Skip to main content

Posts

Showing posts from 2013

மு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்.

பொன்னாடையோடு அன்புச் செல்வன் தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்தபோது          ஒரு படைப்பாளனின் மரணத்தை சாதாரணமாகக் கடந்து விட முடியவில்லை. ஏனெனில் அவன் அறிவு சார்ந்து இயங்குபவன். தனக்குள்ள சொற்களின் பலத்தால் தன்னை தகவமைத்துக்கொண்டவன் அவனை ஒரு தனிமனித  இயக்கமாக மாற்றுவதும் அவன் சேகரித்து வைத்துள்ள சொற்கள் செய்த கைங்கர்யம்தான். அவனின் மரணம் அவன் கருத்துலகின் மரணம். படைப்பிலக்கியம் சார்ந்த புதிய கருத்துகள் அவனிடமிருந்து இனி வரப்போவதில்லை. அவனிடமிருந்து இனி புதிய சிறுகதைகள், கட்டுரைகள், என் எதுவுமே வர வாய்ப்பில்லை என்பதால் அவனின் விடைபெறல் சாதாரணமானது அல்ல.       மு.அன்புச்செல்வன் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவரின் கிண்டல், அங்கதத்தொனி முன்னிற்கிறது. ஒரு படைப்பாளனின் படைப்பில் அங்கதம் ஒலிக்கிறதென்றால் அந்தப் படைப்பு வாசகனின் மனதில் நிலைத்துவிடுகிற சாத்தியாத்தைப் பெற்றுவிடுகிறது. புதுமைப் பித்தனை, நாஞ்சில் நாடனை, ஆதவன் தீட்சண்யாவை, அவர்களின் கேலி மொழி கொண்டே மனிதி நிற்கிறார்கள். அது ஒரு படைப்பு வித்தை. கதைகளில் க...

17. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?

17.செருப்பு விற்ற பணம்          பூக்கோ சொல்வதுபோல மனிதன் மனிதனாக இல்லை. அவன் தன் சுயத்தைக் காணடித்துவிட்டான். அவனைச் சூழ்ந்துள்ள உலகமே அவனின் நம்பிக்கைகளை, நடத்தையை, போக்கைக் , கல்வியை, கட்டமைக்கிறது. இதை அவன் அறிவதில்லை. அந்தக் கட்டமைப்பிலிருந்து அவனால் எளிதில் வெளிவர முடியாது.  கடவுளின் மேல் அவன் வைக்கும் நம்பிக்கை இதற்கொரு நல்ல சான்று. அவன் முன்னோர்கள் எவ்வாறு நம்பிக்கை வைத்தார்களோ அதனையே சுற்றியுள்ள சமூகம் செய்கிறது. சூழ்ந்துள்ள சமூகப் போக்கின் நீட்சியாகவே இவனும்  அதனை அப்படியே தொடர்கிறான்.  நம் சமூகத்தின் கடவுள் நம்பிக்கையானது இப்படித்தான் கட்டமைக்கப் பட்டு , தனிமனிதன் வரை தகவமைத்துக்கொள்ளும்படியானது . மனிதன் சுயத்தைத் தேடினால்தான் பூக்கொ சொல்வது சரியில்ல என்றாகும். இது நடக்குமா? முந்தைய கட்டுரையில் நான் சொல்லி வந்த கடவுள் நம்பிக்கைக்கும் கோட்பாட்டாளர் பூக்கொ சொன்னதையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம். சந்து வழியாக நடைப்பயணம்     காசி விஸ்வநாதர் கோயிலின் உள்ளே இருந்து வெளியாவது பெரிய சிக்கலாகி விட்டது. ஒவ்வொரு சிலைய...

16. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

காசி விஸ்வநாதர்.                     கால பைரவனை அடுத்து காசி விஸ்வநாதனைப் பார்க்கவேண்டும். அங்கே எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ற கேள்வி மனதை துளையிட்டுக்கொண்டிருந்தது. வயிற்றில் எடுக்கும் பசி, பசித்துப் பசித்தே அடங்கிவிட்ருந்தது. அவ்வப்போது குளிர்பானத்தை ஊற்றி உந்திந் தீயை அழித்துக் கொண்டிருந்தபடியால் பசிக்கு பசியே எதிரியாகிவிட்டது போலும்.                     நான் சரத்திடம் ஒரு வேண்டுகோலை வைத்தேன். இனிமேல் இப்படி அழுக்கான இடத்துக்குக் கொண்டு போகவேண்டாமென்று. அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சுற்றுப்பயண நிறுவனம் சொன்ன  இடங்களைக் காட்டியே ஆகவேண்டும் என்ற அட்டவணையைக் கறாராகக் கடைபிடிப்பவராக இருந்தார்.                     எங்களோடு வந்தவர்கள் கூட அட்டவணையை மீறி நடக்கக்கூடாது என்றும் கறாராக இ...

15. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

நதியின் பிழையன்று மனித நம்பிக்கை மறுப்பது . கங்கையில் நடப்பதை நேரில் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. கோடான கோடி மக்களுக்கு நீரினால் உண்டாகும் நன்மைகளைக் கருதாமல் அதனை அசுத்தப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கத் தோணுகிறது. ஆனால் நம்பிக்கைதான் கடவுள் என்ற சொற்றொடரைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மக்கள் எதனை தரிசிக்கிறார்களோ அதன் மேல் முழு நம்பிக்கை வைக்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பலன் அளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை மனத்தின் வலிமையாக மாறுகிறது. வலிமை ஆற்றலாக உருவெடுக்கிறது. முழு ஆற்றலாலும் முயற்சியினாலும் அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிடுகிறது. அதில் தனிமனித ஆற்றலும் செயல் திறமும் இருக்கிறது என்பது கண்கூடு. ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்றே, அவர்கள் அடையும் பலனை இறைவனின் கொடை என்றே கருதுகிறார்கள். இங்கேதான் இறைபக்தி பன்மடங்காகிறது. கங்கை அரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதே காரணத்தால்தான். கங்கை எல்லா அசுத்தங்களையும் தூய்மையாக்குகிறாள். கங்கை எல்லா பாவங்களையும் தீர்க்கிறாள்.கங்கை எல்லாரையும் பாதுகாக்கிற...

14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

பிணங்கள் எரிக்கப்பட்டகாட்சி.வேட்டி கட்டிய பையனும் நாயும் எலும்பைத்தேடும் படம். கங்கை எல்லா பாவங்களயும் கை ஏந்தி வாங்கிக் கொள்கிறாள். என் பயணத்தில் நான் அதிகமாக வெறுத்த நாள் இன்று. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா என்று எழுதிவிட்டு சப்ஜெக்டுக்கு வரவில்லையே என்று  வாசகர்கள் சிலர் கேட்டார்கள் . நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த விவரணைக்குள் நுழைகிறேன். முந்தைய அத்தியாயத்தில் நான் எழுதியது வெறும் தொடக்கம்தான். அதிகாலையிலேயே கங்கைக்குக் கிளம்பவேண்டும் என்று சொன்னார் சரத். ஏழெட்டு பேர் திதி செய்ய வேண்டி இருக்கிறது. அதனை முடித்துக்கொண்டு காலபைரவன் கோயிலிலும், காசி விஸ்வாதன் கோயிலில் வழிபடவும் வேண்டும். நெருக்கடியும் பரபரப்பும் மிகுந்த இடம் என்றார். நாம் பார்க்காத நெருக்கடியா என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது எவ்வளவு அசாதரணமானது என்று இதோ சொல்கிறேன். காலையில் கங்கைக்கு ரிக்‌ஷாவில் கிளம்பினோம். மணி 430க்கே எழுந்தாயிற்று. விடுதியில் காலை உணவு தயார் இல்லை. அதிகமானோர் நீரிழிவு நோய்க்கார்கள். என்னாகுமோ என்று பயந்தபடியே பயணமானோம்.வயிற்றுக்கு ஆகாரம் ப...

13. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

13. நதி செய்த பிழை என்ன? அன்று சாயங்காலமே கங்கை நதிக்கரையில் தீப ஆராதனை. பிரதி தினமும் நடக்கும் ஆராதனை. விடுதியிலிருந்து ரிக்‌ஷா வண்டியில் கிளம்பினோம். ஏனெனில் கங்கை நதிக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலேயே வாகனக்களுக்குத் தடை.மக்கள் நெரிசல். நதிக்கரையில் படகுகள் குவிக்கப் பட்டிருந்ததன. மீனவ கிராமம் மாதிரியான காட்சி. ஆனால் மீனெல்லாம் பிடிப்பதில்லை. காசியிலும், ரிசிகேசிலும்  மட்டுமே அசைவம் கிடைக்காது.லெக் பீஸ் எல்லாம் கேட்கக்கூடாது. சுத்த சைவம். எல்லா விடுதியிலும். கரையை அடைத்து நின்ற படகுகள் பக்தர்களுக்கானது. தீபாரதனையைப் பார்க்க அலை மோதுகிறது கூட்டம். வெளியூர் பயணிகளே அதிகம். கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். கரையில் இருந்த படகுக்கு ஏறி நன்றாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு படகாகத் தாண்டி  அண்ணாந்து பார்க்க வாட்டமாய் ஒரு படகைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மண்ணால் செய்த அகல் விளக்குகள் பூக்களையும் வேண்டி வேண்டி விற்கிறார்கள். நீங்கள் ஆகக் கடைசி படகுக்குப் போனாலும் பின்னாலேயே கெஞ்சியபடி வருவார்கள். கையிலும் அகலும் பூவும் இருந்தால் தொந்தரவு இரு...

