Skip to main content

Posts

Showing posts from 2023

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் ...

3. சை. பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

  சை. பீர் முகம்மதுவை நான் முதன் முதலில் சந்தித்தது கூலிம் தியான ஆஸ்ரமத்தில்.  என் நிஜம் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அங்கே வெளியிட ஏற்பாடாகியிருந்தது. 1999 வெளியான அந்நூலின்  பின்னட்டையில் என்னை அறிமுகம் செய்து எழுதியிருந்தார்.  என் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைக்கவில்லை. மனிதன் தொலைதூரத்திலிருந்து வரவேண்டுமே என்ற காரணத்தால் அவருக்குச் தகவலை மட்டுமே அனுப்பியிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி துவங்க ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அவருடைய பழைய மெர்சடிஸ் ஆஸ்ரம வளாகத்துக்குள் நுழைந்தது. அதில்தான் அவருடைய வேரும் வாழ்வும் பெருந்தொகுப்பை அறிமுகம் செய்ய ஜெயகாந்தனை மலேசிய முழுதும் ஏற்றி வலம் வந்தார். சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரை ஓடிப்போய் வரவேற்றேன். "என்னையா இது வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே" என்றேன். அவருடன் சிங்கப்பூர் மணிமாறன், கவிஞர் க. இளமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.  அப்போதெல்லாம் கைப்பேசி  கிடையாது. எல்லாம் கடிதப் போக்குவரத்துதான். கடிதம் பற்றிச் சொல்லும்போது அவர் கையெழுத்தின் கலையழகு நினைவைத் தட்டுகிறது. கையெழுத்து முத்து முத்தாய் எல்லாம் இருக்கா...

2.சை.பீர்முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

2.  சை.பீர் அவர்களுக்கு உடல் நலம் குன்றி வருவதை அவரோடு உரையாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகுந்த சோர்வாக இருந்தார். குரல் உற்சாகம் குன்றி ஒலித்தது. நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். உங்கள் புலனத்துக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார். கட்டுரை இலக்கிய அரசியல் தொடர்பானது. சற்று காரசாரமாக இருந்தது. கைப்பேசியிலேயே தட்டச்சு செய்திருக்கிறார். நான் சொன்னேன் கட்டுரை நல்லா வந்திருக்கு. அதனை விடாமல் தொடருங்கள் என்றேன். அவர் குரலில் இப்போது உற்சாகம் தொணித்தது.கலை வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஈடுபட்ட கலையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பரவசமடைவதைப் பார்த்திருக்கிறேன். பிறவற்றைப் பற்றி உரையாடும்போது இல்லாத  மகிழ்ச்சி அவர்கள் சார்ந்த கலை இயக்கத்தைத் தொட்டுப் பேசும்போது முகிழ்ந்துவிடும். இது கலை நமக்குத் தருகின்ற பிரத்தியேக உற்சாக உணர்வு. நான் சை பீரிடம் நீங்கள் விடாமல் எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். அந்தப் படைப்பை எழுதி முடிக்கும்போதும் பிறர் வாசிப்புக்குப் போகும்போது, அது பற்றிப் பேசப்படும் போதும் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும் என்றேன். அவர் நான் இந்தக் கட்டுரையை முடித்து நூலாக...

சை.பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

 சை. பீர் முகம்மது என்னும் இலக்கிய வம்பாளி. சை.பீர்முகம்மது வெள்ளைச் சட்டையில் .,எம் ஏ இளஞ்செல்வன் இல்லத்தில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது.  நான் சை, பீர் முகம்மதுவை ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் சந்தித்தேன். நீரிழிவு நோயின் காரணமாக அவருடைய  ஒரு கால் நீக்கப்பட்டிருந்தது அவர் சொல்லியே தெரிய வந்தது. உடலுறுப்பின் முக்கியமான ஒரு உறுப்பை இழக்கும்போது உண்டான கவலை அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று என்னால் உணரமுடிந்தது.  அவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர் இல்லத்துக்கே தேடிப் போனேன். அவர் காலை இழந்து சில மாதங்கள் கழிந்திருந்ததால் அவர் இயல்பாகத்தான் இருந்தார்.அதனால் நானும் என் சோகத்தை அவரிடம் கொட்டும் எண்ணத்தைக் கைவிட்டேன்.  எப்போதும் போலவே  நடந்துகொண்டேன். அந்த இழப்பை தன் மனதளவில் மூடிக்கொண்டதைப் போல இருந்தது அவர் அந்தக் காலை கைலியால் மூடியிருந்தந்து, நோய்மையில் உள்ளவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நோய் பற்றி பேச்சை வளர்ப்பது அந்த நோயின் எண்ணத்தைக் கடுமையாக்குவதற்கு ஒப்பானதாகும். இந்த ஞானம் நாம் கடுமையான நோயை எதிர்கொள்ளும்போது மட்டுமே தன்னிச்சையாகவே  ...