Skip to main content

Posts

சமீபத்தில் மிகச்சமீபத்தில்

என் பேத்தி நவீனா பள்ளி முடிந்து வீட்டுக்கு ஏற்றி வந்தேன். இன்று ஆண்டின் பள்ளி இறுதி நாள். காரில் ஏறும்போதே உற்சாகமாக ஏறினாள். நான் சோதனையில் முதலாவது மாணவி என்றாள். அதற்கு ஆதாரமாக் கையில் பரிசுக்கிண்ணங்கள். நல்லது வாழ்த்துகள் என்று சொன்னேன். எபோதுமே முதல் மாணவிதான். ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் முன்றாண்டுகளைக் கடந்துவிட்டாள். வயது ஒன்பது. அவள் தம்பி நான்காவது இடத்தைப்பிடித்ததைச் சொல்லி இடித்துரைத்தாள். வீட்டை அடைந்ததும் தாத்தா இதப்பிடிங்க என்று என் கையில் ஒரு ரிங்கிட்டைத்திணித்தாள். ஏன் என்றேன். நான் உங்கள் வீட்டுத்தொலைபேசியை பயன் படுத்தப்போறேன், அதற்கான கட்டணம் என்றாள். செம் அடி எனக்கு. தொலைபேசியை அவள் பயன்படுத்தும்போதெல்லாம் பில் எகிறும் அடிக்கவேண்டாம் என்று எச்சரிப்பேன்.. அதற்காக கொடுத்த அடிதான் இது. அறைக்கதவை மூடிக்கொண்டு நான்கைந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.எத்தனை பேரிடம் பேசினாய் என்றேன். இருவரிடம் என்றாள். என்ன பேசினாய் என்றேன். என் சோதனை முடிவைச்சொன்னேன் என்றாள். அப்படியானால் நீ கொடுத்த பணம் போதாது. ஒரு நபருக்குத் தொலைபேசியில் பேசினால் ஒரு வெள்ளி தரவேண்டும் என்றேன். பதில...

மாட் ரெம்பிட்

கோ.புண்ணியவான், மலேசியா மலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது. என்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன். மாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம...

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்

கோ.புண்ணியவான், மலேசியா Ko.punniavan@gmail.com என் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது. எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனம...

புதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.

(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி) `கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன். 1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை? அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும். மலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்...

(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவா...

கவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது

1964ல் புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே நான் மரபுக்கவிதையால் சுவீகரிக்கப்பட்டிருந்தேன். 1961 வாக்கில் இடைநிலைக்கல்வி முடிந்து என்ன செய்வதென்று அல்லாடிய பருவத்தில் தோட்டப்புறத்தில் அலைந்து நேரத்தைப்போக்கிக்கொண்டிருந்தேன். தோட்டப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையம் மதியம் இரண்டு மணிக்குமேல்தான் திறக்கப்படுமென்பதால் காலையில் நிரைக்குப்போய் அம்மாவுக்கு துணையாய் இருந்துவிட்டு வேலை திரும்பி அம்மா சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நூல்நிலையத்துக்குப்புறப்பட்டு விடுவேன். இடைநிலைக்கல்வியில் இரண்டாம் கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்- ஒரு உண்மையைச்சொல்வதென்றால் ரப்பர்மரக் காட்டுப்பிள்ளைகளில் அந்தத்தோட்டத்தைப்பொறுத்தவரை MC SPMம்மில் தேர்ச்சிபெற்ற முதல் ஆள் நான்தான். கிராணிமார் வீட்டுப்பிள்ளைகள் எனக்கு முன்னாலேலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்கி மருத்துவக்கல்விக்கு இந்தியாவரை சென்றெல்லாம் இருக்கிறார்கள். தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளில் இடைநிலைக்கல்வியில் தேர்ச்சிபெற்றது நான்தான் முதல் மாணவன் என்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாக இருந்தது. தேர்ச்சி பெற்று என்ன செய்ய? மலேசிய மொழியில் சிற...

குரங்கின் கையில்

உரிமையைத்தானே கேட்கிறோம் என்றேன் நாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான் போதவில்லை என்றேன் உங்களுக்குத்தான் நாதியில்லையே என்றான் உரக்கக்கத்துவோம் என்றேன் என்றாலும் நீ நிராயுதபாணி என்றான் எங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன் கஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான் ஒருமித்த குரல் போதும் என்றேன் எங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான் உரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன் உங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான் சட்டம் எல்லோருக்கும் பொது என்றேன் சிறைச்சாலை இருக்கிறது என்றான் எங்கள் முறை வராமல் போகாதென்றேன் ஆட்சி எங்களுடையது என்றான் வாக்கு எங்களுடையது என்றேன் வாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான் அரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன் நாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான் ஆளை மாற்றுவோம் என்றேன் ஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான் பெரும் புரட்சி வெடிக்கும் என்றேன் துப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான். கோ.புண்ணியவான்.மலேசியா. Ko.punniavan@gmail.com