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

12. காசிக்குப் போறேன் .( என் முந்தைய பயணக் கட்டுரையில் ஆக்ரா, ஜெய்ப்புர் பற்றி நிறைய எழுதியுள்ளேன் ) கங்கை நதியின் படகில் மிதக்கும் எங்கள் பயணக்குழு ஆசிர்வாதம்செய்யும்  ஆயிரம் சாமியார்களில் ஒருவர் கங்கையில் நதியோரத்தில் மொட்டை, சவரம்  போடும் காட்சி சின்ன வயசில் நான் சந்நியாசியாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேனாம்.என் அக்காள் இதை அவ்வப்போது நினைவு படுத்துவாள். என் திருமணத்திபோதும் சொல்லிச் சிரித்தாள். அதன் உட்பொருள் பிடி படாத வயதில் எனக்குள் கிளர்ந்த 'ஞானத் தேடலுக்கான'  அமானுடத்தை எப்படிச் சொல்வது? ஏன் சொன்னேன்? அப்போது கண்டிப்பாய் காரணம் தெரிந்திருக்காது. யாரோ சாமியாரை நான் பார்த்திருக்கக்கூடும். அவருக்குக் கிடைக்கும் சமூக மரியாதை என்னையும் பாதித்திருக்கக் கூடும். அதனால் எனக்கும் காவியைக் கவ்விக்கொள்ள ஆசை பிறந்திருக்கக் கூடும். அல்லது அந்த மஞ்சள் நிறம் என்ன ஈர்த்திருக்கக் கூடும். சின்ன வயசில் பலர் போலிஸ்காரனாக, விமான ஓட்டுனராக, பாதுகாவலாராக ஆகவேண்டுமென்றெல்லாம் ஆவல் கொள்வார்கள். அவை  சீருடை மிடுக்கு கொடுத்த கவர்ச்சியினால்தானே. நான் சந்நியா...

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

11. எட்டு மணி நேர ஓட்டம். டில்லியை இரவு வேளையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கூடியிருந்தது. காலையில் கொஞ்சம்  பேருந்து சன்னல் வழியே  அவதானிப்பது எட்டி இருந்தே ஒருதலையாய் காதல் செய்வது போலத்தான். சுற்றிப்பார்ப்பதை விட கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கடைத்தெருக்களில் அபிஷேகம் செய்வதில்தான் பயணத்தின் மோட்சத்தை அடையமுடியும். "கடைசி நாள்ல சாப்பிங்கு டைம் போதுமா?" என்ற ஏக்கக் குரல் எழுப்பாத பெண்கள் குறைவு. பிளைகளுக்கும் பேரப்பைள்ளைகளுக்கும் வாஙக வேண்டும் என்றே  பையில் இருக்கும் ரூபாய்கள் தூது விட்டுக்கொண்டிருந்தன. பேருந்து சன்னல் வழியே நோக்கும் ஏக்கக் கண்கள்  மொழி அறியாதவனா நான்? கடைசி நாளில் காலை பத்து மணி முதல் நான்கு மணிவரை ஒதுக்கியிருந்தார்கள். எல்லாம் எப்படி அமையப் போகிறது என்ற கொசுறாக பயம் வேறு தலைநீட்டியபடி இருந்தது. பேருந்து இம்முறை நேராக ஜெய்ப்பூர் செல்கிறது. 2002ல் முதல் முறை வந்தபோது பெங்கலூரிலிருந்து டில்லிக்குப் பறந்து பின்னர் ஒரு வாகனத்தில் ஜெய்ப்பூர் போனோம். இரண்டாவது முறை நேராக டில்லிக்...

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

10.பிடிப்பு மூன்று நாட்களாக முதுகின் வலக்கை  பக்கம் 'பிடிப்பு'. அதனால் ஒரு பிடிப்பாய் இருந்து பயணக் கட்டுரையைத் தொடரமுடியவில்லை. இப்போது தீபாவளி  வேறு கலைகட்டிவிட்டது. பார்ப்போம்.              பார்க்கும் தூரத்தில் இருப்ப்து லாஹூர் (பாகிஸ்தான்) ஸ்டேடியம் அம்ரிஸ்டாரில் ராணுவ அணிவகுப்பு மிகப் பிரபலமானது. தினசரி நடந்துகொண்டே இருக்கிறது. மக்கள் கூட்டம் குறையவே இல்லை. பாகிஸதானின் மிகப்பெரிய இரண்டாவது நகரம் லாகுர். பஞ்சாபின் அம்ரிஸ்டாரும் பெரிய நகரம்தான். லாகுருக்கும் அம்ரிஸடாருக்கும் 28 மைல் இடைவெளிதான். சரியாக எல்லையில் நடக்கும் இந்த ராணுவ அணிவகுப்பைப் பார்க்க பாகிஸ்த்தான் எல்லையைத்தாண்டி எட்டிப்பார்த்தால் அங்கேயும் பார்வையாளர்கள் நிரம்பிக்கிடக்கிறார்கள். என்றைக்கு இந்தையாவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிலப்பகுதி பாகிஸ்தானாகப் பிரிந்து போனதோ அன்றிலிருந்தே எல்லைப் போர் தொடங்கிவிட்டது. காஸ்மீர் யாருடையது என்ற போர்.அதனாலேயே பயங்காரவாத ஊடுறுவல் இந்தியாவை நிம்மதியாக இருக்கவிடவில்லை. மீண்டும் இந்திரா காந்தி போல இரும்...