7.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும்
அதற்கு ஒரு காரணம் இருந்ததை பின்னர் நான் உணர்ந்தேன்.
நான் எழுதிய கையறு நாவல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பரவலாகவே வாசிக்கப்பட்டு மதிப்புரைகளும் விமர்சனங்களும் பல்வேறு மின்னிதழ்களில் வந்த வண்ணம் இருந்தன. ஒரு நூலுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவை. அதுவே படைப்பாளனுக்குக் கிடைத்த மதிப்புமிக்க விருதுகள். அதன்பொருட்டே அதீத மகிழ்ச்சி உண்டாகவில்லை. நூலுக்கான வாசகர்/ விமர்சகர் மதிப்பை முன்னமேயே பெற்றுவிட்டதால் நான் என்னை இயல்பாக எதிர்கொண்டதாகத்தான் உணர்ந்தேன். என் முகநூலில் Punniavan Govindasamy அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
கரிகாற்சோழன் விருதுக்கு நான் முதலில் நாவலை அனுப்புவதாய் இல்லை. எழுதாளர் அ. பாண்டியன் அழைத்து நினைவு படுத்தினார். ஏற்கனவே அனுப்பிய என் நூல்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக மோசமான நூல்களுக்கு வழங்கப்பட்டு நான் ஏமாற்றமடைந்ததைச் சொன்னேன். சார் கண்டிப்பா அனுப்புங்க என்றார்.உடனே சிங்கை பிரேமா மகாலிங்கத்திடம் நான் விற்பனைக்குக் கொடுத்த நூலில் ஐந்து பிரதியை ஷானாவாசிடம் ஒப்படைக்கச் சொன்னேன். மறுநாளே நூல்கள் வந்து சேர்ந்தன என்று மின்னஞ்சல் வந்திருந்தது. மலேசிய எழுத்தாளர் சங்கம் ஒருமுறைகூட அவ்வாறு உறுதிப்படுத்தியதே இல்லை!!!!!
நிகழ்ச்சி மிக நேர்த்தியாக ஏற்பாடாகியிருந்தது.
நெல்லை ஜெயந்தா,துணைவேந்தர் வி திருவள்ளுவன், தஞ்சை மேயர், கோ.புண்ணியவான், சிநேகன் |
தஞ்சை மாநகர மேயர் மாண்புமிகு சண்.இராமநாதன் சிறப்பு வருகையாளராக அழைக்கப்பட்டிருந்தார். குறிஞ்சி வேந்தன் என்னிடம் பேசும்போது தமிழக முதல்வரை வரவழைப்பதாக இருந்தது என்றும் அதற்காக மண்டபம் ஒன்றை புதுப்பித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். அதன் பொருட்டே விருது விழா தள்ளிப்போகிறது என்றார். ஆனால் அது நிகழாமல் போகவே நவம்பர் 28ல் தஞ்சாவூர் மாநகர் மேயர் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடாகியிருந்தது.
முன்னாள் பேராசிரியர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் தஞ்சை பல்கலை மாணவர்கள் என கிட்டதட்ட 800 பேர் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.
சிறப்புப் பேச்சாளர்களாக சினிமா பாடலாசிரியர்கள் நெல்லை ஜெயந்தாவும் .... சிநேகனும் வந்திருந்தார்கள். தஞ்சை பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு வி திருவள்ளுவன் முக்கியப் பிரமுகராக வந்திருந்தார். முனைவர் வெற்றிச்செல்வன், முனைவர் குறிஞ்சிவேந்தன் நிகழ்ச்சியை ஒருங்கு செய்து செய்துகொண்டிருந்தனர். அதே வேளையில் முனைவர் குறிஞ்சி வேந்தன் வரவேற்புரையும் நிகழ்த்தினார்.
இந்த விருதுவிழா நடக்க அடிக்கல் நாட்டியவர் சிங்கை தொழிலதிபர் முஸ்தபா அவர்கள். 2008ல் நான் எழுத்தாளர் சங்கத்தோடு தஞ்சைத் தமிழ்ப்பல்கலை வந்தபோது சிங்கை முஸ்தபா அங்கே வந்திருந்தார். அப்போதுதான் தமிழ்ப்பல்கலையில் அயல் நாட்டு நூல்களுக்கென ஒரு இருக்கை அமைக்கப்பட்டது. அந்த நிகச்சியில்தான் முஸ்தபா தமிழகத்தைத் தவிர மலேசியா சிங்கை (ஸ்ரீலங்கா பின்னர் செர்த்துக்கொள்ளப்பட்டது) சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கவேண்டும் அதற்கான செலவை முஸ்தபா அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருந்தார்.அந்த ஆண்டுதான் புதிதாய் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்த ம. ராஜேந்திரன் அந்த விருதுக்கு கரிகாற்சோழன் விருது என்று பெயர் சூட்டினார். இடத்துக்கேற்ப மிக மிகப் பொருத்தமான விருது என்று எல்லோராலும் நிறைமனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடைய ஏற்புரையில் இதனை நான் குறிப்பிட்டேன்.
சினிமாக் கவிஞர் நெல்லை பேச்சு சபையினரைக் கவர்ந்திருந்தது.
விருதுபெற்ற ஒன்பது எழுத்தாளர்களையும் ஏற்புரை நிகழ்த்த வாய்ப்பு நல்கப்பட்டது சிறப்பு. ஒன்பதில் எழுவர் வந்திருந்தனர். எல்லாருமே நேரம் கருதி உரையைச் சுருக்கமாகப் பேசிச்சென்றனர்.
விருது விழாவில் விருதாளர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்..தஞ்சை மேயர் வர சற்று நேரம் ஆகிவிட்டிருந்தது. ஆனாலும் அவரும் சிறப்பாகவே பேசினார்.
