Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 20

ஜெர்மனியில் தவறுதலாக விடுதி முன்பதிவுசெய்து சுவிசர்லாந்தில் தேடிக்கொண்டிருந்தோம்.

மன்னிக்கவும் ..சியாசோவிலிருந்து காரில் பயணிக்கவில்லை. அங்கிருந்து லுகானோவுக்கு புல்லட் டிரேய்னில் வந்து அங்கிருந்தே காரை வாடகை எடுத்து சுவிசைச் சுற்ற ஆரம்பித்தோம். இந்த புல்லட் ட்ரேன் மிக நூதன வசதிகளைக் கொண்டது. அசைவு அறவே தெரியாமல் பறந்தது. லுகானோவில் விடுதி எடுக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து பயணிக்கலாம் என்று முடிவெடுத்தோம்.


சுவிஸ் மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் அழகிய பெரியகுளங்களும் அடர்ந்த ஊர்.
அந்நாந்து பார்த்தால் கூம்பு கூம்பாக முளைத்த பச்சை மலைகளும், அதற்கும் மேலே பனி படர்ந்து உலவும் மலை முகடுகள். முகடுகளை முக்காடிட்ட பனிப்படலங்கள்.மலைகளுக்கு கீழே பெரும் பெரும் ஏரிகள். பச்சை நிறத்தில் மனதைக் கவ்வும் நீர்த்தேக்கங்கள் நம்மை கண்மாறாமல் பார்க்க வைக்கின்றன. ஏரிகளைச் சுற்றி பெரும் பட்டினங்கள் எழும்பி இருக்கின்றன. எத்தனையோ 100 மைல்கள் பயணத்தில் நெடுக்க இதனைப் பார்க்க முடிகிறது. இதனை கிராமப் பகுதிகள் என்றே சொல்கிறார்கள். ஆனால் இங்கேதான் தங்கும் விடுதிகளும், உணவுக்கடைகளும். உல்லாச மதுக் கடைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு இடமும் பரபரப்பான உல்லாசத் தலங்களாகவே பார்க்கமுடிகிறது! இதனை எப்படி கிராமம் என்பது.


காரை  மருமகன் நம்பிக்கையோடுதான் செலுத்தினார் . அவர் அமெரிக்கா செல்லும்போதெல்லாம் சொந்தமாக கார் வாடகை எடுத்து ஓட்டிய அனுபவம் உள்ளவர். வலது பக்கம் செலுத்துவதௌ பழக்கத்தால் வருவதுதானே! ஆனால் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நமக்கும் அதுபோன்ற அனுபவம் வேண்டுமே.குறைந்தபட்சம் பக்கத்து இருக்கையில் அமர்ந்த அனுபவம். அது இல்லாதததால் பதட்டமாக இருந்ததது. திடீரென சரவணன் ஏன் வலது பக்கம் ஓட்டுறீங்க என்று பதட்டத்தில் பல முறை கேட்டுவிட்டேன். கார்கள் எதிரில் வந்து மோதிவிடும் என்று ரத்தத்தை உறையச் செய்தது. விபத்தை அனுபவிக்கும் ஒரு மனநிலை அது. மனம் தானே முதலில் நம்மைக் கொல்கிறது. ஒவ்வொரு முறையும் மருமகன் அமைதியாக சொல்வார். இடதுபுறம்தான் ஓட்டக்கூடாது என்று. சமிக்ஞை கொண்ட வளைவுகளில் இன்னும் குழப்பம். எதிரில் வரும் காரை இடதுபக்கம் போகவிட்டு நாம் வலது பக்கம் செலுத்தவேண்டும். மலேசியாவில் கார் ஓட்டும் நினைவு வந்து, ஐயோ என்னாகப்போகிறது என்று அச்சம் உண்டாகிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படிப் பல தருணங்களில் பதட்டமும் குழப்பமும் உண்டாகி வெளியே அழகிய காட்சிகளைக்கூட தவறவிட்டிருக்கிறேன்.
காரைக்கொடுக்கும் போதே சொந்தக்காரன் அதனை எல்லாப் புறத்திலிருந்து படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டானாம். அதில் ஏகனவே உள்ள சின்னக் கீறல்களைத் தவிர புதியது ஏதும் இருந்தால் அதற்காக கொஞ்சம் அதிகமாகவே தண்டம் கட்டவேண்டும். ஆனால் கார் விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பு நேர்ந்தால் தணடம் இல்லை. இன்சூரன்ஸ் பார்த்துக்கொள்ளும். நம்மைப் பாதிக்காது. பார்க்கிங் தவறுகளை உடனடியாகப் பதிவு செய்துகொள்கின்றன பார்க்கிங் தளத்திலேயே உள்ள கருவி. சாலை பாதுகாப்பு காவலர் தேவையில்லை.அப்படியான தொழில் நுட்பம்.  வளர்ந்த நாடு அது.


ஒருமுறை என் மகன் அமெரிக்காவிலிருந்து மலேசியா வந்தபோது அவனுக்கு பார்க்கிங் தவறுக்கான தண்டம் கட்டச்சொல்லி கடிதம் வந்திருந்தது. அதனைக் கட்டவேண்டியதாயிற்று. அப்படிக் கறாறான சட்டம் அங்கே. இங்கே சிவப்பு நோட்டடைக் காட்டினால் நக்கிக்கூட எடுத்துக்கொள்ளவார்கள். இங்கே போதைப்பொருள் பழக்கம் முறியடிக்க முடியாமைக்குக்  காரணம் ஏன் என்று இந்த எடுத்துக்காட்டை வைத்துப் பார்த்தாலே தெரிந்துவிடும்.



