது. ஆனால் சுட்ட பன்றி இறைச்சி அமிர்தம் போல மிகுந்த சுவையுடன் இருந்தது. சுவையென்றால் அத்தனை சுவை. சுடச் சுட வெட்டி வெட்டி உண்ணும்ப்போது நாவில் உமிழ் சுரந்துகொண்டே இருந்தது. நான் நீங்கள் கொஞ்சம் சாப்பிட்டுத்தான் பாருங்களேன் என்றே இருவரிடமும். முதலில் வேண்டாம் என்றார்கள். நாங்கள் உண்ணும் தீவிரத்தைப் பார்த்தவர்கள் கொஞ்சம் கிள்ளிச் சாப்பிட்டார்கள். பிறகு எங்களுக்கு வைக்கவில்லை. அந்த கிரில் வகை இறைச்சி நான் எந்த உணவு வகையிலும் சுவைத்ததில்லை. சமையல் காரனிடம் அதன் ரகசியத்தைக் கேட்டோம். பன்றிக்கு போடும் தீவனம் பற்றியும் அது வளரும் தூய்மையான இடம் பற்றியும் சொன்னான். அது வளர்ந்து கசாப்புக்குப் போகும் காலவறையரையையும் சொன்னான். அதனை சமைக்கும் நுடபத்தையும் சொன்னான்.கசாப்புக்குப் போகும் வரை சுவிஸ் பன்றிகள் சௌகர்யமாகத்தான் வளர்ந்திருக்கின்றன. உண்டு சுவைத்து உய்த்துணர்ந்து இறைச்சியைப் பாராட்டும்போதே பன்றி கண்டிப்பாய் மோட்சம் அடைந்திருக்கும். கொடுத்துவைத்த பன்றிகள். தமிழ்நாட்டுப் பன்றிகளைக் கண்டால் இவை சாதியிலியே சேர்க்காது. ஒண்ட விடாமல் விரட்டி விடும்.
நாங்கள் பயணத்தில் அடைந்து களைப்பு பன்றி உண்டும், அவர்களின் அணுசரனையான முகமன் அனுபவித்தும் தீர்த்துக்கொண்டோம்.உன்னத இரவு அது!
சுவிஸ் மலைத் தொடர்கள் நிறைந்ததால் 10 கிலோமீட்டருக்கு ஒருமுறை சுரங்கப்பாதையைக் கடக்கவேண்டியிருந்தது. சுரங்கங்கள் மிக மிக நீண்டவை. மலேசிய நெடுஞ்சாலையில் தைபிங்குக்கும் ஈப்போவுக்கும் இடையில் உள்ள ஒரே சுரங்கத்தைக் கடப்பதற்கு இரண்டு நிமிடத்துக்கும் குறைவான நேரமே போதும். அங்கே நாங்கள் கடந்த சுரங்கள் சில 25 நிமிடங்கள் பிடித்தது. பூமிப்பந்தின் மேல்தளத்தைவிட்டு அடியாழத்தில் பலமணி நேரம் இருந்த அச்சம் நேர்கிறது. இப்படி எண்ணற்ற சுரங்கங்கள். வாகனங்கள் அதி விரைவாகத்தான் செலுத்தப்படுகின்றன, சுரங்கத்திலும்.
நாம் போகும் பாதையில் இரண்டு இடங்களைப் பார்க்கப் போகிறோம். இதனை என்ன விலை என்றாலும் தவிர்க்கவே கூடாது என்றார். ஒன்று கேபல் காரில் ஏறி மலை உச்சிக்குச் சென்று அதிகுளிரை அனுபவிப்பது. இன்னொன்று நயாகராவுக்கு நிகரான ஒரு நீர்வீழ்ச்சியைப் பார்ப்பது. மலைகள் நிறைந்த ஊரில் இதெல்லாமிருக்கும் தான் என்றே எண்ணிய என் மனம் இந்த இரண்டு இடங்களையும் மறக்க முடியாது காட்சிகளை பதிவு செய்துகொண்டது.
கேபில் கார் மலையின் அடிவாரத்தை அடைந்தபோது மக்கள் கூட்டம் நெருக்கியது. காரை நிறுத்த இடமில்லை. மருமகன் இரண்டு கிலோ மீட்டர் தாண்டி வீடமைப்பு பகுதியில் நிறுத்திவிட்டு வந்தார். திரும்பும்போது குழப்பமில்லாமல் கண்டுபிடித்தும் விட்டார்.
கீழே வட இந்தியர் நகரும் வாகனத்தில் இந்திய உணவை விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரு இட்டலியின் விலை படுபயங்கராமாக இருந்தது. பணம் கொடுத்த வலியில் தொண்டையில் இட்டலி இறங்காது.
கேபில் காரின் விலை ஒரு நபருக்கு முன்னூறு ரிங்கிட் கொடுக்கவேண்டி இருந்தது. அது உச்சி வரைக்குமான கட்டணம். ஏறி உட்கார்ந்து கொண்டோம். நிலத்திலிருந்து நிலத்தை தரிசிக்கும் அழகைவிட, வானத்திலிருந்து நிலத்தின் வனப்பு கூடிக்கொண்டே போனது. கூடியது அதுமட்டுமல்ல குளிரும்தான்.
மலை உச்சியில் , பனிக்காலத்தில் ஐரோப்பாவில் இருப்பது போன்ற பிரம்மையை உண்டாக்கியது. நாங்கள் அங்கு சென்றது கோடைகாலத்தில் என்றாலும் மலை முகடுகள் பனி கொட்டித்தான் கிடக்கின்றன. மேலே போனதும்தான் சாருக்கானையும் கஜோலையும் கண்டோம்.
தொடரும்....

மகளோடு வரவேற்பு பெண், என்னருகே சமையல் பணியாள். |

Comments
ஐயா
அழகிய இடங்கள் நாங்களும் பாரத்ததுபோல ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-