அன்று இரவு பல்கலைக்கழக விருந்தினர் மண்டபத்தில் அறைகள் எங்களுக்கு ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்கும் பிரான்சிஸுக்கும் வழங்கப்பட்ட அறையில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள இரண்டாவது மாடி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அது கோடைகாலமாதலால் இரவு முழுக்க வியர்ந்து நனைந்துகொண்டே இருந்தது. பலர் அறையில் இல்லாமல் காற்றுக்காக வெளியே வராந்தாவில் நடமாடிக்கொண்டிருந்தனர். அந்த துர் நினைவால் விருந்தினர் மண்டப அலுவலரைச் சந்தித்துப் பிரச்னையை சொன்னேன். அவர் வந்து பார்த்துவிட்டு குளிர் சாதன இயந்திரம் பழுதாகிவிட்டது என்று சொன்னார். வேறொரு அறை கிடைக்குமா என்றேன். இல்லை சார் குளிபதன வசதியுள்ள நான்கு அறைகள்தான இருக்கின்றன. அவ்வறைகளில் விருந்தினர் இருக்கின்றனர் என்றார்.
நான் மீண்டும் திருச்சி விடுதிக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்தேன். செழியனிடம் சொன்னேன் அவர் முயன்று பார்த்து திருச்சியிலிருந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் திரும்பிவிட்டனர் என்று கைவிரித்துவிட்டார்.
அவர் அவ்வாறு சொன்னவுடன் எனக்கு அந்தப் புழுக்கமான இரவின் உறக்கமின்மை நினைவை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது.
அவ்வேளையில்தான் சிங்கை எம் சேகரைச் சந்திக்க நேர்ந்தது. என் இக்கட்டைச் சொன்னேன். சார் நான் என் அறையைக் காலி செய்கிறேன். நீங்கள் வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்றார். கும்பிடப் போன தெய்வம் சேகர் வடிவில் குறுக்கே வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
தஞ்சைத் தமிழ்ப்பல்கலை மாணவர்கள் சிலர், விருந்தினர்களுக்கு எந்த அசௌகர்யமும் வராமல் கவனித்துக்கொண்டனர். அன்று இரவிலும் மறுநாள் காலை விரிவுரைக்குப் போகுமுன்னர் எங்களுக்குத் தேவையான பணிவிடைகளைக் குறையில்லாமல் பார்த்துக்கொண்டனர். முனைவர் குறிஞ்சிவேந்தநின் மாணவர்கள் அவர்கள். உடனிருந்து பணிவிடை செய்த பல்கலை மாணவர்கள்
அந்த இரவுதான் நான் இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரைச் சந்தித்தேன். 2017 நவம்பர் நந்தவனம் இதழில் என் படத்தை முகப்பட்டையில் போட்டு அதகளம் பண்ணியிருந்தார். நான் நடிகனல்லவே. ஒரு எழுதாளனை கொண்டாடும் மனம் அவருக்கு இருந்தது. இது இரண்டாவது முறையாக முகப்பு அலங்கரிப்பு, அதற்கு முன்னால் ம. நவீன் காதல் தீவிர இலக்கிய இதழில் என்னை நேர்காணல் செய்து முகப்பில் போட்டிருந்தார். என் தகுதிக்கு இதெல்லாம் ஓவர் யா என்று எனக்குத் தெரியும், அவர்களுக்கு? நான் செலிபிரிட்டியாக இருக்க எனக்கும் உள்ளூற விருப்பம்தான்.
இனிய நந்தவனம் சந்திர சேகர் |
நான் மறுநாள் திருச்சியில் விடுதியில் தங்கினேன். அன்று சந்திர சேகர் என்னைப் பார்க்க வந்தார். அன்றைய அவர் பணிகளை தள்ளிவைத்துவிட்டு எனக்காக தன் நேரத்தைச் செலவழித்தார். அவர் டூ வீலரிலேயே என்னை ஏற்றிச் சென்றார். திருச்சியிலேயே கொஞ்சம் சோப்பிங் செய்தேன். சந்திரசேகர் . ஆனந்தா புத்தகக் கடையில் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.
மறுநாள் 9.45க்குதான் நான் மலேசியா திரும்பவேண்டும். விடுதி அறையை 1.00 மதியம் காலி செய்துவிட்டேன். நேரம் ஓட மறுத்தது. விடுதியிலிருந்து நடந்தே கடைத்தெருவுக்குப் போனேன். ஒரு கடையில் காலான் 65 பொறியலும் எலுமிச்சை தேநீரும் அருந்தினேன். அந்த மூன்று நாள் பயணத்தில் அந்த உணவே மிகவும் பிடித்திருந்தது.
மறுநாள் மீண்டும் மலேசியா நோக்கிப் பயணம். கே எல் ஐ ஏ வை கருக்கலில் 430க்குப் போய்ச் சேர்ந்தேன். முன்னமேயே நான் எழுத்துச் சகோ ஸ்ரீராமுலுவிடம் , எனக்கு பினாங்குக்குப் பறப்பதற்கு 9 மணிநேர இடைவெளி உண்டு, என்னோடு அளவளாவ வேண்டுமென்றீர்களே வாங்க பழகலாம் என்றேன். காலை 5க்கே வந்துவிடார். அவர் வீட்டில் ஓய்வெடுக்க வைத்து சைபர் ஜயாவில பகல் உணவைச் சாப்பிடவைத்து மீண்டும் 2 மணிக்கு கே எல் ஐ ஏ வில் இறக்கிவிட்டார்.
ஸ்ரீராமுலுவோடுநன்றி.
Comments