மகளும் மருமகளும்
வீடு திரும்ப
எட்டுக்குமேல் ஆகிவிடும்
தொலைக்காட்சி
சேன்னல் சண்டை
மடிக்கணினி
கைத்தொலைபேசியில்
கனிவுக்கரிசனம் ஒழுகும்
உரையாடலுக்குப்பின்
மொனமாகிவிடும் மீண்டும்
பகலெல்லாம்
பூட்டிக்கிடந்த அண்டை வீடுகளும்
இரவில்தான் வெளிச்சம் உயிர்க்கும்
வாய்ச்சண்டைபோடவாவது
அவள் உயிரோடிருந்திருக்கலாம்
நான்கு வயது முடிவதற்குள்
பேரனையும் பாலர்பள்ளிக்கு
கடத்திவிட்டார்கள்
வீடு திரும்பவும் வெள்ளையுடுத்தி
தைக்குவாண்டோவுக்கும்
ஜிப்பா உடுத்தி சங்கீத வகுப்புக்கும்
போய்வருவதில்
அந்தி முடிந்துவிடும்
களைப்பில் உறங்கும்
பேரனை எழுப்பி
எப்படிப்பேசுவது பழையபடி?
கோ.புண்ணியவான்.
Ko.punniavan@gmail.com
வீடு திரும்ப
எட்டுக்குமேல் ஆகிவிடும்
தொலைக்காட்சி
சேன்னல் சண்டை
மடிக்கணினி
கைத்தொலைபேசியில்
கனிவுக்கரிசனம் ஒழுகும்
உரையாடலுக்குப்பின்
மொனமாகிவிடும் மீண்டும்
பகலெல்லாம்
பூட்டிக்கிடந்த அண்டை வீடுகளும்
இரவில்தான் வெளிச்சம் உயிர்க்கும்
வாய்ச்சண்டைபோடவாவது
அவள் உயிரோடிருந்திருக்கலாம்
நான்கு வயது முடிவதற்குள்
பேரனையும் பாலர்பள்ளிக்கு
கடத்திவிட்டார்கள்
வீடு திரும்பவும் வெள்ளையுடுத்தி
தைக்குவாண்டோவுக்கும்
ஜிப்பா உடுத்தி சங்கீத வகுப்புக்கும்
போய்வருவதில்
அந்தி முடிந்துவிடும்
களைப்பில் உறங்கும்
பேரனை எழுப்பி
எப்படிப்பேசுவது பழையபடி?
கோ.புண்ணியவான்.
Ko.punniavan@gmail.com
Comments