சிவிஸ் நெடுக்க சொர்க்கபூமியோ என எண்ணவைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் போன நேரம் கோடைகாலம். ஆனால் ஆறு மணிக்குமேல் நல்ல குள்ராகவே இருந்தது. மலைத் தொடர்கள்,  அகன்று விரிந்து கைவிரிக்கும் நீர்த்தேக்கம், மலையிலிருந்து யாரோ நூலேணி இறக்கியது போன்ற நீரூற்று, கண்களில் குளுமையை நிரப்பும் பச்சைக் காடு, படுதா விரித்தது போன்ற புல்வெளி,என தகிப்பை விரட்டிவிட்டிருந்தது அதன்  நில அமைப்பு. இயற்கை நில அமைப்பில் ஏதும் சேதங்கள் ஏற்படுத்தாமல் இருந்தால் சிதோஷ்ண நிலைக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. மலைகளின் தாய்மை முலைகளைக் சிதைப்பதும், காடுகளைக் கற்பழிப்பதும், ஏரிகளை நிலப் பகுதியாக்குவதும் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பைக் கொண்டவந்துவிடும். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நிலக்கொந்தளிப்பான சுனாமியைப் பார்த்தும் நமக்கு புத்தி வரவில்லை! நம் நிலத்தாயின் பசுமையைப் பூணுவது சார்ந்த கற்பிதத்தை குழந்தைகளுக்கு உண்டாக்கும் பொறுப்பான தலைமுறை நாம்.

பசி எடுக்கவே எங்காவது பட்டினத்தில் நிற்கலாம் என்று தோணியது. அதற்காக லுசேன் நகருக்குள் காரைச் செலுத்தினோம். அப்போது மணி மூன்றிருக்கும். நகரம் சற்று ஓய்ந்து போயிருந்தது. கடைகள் மூடிக்கிடந்தன. நகரம் முழுதும் சுற்றியும் உணவுக்கடைகள் தென்படவில்லை. ஒரு தமிழ்ப்பெண்மணி சாலையில் நடந்துகொண்டிருந்தாள். போய் ஆங்கிலத்தில் கேட்டோம். அவர் அவர் நீங்கள் தமிழரா என்றார். அவர் இலங்கியிலிருந்து வந்தவர். இவரைப்போல நிறைய பேர் இருக்கிறார்களாம் அங்கே. உணவுக்கடை இன்னும் 2 மணிநேரம் கழித்துதான் திறக்கும் என்றார்.
எதிரே இந்தியக் கடைகள் கூட இருந்தன ஆனால் ஆறுமணிக்குத்தான் திறக்கும். ஆறு மணிவரை காத்திருந்து ஒரு சீன உணவகத்தில் சாப்பிட்டோம். நம்ம ஊர் மீ பிரட்டல் அங்கே 30 ரிங்கிட்டுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று. சாப்பிட்டு காரில் ஊர் சுற்றியதும்தான் தெரிந்தது இலங்கைத் தமிழர்கள் நிறைய பேர் கடை வைத்திருப்பது. சீன உணவகத்தில் உண்டதைவிட இங்கே பாதி விலைக்கு உணவு கிடைப்பது தெரியாமல் போனது!

லுசேனும் ஒரு பெரும் ஏரி சூழ்ந்த ஊர்தான். மாலை உல்லாசங்கள் தொடங்கிவிட்டிருந்தன. ஏரியில் உல்லாசப்படகுகள் மிதந்தன.மனிதர்கள் மெல்ல வர ஆரம்பித்தார்கள். அங்கே விடுதி எடுக்க மருமகன் இணையத்தில் அலசினார். பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அதனால் இன்னொரு 100கிலோ மீட்டர் தூரத்தில் மலிவான விலையில் விடுதி கிடைக்கும் என்று புக் செய்துவிட்டார். பின்னர் நாங்கள் விடுதி முன் பதிவு செய்து  பணமும் பட்டுவாடா செய்துவிட்டார். அந்த ஊர் இன்னும் 50 கிலோமீட்டர் போகவேண்டும். காரை எடுத்துக்கொண்டு பயணமானோம். இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சாலையில் வாகனங்கள் அருகிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் எங்களைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் சாலையில் காணவில்லை. இரவின் பயம் எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.  ஒருவழியாக அந்த ஊரைப் போய்ச் சேர்ந்தோம்.
அங்கே போனவுடன்தான் தெரிந்தது அதே பெயர் கொண்ட ஊர் ஜெர்மனியில் இருக்கிறதென்று. ஜெர்மனியில் விடுதி முன்பதிவு செய்திருக்கிறோம். கட்டிய பணம் காலி.
மீண்டும் இன்னொரு விடுதியை முன்பதிவு செய்து பயணிக்கத் தொடங்கினோம்.வெளிச்சூழலின் ரம்மியம் இருளில் மறைந்துகொண்டிருந்தது.






தொடரும்.......



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின