4. வீரமங்கை வேலுநாச்சியார் 2-ம் நாள் காலை டாக்டர் மிமியின் வீட்டில் மிமி யின் அம்மா பரிமாறிய காலை உணவு மதியும் வரை பசிக்காது போலிருந்தது. கனமான உணவு. பூச்சுருள் போன்ற மிருதுவான இட்லியும் பொருத்தமான புதினா சட்னியும் சுவையைக் கூட்டும் காரமான கோழிக் கறியும் பரிமாறப்பட்டது. மீண்டும் அவர்கள் காரிலேயே மதுரையை நோக்கிப் பயணம். இம்முறை மிமி யின் தாய் எங்களோடு இணையவில்லை.விடுமுறை தொடங்கிவிட்டதால் பேரனோடு சென்னை கிளம்பி விட்டார்கள். ஆனால் மிமி யின் தந்தை டாக்டர் வல்லபாய் சிவகங்கையில் எங்களோடு இணைந்து கொள்வதாகத் திட்டம். அவரும் டாக்டர். அறுவை சிகிச்சை நிபுணர். மலேசியா சிகாமாட் மருத்துவ மனையில் 8 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் ஏய்ம்ஸ்ட் பல்கலையில் இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார் . மலேசிய பண்பாடு, அரசியல் அத்துப்படி அவருக்கு. பல மலாய்ச்சோற்கள் தெரிந்து வைத்திருந்தார். இந்தியாவின் தொன்ம வரலாறு, தற்காலத் தமிழ் இலக்கிய அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலிருந்து வாசிக்கும் பழக்கமுள்ளதால் அவரோடு உரையாடுவது என் அறிவுப்பெருக்கத்துக்கு இன்பமாய் அமைந்தது....
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)