‘ உள்ளத்தின் குரல் ’ அது உண்மையின் குரல்- பிரேம் ராவத் வாழுங்காலத்தில் மிகுந்த பரவசத்தோடு இருக்கும் மனிதன் யார் என்று ஆய்வு நடத்தினார்கள். நாம் 80 ஆண்டுகள் வாழ்கிறோம் என்றால் அ வர்களுள் சராசரி மனிதன் பரவசத்தோடு இருந்தது சொற்ப மணிநேரம்தான். ஆனால் தங்களை உணர்ந்தவர்கள் , தன்னை யாரென்று அறிந்தவர்கள் , கலைஞர்கள் பரவசமாக இருந்த நேரம் சராசரிமனிதனைவிட பல 1000 மணி நேரம் அதிகம் என்று அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்தது. சரி நம்மை நாம் அறிவது எப்படி தன்னை அறிதல் தன்னை அறிதல் பற்றி பல ஆன்மிகவாதிகளும் தத்துவ ஞா னிகளும் சொல்லி வருகிறார்கள். கிரேக்க தத்துவ அறிஞர் சாக்ரட்டீஸ் முதல் விவேகானந்தர் வரை உன்னையே நீ அறிவாய் எனச் சொல்லி வருகிறார்கள். தன்னை அறிவது என்பது ஞானத்தைத் தொடுவதற்குச் சமம். தன்னை அறியாமல் இவ்வுலகை அறிய முடியாது. தான் யாரென்றும் அறிந்துகொள்ளவும் முடியாது. நீ யார் என்று ஒருவரைக்கேட்டால் அவர் தன் பெயர் ரவி என்று சொல்வார். ரவி என்பது அவர் பெயர். அது அவரின் அடையாளம் அவ்வளவுதான். நான் கோலாலம்பூரில் செந்துலில் இருக்கிறேன் என்றால் அது அவர் வசிக்கும் இடம். நான் நீ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)